Sunday, July 27, 2008

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர்களுக்கான நாவல் -ஏழு தலை நகரம்

உலக இலக்கியம், உலக சினிமா,பயண அனுபவங்கள் என எஸ்.ராவின் அனுபவ தேடல்கள் பலவற்றுள் இருந்து வேறுபட்டு குழந்தைகளுக்கான மிகுந்த கற்பனை,தந்திரங்கள்,மாயாஜாலங்கள் நிறைந்தது இந்நாவல்."இரும்புக்கை மாயாவி" ,"வேதாள கதைகள்" ,"சிந்துபாத்" என சிறு பிராயத்தில் படித்த கதைகளை மீண்டும் நினைவில் கொண்டும் இந்நாவலின் கதையாடல் முற்றிலும் ஒரு புதிய அனுபவம். குழந்தைகளுக்கான வாசிப்பு வெளிகள் முற்றிலும் சுருங்கிய இன்றைய சூழலில் ஆனந்த விகடனின் இம்முயற்சி பாராட்டுதலுக்கு குரியது.




தற்கால நிகழ்வாகவே சொல்லப்படும் இந்நாவலின் கதையாடல் எங்கோ அமைந்திருக்கும் மாய தந்திரங்களும் விடை தெரியா ரகசியங்களும் கொண்ட "ஏழு தலை நகரத்தை" சுற்றி வருகிறது.அந்நகரின் பெரும் மாயையை கருதப்படும் "கண்ணாடிகார தெரு" வை பற்றிய வர்ணனைகளோடு தொடங்குகிறது கதை.ஒரே போன்ற அமைப்பு கொண்ட வீடுகளை எதிரெதிரே கொண்ட அவ்வீதியில் யார் நுழைந்தாலும் அவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவர்களின் வயதி இருமடங்காகும் எனவும்,அவ்வீதியில் வசிப்போர் யாவும் மாய உலகத்தார் எனவும் உலவும் செய்திகளால் ஏழு தலை நகர மக்கள் அதனுள் செல்ல பீதியுற்றுள்ளனர்.

நாவலின் நாயகன் அசிதன் சாகசம் புரியும் சிறுவனாக காட்ட படாமல் சராசரி சிறுவர்களை போல நட்சத்திரங்களோடும்,பறவைகளோடும் பேசி மகிழ்ந்து பாடத்தை வெறுப்பவனாக வருகிறான்..பல்வேறு இன பறவைகளை சேகரித்து வைக்கும் அசிதனின் தாத்தாவிடம் மானீ என்னும் அறிய வகை புத்திசாலி பேசும் பறவை கிடைக்கின்றது.அசிதனுக்கு உற்ற நண்பனாய் விளங்கும் மானீ பேசும் பாங்கு சிரிப்பை வரவழைக்க கூடியது..மானீயோடு அசிதனுக்கு கிடைக்கும் மற்றொரு நண்பன் அவ்வீட்டில்
உலாவரும் எலி.








கண்ணாடிகார தெருவில் இருந்த வெளிவரும் சிறகு முளைத்த சிறுவன் "பிகா" மாநீயோடும் அசிதனோடும் நட்பு கொண்டு தினமும் இரவில் அவர்களை பார்க்க வருகிறான்,அவீதியை சேர்ந்த ஒருவை கண்ட மகிழ்ச்சியில் அசிதன் எப்படியாவது அதனுள் செல்ல பெரு விருப்பம் கொள்கிறான்.இந்நிலையில் இரும்பு மனிதன் ஒருவனால் நெடிய மரம் ஒன்றில் சிறை வைக்கப்படும் பிகாவை கதை சொல்லிகள் மூவரின் துணை கொண்டு அசிதன் காப்பாற்றுவதோடு கதை முடிகிறது.கதை நிகழும் காலத்தை கதையோடு பொருத்திப்பார்க்க முடியவில்லை மேலும் கதையின் முடிவு குழப்பமுற்றதாய் உள்ளது.இவ்விரு குறைகளை நீக்கிப்பார்த்தால் இது சந்தேகம் இல்லாமல் சிறுவர்களை மகிழ்விக்கும் மாயாஜால நாவலே.

நகரும் ரயில்வே பிளாட்பாரம்,பேசும் நூலகம்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லிகள்,அவர்களின் பேசும் மீன்,குரங்கு,மானியின் பார்வையில் நடக்கும் நட்சத்திர குள்ளர்களுக்கும் வான் விலங்குகளுக்கும் நடைபெறும் போர்,பெரும் பழம் கொண்ட இரும்பு மனிதன்,தினமும் ஒரு வண்ணம் பெரும் எழுதலை நகரத்தின் தெருக்கள்,கேள்வி கேட்கும் மஞ்சள் நாய் என திகட்ட திகட்ட மாயாஜாலங்களுக்கு குறைவின்றி வந்துள்ள இந்நாவல் குழந்தைகள் படித்து கற்பனை செய்து மகிழ ஏற்றது.

மத கலவரத்தின் மீதான ஒரு மாற்று திரைப்பார்வை - Mr & Mrs Iyer



திரைப்படங்கள் காதலை பல வழிகளில் சொல்ல முயன்று வெற்றி பெற்றிருக்கின்றன...சாத்தியம் இல்லாத ஒரு உண்மை காதலை இந்தியாவில் நிகழும் மதவெறி சண்டைகளின் கோர முகதினூடே வித்யாசமாய் சொல்லும் இத்திரைப்படம் ஓர் துணிச்சல் முயற்சி. 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் வழக்கமான மசாலா பாணி பாலிவுட் படங்களுக்கு மத்தியில் வந்த பெரிய ஆறுதல். சில திரைப்படங்கள் எதேர்ச்சையாய் பார்க்க நேர்ந்து மனதை விட்டு என்றும் நீங்காது இருக்கும்..இத்திரைப்படம் எனக்கு தந்த அனுபவம் அதுவே.



தமிழ் பெண்ணான மீனாட்சி(கொங்கனா சென்) வட இந்தியாவில் இருந்து சென்னை நோக்கி தன் கைக்குழந்தையுடன் பேருந்தில் பயணிக்கிறாள்..குடும்ப நண்பர் ஒருவர் மூலமகா சக பயணியான ராஜா (ராகுல் போஸ்) அறிமுகம் ஆகிறான்.தனியே செல்லும் தன் மகளை பார்த்துக்கொள்ளும் படி மீனாட்சியின் பெற்றோர் ராஜாவை கேட்டு கொள்கின்றனர்.இருப்பினும் ராஜா முஸ்லீம் என்பதை அறிந்து பிராமண பெண்ணான மீனாட்சி அவனிடம் பலகை தயக்கம் காட்டுகிறாள்.அவனிடம் தண்ணீர் வாங்கி குடித்ததை நினைத்து மீனாட்சி அருவருப்பு அடையும் காட்சி இதற்கோர் உவமை.பலதரப்பட்ட மக்கள் பயணிக்கும் பேருந்து காட்சிகள் சினிமாத்தனம் அற்றது.அமைதியாய் செல்லும் பேருந்து பயணம்,திடீரென மத வெறியர்களால் தாக்கப்படுகின்றது,இந்து மத வெறியர்கள் பேருந்தில் நுழைந்து முஸ்லீம் பெரியவர் ஒருவரை கொலை செய்து பின் பேருந்தில் முஸ்லீம் யாரேனும் உள்ளரனா என சோதனை செய்கின்றனர்...நிலைமையை உணர்த்து மீனாட்சி தன் குழந்தையை ராஜாவிடம் தந்து தம் இருவரை Mr&Mrs Iyer என அறிமுகம் செய்து கொள்கிறாள்.அதில் இருந்து பேருந்தில் யாவரும் அவர்களை கணவன் மனைவி என நினைக்கின்றனர்.



மத கலவரத்தினால் பேருந்து பயணிகள் யாவரும் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் தங்க வைக்கபடுகின்றனர்.பயணிகள் யாவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் பொழுது,மீனாட்சியிடமும்,ராஜாவிடமும் அவர்கள் தேனிலவு சென்ற இடங்களை குறித்து வினவ..ராஜா வெய்நாட் காடுகளுக்கு சென்றதை அந்த கற்பனை தேனிலவு காட்சிகளை விவரிகின்றான்.திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது.ஒரு புகைபடகாரனுகே உரிய அனுபவ நேர்த்தியோடு அக்காட்சிகளை ராஜா விவரிக்கும் விதம் கவிதை.அவனது கற்பனை காட்சிகளில் தானும் பங்கு பெரும் மகிழ்ச்சியோடு மீனாட்சி அந்த காட்சியில் வார்த்தை இன்றி அமர்ந்து இருக்கும் காட்சி அழகு.

அன்று இரவு மீனாட்சியும் ராஜாவும் காட்டில் அமைந்து இருக்கும் பங்களா ஒன்றில் தங்க வைக்கபடுகின்றனர்.இரவில் இவர்கள் எதிர்பாரா வண்ணம் அங்கு நிலவும் அமைதியை குலைக்கும் வண்ணம் ஒரு வன்முறை கும்பல் ஒருவனை விரட்டி கொலை செய்கின்றது.இருவருக்கும் தங்களின் மதத்தின் மீதும் அதனூடான நம்பிக்கைகளிலும் ஏற்படும் கசப்பு தன்மை அக்காட்சியில் நிறைவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.மறுநாள் காலை மரங்களோடும் செடிகளோடும் வைத்து ராஜா மீனாட்சியையும்,அவளது குழந்தை சந்தானத்தையும் புகைப்படம் எடுக்கிறான்...அவர்களின் அர்த்தம் மிகுந்த பிரியமான நாட்கள் நிறைவுற போவதை சொல்லாமல் சொல்லும் காட்சி அது.



இப்படத்தின் இயக்குனர் அபர்ணசென் மேற்கு வங்காளத்தின் பிரபல நடிகை,சத்யஜித்ரேயின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.தேர்ந்த இயக்குனருக்கு உரிய நேர்த்தியோடு இத்திரைபடத்தை இயக்கி உள்ளார்.மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கொங்கனா சென் மற்றும் ராகுல் போசின் நடிப்பு.கொன்கனா சென் அபர்னா சென்னின் மகள்,முதல் திரைப்படம் என்கிற சுவடே இல்லாமல் இயல்பாய் மீனாட்சியை வாழ்ந்துள்ளார்.ராகுல் போஸ் - மேடை நடிகரான இவருக்கும் இதுவே முதல் படம் மிகை இல்லாத நடிப்பும்,மெல்லிய புன்னகையுமாய் படம் முழுதும் வந்து கவர்கிறார்.வாழ்வில் எந்த நேரத்திலும் யார்மீதும் நேசம் பிறக்கும் என்பதை கவிதை நடையோடு சொல்லியதோடு,மத கலவரத்தின் கோர முகத்தையும் படம் பிடித்து காட்டியுள்ளார் அபர்ணா சென்.

Thursday, July 24, 2008

குழந்தைகள் இலக்கியம் : பிஞ்சுகள் -கி.ராஜநாராயணன்

இன்றைய குழந்தை ஒன்றிடம் நீ ரசித்தது எது என கேட்டால் யோசிக்காமல் சொல்லும் பதில் ஏதேனும் ஒரு சினிமாவின் பெயராக தான் இருக்கும்.கணினியும்,தொலைக்காட்சியும் சிறுவர்களின் பொழுதுகளை விழுங்கி ஓடி விளையாடுவதற்கோ,நீதி கதைகள் படிப்பதற்கோ நேரம் இல்லாது செய்துவிடுகின்றன.என் வரையிலும் கற்பனை சக்தி வளர வாசிப்பு என்பது இன்றியமையாதது.
சமீபத்தில் ப்ளாக் ஒன்றில் அம்புலி மாமா சிறுகதை கண்டேன்.நினைவுகள் சட்டென எனது குழந்தை பருவத்தை நோக்கி சென்றது.

90'களின் தொடக்கத்தில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் இப்பொழுது போல இல்லை.ஞாயிறு இரவு திரைப்படமும், வெள்ளி இரவு ஒலியும் ஒளியும் மட்டுமே தொலைக்காட்சி பொழுதுபோக்கு.பெரும்பாலான நேரங்கள் தெருக்குழந்தைகளோடு கூடி "கல்லா மண்ணா" ,"பூ பறிக்க வருகிறோம்","பாண்டி","திருடன் போலீஸ்" "தாயம்" ,"பல்லாங்குழி" விளையாடுவதிலே செல்லும்..சிறுவர் நூல்கள் மீது நாட்டம் சென்றதும் "மாயாவி கதைகள்" "அம்புலி மாமா" "சிறுவர் மலர்" என படிக்க தொடங்கினேன்...வாசிப்பின் மீதான ஆர்வம் கூடியதே பால்ய கால சிறுவர் புத்தகங்கள் மூலமே..




எனது முதல் இலக்கிய வாசிப்பு தொடங்கியது கி.ராஜநாராயணனின் "பிஞ்சுகள்" குறுநாவல் மூலம்.வெங்கடேசு என்னும் கிராமத்து சிறுவனை சுற்றி நகரும் அக்கதை இன்று வழக்கில் இல்லாத பல தமிழ் சொற்களை கோடிட்டு விளக்குவதோடு,எண்ணில் அடங்கா நாம் அறியா பறவை இனங்களை வகைப்படுத்துகின்றது..ஒரு சிறுவனின் பார்வையில் ரயிலும்,அதனோடான நினைவுகளும் விளக்க படும் இடம் அருமை.மேலும் அக்காலகட்டத்தில் பெரியம்மை நோயின் தீவிரத்தை,அதன் விளைவால் கண் மற்றும் உரிய் இழந்தோரின் அவலங்களை கூறி இருப்பது அந்நோயின் அபாயத்தை விளக்குகிறது.

கிராமங்களில் தெருகூத்து எப்பொழுதும் நிகழும் ஒன்று.இன்று அதே கலைஞர்கள் தொழில் சோர்ந்து விட பாடல்களுக்கு நடனம் ஆடும் ரிக்கார்ட் நடனம் மேற்கொள்ளுகின்றனர்.இந்நாவலில் ஒரு பகுதியில் அவ்வூருக்கு வரும் கலைகூத்தாடிகள் நிகழ்த்தும் நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளது.தன் நண்பன் அசோக்கின் அண்ணனான மோகன் தாசுடனும் , மற்றொரு நண்பனான செந்தில்வேலின் குடும்பத்தோடும் வெங்கடேசு கொண்டிருக்கும் பற்றும் பிரியமும் சொல்லால் விவரிக்க இயலாத ஒன்று.தன் பழகும் ஒவ்வொரு நபருடனும் ஆழ்த்த அன்பை செலுத்தி புதிய புதிய காரியங்களை அறிந்து கொள்ளும் அவனது ஆவல் தேடல் நிறைந்த சிறுவனாய் அவனை அடையாளம் காட்டுகின்றது.மகிழ்ச்சியாய் நாட்கள் செல்ல வெங்கடேசுவிற்கு படிப்பின் மீது ஆர்வம் வருகின்றது.அசோக்கோடு சேர்ந்து பட்டணத்தில் சென்று படிக்க முடிவு செய்கிறான்.தன் பிரியத்திற்குரிய பறவைகளிடமும்,வீட்டு பூனையிடமும்,நாயிடமும் விடை பெற்று நீண்ட மௌனத்தோடு தன்பிரிவை சொல்லி வேதிநாயக்கரிடம் இருந்து விடைபெற்று ரயிலில் பட்டணம் புறப்படுகின்றான்....

நாவலில் குறிப்பிடப்படும் வழக்கொழிந்த சில தமிழ் சொற்கள்: தூறி:போக்கு நீரை எதிர்த்து வரும் மீனை பிடிக்க மூங்கிலால் செய்யப்பட்ட கருவி.

கொங்காணி : கோணியை போல மழைக்கு தலையில் போர்த்தி கொள்வது ,விரித்து படுக்கவும் உதவும்

தாப்பு : தங்கி இளைப்பாறும் இடம்

பொசல் வண்டி : கூட்ஸ் வண்டி

பூமரம் : ஒட்டுதல் உள்ளவர்கள் தனிமையில் தாம் சந்திக்க முன்னமே தேர்வு செய்த இடம்


நாவலில் குறிப்பிடப்படும் அறிய வகை பறவை இனங்கள்..

வல்லையதான் - போர் குணம் கொண்ட பறவை
தேன் கொத்தி - தேன் தீண்ட வண்ணம் உடல் அமைப்பு கொண்டது
நானுந்தான் - மைனா
சிட்டு குருவி வகைகள்: தேன்சிட்டு,மஞ்சள் சிட்டு,முள் சிட்டு,தட்டை சிட்டு...
தைலான் பறவைகள்,கரிச்சான் பறவை,குங்கும தட்டான்கள்,வால் குருவி


காக்கையும் குருவியும் அன்றி வேறு பறவைகளை காண முடியாத இப்பொழுதைய அவல நிலையில் இந்நூலின் பறவைகள் பெருமூச்செறிய வைக்கின்றன.

இவை மட்டும் இன்றி நாவலில் குறிப்பிடபட்டுள்ள செய்திகள் பல.மழை வேண்டி கண்மாய் பிள்ளையாருக்கு மிளகாய் அரைத்து பூசி வேண்டுதல்,புதர் மண்டிய இடத்தில் கோவில் நாகம் இருப்பதை சொல்லி உலவும் கட்டு கதைகள்,ரயில் வண்டியின் மீது சிறுவர்கள் கொண்டுள்ள மோகம் என கிராமத்து நிகழ்வுகள் நாவல் முழுதும் மிகை இன்றி சொல்லப்பட்டுள்ளது.பெரும் நிறைவையும் திருப்தியையும் வாசகனுக்கு தரும் இந்நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்தது மிகை இல்லை..

Tuesday, July 22, 2008

Alfred Hitchcock's Phsyco (1960)



Pshyco, 1960 ஆம் ஆண்டு Alfred Hitchcock இயக்கத்தில் வெளிவந்தது.த்ரில்லர் படமான இது அக்காலகட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.கதை நாயகன் நகரத்தின் ஒதுக்குபுறத்தில் மொடேல் எனப்படும் வழிபோக்கர்கள் தங்குமிடம் நடத்துகிறவன்.கதை நாயகி தன் அலுவலகத்தில் இருந்து பெரும்பணத்தை திருடி கொண்டு வேறு நகரம் செல்ல திட்டமிட்டு தனது காரில் புறபடுகிறாள்.ஒரு இரவு நேரத்தில் அந்த மொடேலை அடைந்து அங்கு தங்க முடிவு செய்கிறாள். இரவு உணவின் போது நாயகனுடன் பேசுகின்றாள் ,அவன் தானும் தனது தாயரும் மட்டுமே இங்கு உள்ளதாகவும் கூறுகிறான்.பின்பு அவர்கள் பேச்சு விவாதமாக மாறி அவள் கோவம் கொண்டு தன் அறைக்கு செல்கிறாள்.குளியலறையில் நாயகனின் தாயே அவளை பலத்த ஆயுதம் கொண்டு தாக்கி கொலைசெய்கிறாள். நாயகன் வந்து அவள் உடலை காரில் இது அருகில் உள்ள குளத்தில் தள்ளி விடுகிறான். நாட்கள் செல்ல நாயகியின் சகோதரி ஒரு ரகசிய உளவாளி மூலம் தங்கையை தேட முயற்சிக்க..அந்த உளவாளியும் காணாமல் போகிறார். பின் அவளே ஒரு நண்பனின் துணை கொண்டு அந்த மொடேலுக்கு வருகிறாள்.



அங்கு அறை எடுத்து தங்கி அவள் தங்கை தங்கிய அறையை சோதனை செய்து அங்கு அவள் விட்டு சென்ற சில காகித துண்டுகளை கண்டு அதிர்ச்சி கொள்கிறாள்.இதனிடையில் அந்த நகரத்து அதிகாரியிடம் இது குறித்து புகார் செய்ய ,அவரோ நாயகனின் தாயே இறந்து பத்து வருடங்கள் ஆனதாக கூறுகிறார்.பின்பு நாயகனின் வீட்டை சோதனை செய்ய வேண்டி நண்பனை அவனுடன் பெசிகொண்டிருக செய்து இவள் வீட்டை சோதனை இடுகிறாள்..அங்கு அவன் அறையில் குழந்தைகளுக்கான விளையாடு பொருட்கள் மட்டுமே உள்ளது.இனிலையில் நாயகன் அவளை தேடி அங்கு வர கீழ் அறைக்குள் சென்று ஒழிய முயலும் போது நாயகனின் தாயே அமர்த்து இருபது கண்டு அவளை அழைக்க அங்கு இருப்பதோ எலும்புக்கூடு மட்டுமே.இநிலையில் நாயகன் நண்பனால் தாக்கபட்டு போலீசாரால் கைது செய்ய படுகிறான். தாயை கொன்ற குற்ற உணர்ச்சியால் நாயகன் சைக்கோ வாக மாறி அவள் பெயரில் அவள் போலவே உடை மற்றும் தலையில் விக் அணிந்து கொலைகள் செய்தது தெரிய வருகிறது.

இத்திரைப்படத்தில் இரண்டே கொலைகளை நாயகன் செய்கிறான். இருப்பின் ஒவேவொரு காட்சியையும் இயக்குனர் சிறப்பாய் அமைத்துள்ளார். நாயகன் நாயகியை கொள்ளும் காட்சியில் பயன்படுத்திய காமெரா கோணங்கள் அற்புதம் .Pshyco வாக நடித்த நடிகர் Anthony Perkins தனது அபாரமான நடிப்பை வெளிபடிதியுள்ளர் .இத்திரை படம் பல விருதுகளை பெற்றது.1998 ஆண்டு இதை ரீமேக் செய்தனர் அத்திரைபடம் படு தோல்வி அடைந்தது.இன்றும் பல த்ரில்லர் படங்களுக்கு இத்திரைப்படம் முன்னோடியாய் உள்ளது.

இத்திரைப்படம் குறித்து மேலும் அறிய..

http://en.wikipedia.org/wiki/Psycho_(1960_film)

வண்ணநிலவனின் கடல்புரத்தில்



சமீபத்தில் வண்ணநிலவனின் சிறுகதை ஒன்று ஆனந்த் ஆனந்த விகடனில் படித்தேன்..பெரும் அதிர்ச்சி...தாமிரபரணி கதைகள் ,சம்பா நதி,ரெய்நீஸ் ஐயர் தெரு,கடல்புறத்தில் போன்ற அற்புத இலக்கியம் படைத்தவரிடம் இருந்து வந்த இந்த சிறுகதை ஆசிரியர் பெயரை மற்றும் ஒருமுறை சரி பார்க்க செய்தது.
வண்ணநிலவன்,வண்ணதாசன் கதைகள் என்றுமே படிப்பதற்கு ஒரு இனிய அனுபவம்..வாசிப்பாளனை தன்பால் ஈர்க்கும் ஒரு சக்தி அவ்வெழுதுக்களுக்கு
உண்டு. மீண்டும் அவரது நாவல்களை படிக்கும் ஆவல் மேலிட..கடல் புறத்தில் படித்து முடித்து,தற்பொழுது ரெய்நீஸ் ஐயர் தெரு படித்து கொண்டு இருக்கின்றேன்..

கடல்புரத்தில், ஒரு கடலோர மீனவ கிராமத்தின் அன்றாட நிகழ்வுகளின் பதிவு.அம்மக்களின் காதல்,வீரம்,ஏமாற்றம்,ஆசை,பேராசை,வன்மம் என அனைத்து உணர்வுகளையும் அழகாய் கதையின் ஊடே விவரிகின்றார் வண்ணநிலவன்.கதையில் முக்கிய பங்கு வகிப்பது கதை நாயகி பிலோமியின் காதல்...நிறைவேறாத அந்த காதலின் முடிவு பெரும் சோகத்தை தருகின்றது.கிறிஸ்மஸ் காலத்தில் மீனவ மக்களின் கொண்டாட்டங்களை எளிமையாய் கூறிய விதம் அருமை.தூத்துக்குடி பகுதி பேச்சு வழக்கில் கதையை கூறி இருப்பது படிப்பதற்கு இனிமை..மிகச்சிறிய நாவல்,எளிய கதை,ஆர்பாட்டமில்லாத உரைநடை,இயல்பான மக்கள்..என நாவல் நம்மை அந்த கடல்புறதிற்கே கொண்டு செல்கிறது..



கடல்புறத்தில், தகழியின் செம்மீன் நாவலோடு கடலையும் சேர்ந்து பல விதங்களில் ஒன்றுபட்டு உள்ளது.கதை நாயகிபிலோமியின் ஏழ்மையில் தொடங்கி,அவள் தந்தையின் படகு கனவு..அவளது நிறைவேறா காதல்,பிள்ளை பிராயதின்மேல் அவள் கொண்டிருந்த பிரியம்,கடலோடு அம்மக்களின் உறவு என கடலோரத்தில் நாவல் பல இடங்களில் செம்மீனை நியாபகபடுத்துகிறது..பேரமைதியையும்,பெரும் இரைச்சலும் சேர்த்து தன்னுள்ளே கொண்டுள்ள கடல் எப்போதுமே அழகு தான் இந்த இரு நாவல்களைபோல.....

Monday, July 21, 2008

நோபல் பரிசு பெற்ற நாவல் :கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்க்வே



கடலும் கிழவனும் குறுநாவலை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..மறுவாசிப்பின் பொழுது நிச்சயமாய் சில புதிய ஆச்சர்யங்கள்,கருத்துக்கள் காணகிடைக்கும். நோபல் பரிசு பெற்ற இந்நாவலின் கதையமைப்பு மிக எளிமையானது.மிகுந்த கதைமாந்தரோ,சிக்கலான கதை பின்னணியோ,வாசிபாளனை கிறுகிறுக்க வைக்கும் யுக்தியோ எதுவும் இல்லாமல் ஒரு ஏழை மீனவ கிழவனின் ஒரு நாள் மீன்பிடி அனுபவத்தை விரிவாய் விவரிக்கும் கதையே இக்குறுநாவல்.

ஸாந்தயகா என்னும் பெயருடைய கிழவன் பல நாட்களாய் மீன்கள் எதுவும் சிக்காமல் வெறும்கையோடு கரை திரும்பி யாவரின் நகைப்பிற்கும் ஆளாகிறான்.கிழவனோடு தினமும் கடலுக்கு சிறுவன் ஒருவன் தன் தந்தையின் வற்புறுத்தலால் வேறு படகுக்கு செல்கிறான்.அச்சிறுவனுக்கும் கிழவனுகுமான உறவு அற்புதமானது. வேறு படகுக்கு சென்றாலும் தனக்கு மீன் பிடிக்க கற்று குடுத்த கிழவன் மீது அவன் கொண்டுள்ள அன்பு அளப்பெரியது.கிழவனும் அச்சிறுவனும் அடிக்கடி தங்களின் கடந்த கால மீன்பிடி அனுபவங்களை சொல்லி மகிழ்வது நிகழ கால கசப்பை மறப்பதற்கே...பெரிய மீன் எதுவும் கிடைக்காமல் தினம் கரை திரும்பினாலும் கிழவன் கொண்டுள்ள முயற்சியும் நம்பிக்கையும் சிறிதும் குறைவதில்லை.இந்நாவல் அழுத்தமாய் சொல்லவரும் கருதும் அதுவே...நாவலின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் கடல் மீன் வகைகளும்,கடல் சார்ந்த பறவைகளும் (Yellow Jack ,Man of War Bird,Fathoms,Bonita,Blue Rummer) அவற்றை காணும் ஆர்வத்தை தூண்டுகிறது.இன்று காக்கை தவிர வேறு பறவைகளை காண வழி இல்லாத நிலை ஏனோ மனதில் வந்து மறைந்தது..



எப்பொழுதும் போல ஒரு நாள் சிறுவனிடம் இருந்து விடைபெட்டிறு கொண்டு மீன் பிடிக்க செல்கிறான் கிழவன்.நீண்ட பயணத்திற்கு பிறகு பெரிய வகை மீன் ஒன்று அவன் வலையில் சிக்குகிறது.பெரும் எடை கொண்ட அம்மீனை படகினுள் இழுத்து போட இயலாததால் படகோடு அம்மீனை கட்டி கரைநோக்கி பயணத்தை தொடங்குகிறான்.இப்பெருத்த மீனும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகே அவனால் கொல்லப்படுகின்றது.சிறுவன் இல்லாத தனிமையை நிரப்ப தானே பேசிக்கொண்டு அம்மீனை சகோதரனாய் பாவித்து தன் பயணத்தை தொடர்கிறான்.இறந்த அம்மீனின் ரத்த வாசனை நுகர்ந்து கடல் பன்றி எனப்படும் சுறாமீன்கள் படகை நெருங்கி அம்மீனின் சிறு பகுதியை தின்று விட அவற்றோடு போராடி கொள்கிறான்..மீத முள்ள மாமிசம் மட்டுமே மிச்சம் அதனை எப்பாடுபட்டாது போராடி கரை சேர்த்திடும் கனவோடு கரையை நெருங்கும் சமயம் அவன் எதிர்பாரா வண்ணம் சுறா மீன்கள் படையெடுத்து வர தன் பழம் கொண்ட மட்டும் ஆயுதம் இன்றி தடியால் அவற்றை அடித்தும்,கொன்றும் விரட்டுகிறான்.இருப்பினும் அவனாம் வேட்டையாடிய மீனை அவற்றிடம் இருந்து காப்பாற்ற இயலாது வெறும் கூடு மட்டுமே மிஞ்சுகிறது..அம்மீனின் எலும்பு கூட்டின் பிரமாண்டத்தை பார்த்து யாவரும் வியந்து பேச கிழவன் தன் போராட்டத்தின் அயர்வினால் உறங்குகிறான் மறுநாள் மீன்பிடி பயணத்திற்காக.....

நாவலின் கதை எளிமையாய் இருந்தாலும் கூற வரும் கருத்து ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.எடுத்துக்கொண்ட காரியத்தில் பிரியமும்,ஆர்வமும் இருக்க அதனோடு விடா முயற்சியும் மேலான சிரத்தையுடன் கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம்..இவை யாவும் கொண்டு முயன்ற கிழவன் வெற்றியை சுவாசித்த திருப்தியோடு ஒவ்வொரு நாளும் தன் அடுத்த பயணத்தை நம்பிக்கையோடு தொடர்கிறான்.

Wednesday, July 16, 2008

ஜே ஜே சிலகுறிப்புகள் - சுந்தரராமசாமி

சு.ரா வின் ஒரு புளியமரத்தின் கதை ஏற்படுத்திய ஆர்வத்தில்,அவரின் மிகச்சிறந்த படைப்பென அறியப்படும் 'ஜே ஜே சிலகுறிப்புகள்' படித்து முடித்தேன்..ஒரு எழுத்தாளனின் மறைவிற்கு பிறகு அவனை குறித்த நினைவுகளை மற்றொரு எழுத்தாளன் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் இக்கதை இரெண்டு எழுத்தாளர்களின் சிந்தனை,மனவோட்டம்,விருப்பு,வெறுப்பு பிற இலக்கியம் மீதான பார்வை,சம கால எழுத்தாளர்களோடு கொண்ட உறவு என திகட்ட திகட்ட கருத்தாளமிக்க பல குறிப்புகள் கொண்டது.

ஜோசப் ஜேம்ஸ் (ஜே ஜே) என்னும் மலையாள எழுத்தாளனின் மறைவிற்கு பின்னர் அவனை குறித்த நாவல் ஒன்றினை எழுத ஜே ஜே வின் மனைவி, நண்பர்கள்,அவனோடு எதிர்மறை கருத்து கொண்டவர்கள்,அவனது சமகால எழுத்தாளர்கள் என யாவரையும் சந்தித்து ஜே ஜே நினைவுகளை நம்மோடு பகிர்கிறார் எழுத்தாளர் பாலு...இந்நாவல் கதை அல்ல,இறந்த எழுத்தாளனின் நாட்குறிப்புகள்...இவ்வளவு ஆழ்ந்த கருத்துக்களை ஒன்று சேர ஒரே நாவலில் படித்ததில்லை..இந்நாவலில் குறிபிட்டுள்ளது போல புரியாத இலக்கியம் இரெண்டு வகை அசிரத்தை ஏற்படுத்துவது அல்லது ஆர்வத்தை தூண்டுவது.இதில் இந்நாவல் இரெண்டாம் வகை....




ஜே ஜேயை குறித்த ஒரு தெளிவான முடிவிற்கு வாசகனால் வர இயலாதபடி அவரது போக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.ஆயினும் உண்மை எதிர்மறையாக இருப்பினும் அதை அழுத்தமாக சொல்லக்கூடியவன் என்பது பல இடங்களில் வெளிப்படுகின்றது. பாலுவிற்கும் ஜே ஜே விற்கும் மான முதல் சந்திப்பில் ஜே ஜே கேட்பது " உங்கள் சிவகாமியின் சபதம் நிறைவேறிவிட்டதா என்று" - உள்ள அர்த்தம் புரிந்தவர்களுக்கு இந்த பகடி சிரிப்பை வரவழைக்கும்.இந்நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று மிகுந்த ஹாசியம்,பகடி.திருச்சூர் என்னும் சரித்திர நாவலாசிரியரின் ஒரு படைப்பை பற்றி ஜே ஜேயின் விமர்சனம் " இளவரசி உம்மிணிகுட்டியை எதிரிகளிடமும் அவளை காப்பாற்றிய இளவரசனிடமும் இருந்து விடுவித்து திருச்சூருக்கு மனம் முடித்தால் அவருக்கு நாவல் எழுதும் வேலை குறையும்".இதே போல பவானி என்னும் பேச்சாளரை குறித்து ஜே ஜே செய்யும் பகடியும் ரசிப்பிற்குரியதே..ஜே ஜேவின் இரங்கல் கூட்டத்தில் குருவி என்னும் புனைப்பெயரில் எழுதும் பெண் எழுத்தாளர் ஜே ஜே பற்றி ஒன்றும் அறியாது அவரை குறித்து அழுது புலம்பும் காட்சியில் ஜே ஜேயும்,அப்பெண்ணும் சிறு வயதில் பாண்டி விளையாடுவதாய் பாலு கற்பனை செய்து சிரிப்பது நல்ல கற்பனை...

நமக்கான எல்லைகள் சுருக்கப்படும் பொழுது அதில் இருந்து மீள்வதற்கு வழிவகை இல்லாத பொழுது ஏற்பட்டும் வீழ்ச்சி எற்றுகொள்ளகூடியது அல்ல...நமக்கான முடிவுகளை பிறர் தீர்மானிக்கும் பொழுதும் நிகழும் துக்கம்,வெறுமை,அழுகை இவற்றை ஜே ஜே தனது குறிப்புகளில் அழுத்தமாய் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஜே ஜேயை அவனின் நண்பர் ஒருவர் "மேகத்தை கலைப்பவன்" என கூறுகிறார்..இன்னும் எவ்வளவோ விமர்சனங்கள். ஜே ஜேயை அறிந்து கொள்ள அவன் எழுதிய பேசிய பகுதிகளில் இருந்து எனக்கு பிடித்தவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன்..




-- "மரணத்தின் குகைவாயில் மனகண்ணுகு தெரியும் பொழுது எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது"

-- "மன நிம்மதி எப்போதும் மந்தத்தை பார்த்து கண் சிமிட்டுகிறது போலிருக்கிறது"

-- "மனைவிகளின் பெரிய எதிரி கணவனின் இலக்கிய நண்பன்"

-- "எனக்கு புறப்படும் இடம் தெரியும் போகும் இடம் தெரியாது"

--"மழையின் அற்புதத்தை முழுதாக இழந்துவிட்டோம் ,என்னை மறந்து அதை ரசிக்க தெரியவில்லை"

-- "ஒரு புறாவின் வாழ்வு பிறப்பு,உணவு,உறைவிடம்,இனவிருத்தி,மரணம் என முடிகிறது,மனிதனுக்கோ நிருவன்னகள்,லட்சியங்கள்,இலக்கியங்கள்,உறவுகள் என யாவும் சிடுக்குகள்"

-- "நகரத்தின் போலியான நாகரிகம் இயற்கையை அனுசரித்து வாழும் கிராமவாசியை கெடுத்துவிடுகின்றது"

தன்னை குறித்த விமர்சனங்களுக்கு ஜே ஜேயின் பதில் -

"எந்த முத்திரை வேண்டுமானாலும் என் மீது குத்த படட்டும் நம்பிக்கைவாதி,அவநம்பிக்கை வாதி,முற்போக்குவாதி,பிற்போக்குவாதி.......அனைத்தும் ஒன்றாக படும் இடத்திற்கு நான் போய் சேர வேண்டும்"


உறவுகள் குறித்த ஜே ஜேயின் நோக்கு..பொதுவாய் எல்லாருக்கும் இருப்பவையே - we will never want to restrict ourself to a short boundry. சிறந்த ஓவியனை அறியப்படும் ஜே ஜே கால்பந்தாட்டத்தை களமாக கொண்டு வரைந்த ஓவியங்களை சு.ரா விவரிக்கும் விதம் அழகு.தன் நண்பர்களான சம்பத்,மேனன்,முல்லைக்கல் இவர்களோடு ஜே ஜே கொண்டிருந்த பாசாங்கற்ற உறவு,ஆரோக்கியமான விவாதங்கள் யாவும் ஜே சேவை அறிந்து கொள்ள நுட்பமாய் விவரிக்கபட்டவை.

விளங்க முடியாத பல உண்மை எதிர்மறை கருத்துக்கள் கொண்ட எழுத்தாளன்,ஓவியன்,கால்பந்து வீரன் என பல முகம் கொண்டஜே ஜேயின் வாழ்க்கை குறிப்புகள் படித்து எளிதில் மறக்க கூடியதல்ல...ஓவ்வொரு முறை படிக்கும் பொழுதும் புது புது அனுபவம் தரும் ஜே ஜேயின் குறிப்புகள் ஆழ்ந்த அர்த்தம் நிறைந்த நாவல்.

Monday, July 14, 2008

புதுமைபித்தனின் ரஷிய மொழிபெயர்ப்பு - பலிபீடம்



புதுமைபித்தனை ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் எனக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன..இம்முறை அவர் மொழிபெயர்த்த பலிபீடம் என்னும் ரஷிய நாவல் அந்த அனுபவத்தை தந்தது..இந்நூலின் நேரடி ஆசிரியர் அலெக்சாண்டர் குப்ரிக்.இங்கு பலிபீடம் என குறிப்பிட படுவது ரஷியாவில் யாமா நகரில் அமைந்த வேசியர் விடுதிகளை.புதுமைபித்தனின் மறைவிற்கு பின்னர் அவரது துணைவியாரிடம் இருந்து இந்த மொழிபெயர்ப்பு நகலை பெற்று வெளிட்டுள்ள பூம்புகார் பதிப்பகத்தாரின் இப்பணி பாராட்டுதலுக்குரியது...

சில தலைப்புகள் என்றும் விவகாரமானவையாகவே கருதபட்டு பெரும்பாலான எழுத்தாளர்களால் தவிர்க்கபட்டு வருபவை..அதில் ஒன்று வியசாரம் (இந்நூலில் புதுமை பித்தன் இப்படியே கூறுகிறார்..அவ்வார்த்தையும் வழக்கொழிந்து விட்டது போல..) சிக்கலான உரைநடை ,அதிக கதை மாந்தர்கள்,விடுபட்ட மொழிபெயர்த்த பகுதிகள் என இந்நாவலில் குறைகள் பல இருப்பினும்..அது சொல்லி இருக்கும் கருத்து நிறைவை தருகின்றது..

நாவலில் பிரதான நாயகன் நாயகி என யாரும் இல்லை....அவ்விடுதியின் பெண்கள் யாவரும் நாயகியர்,அவர்களின் மனம் கவர்ந்தவர்கள் யாவரும் நாயகர்களே..அவ்விடுதியின் காலை பொழுதில் பெண்கள் சிறிது மகிழ்ந்து விளையாடுவதாக தொடங்கும் நாவல்..மெல்ல மெல்ல ஒவ்வொரு பெண்ணையும் அறிமுகம் செய்து அவளின் குணாதிசியங்களை விவரிக்கின்றது...அவ்விடுதியின் காவலன் சிமியோன் நிர்வாகி என யாவரும் அவர் அவர் போக்கில் நல்லவர்களே..யாதொரு பெரும் லட்சியம் கொண்டும் வாழ்வை வெறுத்தும் அப்பெண்கள் இல்லாமல் அந்தந்த பொழுதை கழித்தால் போதும் என்கிற மனநிலையில் உள்ளதற்கு அச்சமூகமே காரணம் என கூறப்பட்டுள்ளது..இந்நாவல் இக்காலகட்டதிற்கும் பொருந்தும்...

நாவலின் இறுதி கட்டம் பெரும் ஆராய்ச்சிக்குரியது ..சட்ட மாணவர்கள் குழு ஒன்று தம் ஆசிரியர்களோடு அவ்விடுதிக்கு வருகின்றது..அவர்கள் பார்வையில் அப்பெண்கள்,அவர்கள் வாழ்க்கை,தொழில் என யாவும் ஆசிரியர் விவாத பாணியில் விவரித்துள்ளது நுட்பமான கருத்துக்களை கொண்டது..இறுதியில் அம்மாணவர்களில் ஒருவன் பெருத்த எதிர்பிற்கிடையில் அங்குள்ள மங்கையை திருமணம் செய்து வாழ அழைத்து செல்வதாய் கதை முடிகிறது....

இந்நாவலை எழுதிய அலெக்சாண்டர் குப்ரிக் பல எதிர்வினைகளை சந்தித்தாய் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது..மேலை நாடுகளிலேயே ஏற்றுக்கொள்ள படாத இவ்வகை நூல்கள் தமிழில் வெளிவர காரணமான புதுமைபித்தன் புரட்சி எழுத்தாளனே..
இந்நூல் வெளிவந்த காலம் இந்திய சுதந்திரம் அடையாததிற்கு முன்பு..அக்காலகட்டத்தில் புதுமைப்பித்தன் வியசாரம் குறித்து முழுக்க முழுக்க ஆராயும் மேலை நாட்டு நூலை மொழி பெயர்த்துள்ளது அவரின் துணிச்சலை மட்டும் அல்லாது சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள உண்மையான அக்கறையை காட்டுகிறது....மொழிபெயர்ப்பில் உள்ள சில தவிர்க்க முடியாத சங்கடங்களை நீக்கி பார்த்தல் இந்நூல் எடுத்துரைக்கும் கருத்துக்கள் ஏராளம்..

Thursday, July 10, 2008

சுஜாதா சுவடுகள்.....



எழுத்தாளர் சுஜாதாவின் மறைவிற்குப்பின் ஆனந்த விகடன் சுஜாதாவின் நினைவாக அவர் எழுதிய சிறுகதைகளை சுஜாதா சுவடுகள் என்னும் தலைப்பில் வாரம் ஒன்றாக வெளியிட்டு வருகிறது.விரைவில் இதன் தொகுப்பை புத்தகமாக எதிர்பார்க்கலாம்..இரு வாரங்களுக்கு முன் வெளிவந்த "நகர்வலம்" என்னும் சிறுகதை அசல் சுஜாதா பாணி அறிவியல் சிறுகதை...அதன் சுவாரசியமும்,வேகமும் இப்பத்தியை எழுத தூண்டியது...

பெரும் வசதி கொண்ட கப்பல் ஒன்று சென்னையை நோக்கி வருகின்றது,அதில் பயணம் செய்யும் பலருள்,கணவனும்,மனைவியுமாய் ஒரு இளம் தம்பதியினர் உள்ளனர்..அந்த இளைஞன் தன் மூதாதையர் வாழ்ந்த சென்னை நகரத்தை காணும் ஆவல் கொண்டு கடல் கரை நெருங்க நெருங்க பெரும் மகிழ்ச்சி கொள்கிறான்.. இதுவரை கதை படிப்போர் யாருக்கும் வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்பு ஒரு இளைஞனின் பின்பமே மனதில் வந்து மறையும்..

ஆனால் இளைஞனின் மனைவி அவனிடம் வந்து பூமிக்கு வந்ததை விட வேறு கிரகத்துக்கு சென்று இருக்கலாம் ,விடுமுறையை பாழ் செய்து விட்டாய் என சண்டை இடும் பொழுதுதான் அவர்கள் வேற்று கிரத்தில் இருந்து தம் முன்னோர் வாழ்ந்த இடத்தை காண வந்து இருப்பது தெரிகிறது..கதையில் முடிவு பெரும் ஆச்சர்யத்தை கொண்டது..சென்னை நெருங்க கப்பலின் அதிகாரி ஒலிபெருக்கியில் கூறுவது " சென்னை பட்டணம் நெருகுவதால் கப்பலின் மேல் தளம் மூடி கொள்ள போகிறது,இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் நீரினுள் மூழ்கிய சென்னை நகரத்தின் தெருக்கள் வழியே இப்பொழுது கப்பல் செல்ல போகிறது"...............A story with typical Sujatha Touch!!