குத்து பாட்டு,மொக்கை திரைப்படங்கள்,இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.......என அனேக தமிழ் தொலைக்காட்சிகள் விடாது இம்சித்து கொண்டிருக்க மிக சிறப்பான பல நிகழ்ச்சிகளை சத்தமின்றி கொடுத்து வருகின்றது மக்கள் தொலைக்காட்சி.கிராமப்புற நிகழ்வுகள்,தெரு கூத்து,எழுத்தாளர்களுடன் உரையாடல்,இலக்கியசந்திப்புகள்,உலக சினிமா என பெரிதும் தனித்துவம் கொண்டு விளங்குகின்றது.இவற்றுள் ரோட்டோர சிறார்களின் விருப்பத்தை நிறைவும் செய்யும் நிகழ்ச்சி மிகுந்த மனநிறைவை தருவதாய் இருக்கும்.சமீபத்தில் இத்தொலைக்காட்சியில் ஈரான் நாட்டு திரைப்படமான "லேலா" பார்க்க நேர்ந்தது.
சற்று சிக்கலான கதை களத்தை வெகு இயல்பாய் எடுத்தாளுகின்றது இத்திரைப்படம்.குழந்தை பெற்று கொள்ள இயலாத லேலா தனது கணவனுக்கு தானே பெண் பார்த்து மறுமணம் முடித்து வைக்க எடுக்கும் முயற்சிகளும்,அதை தொடர்ந்து உள்ளாகும் மன உளைச்சல்களும் நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது.ஈரான் போன்ற கட்டுகோப்பான சமூக அமைப்பில் குடும்பங்களுக்குள்ளான நிகழ்வுகள்,பெண்களின் நிலை போன்றவை நம்மில் இருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கவில்லை.
மகிழ்ச்சியாய் செல்லும் திருமண நாட்கள்,லேலாவிற்கு துன்பம் தர தொடங்குவது குழந்தை குறித்தான ஏக்கம் மேலிடும் பொழுது.கணவனின் எதிர்ப்பை மீறி அவனிற்கு பெண் பார்க்க சம்மதிக்கிறாள்.விளையாட்டாய் தொடங்கும் பெண் பார்க்கும் படலம் லைலாவிற்கும் அவள் கணவனிற்கும் கேலியாய் தெரிகின்றது.பார்த்து வந்த பெண்களை குறித்து கிண்டலாய் அவன் சொல்வதை கேட்டு புன்னகை செய்யும் லேலா,இறுதியில் ஒரு பெண்ணை தனக்கு மிக பிடித்திருப்பதாய் அவன் கூறும் தருணத்தில் தனிமையை உணர தொடங்குகிறாள்.மெல்ல மெல்ல தனக்கு நேர போகும் பிரிவை நினைத்து லேலாவின் உடல்நிலை மோசமாகிறது.
லேலாவின் மீது மிகுந்த காதல் கொண்ட அவளின் கணவன் வற்புறுத்துதலின் பேரால் செய்யும் மறுமணம் நீடித்ததா,கணவனை விட்டு பிரிந்த லேலாவின் நிலை என்ன என்பதை மெல்லிய அதிர்வுகள் கொண்டு சொல்லி முடிகின்றது கதை.லேலா வாக நடித்துள்ள நடிகை மெல்லிய புன்னகையும்,சோகத்தை கூட்டும் இறுக்கத்தையும் வெகு இயல்பாய் வெளிக்காட்டுகின்றார்.காட்சிகளின் வேகத்தை கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம்,விருது படங்களுக்கே உரிய நிரந்தர குறைபாடு இது.எனினும் நல்ல திரைஅனுபவம்.தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் என்பதே பெரும் ஆறுதல்.
Friday, March 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
ஐயோ பார்க்க தவறி விட்டு விட்டேனே. cd எடுத்து பார்க்க முயலுகிறேன்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி லேகா.
குப்பன்_யாஹூ
எனக்கு பா ம கா, ராமதாஸ் , அன்புமணி மீது எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் தொலைக்காட்சியின் பணியை பாராட்ட மனம் உண்டு.
இரண்டு ஆண்டுகள் ஆகியும் வணிக லாபத்திற்காக இன்றும் திரைப்பட செய்திகள், காட்சிகள் காட்டாமல் இருப்பதை பாராட்ட வேண்டும்.
சௌம்யா அன்புமணி தான் பின்னல் இருந்து செயல் படுத்துகிறார் என நினைக்கிறேன், பாராட்டுக்கள் அந்த பெண்மணிக்கு.
குப்பன்_யாஹூ
நன்றி ராம்ஜி.
//மக்கள் தொலைக்காட்சியின் பணியை பாராட்ட மனம் உண்டு.
சௌம்யா அன்புமணி தான் பின்னல் இருந்து செயல் படுத்துகிறார் என நினைக்கிறேன் //
ரொம்ப சரி :-)
இந்தப்படத்த பத்தி ஏற்கனவே விமர்சனம் படித்தேன்.ஆனா இன்னும் பார்க்கவில்லை.
// பெண்களின் நிலை போன்றவை நம்மில் இருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கவில்லை.//
சமீபத்துல இரான் பெண் ஒருத்தியோட நிலைய பதிவா படிச்சேன் நேரம் இருக்கும் போது படிசுப்பாருங்க
// காட்சிகளின் வேகத்தை கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம்,விருது படங்களுக்கே உரிய நிரந்தர குறைபாடு இது.//
இரான் படம்னா இப்படித்தாங்க போகும் இன்னும் ஒரு நாலு படம் பாருங்க சரியாவிரும்.
மஜித் மஜிதியோட படம் எது கெடச்சாலும் பாருங்க.
விரிவான பகிர்தலுக்கு நன்றி கார்த்திக்.
//விருது படங்களுக்கே உரிய நிரந்தர குறைபாடு//
எனக்கு பழகிய ஒன்று தான் இது:-)
//மஜித் மஜிதியோட படம் எது கெடச்சாலும் பாருங்க//
இவரை குறித்து கேள்விபட்டிருக்கிறேன்.இவரின் படங்கள் ஏதேனும் குறிப்பிடுங்களேன்.
// இவரின் படங்கள் ஏதேனும் குறிப்பிடுங்களேன்.//
Children of heaven,baran,color of paradise,some short films on (s,raa's blog) இதுமட்டுமே அவரது இயக்கத்துல நான் பார்த்தது இது மட்டுமே.
// எனக்கு பழகிய ஒன்று தான் இது:-)//
Abbas Kiarostami இவரும் ஈரான் இயக்குனர் தான் இவ்ரோட Taste of cherry,close up பாத்தேன்.அதுக்கப்புரம் இன்னும் இரான் படம் பாக்கவேஇல்லை.இதுபோல மெதுவான படம் நான் பாத்ததே இல்லை.
http://pinkurippukal.blogspot.com/2009/02/notes-of-nightmare.html
நானும் அந்தப்படததைப் பார்த்தேன்...
அந்தப்படத்தை ஈரான் மொழியிலேயே ஓடவிட்டு, இடையே தமிழில் கதைச்சுருக்கத்தை வழங்குவதும், ஈரான் வசனங்களை தமிழில் வெளியிட்டதும் என்னைப்போன்று தமிழை மட்டுமே அறிந்தவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
மக்கள் தொலைக்காட்சியின் பணி சிறக்க வாழ்த்துகள்...
மஜித் மஜிதியோட படங்கள் சில: Children of Heaven, Color of Paradise, The Song of Sparrows, Barefoot to Herat.
ரொம்ப நன்றி கார்த்திக்.பார்க்க முயற்சிக்கின்றேன்.
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி அரியாங்குப்பத்தார்
பகிர்வுக்கு நன்றி...
நன்றி கிருஷ்ணன் :-)
வருகைக்கு நன்றி தமிழன் கறுப்பி
Post a Comment