Wednesday, September 17, 2008

ருத்ரைய்யாவின் “அவள் அப்படிதான்” - ஒரு மாற்று திரை முயற்சி

இதுவரை நான் பார்த்த சிறந்த படங்கள் யாவும்,அப்படங்களை குறித்து முதலில் அறியாமலேயே பார்த்தவை.ஹிட்ச்காக்கின் "சைக்கோ", "அமெலியா", கிரிஷ் காசர்கோடின் "கடஷ்ரதா",அபர்னா செனின் "மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர்","செம்மீன்',ஆகிய பட வரிசையில் நான் பார்த்த இப்படமும் சேரும்.எதிர்பார்ப்பு ஏதும் இன்றி பார்க்க பட்ட இப்படங்கள் முழுதுமாய் ஆளுமை செய்வதை ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர முடிந்தது.நடுநிலை பார்வையாளனால் சிறந்த படம் என சொல்ல கூடிய வகையில் முழுமை பெற்ற படங்கள் இவை.

1970 களில் வெளிவந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு புதிய திரை முயற்சியாய் வெளிவந்தது "அவள் அப்படிதான்" . ருத்ரைய்யாவின் இயக்கத்தில் ஸ்ரீ பிரியா,கமல்ஹாசன்,ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இப்படம் பெண்ணின் உடல் குறித்த சமூக பார்வையை முன்னிறுத்தி சொல்லப்பட்டது. இயக்கம்,நடிப்பு,இசை,வசனம் எல்லா விதத்திலும் முழுமை பெற்ற இத்திரைப்படம் மஞ்சு என்னும் இளம்பெண்ணை சுற்றி நகர்கிறது.




தாயின் முறைகேடான நடத்தையால் மனபிறழ்வு கொண்டிருக்கும் மஞ்சு தான் சந்திக்கும் ஆண்கள் அவர்களின் ஆணாதிக்க மனோபாவம்,சிந்தனைகள் கண்டு தன்னை தலைகனம் கொண்டவளாய் வெளிகாட்டுகிறாள்.மஞ்சு சந்திக்கும் இரண்டு ஆண்கள், மஞ்சுவின் மனதறிந்து தோழனாய் இருந்து அவளை நேசிக்கும் பத்திரிக்கையாளன்,ஆணாதிக்க சிந்தனை கொண்டு பெண்களை துச்சமாய் என்னும் அவளின் அலுவலக உயர் அதிகாரி. இதில் பத்திரிக்கையாளனாய் கமலும்,உயர் அதிகாரியாக ரஜினியும் நடித்துள்ளனர்.கடந்த கால ஏமாற்றம் ஒன்றினால் நண்பனின் காதலை ஏற்க மனமின்றி தனியே வாழ்வை தொடர முடிவு செய்கிறாள் மஞ்சு.

காட்சிகள் மூலம் பாத்திரங்களின் எண்ணங்களை காட்டுவதை பெரிதும் தவிர்த்து பெரும்பாலான காட்சிகள் விவாதங்களின் வழியே செல்கிறது.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இளையராஜாவின் இசை மற்றும் வண்ணநிலவனின் வசனம்.பின்னணி இசையில் ராஜாவை மிஞ்ச யாரும் இல்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இத்திரைப்படம்."உறவுகள் தொடர்கதை" என தொடங்கும் பாடல் யேசுதாசின் குரலின் செவி வருடி செல்வது.வண்ணநிலவன் கடல் புறத்தில்,ரைநீஸ் ஐயர் தெரு ,எஸ்தர்,கம்பா நதி என சிறந்த இலக்கியம் படைத்த எழுத்தாளர்.மிக கூர்மையான/தெளிவான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.ஆங்கில நெடி அதிக கொண்டவை!

இத்திரைப்படம் ருத்ரைய்யா இயக்கிய முதல் படம்.பெரும்பாலோரால் சிறந்த படம் என அறியப்பட்டது.இவரின் அடுத்த படமான கிராமத்து அத்தியாயம் அவ்வளவு பேசப்படவில்லை,பெரும் எதிர் பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்தது.என் மட்டிலும் சிறந்த படம் என்பது ஒரு சிறந்த நாவலை போன்றது,படித்து முடித்து பல காலங்களுக்கு அதன் நிகழ்வுகளும்,மாந்தர்களும் நம்மோடு இருப்பதாய் உணர்த்துவது.அவ்வகையில் இப்படமும் எப்போதும் பேசப்பட முழு தகுதி கொண்டது!!

14 comments:

Tech Shankar said...

I bought the DVD from LandMark.

An amazing - wonderful - classic movie from Rudraiya.

Thanks for sharing.

Krishnan said...

Good review Lekha. Actually I have read somewhere that three persons were involved in the dialogue writing - one is of course Vannanilavan, other two are renowned author Prabanjan and director Rajeshwar. Is Aval appadithan available freely on DVD ?

லேகா said...

@Krishnan

Tnx Krishnan :-)

லேகா said...

@ Share point

Tnx for the comments & Info

வால்பையன் said...

ஒரு சினிமாவைக் கூட இவ்வளவு இலக்கிய பார்வையுடன் பார்க்கிறீர்கள்,
சினிமாவில் இருக்கும் சில லாஜிக் ஓட்டைகள் அதன் இலக்கிய தரத்தை குலைத்து விடும், இருப்பினும் இந்த படம் உங்களுக்கு பிடித்துள்ளது என்றால் வண்ணநிலவனின் வசனமாக தான் இருக்கும். நான் இன்னும் பார்க்கவில்லை, பார்த்து விடுகிறேன்

லேகா said...

@வால் பையன்

லாஜிக் ஓட்டைகள் இல்லாத தரமான படம் இது அருண்.தமிழில் இது வரை வெளிவந்த சிறந்த பத்து படங்களுள் எப்போதும் இடம் பெற தகுதி கொண்டது!!

பாபு said...

நானும் அந்த பட DVD வாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்,கூடிய சீக்கிரம் வாங்கி விடுவேன்.

லேகா said...

@ babu

:-)

இனியாள் said...

Lekha, nalla padam ithu. Nanum parthu vittu uravugal erpaduththum sikkalgalai yosiththirukiren. Vimarsanam nalla vanthirukku, aana innum gavanikka pada vendia vishayangal niraiya irukke lekha, neenga gavanichirupeenga. melottama irukko nu oru unarvu.

லேகா said...

நன்றி இனியாள்

மேலோட்டமான விமர்சனம்னு எனக்கும் தோணியது,பல வசனங்களை மேற்கோள் காட்டி இருக்கலாம்.எனக்கு பிடித்த வசனங்களில் ஒன்று இதோ..

படத்தின் சாரத்தை ஒரே காட்சியில் விளக்கும் விதமாய் கடைசி காட்சி அமைந்து இருக்கும்,மஞ்சு கிராமத்து பெண்ணான நண்பனின் மனைவியிடம் "பெண் விடுதலை பற்றி உன் கருத்து என்ன ?" என கேட்க அதற்கு அவர் "அது பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது" என சொல்லுவார்.அதற்கு மஞ்சு"அப்போ நீ ரொம்ப சந்தோஷமா இருப்ப" என சொல்லுவதாக வரும்.

நிதர்சன உண்மை இது..!!

KARTHIK said...

// வண்ணநிலவன் கடல் புறத்தில்,ரைநீஸ் ஐயர் தெரு ,எஸ்தர்,கம்பா நதி என சிறந்த இலக்கியம் படைத்த எழுத்தாளர்.மிக கூர்மையான/தெளிவான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.ஆங்கில நெடி அதிக கொண்டவை!//

ஆஹா இங்கையும் வந்துட்டாரா வண்ணநிலவன் அவர் இல்லாத உங்கள் பதிவை பார்ப்பதே அரிது.

லேகா said...

//ஆஹா இங்கையும் வந்துட்டாரா வண்ணநிலவன் அவர் இல்லாத உங்கள் பதிவை பார்ப்பதே அரிது.//

:-)))))))))))))

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

நான் மிகவும் ரசித்த திரைப்படங்களில் ஒன்று இது. மிகவும் தைரியமான - நச் வசனங்களுக்காகவே - இதனை பலருக்கும் அறிமுகபடித்தியிருக்கிறேன். டி.வி.டியும் இருக்கிறது. ரஜினி, கமல், மற்றும் ஸ்ரி.பிரியாவின் நிதானமான - நிஜமான திறமை மற்றும் இசை வண்ணநிலவன் வசனங்கள், அனந்துவின் பங்கேற்ப்பு - கருப்பு வெள்ளையில் ஒரு மறக்க முடியாத சினிமா.

Rettaival's Blog said...

உறவுகள் தொடர்கதை" என தொடங்கும் பாடல் யேசுதாசின் குரலின் செவி வருடி செல்வது
//////////////

Is the song sung by yesudas or Jayachandran!