Thursday, August 7, 2008

பாலமுருகனின் " சோளகர் தொட்டி" அறியப்படாத சோகம்

நீண்ட தேடலுக்கு பிறகு படிக்க கிடைத்த நாவல் "சோளகர் தொட்டி.".அதிகாரத்தின் கோரமுகத்தையும்,வேதனையின் உச்சத்தையும் கூறி இருக்கும் இந்நாவல் நிஜங்களின் கோர்வை.மலைகளின் ஓடை போல தெளிவாய்,அழகாய் சென்று கொண்டிருந்த சோளகர் இனத்தாரின் வாழ்க்கை சீனம் கொண்ட வெள்ளம் போல அலைகழிப்புக்கு ஆளாவதை மிகுந்த சிடுக்குகள் இன்றி எளிமையாய் கூறயுள்ளார் பாலமுருகன்.

இக்குறுநாவலின் முதல் பாதி தமிழக கர்நாடக எல்லை பகுதியில் அமைந்த சோளகர் என்னும் மலை வாழ் மக்களின் அன்றாட வாழ்கையை சொல்லுகிறது.இயற்கையோடு இயந்தி வாழ்கை வாழ பெற்றவர்கள் அவர்கள்..குளிரின் பிடியின் இருந்து தப்பிக்க குழியில் அமைத்து அதில் தீ மூட்டி குளிர் காய்வது,இரவில் மிருகங்கள் இருந்து தம் தானியங்களை பாதுகாக்க மூங்கில் வெளி அமைப்பது,ஊரின் எல்லா காரியங்களிலும் பெரியவரான கொத்தல்லியிடம் கலந்தாலோசிப்பது,அவர்களின் உணவு,திருமண சடங்குகள்,சாமி கும்பிடு என ஆசிரியர் விளக்குவது தொட்டியின் நடுவில் அமர்ந்து யாவையும் காண்பது போல உள்ளது.
தொட்டி இனத்தாரின் தீவிரமான நம்பிக்கைகள்,சடங்குகள்,மருத்துவ முறைகள்,காட்டோடு கொண்டுள்ள தீரா பிரியம் ஆச்சர்யமூட்டும் உண்மைகள்.மூதாதையர் மீது கொண்டுள்ள பக்தியும்,மரியாதையும் அவர்களை என்றும் தங்கள் நினைவுகளை விட்டு அகல செய்யாது இருப்பதுமான குணம் நமக்கு பாடமே...மற்றொன்று அவர்களுக்கான ஒற்றுமை...மொத்தத்தில் இயந்திர வாழ்வில் கிடைப்பதை உட்கொண்டு,பருகி,தொலைக்காட்சி,கணினி என வேற்று கிரக வாசி போல நம்மை நாமே மாற்றி கொண்டு வரும் இந்நாட்களில் இயற்கையோடான இம்மக்களின் வாழ்கை முறை சற்றே பொறாமை தருவதாய் உள்ளது.

நாவலின் பிற்பகுதி மிகுந்த சோகம் நிறைந்தது..எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்பது போல வீரப்பன்தேடுதல் வேட்டையில் ஈடு பட்ட போலீசாரின் பிடியில் சிக்கி பெருத்த அவமானங்களும்,வேதனையும்,வலியையும் அனுபவித்த தொட்டி மக்களின் சோகம் வார்த்தைகளால் விளக்க முடியாது.ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என வேறுபாடு இன்றி அம்மக்கள் அனுபவித்த சித்திரவதைகள் வாசிப்போரை சில நிமிடங்கள் வெற்றிடம் நோக்க செய்யும்..நாவலில் குறிபிட்டுள்ளது சிறு பகுதியே.,சொல்லப்படாத சோகம் இதனினும் வலி மிகுந்தது.கனத்த மௌனத்தோடு வாசித்து முடித்தேன்..

இந்நூலை அறிமுகம் செய்த வலைதள நண்பர்கள் கார்த்திக் மற்றும் அய்யனாரிற்கு எனது நன்றிகள்.

10 comments:

Anonymous said...

well its nice to know that you have great hits here.

Anonymous said...

Ive read this topic for some blogs. But I think this is more informative.

உண்மைத்தமிழன் said...

நானும் படித்தேன்..

உருக வைத்த உண்மைக் கதைகள்..

ஜனநாயக நாடு என்ற பெயரை வைத்துக் கொண்டு ஆட்சி போதையில் அப்பாவி மக்களை வாட்டி வதைத்த அதிகார வர்க்கத்தின் இழிசெயலுக்கு இன்னும்கூட நியாயம் கிடைக்கவில்லை.

வாழ்க இந்திய ஜனநாயகம்

லேகா said...

//ஜனநாயக நாடு என்ற பெயரை வைத்துக் கொண்டு ஆட்சி போதையில் அப்பாவி மக்களை வாட்டி வதைத்த அதிகார வர்க்கத்தின் இழிசெயலுக்கு இன்னும்கூட நியாயம் கிடைக்கவில்லை//

உண்மை..படிப்பவர் எவருக்கும் தோன்றும் எண்ணமே இது!!

Anonymous said...

பல ஆண்டுகளுக்கு முன் இந்தியா ருடே விமர்சனம் எழுதிய போது ஆவலாகி; பாலமுருகன் அவர்களுக்கு எழுதிப் பெற்றுப் படித்தேன்.
படிக்கப் படிக்க நாமா?? நாகரீகம் மிக்கவர்கள் என்ற சந்தேகம் வந்தது. இவர்கள் என்றல்ல உலகில் பல பாகங்களில் காடுகளில் வாழும் பல இனங்களின் வாழ்வு கொள்ளை போவது மிக வேதனை.
அரசாங்கமும்; காவல் துறையும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

லேகா said...

//படிக்கப் படிக்க நாமா?? நாகரீகம் மிக்கவர்கள் என்ற சந்தேகம் வந்தது//

உண்மை தான்.நாகரிகம் உடுத்தும் உடையிலும் ,உண்ணும் உணவிலும்,வசிக்கும் இடத்திலும்,படித்த படிப்பையும் வைத்து தற்பொழுது கணிக்க படுகின்றது..இவை யாவும் இல்லாது இம்மக்கள் ஒழுக்கத்திலும்,அன்பிலும்,வாழ்கை முறையிலும் சிறந்து விளங்குவது சிறப்பே!!

NILAMUKILAN said...

நாவலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. நான் அமெரிக்காவில் இருப்பதால்..இந்தியா வரும்போதெல்லாம் எனது பெட்டி முழுக்க தமிழ் புத்தகங்கள் அடுக்கி கொண்டு வருவது வழக்கம் . வரும் மார்ச் மாதம் இந்தியா வருகிறேன்,அப்போது இந்நாவலை வாங்க உங்கள் பதிவு தூண்டி உள்ளது. இந்நாவல் கிடைக்கும் இடம் கூற முடியுமா?

Unknown said...

// உலகில் பல பாகங்களில் காடுகளில் வாழும் பல இனங்களின் வாழ்வு கொள்ளை போவது மிக வேதனை.//

உண்மைதான் ஈக்வடார் நாட்டில் அமேசான் காடுகளில் வாழும் மலைவாழ் மக்களின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான்.

நல்ல அருமையான விமர்சனம் லேகா தொடருங்கள்.

லேகா said...

நன்றி கார்த்திக் :-0)

லேகா said...

உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி முகிலன்..