Thursday, August 28, 2008

புதுமைபித்தனின் "காஞ்சனை"- வேற்று வெளி அனுபவங்கள்!!

நாம் அறியா,அறிய விழைந்திடாத நிகழ்வுகள்/சம்பவங்கள் குறித்த சம்பாஷனைகள் எப்பொழுதும் சுவாரஸ்யம் கொண்டவை.ஆவி,பேய்,பிசாசு குறித்த நம்பிக்கையும்,செய்திகளும் நகர வாழ்வில் மிகக்குறைவு,அதுவே கிராமபுறங்களில் நாள் ஒரு ஆவியும் பொழுதொரு பேயுமாக மக்கள் பேசுவதற்கு குறைவின்றி பொழுதுகள் செல்லும்.ஒவ்வொரு முறை கிராமத்திற்கு செல்லும் பொழுது ஏதேனும் ஒரு கதை கேட்க கிடைக்கும்,நகரத்தில் ஆவி பேய்களின் தாக்கம் இல்லாதது ஏன் என்பது எப்போதும் எழும் கேள்வி!

கடந்த ஒருவாரமாக,எங்கள் அறையில் இரவு எதோ கொலுசொலி கேட்பதாகவும்,இரவில் யாரோ புலம்புவதாகவும் தெரிவதாக உணர்ந்து(??!!) அது குறித்து பேசி கொண்டிருக்கையில்..எங்கோ எப்போதோ கேட்ட கதைகள்,அமானிஷிய உலகம் குறித்த திரைப்படங்கள்,நம்பிக்கைகள் என விவாதம் எங்கெங்கோ சென்றது.இறுதியில் அப்பெண் யாராக இருப்பினும் பார்த்தால் பேசி கேட்டுக்கொள்ளலாம் என முடிவாகிற்று...எங்கள் அதிக பட்ச கிண்டல் தாளாமல் அப்பெண் கோபித்து கொண்டால் போலும், அதன் பின்னான இரவுகள் அமைதியாக செல்கிறது.
அவ்விவாததிற்கு பிறகு எனக்கு புதுமைபித்தனின் "காஞ்சனை" சிறுகதை மீண்டும் படிக்க வேண்டுமென தோன்றியது.அவரின் மற்றுமொரு அற்புத படைப்பு.வார்த்தைகளால் பயம் உண்டு பண்ண முடியும் என்பதிற்கொரு உதாரணம்.எழுத்தாளனான நாயகனுக்கு ஓர்
இரவில் உணரும் பிண வாடையும்,ஊதுபத்தி வாசனையும் பயம் தர,அப்பயம் மறையும் முன்னர் வேலைகாரியாக காஞ்சனை என்னும் பேய் ஒருத்தி வீட்டிற்க்கு வந்து சேர்கிறாள்.அவளின் விசித்திர குணாதிசயங்களும்,நித்திய மர்ம புன்னகையும்,பயம் காட்டும் உருவங்களும் எழுத்தாளனை தொடர்ந்து வர,ஒரு இரவு பொழுது மாயமாய் மறைந்து போகிறாள் காஞ்சனை..புதுமைபித்தனின் படைப்புகள் பல்வேலு தளங்களில் பயணிப்பவை.
அவரது "பொன்னகரம்" "செல்லம்மாள்" "ஒரு நாள் நாள் கழிந்தது" வரிசையில் எனக்கு பிடித்த மற்றொரு கதை "காஞ்சனை".

ஆவி உலகம் குறித்த தமிழ் திரை வர்ணனைகளும் காட்சிகளும் பயத்திற்கு பதில் சிரிப்பு மூட்டுவதாகவே இருக்கும்,எதார்த்தம் என்பது துளியும் இல்லாது வெள்ளை சேலை மங்கைகளின் உலா வெளியாக சித்தரிக்கபற்றிருகின்றது இதுவரை!!அந்தவிதத்தில் ஆங்கில திரைப்படங்கள் பல எதார்த்த வகை திகில் அனுபவங்கள் தரவல்லவை.சில உதாரணங்கள் "Halloween" "Emilie Rose" "The Grudge" "The village""Sixth sense" "Ring",Rosemary's baby,"Exorcist".

புதுமைபித்தனின் "பொன்னகரம்" "செல்லம்மாள்" "ஒரு நாள் நாள் கழிந்தது" வரிசையில் மற்றொமொரு அற்புத முயற்சி "காஞ்சனை". "காஞ்சனை" போன்றதொரு அனுபவத்தை தரவல்லது சாருவின் "ரங்கையன் கோட்டை",அவரின் நேநோ சிறுகதை தொகுதியில் படித்த நியாபகம்.இவ்வகை தமிழ் படைப்புகள் வேறு இருப்பின் பரிந்துரைக்கவும்.

12 comments:

குட்டிபிசாசு said...

லிஸ்ட்ல exorcist விட்டுடிங்களே!

லேகா said...

எதார்த்த சினிமாவில் அத்திரைப்படம் சேராது என கருதிய விட்டுவிட்டேன்.மற்றபடி உலகின் சிறந்த திகில் படங்களை பட்டியலிட்டால் "எக்ஸ்சாசிட்" முதல் பத்து இடங்களுக்குள் வரும்!!

பதிவோடு பெரிதும் ஒத்து போகிற பெயர் உங்களோடது "குட்டி பிசாசு"

குட்டிபிசாசு said...

Exorcism of emilie rose படமும் exorcist படம் போலத்தான் இருக்கும்.

நீங்கள் சொல்லும் யதார்த்தத்தில் rosemary's baby படம் வரலாம். கிடைத்தால் பார்க்கவும்.

Athisha said...

தமிழில் இது போன்ற திரை முயற்சிகள் ஏதும் இருக்கிறதா?

லேகா said...

வணக்கம் அதிஷா!!

தமிழில் வெளிவந்த திகில் படங்களை பட்டியலிட்டால் 30 படங்கள் தேறுவதே கடினம்..அதே நேரம் உள்ள படங்களை பற்றி சொல்லி தெரிய வேணாம்,நம்ம ஆளுங்க "Oman" திரை படத்தை அப்படியே தழுவி "ஜென்ம நட்சத்திரம்" என எடுத்தார்கள்."விசில்" திரைபடம் கூட "Urban Legends" என்னும் ஹாலிவுட் படத்தின் அப்பட்ட தழுவலே!!

வெகு சமீபத்தில் வெளிவந்த "அது" திரைப்படம் நல்ல முயற்சி..உருப்படியான சமூக கருத்தை கொண்டது.

லேகா said...

//Exorcism of emilie rose படமும் exorcist படம் போலத்தான் இருக்கும்.//

மிகச்சரி.இரண்டு படங்களும் குழந்தை ஒன்றின் விசித்திர நடவடிக்கை மாற்றங்களை கொண்டு சொல்லப்பட்டவை.பரிந்துரைத்த திரைப்படத்திற்கு நன்றி.

narsim said...

கதா நாயகிகளை மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்தால்.. அதைவிட எந்த பயங்கரமும் தேவையில்லை:p

நல்ல பதிவு..

நர்சிம்

Unknown said...

மதன் அவர்களின் மனிதனுக்குள்ளே மிருகம் படிங்க.உங்க ரூம்ல இருக்க அந்த பேய்(???!!) கூட பேச வசதியா இருக்கும்.

தொடருங்கள்.

லேகா said...

@Narsim
//கதா நாயகிகளை மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்தால்.. அதைவிட எந்த பயங்கரமும் தேவையில்லை//

சரியா சொன்னீங்க!!
எங்க கதை "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல".

லேகா said...

//மதன் அவர்களின் மனிதனுக்குள்ளே மிருகம் படிங்க//

நிச்சயமாக கார்த்திக்!!

இனியாள் said...

Lekha, ennoda pathivu, madhanoda manithanukkul mirugam puthagatha pathina karuththukala eluthi irukken, padichchu parunga. Kaanchanai padichathillai, nichayamai padikiren. Pathivu nalla irukku.

லேகா said...

நன்றி இனியாள்...உங்களின் பதிவை படித்தேன்!!அந்நூலை படிக்கும் ஆர்வம் கூடுகிறது..மதன் தேர்ந்த கார்டூனிஸ்ட் மட்டும் நல்ல சிறந்த எழுத்தாளரும் கூட.