Monday, January 26, 2009

யுவன் சந்திரசேகரின் "குள்ளசித்தன் சரித்திரம்"

சாமியார்கள்,நாடி ஜோதிடம்,ரேகை ஜோசியம்,சுவடி ஜோசியம், சித்து விளையாட்டு போன்ற விஷயங்கள் நகைப்புகுறியதாகவே தோன்றினாலும் அது குறித்த விவாதங்கள்,நிகழ்வுகள் படிப்பதற்கும்,கேட்பதற்கும் சுவாரசியமானவை.இந்நாவல் முழுதும் அது போன்றதொரு சித்து வெளியில் உலவுகின்றது.கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இதை ஒரு அற்புத புனைவென கொண்டு வாசித்து மகிழலாம்.பக்திமான்கள் மதுரை வீதிகளில் வாமன ஸ்வாமிகள் மடத்தை தேடி அலையலாம்.இப்படி குறிப்பிட காரணம் யுவன் கதை சொல்லியுள்ள பாங்கு.குள்ள சித்தனை சந்தித்தவர்களின் ஆச்சர்ய விவரிப்புகள் மற்றும் அவரின் சித்த விளையாட்டுகள் ஒருபுறமும்,பழமையான நூலகம் ஒன்றில் கணக்கராய் பணிபுரியும் ராம.பழனியப்பனின் வாழ்வின் தின போராட்டங்கள் ஒருபுறமுமாய் கதை கோர்வையின்றி தொடங்குகின்றது.இரண்டு கதைக்கும் பொதுவானதை தேட தொடங்கி புத்தகதிற்குள் முழுதுமாய் தொலைந்து போனேன்.இது போன்ற கதைகளில் மிகை படுத்தபடும் நிகழ்வுகள் பெரும் நகைபிற்குறியதாய் மாறும் வாய்ப்புகள் அதிகம்,இருப்பினும் இதில் சொல்லப்பட்டுள்ள சித்து விளையாட்டுகள் ரசிக்கத்தக்கவை.

இந்நூல் மிக பிடித்து போனதற்கு முக்கிய காரணம்,இதற்கு முன் எதிலும் வாசித்திடாத மதுரை நகரின் வீதிகளும்,அதன் கொண்டாட்டங்களும்.மதுரை நகரை சித்திரை திருவிழாவின் பொழுது பார்த்திருக்கின்றீர்களா? என்ற ஒரு வரி சட்டென எனக்கு மிகபிடித்த சித்திரை திருவிழா பொழுதைய காட்சிகளை நினைவில் கொண்டுவந்தது.இவ்வாண்டு திருவிழா குறித்த பதிவு ஒன்றை எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.மதுரை தவிர்த்து சோழவந்தான்,கரட்டுபட்டி,பெரியகுளம்,நிலக்கோட்டை என அதை சுற்றியுள்ள ஊர்களிலும் பயணிக்கின்றது நாவல் சித்தரின் வரலாறை சொல்லியபடி.

நாவல் முழுவதும் கேள்விகள்,முடிச்சுக்கள்,ஏதோ ஒரு தேவையின் பேரில் அலைபாயும் மனிதர்கள் அதன் பொருட்டு நடைபெறும் குள்ளசித்தரின் ஜாலங்கள் என அமானுஷ்யம் கொண்டு தொடர்கின்றது.யுவனின் வித்யாச கதை சொல்லும் பாங்கு முதலில் புரிந்து கொள்ள கடினமாய் உணர்தாலும் மெல்ல மெல்ல முழுதாய் நம்மை உள் இழுத்து கொள்ளும் திறன் கொண்டது.

வெளியீடு - தமிழினி
விலை - 100 ரூபாய்

13 comments:

சென்ஷி said...

வாங்கி வாசிக்க வேண்டும் என்று நினைவில் நிற்கின்ற புதினத்தில் இதுவும் ஒன்று...

Krishnan said...

எஸ் ரா அவர்கள் பரிந்துரைத்த 100 சிறந்த புத்தகங்களில் இதுவும் அடங்கும். வெகு அழகாக அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி லேகா .

narsim said...

//நாவல் முழுவதும் கேள்விகள்,முடிச்சுக்கள்,ஏதோ ஒரு தேவையின் பேரில் அலைபாயும் மனிதர்கள் அதன் பொருட்டு நடைபெறும் குள்ளசிதரின் ஜாலங்கள் என அமானுஷ்யம் கொண்டு தொடர்கின்றது//

வாசிக்க தூண்டும் வார்த்தைகள்..அறிமுகத்திற்கு நன்றி

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

குப்பன்.யாஹூ said...

புதுமையான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி லேகா.

மதுரை வீதிகள், (குறிப்பாக டவுன் ஹால், வடக்கு வெளி, மேல மாசி, ஆடி வீதி,) நகரம் (அரசரடி, சுப்ரமணிய புரம், மாப்பாளையம், சொக்கி குளம்) , பற்றிய தங்களின் விரிவான பதிவுகளை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

குப்பன்_யாஹூ

லேகா said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி சென்ஷி

லேகா said...

நன்றி கிருஷ்ணன்.

எஸ்.ரா பட்டியலில் இருப்பது மகிழ்ச்சி.இவரின் மற்றொரு தொகுப்பு குறித்து விரைவில் பதிவு செய்கின்றேன்.

லேகா said...

நன்றி நர்சிம் :-))
இப்பதிவில் எனக்கு பிடித்த வரிகளும் இதுவே!!

லேகா said...

நன்றி ராம்ஜி.

//மதுரை வீதிகள், (குறிப்பாக டவுன் ஹால், வடக்கு வெளி, மேல மாசி, ஆடி வீதி,) நகரம் (அரசரடி, சுப்ரமணிய புரம், மாப்பாளையம், சொக்கி குளம்) , பற்றிய தங்களின் விரிவான பதிவுகளை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.//

மதுரை வீதிகள் குறித்து எனக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லை :-((
மதுரை குறித்த ஆராய்ச்சி நூல்கள் தேடி படிக்கும் ஆவல் உண்டு.நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.

குப்பன்.யாஹூ said...

லேகா - மதுரை பற்றிய வரலாறு கேட்க வில்லை (எழுதினால் படிக்க ஆவல் தான்)

தங்களின் மதுரை அனுபவங்கள், மதுரை மக்கள், மதுரை வீரம், மதுரை மக்களின் மனித நேயம், வெகுளி தனம், குறும்பு, கேலி போன்றவை பற்றிய பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.

குப்பன்_யாஹூ

லேகா said...

@ ராம்ஜி
நிச்சயமாய் பதிவு செய்கின்றேன் :-)

anujanya said...

மொழி ஆளுமை மிக்க முக்கிய எழுத்தாளர்களுள் யுவனும் ஒருவர். இன்னும் படிக்கவில்லை. அறிமுகத்திற்கு நன்றி லேகா.

அனுஜன்யா

லேகா said...

நன்றி அனுஜன்யா :-)