
நிலா பார்த்தல்
ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.
-------------------------------------
மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
---------------------------------------------------
தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.
- கல்யாண்ஜி
தொலைந்த வெளிச்சம்
கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்து திரும்பும் முன்
அணைந்துவிடுகின்றது
முதல் விளக்குகளுள் ஒன்று
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைத்த பிறகு தான்
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம்
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைத்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.
- கல்யாண்ஜி
வெளியீடு - ஆழி பதிப்பகம்
விலை - 45 ரூபாய்
24 comments:
கல்யாணி (வண்ண தாசன்) சம காலத்திய மிக சிறந்த கவிஞர், இவரின் பல கவிதைகள் சிறப்பானவை.
சுஜாதா இவரின் தீவிர ரசிகர்.
தமிழ் கூடல் இணைய தளத்தில் இவரின் கவிதைகள் உள்ளது
மகுடேஸ்வரன் கவிதைகள் பற்றயும் ஒரு பதிவு எழுதுங்க லேகா.
பகிர்தலுக்கு நன்றி.
குப்பன்_யாஹூ
நன்றி லேகா..
நன்றி சென்ஷி
நன்றி ராம்ஜி
மகுடேஸ்வரன் தமிழ் கூடல் இணையம் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.
வண்ணதாசனின் தனுமை சிறுகதையை 1986 வாக்கில் படித்தேன். அன்றிலிருந்து அவரது மொழி நடைக்கு நான் கிறங்கியவனாய் இருக்கிறேன். அவருடைய சிறுகதைகள், கவிதைகள் என நிறைய படித்திருக்கிறேன். அவர் நாவல் எழுதவில்லையே என்ற ஆதங்கம் எனக்குண்டு. மூன்று தடவை அவரோடு ஒரே மேடையில் பேசும் வாய்ப்பும், அது தவிர சில விழாக்களில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்புகளும் கிட்டியிருக்கின்றன. கவிதையாகவேத் தெரிவார். நன்றி லேகா...என்ன்னுடைய நினைவுகளை தூண்டியதற்கு.....
லேகா சமீபத்தில்தான் இந்த தொகுப்பை வாங்கினேன், உங்கள் review படித்தபிறகு மீண்டும் வாசிக்க தோன்றுகிறது.
கல்யாண்ஜியின் சிறந்த கவிதைகளை எங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
அவரது சிறுகதைகள் பலவும்கூட என்னைக் கவர்ந்து இருக்கிறது. எனினும், கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம்தான் அதிகம்.
வருகைக்கு நன்றி மாதவராஜ்.
"தனுமை" - எனக்கு மிகபிடித்த வண்ணதாசன் சிறுகதைகளுள் ஒன்று.தனுவை எதிர்நோக்கி காத்திருக்கும் நாயகன் நிலையை "தனியாகி தனுவாகி.." என வர்ணித்திருக்கும் இடம் அருமை.வண்ணதாசன் நாவல் எழுதி உள்ளார்."சின்னு முதல் சின்னு வரை" - நீண்ட நாட்களுக்கு முன் படித்தது.
//மூன்று தடவை அவரோடு ஒரே மேடையில் பேசும் வாய்ப்பும், அது தவிர சில விழாக்களில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்புகளும் கிட்டியிருக்கின்றன. //
அருமை.பகிர்தலுக்கு நன்றி.
நன்றி கிருஷ்ணன்
நன்றி இளவரசன்.
//அவரது சிறுகதைகள் பலவும்கூட என்னைக் கவர்ந்து இருக்கிறது. எனினும், கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம்தான் அதிகம்.//
இவ்விடயத்தில் எனது நிலை தலைகீழ்.வண்ணதாசனின் சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம்.பகிர்தலுக்கு மிக்க நன்றி.
nalla pathivu..
Tnx Narsim :-)
//தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.//
பல விஷயங்கள் இப்படி தான். :(
வருகைக்கு நன்றி சஞ்சய் :-)
அவரது அந்நியமற்ற நதி கவிதைத் தொக்குப்பும் நன்றாக இருக்கும்.
லேகா!
வண்ணதாசன் நாவல் குறித்து அளித்த தகவலுக்கு நன்றி. பாருங்கள் இதெல்லாம் தெரியாமல் இவ்வளவு நாளும் இருந்திருக்கிறேன்.
உங்களுக்கு இன்னும் பட்டாம்பூச்சி விருந்து பறந்து வரவில்லையே?
வந்து என "தீராத பக்கங்களில்' இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
சின்னு முதல் சின்னு வரை குறுநாவல்தானே... நாவலில்லையே!
முன் இருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது
பூ
தாங்க முடியவில்லை
(கல்யாண்ஜி)
ஏதோ ஒரு காலகட்டத்தில் படிக்கும் பழக்கமுடைய எல்லாரும் கல்யாண்ஜியின் கவிதைகளால் பாதிக்கப்பட்டே இருப்பார்கள் என நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி சுந்தர்.
சின்னு முதல் சின்னு வரை குறுநாவல் தான்.பல வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்.
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி வடகரைவேலன்.
நன்றி மாதவராஜ்.
Vegu natkalai nan vaanga uthesiththa puththagam ithu, nalla pathivu lekha.
லேகா நான் நேசிக்கும் மிகச்சில அழகியல் கவிதைகளில் கல்யாண்ஜி கவிதைகளும் அடங்கும். இந்த வலைத்தளம் அவரின் கவிதைகளோடு அழகாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி..
லேகா நான் நேசிக்கும் மிகச்சில அழகியல் கவிதைகளில் கல்யாண்ஜி கவிதைகளும் அடங்கும். இந்த வலைத்தளம் அவரின் கவிதைகளோடு அழகாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி..
Post a Comment