Wednesday, October 29, 2008

ரயில் பயணங்கள்,வாசிப்பு மற்றும் சுதாவின் 'அனல் மேலே பனித்துளி.....'எனது பால்ய கால ஏக்கங்களில் முக்கியமான ஒன்று ரயில் பயணம்..கல்லூரி முடித்து சென்னையில் பணியில் சேர்ந்த பிறகு ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி போனதோடு சுவாரசியம் கூட்டும் அனுபவமாய் மாறிப்போனது.மிக விருப்பத்திற்குரியது வாசிப்பிற்கு அனுகூலமான நீண்ட பகல் பொழுது பயணங்கள்.ஜன்னல் காட்சிகள் துண்டிக்கப்படும் குளிர்வசதி கொண்ட ரயில் பெட்டி பயணம் தண்டனை அனுபவிப்பது போன்ற நிலையில் தள்ளும்..எல்லாவற்றிற்கும் மேலாக அரிதாய் புன்னகைக்கும் சக பயணிகள்,தொடர் சேட்டைகளால் கவனம் பெரும் சிறுவர்கள்,இரவில் ஒளிரும் நதிகள்,உடன் நகரும் வயல்வெளிகள்,மரங்கள், நாகை,நெல்லை,மதுரை என சரளாமாய் புரளும் வட்டார மொழிகள் என சுவாரசியத்திற்கு குறைவில்லாத ரயில் பயணங்கள் சலிப்பற்று தொடர்கின்றது!!

*************************************

வாசிப்பு..புத்தக வாசிப்பு தொடர் ஆட்டத்தில் பங்கு கொண்டு கேள்விகளுக்கான பதில் எழுதும் பொழுது வாசிப்பு மீது கொண்டிருக்கும் ஆர்வமும்,முற்று புள்ளி அற்று தொடரும் அதன் சுழற்சியில் சுகமாய் பயணிப்பது குறித்து யோசிக்க செய்தது.வாசிப்பு என்றைக்குமே திணிக்கபட்டு வருவதில்லை,தேடல் மிகுதியின் தொடர்ச்சியாய் வருவது!!சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் வாசிப்பு குறித்த வைரமுத்துவின் "வாசிப்பு மனிதனை விசாலபடுத்துவது.வாசிப்பு உலகம் வாசகன் வாழாத உலகத்தை அவன் வாசலுக்கு கொண்டு வருவது " என்கின்றன வரிகள் வெகு உண்மையாய் தோன்றியது.நெருக்கடி மிகுந்த தினசரி வாழ்வில் காண கிடைக்காத உலகம் குறித்த தேடல் மிக அவசியமே!!சமீபத்திய பண்டிகை விடுமுறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் வாசிக்காமல் இருந்தது வெறுமையாய் உணர செய்தது..சென்னை பட்டணம் நெருங்க நெருங்க அந்த வெறுமை தேவை ஆகா உருமாறி ரயிலிலேயே வாசிப்பை தொடங்கி விட்டேன்...

**********************************************
முன் எப்போதும் இல்லாத அளவு ஒரு பாடலின் மீது பைத்தியம் கொண்டு, எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கில் கொள்ளாது தொடர்ந்து ரசித்து கொண்டிருகின்றேன் சுதா ரகுநாதனின் குரலில் வரும் வாரண ஆயிரம் படப்பாடல் "அனல் மேலே பனித்துளி....." யை.சுதாவின் முந்தைய இரு திரை பாடல்கள் அதிக கவனம் பெறவில்லை..ராஜாவின் இசையில் இவன் படப்பாடல் "எனை என்ன செய்தாய்.." அற்புதமான தொடக்கமாய் இருந்த போதிலும் ஏனோ வெகுஜன ரசிப்போடு ஒன்றவில்லை.

கர்நாடக இசையை பொறுத்த மட்டில் எனது அறிவும்,ரசனையும் பூஜ்யம்.நேர் எதிராய் கர்நாடக சங்கீதத்தில் அப்பாவிற்கு உள்ள ஈடுபாடும்,சுதாவின் பாடல்களுக்கு மீது கொண்ட தீவிர ரசனையாலும் இப்பாடலை கேட்க முடிந்தது.மெல்ல இப்பாட்டின் வசீகரத்தில் மூழ்கி போகும்படியும் ஆனது..

"எந்த காற்றின் அளாவலில் மலர்
இதழ்கள் விரிந்தனவோ ..........."

"சந்தித்தோமே கனாக்களில் சில முறைய பலமுறையா
அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா........"

தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கொண்டு முழுமை அடைவது தாமரையின் வரிகள் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதுவித அனுபவம் தந்தபடி தொடர்கின்றது!!

16 comments:

வால்பையன் said...

பயண கட்டுரையிலும்
புத்தகம் பற்றியா?

குப்பன்.யாஹூ said...

MRTS ரயிலில் தினமும் பெருங்குடி CTS பயணிக்கிறீர்களா.

அந்த ரயில் புத்தக வாசிப்புக்கு மிகுந்த வசதியான ரயில்.

சீக்கிரம் எஸ் ரா வின் அலைவோம் திரிவோம், கதா விலாசம் படயுங்கள், அதில் வாசிப்பு, பயணம் குறித்து மிக அழாகாக கூறி இருப்பார்.also try to get & read Stephen covey's 7 Habits of highly effective people.

vaalpayyan, u also pls try to get this book, stephen covey 7 habits of highly effective people.

That book will help to chnage our thought process, positive atttiude, broad mindedness etc.


வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ

லேகா said...

புத்தகங்கள் குறித்த தங்களின் பரிந்துரைக்கு மிக்க நன்றி.

நான் சொல்லி இருப்பது சென்னையில் இருந்து மதுரை செல்லும் ரயில் பயணங்களை....தினப்படி மின்சார ரயில் பயணத்திற்கும் இதற்கும் அதிக வித்யாசமுண்டு!!

எஸ்.ரா வின் கதாவிலாசம் படித்து இருக்கின்றேன்!!கதை சொல்லியாக,ஊரே சுற்றியாக தமது அனுபவங்களை எஸ்.ரா பகிர்ந்து இருந்தது அற்புதம்.புதிய வாசிப்பு அனுபவத்தை,நம்மை சுற்றி நிகழும் சிறு சிறு காரியங்களின் அழகை ரசிக்கும் தன்மையை அதிகரிக்க செய்தது அக்கட்டுரை தொகுப்பு!!

Anonymous said...

அனல்மேலேபனித்துளி மிக மிக அட்டகாசமான பாடல்தான்.என்னைப்போலவே இன்னொருவர் அந்தப்பாடலின் மீது பைத்தியமாயிருப்பதில் மகிழ்ச்சிதான்..:)

பிறகு ரயிலைப்பற்றி நாமளும்.. கொஞ்சம் கிறுக்கியிருக்கோம்.. முடிஞ்சபோது படிச்சிட்டு சொல்லுங்க..

தண்டவாளத்து வண்டவாளங்கள்
(http://www.agiilan.com/?p=128)

கதிர் said...

சந்தித்தோமே கனாக்களில்...

மிகவும் பிடித்த வரி.

Anonymous said...

என் ipot டுக்கு வாய் இருந்த ஒன்னு அது அழுதுருக்கும் இல்ல என்ன சரமாரியா திட்டிருக்கும் ... இப்பக்கூட இந்த பாட்டு தான் ஓடிட்டு இருக்கு .....

KARTHIK said...

// "எனை என்ன செய்தாய்.." அற்புதமான தொடக்கமாய் இருந்த போதிலும் ஏனோ வெகுஜன ரசிப்போடு ஒன்றவில்லை.//

இதுவும் நல்ல பாடல் தான் ஏனோ மக்களிடம் இது அவ்வளவாக போய் சேர வில்லை.
ஒருவேள படம் சரியா போகாதது ஒரு காரணமா இருக்கலாம்.

// ஒரு பாடலின் மீது பைத்தியம் கொண்டு, எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கில் கொள்ளாது தொடர்ந்து ரசித்து கொண்டிருகின்றேன் சுதா ரகுநாதனின் குரலில் வரும் வாரண ஆயிரம் படப்பாடல் "அனல் மேலே பனித்துளி..... //

Same blood நான் இன்னும் நெஜ்சுக்குள் பெய்திடும் மாமழை,அஞ்சல இரு பாடல்களையும் சேர்த்து மே மாதம் நெட்டில் சுட்டதிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.இதில் அஞ்சல நல்ல ஹிட்டாகும்னு நெனக்கரன்.

// குப்பன்_யாஹூ said...
சீக்கிரம் எஸ் ரா வின் அலைவோம் திரிவோம், கதா விலாசம் படயுங்கள், அதில் வாசிப்பு, பயணம் குறித்து மிக அழாகாக கூறி இருப்பார்.//

கதாவிலாசம் விடவும் தேசாந்திரியில் பயனனுபவம் பற்றி நல்லா சொல்லியிருப்பார்.ஆனா அலைவோம் திரிவோம் இன்னும் படிக்கலைங்க.

குப்பன் நீங்களும் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யுறீங்க.

லேகா said...

நன்றி அகிலன்

உங்கள் பதிவை படித்து பின்னூட்டம் இடுகிறேன்!!

லேகா said...

நன்றி கதிர்

நன்றி பாலச்சந்தர்

லேகா said...

நன்றி கார்த்திக்

குப்பன்_யாஹூ நான் அறிந்திராத சில எஸ்.ராவின் நூல்களை அறிமுகம் செய்திருகின்றார்மேலும் சில ஆங்கில இலக்கியமும்,படிக்க வேண்டிய ஒன்று.

Krishnan said...

I have never heard of Es Ra's Alaivom Thirivom. Thanks to Kuppan Yahoo for introducing this book. My "must-buy" list of books at the coming book fair is growing day by day. At this rate, I guess I got to visit it minimum of three days :-)

Gayathri said...

cherished to see this post coz i too wanted to travel in train in my childhood. that time it dint happen. but now going to hometown frequently...same experience :)

anal maelae:lyrics, music, sudha's voice all together soothe my mind.
nicely portrayed

லேகா said...

@ Krishnan

// My "must-buy" list of books at the coming book fair is growing day by day//

:-)) for me too!! eagerly waiting for d book fair!!

லேகா said...

Hi Gayathri!!

Tnx for ur comments,nice sharing!!

sriram said...

ரயில் பயணத்தை பற்றி அருமையான வரிகள்.
பல புத்தகங்கள் வாசிப்பதால், நீங்களும் கதை நாவல் எழுதலாம் என்பது என் கருத்து.
எனது Blogயை வாசித்து விட்டு உங்கள் கருத்தை எதிர்பார்கிறேன்

sriram said...

ரயில் பயணத்தை பற்றி அருமையான வரிகள்
பல புத்தகங்கள் வாசிப்பதால், நீங்களும் கதை நாவல் எழுதலாம் என்பது என் கருத்து.
எனது Blogயை வாசித்து விட்டு உங்கள் கருத்தை எதிர்பார்கிறேன்