Wednesday, December 10, 2008

எஸ்.ராவின் 'பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்" மற்றும் விசித்ரி

எஸ்.ராவின் சமீபத்திய சிறுகதை விசித்ரி ,ஏதோ ஒரு சம்பவத்தால் மன சிதைவு கண்ட பெண்ணை பற்றிய குறிப்புகளை அடுக்குவது.இந்த சிறுகதை சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்மெய்யில் படித்த எஸ்.ரா வின் "பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை நினைவூட்டியது.முதல் வாசிப்பின் பொழுது பெருத்த சோகத்தையும்,கனத்த மௌனத்தையும் தந்த அச்சிறுகதையை மீண்டும் தேடி படித்தேன்.



மழை கொட்டும் ஒரு இரவில் விஜயலட்சுமி மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு கதை தொடங்குகின்றது.கரிய இருளும்,பெரு மழையும் ஒரு குறியீடே. தோற்றம் சிதைந்து,நடக்க இயலாத நிலையில் மருத்துவ பெண்மணி விஜயலட்சுமியை அழைத்து செல்ல....அவளின் நோய் கூறுகள்,வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. இக்குறிப்புகள் மூலம் திருமண வாழ்வில் கண்ட கசப்பான நிகழ்வுகளால் உளவியல் ரீதியான மாற்றங்கள் கண்டு மன சிதைவிற்கு ஆளான காரணங்கள் மறைமுகமாய் தெரிவிக்கப்படுகின்றன.

தனது மாமனார்,மாமியாரால் மருத்துவமனையில் சேர்க்க படும் விஜயலட்சுமியை தேடி வரும் வயதான அவளின் தந்தை உருக்குலைந்து இருக்கும் தன் மகளின் நிலையை காண சகியாது அவளை அவ்விடத்தை விட்டு அழைத்து செல்கிறார்..இச்சிறுகதையின் கடைசி வரிகள் இவ்வாறாக வருகின்றது,

"உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள்"

பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்

எஸ்.ரா வின் சமீபத்திய சிறுகதையான விசித்ரியும் இதுபோலவே சிறு வயதில் மனநிலை பாதிக்க பெற்ற பெண்ணை சுற்றி நகர்கிறது.இதில் உளவியல் காரணங்களை ஒதுக்கி,சமூகமும், அப்பெண்ணின் குடும்பமும் தனது நிர்வாணத்தை மறைக்க எப்பொழுதும் 20 திற்கும் மேற்பட்ட துணிகளை சுற்றி கொண்டு திரியும் சித்ரலேகாவின் நிலைக்கு காரணம் அறிய முயன்று தோற்று போவதை மெல்லிய மர்ம முடிச்சோடு சொல்லி நகர்கிறது கதை.

விசித்ரி

11 comments:

குப்பன்.யாஹூ said...

நன்றி லேகா, மீண்டும் ஒரு பயனுள்ள பதிவு, இந்த புத்தகம் வாங்கி படிக்க முயலுகிறேன்.

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி குப்பன்_யாஹூ.இவ்விரு சிறுகதைகளும் புத்தக தொகுப்பில் வந்துள்ளத என தெரியவில்லை. எஸ்.ரா வின் வலைதளத்தில் படிக்கலாம்.

KARTHIK said...

நானும் படித்தேன்.
விசித்திரியில் ஆரம்பத்தில்

// அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில் கூட காற்றில்லை. வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக் கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில். வீட்டுக் கூரைகள், அலுமினிய பாத்திரங்கள் வெயிலேறி கத்திக் கொண்டிருந்தன. தெருவில் நடமாட்டமேயில்லை.

கோடையின் பின்மதியப் பொழுதுகள் எளிதாக கடந்து போய்விடக்கூடியவை அல்ல. அதனுள் மர்மம் பூத்திருக்கிறது. அதன் சுழிப்பில் யாரும் வீழ்ந்துவிடக்கூடும் என்பதையே விசித்ரி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறாள்.//


நெடுங்குருதி நாவலை நினைவுபடுத்தும் வரிகள்
அவரது இதுபோன்ற வழமையான வரிகள் ஒரே மாதிரியான மொழிநடை சற்று அயற்சியளிக்கிறது.

// துணிகளை சுற்றி கொண்டு திரியும் சித்ரலேகாவின் நிலைக்கு காரணம் அறிய முயன்று தோற்று போவதை மெல்லிய மர்ம முடிச்சோடு சொல்லி நகர்கிறது கதை.//

ம்ம்...

சென்ஷி said...

கதைகள் பற்றிய விமர்சனத்திற்கும், இணைப்பிற்கும் நன்றி லேகா..

லேகா said...

//இதுபோன்ற வழமையான வரிகள் ஒரே மாதிரியான மொழிநடை சற்று அயற்சியளிக்கிறது.//

எஸ்.ராவின் உறுபசி நாவல் படித்த பொழுது எனக்கு தோன்றிய எண்ணம் இது.

லேகா said...

நன்றி சென்ஷி :-)

காமராஜ் said...

சற்று தயக்கமாக இருக்கிறது, இருப்பினும் சொல்லியாக
வேண்டிய வேளை இதுவே. ஆப்பிளும் ஆரஞ்சும்
மினுக்கும் பழக்கடைக்கு கீழே சீந்துவாரில்லாமல் கிடக்கிறது
நொங்குகள். எது தரம், எது பேசப்படுவது என்கிற
விவரம் அறியா வெள்ளந்திக் கதைகள் சில
'ஒரு வன தேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும்'
வம்சி வெளியீட்டில், எஸ்.காமராஜ்.
என்பெயர் எஸ்.காமராஜ்.

anujanya said...

இரண்டு கதைகளுமே படித்து விட்டிருந்தேன். சமீபத்தில் ஹரன் பிரசன்னா ஒரு கதை (நெடுங்கதை) எழுதியிருந்தார். ('திறப்பு'). அந்தக் கதையும் சற்று B.விஜயலக்ஷ்மியை நினைவூட்டியது.

அனுஜன்யா

லேகா said...

வருகைக்கும் உங்கள் புத்தகம் குறித்த அறிமுகத்திற்கும் நன்றி காமராஜ்.

லேகா said...

நன்றி அனுஜன்யா.ஹரன் பிரசன்னாவின் வலைத்தளத்தின் முகவரி கொடுங்களேன்.

anujanya said...

லேகா,

ஹரன் பிரசன்னாவின் வலைத்தளத்திற்கு என் வலைப்பூவிலிருந்தும் போகலாம் :). (என் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடவும் இலகுவாக இருக்கும் :)

முகவரி: http://nizhalkal.blogspot.com/

அனுஜன்யா