Wednesday, March 25, 2009

சம்பத்தின் ‘இடைவெளி’

மரணத்தின் மீதான பயத்தை,கேள்விகளை அதிகரிக்க செய்யும் நாவல் சம்பத்தின் "இடைவெளி".எஸ்.ரா வின் தமிழின் சிறந்த 100 நூல்களை பட்டியலில் இந்நாவலும் உள்ளது. நீண்ட தேடலுக்கு பிறகு படித்த கிடைத்தது.மேலோட்டமாக படித்தால் பெரும் குழப்பம் விளைவிக்கும் கருத்துக்களாக தெரியலாம்.சற்றே தீவிரமான வாசிப்பு தேவை படுகின்றது இதன் சாரத்தை புரிந்து கொள்ள.

நடுத்தர வயதினரான தினகரன் மரணம் குறித்தான அடிப்படை தத்துவத்தை அடைய எடுக்கும் முயற்சிகள் சம்பவங்களின் கோர்வையாக சொல்லப்படுகின்றது.சந்திக்கும் மனிதர்களிடத்தில் மரணத்தின் தத்துவம் குறித்து பேசி,அறிய முயன்று தோற்று போய் தாமே சுய பரிசோதனைகளில் இறங்குகிறார்.30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் இக்கதைகளம் பெரும் அளவில் தற்பொழுதைய நடைமுறைகளோடு மாறி வருகின்றது. வீட்டிலும்,அலுவலகத்திலும்,காபி பாரிலும் விடாது சாவு குறித்த எண்ணங்களோடு உலாவரும் தினகரன் மன நோயாளி என யாவராலும் கேலிக்கு ஆளாகிறார்.

தனது தூரத்து உறவினர் ஒருவரின் மரணத்தினாலும்,விடாது துரத்தும் கனவுகளாலும்,தூக்கு கயிற்றில் சாவை அருகில் கண்டு உணர்ந்து அதை முரண்பாட்டின் இடைவெளி என கண்டடைகிறார்.மரணம் - முரண்பாட்டின் இடைவெளி என்பதை நிருபிக்க சொல்லும் விளக்கங்கள் சற்றே தலை சுற்ற செய்பவை.இடைவெளிகளின் வேறுபாட்டால் வெவ்வேறு வித மரணங்கள் நிகழ்கின்றன.இடைவெளியை அல்லது சாவை வெல்ல முடியுமா?? நிச்சயமாக முடியாது.எனவே முரண்பட்ட இடைவெளியே மரணம் என முடிகின்றது நாவல்.சற்றே குழப்பம் விளைவிக்கும் கருத்துக்கள் நாவல் முழுதும் விரவி இருந்தாலும் ஏதேனும் ஒரு இடத்தில் மரணம் குறித்து நம்மால் ஒரு முடிவிற்கு வர முடிகின்றது.

29 comments:

நட்புடன் ஜமால் said...

\\சாவை வெல்ல முடியுமா?? நிச்சயமாக முடியாது\

இந்த நிலைக்கு வருவதை தவிர வேறு வழியில்லை.

லேகா said...

வருகைக்கு நன்றி ஜமால்.

மரணம் குறித்து பெரும் குழப்பம் விளைவித்த நாவல் இது.இருமுறை வாசிக்க வேண்டி இருந்தது.:-))

Anonymous said...

நவீனவாதிகள் எல்லாம் சேர்ந்து தமிழை கைம்மா செய்யாமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறது :-) கைற்றை என்றால் என்ன வார்த்தை என்று ரொம்ப நேரம் யோசித்து கயிற்ரை என்று வாசித்துத் தெளிவதற்குள்.... ஸ்ஸ் யப்பா கண்ணை ரொமவே கட்டுது

லேகா said...

ஹா ஹா ஆசிப்.மாற்றிவிட்டேன்!! நவீனவாதிகள் அப்படினா என்ன!!??

ரொம்பவே குழம்பி நீங்களும் "கயிற்ரை" னு சொல்லிடீங்க..:-))

வருகைக்கு நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்ல அறிமுகம்... புத்தகம் பற்றிய சிறு குறிப்புகளைக் கொடுப்பது நலம் லேகா. பதிபகம், ஆசிரியர், விலை போன்றவற்றை சொன்னீர்கள் என்றால் தேடலுக்கு வசதியாக இருக்கும். என் சிறு கருத்து மட்டுமே... :)

யாத்ரா said...

ஐயோ, எஸ்ரா அவர்கள் குறிப்பிட்டதிலிருந்து ரொம்ப நாளாய் தேடிக்கொண்டிருக்கிறேன்
எந்த பதிப்பகமென குறிப்பிட்டால் உதவியாயிருக்கும்,

நவீன விருட்சம் வலைப்பூவில் இவரின் சிறுகதையொன்று வாசித்தேன்,

பகிர்வுக்கு மிக்க நன்றி

narsim said...

//ஆசிப் மீரான் said...
நவீனவாதிகள் எல்லாம் சேர்ந்து தமிழை கைம்மா செய்யாமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறது :-) கைற்றை என்றால் என்ன வார்த்தை என்று ரொம்ப நேரம் யோசித்து கயிற்ரை என்று வாசித்துத் தெளிவதற்குள்.... ஸ்ஸ் யப்பா கண்ணை ரொமவே கட்டுது
//

சேர்க்க அப்பிண்ணே.. உங்களுக்காவது கண்ண மட்டும் தான் கட்டுது.. இங்க தல சுத்துது..

லேகா,

மரணம் என்பதைப் பற்றி தெளிவு பிறப்பதற்கு இறக்கத்தான் வேண்டும்.

நல்ல அறிமுகம்.. வழக்கம்போலவே.

கே.என்.சிவராமன் said...

லேகா,

எவ்வளவு எழுதினாலும் 'இடைவெளி'யை கடக்க முடியாதுதான்.

எஸ்.ராவின் 'உறுபசி'யை வாசித்தபோது இந்த சம்பத் நினைவுக்கு வந்தார். வருகிறார். வருவார். வரலாம்.

க்ரியா வெளியீடாக வந்த இந்த நாவல், இப்போது அச்சில் இல்லை.

நாவலை வாசிக்க விரும்புபவர்கள் நண்பர் அய்யனாரை மெயில் மூலம் தொடர்பு கொண்டால், இந்த நாவலின் பிடிஎஃப் வடிவத்தை அனுப்பி வைப்பார்.

நண்பர் தம்பி(உமா கதிர்), அய்யனாருக்கு செய்த உதவி இது. பதிவுலக நண்பர்களுக்கும் பயன்படலாம்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லேகா said...

நன்றி விக்னேஷ்வரன்.

//புத்தகம் பற்றிய சிறு குறிப்புகளைக் கொடுப்பது நலம் லேகா. பதிபகம், ஆசிரியர், விலை போன்றவற்றை சொன்னீர்கள் என்றால் தேடலுக்கு வசதியாக இருக்கும்//

சம்பத்தின் இடைவெளி நாவல் நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது மின்னஞ்சலில் பி.டி.எப் வடிவில்.வெளியீடு,ஆசிரியர் குறித்து அதில் குறிபிடும்படி எதுவும் இல்லை.
மேலும் இதுவே நான் படிக்கும் சம்பத்தின் முதல் நாவல்.

லேகா said...

வருகைக்கு நன்றி யாத்ரா.

உங்களின் மின்னஞ்சல் முகவரியை சொல்லவும்.இந்நாவலை அனுப்பி வைக்கிறேன்.

லேகா said...

//சேர்க்க அப்பிண்ணே.. உங்களுக்காவது கண்ண மட்டும் தான் கட்டுது.. இங்க தல சுத்துது..//

நர்சிம் நீங்களுமா? ஹா ஹா..

//மரணம் என்பதைப் பற்றி தெளிவு பிறப்பதற்கு இறக்கத்தான் வேண்டும்.//

ம்ம்ம்ம்ம்.....

லேகா said...

மிக்க நன்றி பைத்தியக்காரன்

யாத்ரா said...

லேகா அவர்களுக்கு மிக்க நன்றி, பின்வரும் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்

ssenthilqa@gmail.com

சம்பத் பற்றி சி. மோகன் கூட ரொம்ப உயர்வா சொல்லி படிச்சிருக்கேன், வாசிக்க மிக ஆவலாக இருக்கிறேன்.

Chandran Rama said...

Lekha,
I too have been waiting to read this novel for such a long time..If its not a problem can you pl send me the pdf of the novel.
My email id is vadivam_03@yahoo.co.in

Thanking you

Madhan said...

மிக நல்ல பதிவு லேகா, நானும் "இடைவெளியை" நீண்ட நாட்களை தேடி கொண்டு இருக்கிறேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரி

madhanprema@gmail.com

deesuresh said...

எனக்கும் அந்த PDF அனுப்பி வைத்தால் மகிழ்ச்சியடைவேன் லேகா.

deesuresh@gmail.com

குப்பன்.யாஹூ said...

லேகா வழக்கம்போலவே ஒரு சுவையான மாறுபட்ட புத்தகத்தை , வாசிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.

தங்களின் பகிர்வை படித்ததில் இருந்து புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மரணம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வமும் மிகுதி ஆகிறது.

எல்லாரும் வெளியில் மரணம் பற்றிய பயம் இல்லை என்று சொல்லி கொண்டாலும் உள் மனதில் மரணம் பற்றிய கவலையும், பயமும் கொண்டே இருக்கிறோம்.

சுஜாதா சொன்னது போல சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாட்களில் மகிழ்ச்சி இருக்காது.

தொடர்ந்து சிறந்த வாசிப்பை பகிர்ந்து வருதலுக்கு மீண்டும் நன்றி.


வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ


(sorry for the delay, busy with election related work)

லேகா said...

யாத்ரா,மதன் ஸ்ரீ,சுரேஷ்,ஆறுமுகம்

உங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி.

விரைவில் இந்நாவலை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி.

லேகா said...

நன்றி ராம்ஜி.உங்களின் வருகையை எதிர்பார்த்திருந்தேன்.:-)

Unknown said...

நல்ல புத்தகமாக இருக்கும் போல... எங்கு வாங்கினீர்கள் யாழிசை. பல புத்தகங்களை பற்றிய தகவல் உங்கள் தளத்தில் காணக்கிடைக்கிறது. பயன் தருமாறும் உள்ளது. தொடர்ந்து நல்ல புத்தகங்கள் படித்து மகிழ எனது வாழ்த்துக்கள்.

கிருஷ்ணப் பிரபு.

Chandran Rama said...

Lekha,
I recd the pdf today..Thanks a lot.

I am sure your effort will certainly make way for many
Tamil readers around the world to get a chance to read and know about Sambath and his writings..

Great effort...

லேகா said...

Thanks a lot Arumugam :-)

குப்பன்.யாஹூ said...

Lekha

Could you please mail me the PDF file, my id is

kuppan200795@gmail.com

Unknown said...

Pls send me too ..

selvam.manickam at gmail.com

Anonymous said...

Hi,
Had missed this post somehow. Just now reading this. Sampath is a major unsung writer in Tamil. I have read his story 'Zoovukku Pona Samilyar'(If I remember correctly) in Kanaiyazhi correction.
story which had mystical and surreal thoughts in it.
There was a phrase there about men which goes 'Mastrubating Bastards At 40' by a woman which shook me up. Such brutality in describing the male mindset was/is still rare in Tamil.
Kriya publication has a first edition copy of sampath's short stories. Sadly it's not for sale. Hopefully the stories come in print.

No issues in giving my name. I am Ajay.

If it's not much of a problem, can you send me the PDF for this novel by Samptah?

My id is booksforlife@rediffmail.com

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி
புத்தகம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதுதான் ஆனால் வாசிக்க கிடைக்கவில்லை

Anonymous said...

திரு லேகா,

என் மின்னஞ்சல் முகவரி

RajaThangavel@gmail.com

பத்து மாதங்களாக இந்த நாவலை வாங்க அலைந்து கொண்டு இருக்கிறேன்

- இராஜா தங்கவேல்

Anonymous said...

நண்பரே லேகா,

தொடர்ந்து இந்த நாவலை நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன். இன்றைக்கு உங்கள் பதிவை பார்த்ததும் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. என்னுடைய ஈமெயில் முகவரிக்கு நாவலை அனுப்பினீர்கள் என்றால் என்றென்று நன்றியுடையவனாக இருப்பேன்.

என்னுடைய ஈமெயில் முகவரி :oshoviji@yahoo.co.in

என்றென்று நன்றியுடன்,
விஜய்.

Shyama said...

Lekha,

Request you to send this E-book to my id (RajaThangavel@gmail.com)