Tuesday, October 7, 2008

ச.கந்தசாமியின் "சாயாவனம்"

ஒரு பெரு வனம் அழிக்கபடுவதை முழு நாவலாக இத்துணை சுவாரசியமாக சொல்ல முடியுமா என ஆச்சர்யமாக உள்ளது.நாகரிக வளர்ச்சியின் காரணமாய் நாம் இழந்த இயற்கையின் செல்வங்கள் பல..வனங்களும் அதில் ஒன்று.மனிதனின் தேவைகளும்,விருப்பங்களும் பெருக பெருக ஏதேனும் ஒரு வகையில் இயற்கை அதற்கு பலியாகிறது.கரும்பாலை நிறுவும் பொருட்டு பெரும் வனம் ஒன்றினை அழிக்க நாயகன் எடுக்கும் முயற்சிகளும்,அவன் பெரும் அனுபவங்களும்,அதில் அவன் காணும் வெற்றியுமே(?) இக்கதை.

இலங்கையில் இருந்து தன் சொந்த ஊரான சாயவனதிற்கு திரும்பும் சிதம்பரம்,கரும்பு ஆலை நிறுவ விரும்பி வனம் ஒன்றினை விலைக்கு வாங்குகிறான். விவசாயத்தை நம்பி பிழைக்கும் அவ்வூரில் யாரும் வனத்தை அழிக்க கூலிக்கு வராததால்,தானே சிறுவர்கள் இருவரை துணை கொண்டு செடிகளை அகற்றி,மரங்களை வெட்டி திட்டம் வகுத்து துரிதமாய் வேலையில் இறங்குகிறான்.கொஞ்சம் கொஞ்சமாய் வனம் அழிந்து வரும் நிலையில் வாசிக்கும் நமக்கு ஒரு கசப்பான மன உணர்வை தருவதாய் உள்ளது.அதிலும் பறவைகளும்,அணில்,முயல்,காளை மாடு ஆகிய விலங்குகளும் வனத்தை அழிக்க வைத்த தீயில் இரையாவது வலி அதிகரிக்க செய்யும் வர்ணனை.




கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலில் சிறு காட்டினை தீ வைத்து அளித்து சம வெளியாக்கி,பின் அதில் குடியேறி விவசாயம் செய்த வேதி நாயக்கரின் மூதாதையர் பற்றிய குறிப்புகள் இந்நாவல் படிக்கும் பொழுது வந்து போனது.ஒரு சமூகம் செழிக்க மேற்கொள்ளப்பட்ட அந்த அழிப்பு நியாமாக தோன்றியது.சிதம்பரம் தன் விருப்பம் நிறைவேற வனத்தினை அழிக்கும் செயல் முரணாக தோன்றினாலும்,
அதில் அவன் கொண்டிருக்கும் உறுதி,சிறு சிறு தோல்விகளில் பெறும் பாடத்தை கொண்டு வரும் நாட்களுக்கான வியுகம் அமைப்பது,எப்பொழுதும் எதிர்மறை கருத்து கூறி அவனை திசை திருப்ப முயலும் ஊரார்களை சிறு புன்னகை யோடு எதிர்கொள்ளும் பாங்கு என சிதம்பரத்தின் பாத்திர படைப்பு வெகு நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதை தொடங்கி வெகு நேரம் வரை அது நடக்கும் காலத்திற்கான குறிப்பு இல்லை,நிகழ கால கதை எனவே கருதும் வண்ணம் செல்லும் கதையோட்டம் சுதந்திரத்திற்கு முன்பு நிகழ்வதாய் உள்ளது.நிலவின் ஒளியில் அழிந்து வரும் வனத்தை ரசிக்கும் சிதம்பரத்தின் மனவோட்டம்,சாயாவன மக்களின் ஜாதி பேதம் தாண்டிய நட்பு,திருமண சடங்குகள்,புதிதாய் தொழில் தொடங்க வந்திருக்கும் இளைஞனிற்கு அவர்கள் தரும் உற்சாகம்,முரண் பட்ட சிந்தனையால் ஏற்படும் மன பிறழ்வுகளை எளிதில் மாற்றி கொள்ளும் முதிர்ச்சி,சற்றும் மனம் தளராது எடுத்த காரியத்தில் உறுதி கொண்டு உழைக்கும் சிதம்பரம் என நாவல் முழுவதும் நாம் சாயாவன மனிதர்களிடம் கற்று கொள்ள ஏராளமானது உள்ளது.யாவருக்கும் பயன்பட்ட எக்காலமும் காய்த்து குலுங்கிய வனத்தின் புளியமரங்களை அழித்தது குறித்து சிதம்பரத்திடம் கிழவி ஒருத்தி இடிந்து கூறும் இடத்தில் அவன் கொள்ளும் அமைதி,அவன் அதுவரை செய்த முயற்சிகள் அனைத்தையும் அர்த்தமற்றதாகிவிட்டதின் குறியீடாய் உள்ளது.

வெளியீடு : கவிதா பதிப்பகத்தார்
விலை : 60 ரூபாய்

17 comments:

Jags said...

அமைதியான நீரோட்டம் காண்பது ஒரு சுகம் என்றால், அருவிதனில் பொழியும் நீரோட்டம் மற்றொரு சுகம். அவை இரண்டும் ஒரு சேர காண்பது என்பது மனதிருக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும். ஏற வெடிய இடத்தில் ஏறி, மோத வேண்டிய இடத்தில் மோதி, அழகு தூறல் போடும் நீரோட்டம் போல இருந்தது உங்கள் பதிவின் வாசிப்பு அனுபவம்.
மிக மிக நல்ல பதிவு.
இப்பொழுதே எனக்கு "சாயவனத்தை" படித்தது போன்ற ஒரு நிலை.
வாழ்த்துக்கள்....

லேகா said...

நன்றி ஜகன் :-) உங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு!!

kuppan_yahoo said...

மற்றும் ஒரு நல்ல பதிவு.

நல்ல நல்ல புத்தகங்களாக தேடி பிடித்து படித்து அறிமுகம் செய்வதற்கு மிக்க நன்றி.

நீங்க அப்படியே ஆங்கில புத்தகங்களும் அப்போ அப்போ படிங்க.

அண்ணாதுரை போல தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும்.

நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

லேகா said...

Tnx Kuppan_Yahoo

Sure will try to read..

NILAMUKILAN said...

தங்களின் விமர்சனம் அருமை. இவருடைய சிறுகதை தொகுப்பு மற்றும் விசாரணை கமிஷன் என்ற நாவலை வாசித்து பாருங்கள். மிக அற்புதமான எழுத்தாளர்.

Krishnan said...

Let me echo Kuppan_yahoo's words:
"நீங்க அப்படியே ஆங்கில புத்தகங்களும் அப்போ அப்போ படிங்க.
அண்ணாதுரை போல தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும்". Tamizh and English are like our pair of eyes.

லேகா said...

//இவருடைய சிறுகதை தொகுப்பு மற்றும் விசாரணை கமிஷன் என்ற நாவலை வாசித்து பாருங்கள்.//

நன்றி நிலா முகிலன்.நிச்சயமாய் வாசித்து பார்கிறேன்.இவரின் "விசாரணை கமிஷன்" நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது என நினைக்கின்றேன்..

லேகா said...

@ கிருஷ்ணன் ,@ குப்பன்_யாஹூ

தமிழ் வாசிப்பில் உள்ள இனிமை,ஆங்கில நூல்களில் நான் பெற்றதில்லை.சில நாட்களில் சலிப்புற செய்தது.எதார்த்த பதிவுகள் மண்ணோடு கலந்த வாழ்கை அனுபவங்கள் யாவும் தமிழில் படித்து உணர்வதையே விரும்புகிறேன்..காலமும்,ஆர்வமும் இருப்பதால் தமிழில் அனைத்து சிறந்த நூல்களையும் படித்து விட்டு ஆங்கில நூல்கள் படிக்க முயல்கிறேன்!!நன்றி இருவருக்கும்!!

வால்பையன் said...

//அவன் அதுவரை செய்த முயற்சிகள் அனைத்தையும் அர்த்தமற்றதாகிவிட்டதின் குறியீடாய் உள்ளது. //

இந்த நாவல் குற்ற உணர்வின் பெருங்கதையாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முன் பத்தியில் வனத்தை அழித்து போராடி வெற்றிகொண்டான் என்ற போதே அதில் ஒரு நக்கல் தெரிகிறது.

லேகா said...

//இந்த நாவல் குற்ற உணர்வின் பெருங்கதையாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//

சரி தான் அருண்.

செந்தில்குமார் said...

மிகவும் அருமை . உங்கள் நட்பு கிடைத்தால் மிகவும் சந்தோசம் கிடைக்குமா

ramachandranusha(உஷா) said...

லேகா,
வாசிப்பு அனுபவம் பற்றி ஒரு பதிவுhttp://nunippul.blogspot.com/2008/10/blog-post.html போட்டிருக்கிறேன். அதில் உங்களுக்கும் அழைப்பு விட்டிருக்கிறேன். நீங்கள் எழுத வேண்டும், அதைப் படிக்க ஆவலாய் உள்ளேன்.

லேகா said...

@ Usha

நிச்சயமா உஷா.மிக்க நன்றி :-)

செந்தில்குமார் said...

அந்த காலத்தில் புறா மூலம் செய்திகளை அனுப்புவார்கள் !!!!!

இப்பொழுது லேகா மூலமாக செய்திகளை தெரிந்து கொள்ளலாம் !!!!!

கருத்துமிக்க கதைக்கு நன்றி !!!!

எனது ஐய்யங்களை தீர்த்து வைக்க தங்களது ஆலோசனை தேவை
எனது கைபேசி எண் : 9944458957

செந்தில்குமார் said...

எனது வலைபூ www.senthilkumarnv.blogspot.com

எனது வலைபூ பற்றிய தகவல்களையும் கருத்துகளையும் தெரிவிக்கவும்.
நன்றி!!!

R said...

CONGRATS for your SUJATHA AWARD of UYIRMMAI publications..Came to your blog the first time and found that you are doing a marvellous job....Keep it up!! Hats off to you!

Anonymous said...

Excellent, Leka. Good writing.
Keep writing. I will be a permanent
visitor of your blog.
Saravanan
Salem