Friday, January 2, 2009

அ.முத்துலிங்கத்தின் "மகாராஜாவின் ரயில் வண்டி" - சிறுகதை தொகுப்பு

ரயில் பயணத்தின் பொழுது புத்தகம் வாசிப்பது எனக்கு மிக பிடித்தமான ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு பயணித்த ஒரு நீண்ட பகல் பொழுதில் முத்துலிங்கத்தின் இச்சிறுகதை தொகுப்பை படித்தேன்.உயிர்மெயில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகள்,சிறுகதைகள் படித்ததோடு சரி.இதற்கு முன் இவரின் எழுத்துக்களோடு அவ்வளவு பரிட்சயம் இருந்ததில்லை.எழுத்தாளரின் ஆப்பிரிக்க அனுபவங்கள்,சில புனைகதைகள் கொண்ட இத்தொகுப்பு தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இத்தொகுப்பினை எனக்கு அனுப்பி மறுபடியும் வாசிக்க உதவிய நண்பர் பாலராஜனிற்கு நன்றி.



"மகாராஜாவின் ரயில் வண்டி" - பால்ய கால நினைவுகளை கிளரும் இக்கதை தான் சிறு வயதில் சந்தித்த யுவதியை,அவளோடு இருந்த ஒரு வார நிகழ்வுகளை அசை போடும் நாயகனின் பார்வையில் செல்கிறது இக்கதை.நன்கு பாட தெரிந்த,கிதார் இசைக்க தெரிந்த,பூனைகளின் மீது பேரன்பு கொண்ட சிறு வயது ரோசலின் குறித்த வர்ணனைகள் மென்கவிதைகள்.முதல் வாசிப்பின் பொழுது சரிவர பிடிபடாத கதை "தொடக்கம்",நெருக்கடி மிகுந்த ஒரு அலுவலக நாளில் எங்கோ இருந்து வந்து ஜன்னலில் அடிபட்டு இறந்த அகதி பறவையை மிகுந்த அக்கறை கொண்டு புதைத்த அனுபவத்தை பகிர்கின்றார்.அகதிகளின் நிலையை மறைமுகமாய் சொல்லும் இக்கதை மற்றொரு புறம் இறக்கை கட்டி கொண்டு பறக்கும் எந்திர வாழ்கையில் நாம் கவனிக்க தவறும் அல்லது கவனிக்க விரும்பாத சிறு சிறு நிகழ்வுகள் எவ்வளவு அர்த்தம் உள்ளவை என அழுத்தமாய் சொல்லுகின்றது.

இத்தொகுப்பில் எனக்கு பிடித்த இரு கதைகள் "நாளை" மற்றும் "விருந்தாளி".ஒரு வேலை உணவிற்காக அகதி முகாம்களில் கையேந்தி தினப்பொழுதை கழிக்கும் இரு சகோதரர்கள் குறித்த கதை "நாளை'.துயரம் மேலிட்ட அகதிகளின் வாழ்வை இச்சிறுகதை சில காட்சிகளின் விவரிப்பில் முழுதாய் உணர்த்துகின்றது.மற்றொரு கதையான "விருந்தாளி",ஆப்பிரிக்க கிராமம் ஒன்றில் தனித்திருந்த பொழுதுகளின் ஏக்கங்களை துடைத்தெறிந்த எதிர்பாரா பயணியின் வருகை குறித்த நியாபக குறிப்புகள்.இவை தவிர்த்து மெல்லிய நகைச்சுவை கதைகளான "எதிரி" மற்றும் "ராகு காலம்" ரசிக்ககூடியவை.மென்மையான வாசிப்பனுபவம் வேண்டுபவர்களுக்கு தாராளமாய் இத்தொகுப்பை பரிந்துரைக்கலாம்.

வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - 75 ரூபாய்

40 comments:

King... said...

பகிர்வுக்கு நன்றி லேகா...

M.Rishan Shareef said...

அன்பின் லேகா,

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு மனதில் கலப்பவை. மிக அருமையான வாழ்வனுபவங்களைக் கதைகளாக்கித் தருகிறார். அவரது மற்றைய சிறுகதைத் தொகுதி குறித்தும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன். இப்பதிவுக்கு நன்றி நண்பரே !

அ.மு.செய்யது said...

நல்ல இலக்கியங்களைப் பற்றி சளைக்காமல் எழுதும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

வாழ்த்துகள் லேகா !!

லேகா said...

நன்றி கிங்

லேகா said...

நன்றி ரிஷான்.அ.முத்துலிங்கத்தின் மொத படைப்புகளின் தொகுதி சமீபத்தில் கிடைத்தது,முழுவதும் படித்துவிட்டு பதிவிடுகிறேன்.வருகைக்கு நன்றி.

லேகா said...

நன்றி செய்யது :-)

Anonymous said...

he is my favotite indian writer too.

லேகா said...

Tnx Anony

Anonymous said...

http://sathiyak.blogspot.com/2006/04/blog-post_30.html

Anonymous said...

He is the best contemporary Indian writer

பாலராஜன்கீதா said...

நன்றி லேகா

அருண்மொழிவர்மன் said...

அண்மையில்தான் இவரது எழுத்துக்களை படிக்க தொடங்கினேன். ஆனால் மனதுக்கு மிக நெருக்கமான ஒரு எழுத்தாளராகிவிட்டார்.

இவரது அங்கே இப்ப என்ன நேரம், பூமியின் பாதி வயது இரண்டும் எனக்கு பிடித்த தொகுதிகள்

குப்பன்.யாஹூ said...

மற்றும் ஒரு பயனுள்ள பதிவு லேகா.

செய்யது சொல்வதுபோல நல்ல இலக்கியங்களைப் பற்றி சளைக்காமல் எழுதும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

குருவாயூர் எக்ஸ்ப்றேச்சில் பகல் பயணம் , சென்னை மதுரை கொடுமையாக இருக்குமே. பயணத்தின் பொது வாசித்தல், இயற்கையை ரசித்தல், மனிதர்களை கண்டு வியத்தல் போன்றவை மிக சந்தோஷமான அனுபவங்கள்.


குப்பன்_யாஹூ

Krishnan said...

லேகா நாளை தொடங்கவிருக்கும் புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் கட்டாயம் வாங்க வேண்டிய ஒன்று. நீங்கள் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா ? பெரிய பட்டியல் என்றால், அதிலிருந்து சில ...

லேகா said...

நன்றி சுமா
நன்றி பாலராஜன் கீதா

லேகா said...

நன்றி குப்பன்_யாகூ.

சென்னையில் இருந்து மதுரைக்கு வைகையில் சென்றபொழுது படித்த நியாபகம்.கொஞ்சம் அலுப்பு தரும் பயணம் தான்.இருப்பினும் சுவாரஸ்யமான புத்தகமும்,தொந்தரவு தராத சக பயணிகளும் அமைந்தால் பயணம் இனிதாகும்:-))

லேகா said...

நன்றி கிருஷ்ணன்.

பெரிய லிஸ்ட் எல்லாம் இல்ல.முக்கியமாய் வாங்க விரும்புவது ஜே.டி.குரோஸ் "ஆழி சூழ் உலகு", ஜெயமோகனின் "காடு", கோபியின் "டேபிள் டென்னிஸ்" மற்றும் யூமா வாசுகியின் "ரத்தஉறவு".

லேகா said...

நன்றி அருண்.
முத்துலிங்கத்தின் பிற படைப்புகளை அறிமுகம் செய்ததிற்கு நன்றி.

குப்பன்.யாஹூ said...

krishnan, Lekha

I will be greatful if you provide your purchase list for book exhibition.

Krishnan if possible we could meet at Book exhibiton ground on saturday or sunday.


Regards

kuppan_yahoo

லேகா said...

@kuppan _yahoo

Its quiet a big list..will mail you the list.chk ur yahoo mail!!

Anonymous said...

lekha, are you so naive in not understanding the sarcastic statement by suma, "He is the best contemporary Indian writer."?

லேகா said...

Anony,i didnt find anything sarcastic in Suma's statement.

KARTHIK said...

// ஒரு அலுவலக நாளில் எங்கோ இருந்து வந்து ஜன்னலில் அடிபட்டு இறந்த அகதி பறவையை மிகுந்த அக்கறை கொண்டு புதைத்த அனுபவத்தை பகிர்கின்றார்.அகதிகளின் நிலையை மறைமுகமாய் சொல்லும்.//

அவரும் ஒரு அகதியா புலம் பெயர்ந்தவர்தான அவர் போன்றவர்களுக்குத்தான் அவ்வலி புரியும்.

இவரது கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறதுன்னு ஒரு தொகுப்பு.தமிழகத்தின் இருபது தலை சிறந்த எழுத்தாளர்களிடம் தங்களுக்கு பிடித்த நாவல்களை எழுதச்சொல்லி ஒரு தொகுப்பாக கொணர்ந்திருக்கிறார்.அது ஒரு அற்ப்புதமான முயற்ச்சி.ஒவ்வருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.அதை வாசிக்கும் அனுபவமே தனி.

குப்பன்.யாஹூ said...

India today Tamil has published special issue on Kamalhaasan. it contains good articles by s.ramakrishnan, yookisethu, santhaana barathy, nikil murugan.

try to get that if possible.

kuppan_yahoo

Krishnan said...

லேகா Jan 10th புத்தக சந்தை சென்றேன். எஸ்ரா அவர்களை பார்த்தேன், இரண்டொரு வார்த்தைகள் பேசினேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மனுஷ்யபுத்ரனும் இருந்தார். கோபியின் உள்ளிருந்து சில குரல்கள் வம்சி புக்ஸ்-யில் வாங்கினேன். வாங்கினா பிற புத்தகங்கள் - எஸ்ரா-வின் காற்றில் யாரோ நடகிறார்கள், சாரு-வின் கடவுளும் நானும், கிருஷ்ணபருந்து, ரத்த உறவு, மஹாராஜாவின் ரயில் வண்டி, ஜெமோ-வின் எதிர்முகம், சாரு-வின் ஏஷிஸ்தெந்திஅலிஸ்ம்-um Fancy Banianum. எஸ்ரா மிக்க அன்புடன் புத்தகத்தில் கையொப்பம் இட்டார்.

லேகா said...

Thanks Ramji(Kuppan _Yahoo),

I am sure that my dad have bought tat edition,else will try to get it..

லேகா said...

கிருஷ்ணன்,
ஞாயிறன்று புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்..சாருவை தவிர வேறு எழுத்தாளர்களை காணமுடியவில்லை.

கி.ரா வின் புத்தகங்கள் விற்பனையாகும் அன்னம் பதிப்பகம் மற்றும் கிழக்கு பதிபகங்களை தேடி அலைந்ததில் பாதி நேரம் போய்விட்டது.

பட்டியலிட்டு சென்றிருந்த புத்தகங்கள் யாவையும் வாங்கியாகிவிட்டது.
வரும் பொங்கல் அன்று மீண்டும் செல்ல திட்டமிட்டுள்ளேன்!!

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி கார்த்திக்.

முத்துலிங்கத்தின் முழு படைப்புகளின் தொகுதி சமீபத்தில் கிடைத்தது.படித்ததும் சொல்கின்றேன்.

//கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறதுன்னு ஒரு தொகுப்பு.தமிழகத்தின் இருபது தலை சிறந்த எழுத்தாளர்களிடம் தங்களுக்கு பிடித்த நாவல்களை எழுதச்சொல்லி ஒரு தொகுப்பாக கொணர்ந்திருக்கிறார்.அது ஒரு அற்ப்புதமான முயற்ச்சி//

படிக்க ஆவலாய் உள்ளது.

Krishnan said...

லேகா உளம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
எங்குதேடியும் எஸ்தர், ரெய்நீஸ் அய்யர் தெரு கிடைக்கவில்லை

லேகா said...

கிருஷ்ணன்,

நன்றி,இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

ரைநீஸ் ஐயர் தெரு கிடைக்க வாய்ப்பில்லை,என்னிடம் உள்ள பிரதி 1980 களில் வாங்கியது.எஸ்தர் நிச்சயம் வண்ணநிலவனின் சிறுகதை தொகுதிகளில் இருக்கும். வெளியீட்டாளர்கள் யாரென தெரியவில்லை:-((

anujanya said...

உங்களை (லேகா, ராம்ஜி, கிருஷ்ணன்) எல்லாம் பார்த்தால் பொறாமையாக இருக்கு. இன்னும் கையில் இருக்கும் புத்தகங்களையே படிக்கவில்லை. இவ்வளவு புத்தகங்கள் வாங்கி, படித்தால், லேகாவின் கால்ஷீட் அடுத்த ஒரு வருடம் பிசி :)

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

அனுஜன்யா

லேகா said...

நன்றி,பொங்கல் வாழ்த்துக்கள் அனுஜன்யா!!

ஆஹா!! :-)) கால்ஷீட் பிஸி எல்லாம் ஒன்னும் இல்ல..தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டுமே இம்முறை வாங்கினேன்..சாருவின் "வரம்பு மீறிய பிரதிகள்" மற்றும் வா.மு.கோ.முவின் "தவளைகள் குதிக்கும் வயிறு" தற்பொழுது படித்துகொண்டிருகின்றேன்.

Unknown said...

நல்ல பதிவு, அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் கையில் எட்டுத்தால் கீழே வைக்கமுடியாமல் படித்தே தீர்க்க வேண்டிய மாதிரியான எழுத்து, எங்கேயும் திரும்ப விடாமல் செய்கிறது. சிறிது நாட்களாகத்தான் அவர் எழுத்துக்கள் அறிமுகம், இனி அவரின் எல்லா புத்தகங்களையும் வாங்க வேண்டும். நன்றி.

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி செல்வன்:-)

குப்பன்.யாஹூ said...

Krishnan- for esthar & Rainees iyer street, you could get it from vanna nilavan (Ramachandran) in thuklak office.

i dont have the phone number, if u call Thuklak office, vanna nilvan will speak.

லேகா said...

Tnx Ramji. I hope some publishers will release Vannanilavan's all works together.

Anonymous said...

/அவரும் ஒரு அகதியா புலம் பெயர்ந்தவர்தான அவர் போன்றவர்களுக்குத்தான் அவ்வலி புரியும்./


இதென்ன ஜோக்கா? அவருக்கு அகதி பற்றி எதுமே தெரியாது. ஐநா அமைப்பூ ஒன்றிலே கொழுத்த சம்பளத்திலே குந்தியிருந்துவிட்டு, கனடாவிலே இப்போது ஓய்விலே குந்தியிருந்து தமிழ்நாட்டு மாமா,மாமிகள் ரசிக்க எழுதுகிறார். ஈழத்தமிழரைப் பற்றி எங்காவது எழுதியிருந்தால், சொல்லவும். பொய்யாக பிம்பங்களை வளர்க்காதீர்கள்.

KARTHIK said...

அன்புள்ள அனானி

// ஈழத்தமிழரைப் பற்றி எங்காவது எழுதியிருந்தால், சொல்லவும்.//

முதலில் அவரை நான் வாசித்தது 2007ம் ஆண்டு ஆவியில் அவரது சிறுகதை ஒன்று வெளியாகிஇருந்தது.அந்தக்கதையின் தலைப்பு நினைவில்லை.அது ஒரு பெண் போராளி மற்றும் அவரது குடுபத்தின் கதை.ஒருவேளை நீங்க அதை படிக்காமல் விட்டிருக்கலாம்.அந்தக்கதை இன்னும் நினைவில் இருக்குங்க அதனால்தான் அப்படிச்சொன்னேன்.

லேகா said...

அனானி,
அகதியில் கொளுத்த பணக்காரன் என்றோ, ஒன்றும் அற்ற ஏழை என்றோ பாகுபாடு இல்லை.பிறந்த மண்ணை விட்டு வேற்று தேசத்தில் வாழ்கை நடத்துவது கொடுமையானதொரு நிலை,அதிலும் இனி எப்பொழுதும் நாடு திரும்ப மாட்டோம் என்னும் நிச்சயமின்மையில் இருப்பது அதனினும் கொடுமை.

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி கார்த்திக்.