அக்பர் சாஸ்திரி:

நோயும் பிணியும் மனிதனை துரத்தும் அழையா விருந்தாளிகள்.ஒரு ரயில் பயணித்தின் பொழுது நோயால் அல்லால் படும் சக பயணிகளிடம் கை வைத்யம் கூறி உற்சாகமாய் பேசி வரும் சாஸ்திரி ஒருவரின் பேச்சால் யாவரும் பேரு ஆவல் கொண்டு அவரிடம் தங்களின் நோய் கூறுகளை கூறி,வைத்தியருக்கு செலவு செய்யும் வேதனையை பகிர்கின்றனர்.உடன் வரும் ஒரு குடுபத்தின் தாய்,குழந்தைகள்,தந்தை என யாவருக்கும் வீட்டு வைத்திய முறைகளை சொல்லி இதுவரை வைத்தியர் வீட்டு செல்லாத தன் நிலை குறித்து பெருமையாய் பேசி கொண்டே இருக்க,சட்டென மார்வலி வந்து உயிர் நீக்கிறார்.இறுதிவரை மருத்துவரை நாடி செல்லாது தன் பெருமையை இளைனாடிய அவரை கண்டு அங்குள்ளோர் யாவரும் வியக்கின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது சராசரிக்கும் கீழான கதையாக தோன்றும்,சற்றே ஆழ்ந்து வாசித்தால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியும்.
சிகப்பு ரிக்சா

இச்சிறுகதை வெளிவந்தது 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும். அன்று ட்ராம்(சாலை வலி தண்டவாளத்தில் செல்லும் ரயில்) எனபடுவதை இன்றைய மின்சார ரயிலாக எடுத்து கொள்ளலாம்.நெருக்கடி மிகுந்த ட்ராம் பயணத்தில் பெண்கள் படும் உளைச்சலே இக்கதை கரு.பத்திரிக்கை ஆசிரியர் பார்வையில் பயணிக்கும் இக்கதை. தன் உடன் தினமும் ட்ராமில் பயணம் செய்யும் கெட்டிகார யுவதியின் ஒருத்தியின் அன்றாட அவஸ்தைகளை கவனித்து வருகிறார். எல்லா சந்தர்ப்பங்களிலும் துடுக்காய் பேசி புத்திசாலியாய் வெளிப்படும் அப்பெனின் தைரியத்தை எண்ணி வியக்கிறார்.அப்படி பட்ட பெண்ணே ஒரு நாள் கூட்ட நெரிசலாலும்,உடன் வரும் ஆடவர்களின் தொல்லையாலும் ட்ராம் பயணத்தை விடுத்து தனக்கென தனியானதொரு சிகப்பு நிற ரிக்சாவை அமர்த்தி கொள்கிறாள்.இக்கதை எல்லா காலகட்டத்திற்கும் பொருந்திவருவது.
சிலிர்ப்பு :

குழந்தை தொழிலாளர்கள் நிலையை விவரிக்கும் இக்கதை நிகழும் இடமும் ரயிலே..
தன் மகனோடான ரயில் பயணத்தில் தூர நகரம் ஒன்றிற்கு வீட்டு வேலை செய்ய அழைத்து போகும் சிறுமியை காண்கிறான் நாயகன்.தன் மகனை காட்டிலும் இரண்டு மூன்று வயதே பெரியவளான அச்சிறுமி ஏழ்மையின் காரணமாய் வீட்டுவேலைக்கு அழைத்து செல்லப்படும் கொடுமையை எண்ணி வருந்தும் நாயகன் தன் நடுத்தர வர்க்க சுமையை கருதாது அச்சிறுமி கையில் சிறுது பணம் தந்து வலி அனுப்புகிறான்.நம்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலுமாய் ஒழிக்கபடவில்லை.உணவகங்களிலும்,ஜவுளி கடைகளிலும்,லாட்ஜ்களிலும் இன்றும் சிறுவகள் பணியில் உள்ளனர்.அதிலும் ஏழை சிறுமிகள் வீட்டு வேலை செய்து பிழைக்க வெளிநாடிகளுக்கும்,வேறு மொழி அறிய ஊர்களுக்கும் அழைத்து செல்லப்படும் கொடும் இன்றளவும் உள்ளது!!வண்ணதாசனின் "நிலை" சிறுகதை போல இதுவும் ஏக்கம் மிகுந்த சிறுமியின் உள்ள வெளிப்பாடே.
கடன் தீர்ந்தது

நம்பிக்கை துரோகத்தின் விலை மரணம் என்பதை சொல்லும் இக்கதை கிராமத்து பின்னனிகொண்டது.யாவராலும் மதிக்கப்படும் ஊரின் பெரியவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் விலை நிலம் வாங்க ஏமாற்றுக்காரன் ஒருவனிடம் கொடுத்து விட்டு துன்புறுகிறார்,இறுதியில் போலீசின் வசம் சிக்கும் அவன் அவரிடம் பணம் பெறவில்லை என கூறி தப்பிக்க,சிறிது நாட்களில் பெரு நோய் கண்டு படுத்த படுக்கை ஆகிறான்.அந்நிலையில் அவனை காணசெல்லும் பெரியவர் அவனிடம் ஒரு ரூபாய் பெற்று கொண்டு கடன் தீர்ந்தது என கூறி விடைபெறுகிறார்.அந்த குற்ற உணர்ச்சி அவனை மேலும் வியாதிகுள்ளாக்குகிறது.கதையின் ஒரு இடத்தில் அக்கிராமத்தின் காலை பொழுதினை விவரிக்கும் இடம் அழகு,படித்ததும் சட்டென நினைவிற்கு வந்தது மோகமுள் திரைப்பட பாடல் வரிகள்..
"ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் கரிந்து புலர்கின்ற பொழுதில்
நெல் மூட்டை சுமந்து வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை மயக்கும் இதமான
இளங்காலை இசை வந்து மனதோடு மயக்க..."
வெளியீட்டார் - காலச்சுவடு பதிப்பகத்தார்
விலை - 150 ரூபாய்