இந்தியில் அரிதாய் வெளிவரும் நல்ல படங்களுள் ஒன்று.2005 இல் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர்.இவரின் முந்தைய படம் தபு நடிப்பில் வெளிவந்த "சாந்தினி பார்' வெகுவாய் பாராட்ட பெற்று விருதுகள் பெற்றது.முதல் முறை இப்படம் பார்க்க ஒரே காரணம் கொங்கனா சென்.Mr & Mrs ஐயர் திரைப்படத்தில் வெளிப்பட்ட அவரின் ஆபார நடிப்பே அதற்கு காரணம்.படம் தொடங்கிய பிறகு கொங்கனாவை மறந்து காட்சிகளுக்குள் மூழ்கினேன்.திரை துறை ஜிகினா நிகழ்வுகளை இதற்கு முன் எந்த திரைப்படமும் இது போல பகடி செய்திருக்காது.
மும்பை நகருக்கு வரும் மாதவி(கொங்கனா) பத்திரிக்கை அலுவலகம் ஒன்றில் பணியில் சேர்கிறாள்.திரைத்துறை சார்ந்த செய்திகளை வெளியிடும் பிரிவில் இணைகிறாள்.அதையடுத்து சினி பிரபலங்கள் உடன் நட்பு,இரவு நேர கேளிக்கை விருந்துகள்,விளம்பர படங்களில் நடிக்கும் ஆண் நண்பன் என புது உலகினுள் அவள் நாட்கள் நகர்கின்றது.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பாத்திரம் மாதவியின் தோழியாய் வரும் பேர்ல்,விமான பணிப்பெண்ணான இவர் நவீன,புத்திசாலி பெண்களின் குறியீடு.காதல்,நட்பு,சமூகம்,சினிமா,பெருத்து வரும் போலித்தனங்கள் குறித்த இவளின் பகடி நிறைந்த கருத்துக்கள் ஒத்துகொள்ள வேண்டிய உண்மைகள்.
மெல்ல திரைத்துறை தரும் ஆரவாரங்கள் மாதவிக்கு சலிப்பை தர தொடங்குகிறது,அதற்கு முக்கியமாய் அமைந்த இரு நிகழ்ச்சிகள்.திரைத்துறை சார்ந்த சமூகசேவகி ஒருவரின் மரணத்திற்கு வரும் யாவரும் செயற்கையாய் சோகம் கொண்டு,கூட்டம் கூட்டமாய் தமது சொந்த காரியங்களை பேசி சிரிப்பதை காண்கிறாள்.மாதவியின் மற்றொரு அறை தோழியான பெண் திரைப்பட வாய்ப்பு பெற மிகப்பெரிய நடிகன் ஒருவனால் ஏமாற்ற பெற்று தற்கொலைக்கு முயல்கிறாள்.நடிகனின் போக்கை தனது பாதிரிக்கையில் வெளியிட்ட காரணத்திற்காக மாதவி கிரிமினல் செய்திகள் சேகரிப்பு பிரிவிற்கு மாற்றபடுகிறாள்.
தீவிரவாதம்,குண்டு வெடிப்பு,பாலியல் வன்முறைகள் என நகரில் நடப்பவைகளை சக பத்திரிக்கையாளனான அதுல் குல்கர்னியுடன் சேர்ந்து நேரடியாய் காணும் பொழுது நிஜ உலகம் குறித்த புரிதல் மிகுந்து திரை துறை தந்துவந்த மாயை முற்றிலும் மாற பெறுகிறாள்.படம் முழுதும் நிறைத்து இருப்பவர் கொங்கனா சென்.சமூக அக்கறை உள்ள மாற்று திரைப்படங்கள் ஹிந்தியில் வருவது மிகக்குறைவே,கான்களின் ஆதிக்கத்தில் உழன்று கொண்டிருக்கும் அதன் நிலையை சீர் செய்ய மதூர் போன்ற இயக்குனர்களின் வரவு மிகத்தேவை.இவரின் மூன்றாவது திரைப்படமான 'ட்ராபிக் சிக்னல்" -நெருக்கடி மிகுந்த மும்பை சாலை சிக்னல்களில் சிறு வியாபாரம் செய்யும் இளைஞர்கள் பற்றியது.மும்பை நகரின் பணக்கார பிம்பம் அது தோற்றுவித்துள்ள ஆளுமை இவற்றிற்கு பின்னால் மறைந்து நிற்கும் உண்மை நிலையை தவறாது தன் படங்களில் சுட்டிகாட்டி வருகிறார் மதூர் பண்டார்கர்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
// சமூக அக்கறை உள்ள மாற்று திரைப்படங்கள் ஹிந்தியில் வருவது மிகக்குறைவே.//
அப்படி இல்லை ஹிந்தியிலும் பல நல்ல படங்கள் வெளிவரத்தான் செய்கின்றன.ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை.இப்போதான் 88 களில் வெளிவந்த மீரா நாயரின் சலாம் பாம்பே பார்த்தேன்.இதைப்போல நமக்கு தெரியாத பல படங்கள் வரத்தான் செய்கின்றன.
நல்ல பதிவுங்க
நன்றி கார்த்திக்.
மீரா நாயரின் "salaam Bombay" வெளிநாடுகள் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற படம்.
அது என்னவோ உண்மை தான்.சமீபத்தில் நான் பார்த்த இரு ஹிந்தி படங்களும் ( Taste of India,Day in a Metro) எனக்கு பிடித்திருந்தது.மாறிவரும் சமூக சூழல் எப்படி குடும்பங்களை பாதிக்கின்றது என்பதை சொல்லும் படங்கள் இவை.
எனினும் அதிகமாய் இது போன்ற படங்கள் வருகின்றது என சொல்ல முடியாது.
ஹிந்தியில் கார்த்திக் கூறி உள்ளது போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில சமூக அக்கறை படங்கள் வருகின்றன. மலையாளத்தில் முன்பு அதிக அளவில் இருந்தது. (யாத்ரா, ஐயர் த கிரேட், சிறைசாலை, ம்ருகயா..)
மற்றும் ஒரு அருமை பதிவு லேகா, வாழ்த்துக்கள்.
குப்பன்_யாஹூ
நன்றி குப்பன்_யாஹூ
இந்த படம் பார்க்கவில்லை.
Mr.MrsIyer & உலக சினிமா பற்றி எனது வலைப்பூவில் பார்க்கவும்.
நிறை / குறை சொல்லவும்.
படம் பார்த்துவிட்டு மீண்டும் பறந்து வருகிறேன்.
நன்றி வண்ணத்துபூச்சியார்.உங்கள் பதிவுகளை படித்துவிட்டு பின்னோட்டம் இடுகின்றேன்.
இந்த படம் பார்த்து இருக்கிறேன். மிக அருமையாக எடுக்கப்பட்டு இருக்கும்.
படம் நல்ல விறுவிறுப்பாக போகும்
nalla padam ennum neenkal partha padankal patri thodarnthu eluthunkal parpatahkku vasathiyai erukkum
try 'Corporate' and 'Fashion' from Madhu Bandarkar..
another offbeat movie is 'Manorama Six Feet Under' i really liked that.
Also, 'Ghosla ka Khosla'
Many such good movies have been made in Hindi. much better than Tamil..
Tnx for coming Athimathura!!
Sure will continue posting :-)
Tnx Anony,
Will try to watch out the movies u have mentioned!!
nalla pathivu.. thodarungal... neram irundhaal engal inayathalatthai orumurai paarvaiyidungal...
www.thamizhstudio.com
ungal karuthugalai parimaarikkollungal.
nanri,
arun m.
Post a Comment