Wednesday, September 3, 2008

புதுமைபித்தனின் "விநாயக சதுர்த்தி" அனுபவ சிறுகதை

புதுமைபித்தனின் ஒவ்வொரு சிறுகதையும் எதோ ஒரு ஆச்சர்யத்தை தருவதாய் உள்ளது.விநாயகசதுர்த்தி எனும் அவரின் இச்சிறுகதை எழுதப்பட்ட ஆண்டு 1936.இன்று வாசிக்கும் பொழுது எந்த சமூக மாற்றமும்/இடரளும் வெளிபடா வண்ணம் கதை நகர்கிறது.இதில் மேலும் குறிப்பிடவேண்டிய ஒன்று,ஒரே கதையில் இரு வேறு நிகழ்வுகளை பதிவு செய்திருப்பது.

நாத்திகனான புதுமைப்பித்தனின் ஒரு விநாயக சதுர்த்தி நாளில் வீட்டில் நடக்கும் பூஜை ஏற்பாடுகளையும் முன்னொரு முறை தம் ஊரில் விநாயக சதுர்த்தி அன்று நடந்த நிகழ்ச்சியையும் குழப்பம் இன்றி ஒன்று சேர கூறும் இக்கதை,இறந்தகாலம்,நிகழ்காலம் என இருவேறு காலங்களில் நிகழ்கிறது.

விநாயகசதுர்த்திக்கென வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவதை பற்றி குறிப்பிடும் பொழுது,நம்புங்கள் காசு கொடுத்து வாங்கியது இம்மாவிலைகள் என குறிப்பிடுகிறார்.70 ஆண்டுகளுக்கு முன்னும் பட்டணங்களில் இதே நிலை..இதற்கு அவரே கொடுக்கும் நகைச்சுவை விளக்கம் "நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, "டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா!" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள்"

பூஜை காரியங்களில் தம் மனைவிக்கு உதவிக்கொண்டே தன் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினை பற்றியும் கூறுகிறார்..நெல்லை குறித்த புதுமைபித்தனின் வர்ணனை பின் வருமாறு "அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின"

துடுக்கான இளைஞன் ஒருவன் தான் செய்து வைத்த விநாயகர் சிலையை கும்பினியர் (ஆங்கிலேயர்) தூக்கி செல்ல அவர்களின் இடம் புகுந்து அச்சிலையை கைப்பற்றி பின் தப்பிக்க வழியின்றி கிணற்றில் விழுந்த கதையை நகைச்சுவை கலந்து விவரிக்கிறார்.நாத்திக கொள்கை கொண்டிருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்ட தம்மனைவியை கேலியோ,கிண்டலோ செய்யாது உற்சாகமாய் இறை பூசையில் அவர்களுக்கு உதவும் மனநிலை கொண்ட இந்த எழுத்தாளன் கதைகளில் மட்டும் இன்றி நிஜத்திலும் வித்தியாசமானவரே!!

7 comments:

Anonymous said...

//நாத்திக கொள்கை கொண்டிருந்தாலும் //

அப்படி எங்காவது அவர் அடையாளப் படுத்திக் கொண்டுள்ளாரா இல்லை நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?

வால்பையன் said...

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சுவாரிஷியம் மிக்கது,
சமகால இலக்கியங்களுக்கு போட்டி போடும் அளவுக்கு அதில் முற்போக்கு எண்ணங்கள் இருக்கும்,
அவருடைய சிறுகதைகளில் சிறு மாற்றம் செய்தால் போதும் நேற்று எழுதியது போல் இருக்கும்

லேகா said...

//அவருடைய சிறுகதைகளில் சிறு மாற்றம் செய்தால் போதும் நேற்று எழுதியது போல் இருக்கும்//

ரொம்ப சரியா சொன்னீங்க..எக்காலத்திற்கும் அழியாத படைப்புகள் அவருடையது!!

லேகா said...

@ Ananymous
//அப்படி எங்காவது அவர் அடையாளப் படுத்திக் கொண்டுள்ளாரா இல்லை நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?//

அப்படி அவரே அடையாளபடுத்தி கொண்டுள்ளார்.இக்கதையில் பின்வருமாறு வருகிறது..

--- "நீங்கதான் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? பிள்ளையாரை எடுத்து வைத்தால் ஆகாதோ?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என் மனைவி."அதெல்லாம் முடியாது. நான் நாஸ்திகன். அதெல்லாம் குடும்பவிளக்கு குலவிளக்கு 'டிபார்ட்மெண்ட்'!" என்றேன் நான்---

naren said...

கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ஒரு அருமையான அறிவியல் புனை கதை ..காலனும் கிழவியும் என்பது கூட ஒரு அறிவியல் புனை கதை தானே !....எது தமிழின் முதல் அறிவியல் புனைகதை ?...எனக்கு தெரிய வில்லை , உங்களுக்கு தெரிகிறதா லேகா ?
...எது எப்படியோ ,தமிழின் முதல் அறிவியல் புனை கதை திரு .பு பித்தன் அவர்கள்தான் எழுதியுள்ளார் என்பதை மறுக்க முடியாது ...அதை பற்றிய உங்கள் பதிவு அருமை லேகா .
நீங்க க சாமி பிள்ளைக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கும் உரையாடலை இன்னும் அமைத்திருக்கலாம் என எழுதீருன்தீங்க ...கதையில் எந்த இடத்திலாவது அது போல உரையாடல் (வாதம் புரிவது போல ) வந்திருந்தால், கதையின் கடைசியில் கடவுளும் க சாமி யும் பேசும் வாக்கியங்களில் அவ்வளவு அழுத்தம் (இப்போது உள்ளதை போல ) இருந்திருக்காது என எண்ணுகிறேன் ..." நீங்களெல்லாம் எட்டி நின்று வாரம் கொடுக்க தான் லாயக்கு "...இந்த வசனத்தின் கடுமை குறைந்தாலும் குறைதிருக்குமோ என எண்ணுகிறேன் ( சொல்வது தவறா?)
அப்புறம் . அது ..வந்து ...அந்த பட்டாம் பூட்சி (ரா .கி . ரங்கராஜன் ) என்ன ஆட்சு ?..நீங்க கண்டிப்பா அத படிசிருப்பீங்க ...நீங்கள் உங்க பக்கங்களில் சுய சரிதைகளையும் இடம் பெற செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் .

சிறுவர் இலக்கியம்..அப்டின்ன என்ன லேகா ?..நேற்று சுஜாதா சார் எழுதின "பூக்குட்டி "
நாவல் படிச்சேன் , அது சிறுவர் இலக்கியமா ?....சின்னதா விளக்க முடியுமா ?