Wednesday, December 10, 2008

மதுரை புத்தகக கண்காட்சி

பள்ளி,கல்லூரி காலங்களில் மதுரையில் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் செல்லும் ஒரே இடம் ரயில் நிலையம் அருகில் இருக்கும் மீனாட்சி புத்தக நிலையத்திற்கே.அங்கும் குறிப்பிட்ட எழுத்தாளர்களை தவிர்த்து வேறு நூல்கள் கிடைக்காது.ஆகா பெரும்பாலான நூல்கள் புத்தக கண்காட்சிகளில் அப்பா வாங்கியதாகவே இருக்கும்.சென்றமாதம் மதுரை சென்ற பொழுது ஒரு ஞாயிறு மாலை புத்தக கண்காட்சி(??!!) என்ற பெயரில் நகரில் நடைபெற்ற நாலைந்து இடங்களுக்கு சென்று ஏமாற்றம் அடைந்தது மறக்க முடியாது.

எனவே பெரும் எதிர்பார்ப்பு ஏதும் இன்றியே தமுக்கம் திடலில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு(நவம்பர் 27 - டிசம்பர் 08) சென்றிருந்தேன்.என் எண்ணத்திற்கு மாறாக பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு,உயிர்மெய்,தமிழினி,மீனாட்சி,நேசனல் புக் டிரஸ்ட் அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.வாங்க வேண்டிய புத்தகங்கள்,அதன் ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தின் பெயர்கள் என சின்னதொரு பட்டியலை தயார் செய்து எடுத்து சென்றது சுலுவாய் போனது.




ஏற்கனவே படித்திருந்த ஜே.பி.சாணக்கியாவின் "என் வீட்டின் வரைப்படம்" விளிம்பு நிலை வாழ்கை குறித்த நிதர்சன பதிவு,அய்யனார் பதிவிட்டிருந்த சாணக்கியாவின் சிறுகதை தொகுப்பான "கனவு புத்தகம்" (காலச்சுவடு) மற்றும் வேட்டி தொகுப்பில் கி.ரா ஸ்லாகித்து எழுதி இருந்த சு.ராவின் "அக்கரை சீமையிலே" (காலச்சுவடு) சிறுகதை தொகுப்பையும் வாங்கினேன்.சாருவின் சீடர் என அறியப்பட்ட வா.மு.கோ.மு வின் "கள்ளி" (உயிர்மெய்) மற்றும் ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" (கிழக்கு பதிப்பகம்) ஆகிய இரு நூல்களும் பெரும் தேடலுக்கு பின் கிடைத்தவை.

மிக சமீபத்தில் எட்வர்ட் சச்சிதானந்தத்தின் எழுத்துலகம் குறித்து எஸ்.ராவின் தளத்திலும்,சுரேஷ் கண்ணனின் பதிவிலும் படித்ததும் அவரின் எழுத்துக்களை படிக்கும் ஆர்வம் கூடியது.அவரின் "நுகம்" (தமிழினி) மற்றும் கோபி கிருஷ்ணனின் "இடாகினி பேய்களும்" (தமிழினி) தொகுப்புகள் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.கோபியின் "டேபிள் டென்னிஸ்" தொகுப்பு எங்கு கிடைக்கும் என யாரேனும் கூறினால் நலம்.

மனுஷ்யபுத்திரன்,காலச்சுவடு கண்ணன் தவிர்த்து இலக்கிய முகங்கள் எதுவும் தென்படவில்லை.காவ்யா மற்றும் அன்னம் பதிப்பகங்கள் இல்லாதிருந்தது ஏமாற்றமே.இருப்பினும் உருப்படியாய் ஒரு மாலையை செலவிட்ட திருப்தியோடு வெளியேறினேன்.என்னளவில் பெரும் நிறைவை தருவதாய் அமைந்தது மதுரை புத்தக சந்தை.

நன்றி அய்யனார் & சுரேஷ் கண்ணன்

20 comments:

KARTHIK said...

// கோபியின் "டேபிள் டென்னிஸ்" தொகுப்பு எங்கு கிடைக்கும் என யாரேனும் கூறினால் நலம்.//

anyindain தவிர வேறு எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை.

கள்ளி தான் வாங்கனும்.

லேகா said...

வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி கார்த்திக்.

Thamiz Priyan said...

மதுரை புத்தக கண்காட்சி என்று வரை இருக்கிறது?
(இந்த மாதக் கடைசியில் இந்தியா செல்லும் போது செல்ல வாய்ப்புள்ளதா என அறிய? )

லேகா said...

வருகைக்கு நன்றி தமிழ் பிரியன்.

மதுரை புத்தக கண்காட்சி டிசம்பர் 8 முடிவுற்றது. சென்னை புத்தக சந்தை டிசம்பர் இறுதியில் தொடங்கி பொங்கல் வரை நீடிக்கும்.

Kumky said...

முதல் முறை வருகை..
புத்தக வாசிப்பில் ஒரே மாதிரியான கருத்துக்கள்.
நேரமின்மை...பின்னர் அனைத்து பதிவுகளையும் வாசித்து....வருகின்றேன்.
நன்றி.

Boston Bala said...

Thank you

லேகா said...

நன்றி பாலா & கும்க்கி

குப்பன்.யாஹூ said...

விடுமுறையை பயனுள்ளதாக கழித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

அலைவோம் திரிவோம் வாங்கலையா.

சென்னை புத்தக கண்காட்சியில் அல்லது அதற்க்கு முன்னரே ஸ்டீபன் கோவே புத்தகம் வாங்க முயலுங்கள்.


குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி குப்பன்_யாகூ.

நீங்கள் குறிப்பிட்ட இரு புத்தகங்களையும் சென்னை புத்தக சந்தையில் வாங்க முயல்கிறேன்.

Sateesh said...

கடத்த இரண்டு வருடங்களாகவே மதுரையில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது... சென்றமுறை போல இந்த முறையும் தவறவிட்டு விட்டேன் :(

Sateesh said...

கடத்த இரண்டு வருடங்களாகவே மதுரையில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது... சென்றமுறை போல இந்த முறையும் தவறவிட்டு விட்டேன் :(

அருண்மொழிவர்மன் said...

கோபி கிருஷ்ணனின் "இடாகினி பேய்களும்" (தமிழினி//

அண்மையில் என்னை பெரியளவில் கவர்ந்த நாவல்.... அற்புதமாக இருக்கும் வாசித்து உங்கள் அனுபவங்களாஇ எழுதுங்கள்

Krishnan said...

எனக்கு கொஞ்சம் பொறாமையாய் இருக்கிறது, என்னால் மதுரை புத்தக கண்காட்சிக்கு போக முடியவில்லையே என்று :-) ஒரு சின்ன திருத்தம். 31st சென்னை புத்தக கண்காட்சி -
08-01-2009 to 18-01-2009
நேரம் : வேலை நாட்கள் : 2:30 pm to 8:30 pm
விடுமுறை நாட்கள் : 11:00 am to 8:30 pm
இடம் : St.George Anglo Indian School,(opp to Pachayappan college)
Poonamalee High Road,
Aminjikarai, Chennai - 30.

லேகா said...

நன்றி கிருஷ்ணன்,இலக்கிய நிகழ்வுகள் குறித்த உங்கள் தகவல்கள் வழக்கம் போல நன்று.

லேகா said...

இத்யாதி நீங்க மதுரைகாரரா!! இந்த வருடம் போகாட்டி விடுங்க,சென்னை புத்தக கண்காட்சியில் அதை விட அதிகபுதாக பதிப்பாளர்கள் பங்கு பெறுவர்.

லேகா said...

@ அருண்மொழிவர்மன்

கோபியின் "உள்ளே இருந்து சில குரல்கள்" என்னை மிகவும் பாதித்த பதிவு. "இடாகினி பேய்கள்" பெரு விருப்பத்தோடு வாங்கினேன்,நிச்சயமாய் படித்துவிட்டு பதிவு செய்கின்றேன்.

Thamiz Priyan said...

தகவலுக்கு நன்றி லேகா!

தமிழ்பாலா said...

புத்தக கண்காட்சியில் கிடைக்காத, பல அரிய புத்தகங்களும் கிடைத்ததாக பலர் கூறினர். நான் தான் புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியவில்லை. anyindian பார்த்து தேடி வாங்கிக் கொள்வேன்.

தமிழ்பாலா said...

நன்றி லேகா

லேகா said...

வருகைக்கு நன்றி பாலா.புத்தக சந்தையில் கிடைக்காத சில நூல்களை நானும் எனி இந்தியனில் தான் வாங்க உத்தேசித்துள்ளேன்.