Monday, September 29, 2008

வண்ணதாசனின் "நடுகை" - சிறுகதை தொகுப்பு

வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு -"நடுகை" படிக்க கிடைத்தது.இத்தொகுதியில் அமைந்த பெரும்பாலான கதைகள் மனித உறவுகளின் பாசாங்கற்ற இனிமையை சொல்லுபவை.சக மனிதர்களோடு முகம் கொடுத்து,நின்று பேச நேரம் இல்லாமல் இயந்திர ஓட்டத்தில் அடித்து செல்லப்படும் இன்றைய பொழுதில் இக்கதைகள் படிப்பதற்கு பெரும் ஆறுதலாய் உள்ளது.

* காற்றின் வெளி-- ஒரு காலை பொழுதில் தன் மகளோடு சென்ற நடைபயணம் குறித்த பதிவு இது.வாகன பயணத்தை விட நடை பயணம் சுவாரசியமானவை..நான் மிக நெருக்கமானதாய் உணர்த்த கதை இது.கடை வீதிகளுக்கு செல்லும் பொழுதோ,சாலையை கடக்கும் பொழுதோ அப்பாவின் கைகோர்த்து செல்வது மிகுந்த விருப்பதிர்க்குறிய ஒன்று.சொல்லில் உணர்த்த முடியாத அன்பின் வெளிப்பாடாய் அக்கணங்கள் தோன்றும்.சிறுமியான தன் மகளின் வியத்தகு கேள்விகளும்,பார்பவர்களிடத்தில் எல்லாம் சிரித்து பேசும் குணமும்,குழந்தைகளுக்கே உண்டான ஆச்சர்யங்களும்,கேலிகளும் ஒரு தந்தையின் பார்வையில் சொல்லி இருப்பது நன்று.பால்ய காலந்தின் மீதான ஏக்கத்தை அதிகரிக்க செய்யும் விவரிப்புகள் அருமை.




* ஜோதியும் நானும் அந்த பையனும் - காதலிக்கு கொலுசு வாங்க கனவுகள் சுமந்து கடைக்கு செல்லும் நாயகன் அங்கு வறுமையின் காரணமாய் தான் வாங்கிய பரிசு கோப்பைகளை விற்று பணம் பெற கெஞ்சும் இளைஞனை கண்டு தான் வந்த காரியம் அற்பமானது என்பதை உணர்கிறான்...மனதை கனக்க செய்யும் இக்கதை உள்ளார்ந்த அர்த்தம் கொண்டது.

* மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது - வண்ணநிலவனின் மற்றுமொரு சிறுகதையான "கடைசியாய் தெரிந்தவர்கள்" போலவே இதுவும்,மன உளைச்சல் கொண்டு பரிதவிக்கும் நண்பனுக்கு ஆறுதலாய் உடன் இருந்து உதவிய கணங்களின் பதிவு.உறவுகள் மேம்படுவது கேளிக்கையான தருணங்களை காட்டிலும் துன்ப காலங்களிலேயே...

* நடுகை - நாமே எதிர்பாரா வண்ணம் சில அபூர்வ மனிதர்களை காண நேரிடும்.படிப்பு,வளர்ப்பு என்பதை உலக ஞானம் பெற்று அவர்கள் கூறுபவை யாவும் நிதர்சனங்களாய் ஒலிக்கும்.பயிர் செடிகளின் மீது பிரியம் கொண்ட மாடு மேய்க்கும் கிழவரூடான சம்பாஷனைகளே இச்சிறுகதை.


இச்சிறுகதை தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையே ஒரு அழகிய சிறுகதையை போன்றது."இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது" என கூறுகிறார்.இன்றைய பொழுதுகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட நினைவுகளின் பகிர்தல் மிக அவசியமானதே!!

வெளியீடு - அன்னம் புக்ஸ்
விலை - 45 ரூபாய்

29 comments:

Bee'morgan said...

மிக அழகாக எழுதியிருக்கீங்க லேகா.. பாராட்டுகள்.. :)
கூடவே, புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் (பதிப்பகம்,விலை ) தந்தால் இன்னும் உபயோகமாய் இருக்கும்..

லேகா said...

@bee'morgan

நன்றி.

//கூடவே, புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் (பதிப்பகம்,விலை ) தந்தால் இன்னும் உபயோகமாய் இருக்கும்..//

வெளியீடு மற்றும் விலை விபரங்களை இணைத்துவிட்டேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவருடைய அனைத்துக் கதைகளைக் கொண்ட முழுத் தொகுதி சந்தியா பதிப்பகம் சில வருடங்கள் முன் கொண்டு வந்திருந்தது. அதில் இந்தக் கதைகளும் இருப்பதாக ஞாபகம்.

இப்போது வண்ணதாசனுக்கும் வலைப்பதிவு இருக்கிறது :)

KARTHIK said...

// கடை வீதிகளுக்கு செல்லும் பொழுதோ,சாலையை கடக்கும் பொழுதோ அப்பாவின் கைகோர்த்து செல்வது மிகுந்த விருப்பதிர்க்குறிய ஒன்று.சொல்லில் உணர்த்த முடியாத அன்பின் வெளிப்பாடாய் அக்கனங்கள் தோன்றும்.//

அருமை.

வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவன் புத்தகம் இன்னும் வேரயதாவது படிக்காம விட்டுவெச்சிருக்கீங்கள :-))

நல்ல பதிவு.

லேகா said...

@ Sundar

//அவருடைய அனைத்துக் கதைகளைக் கொண்ட முழுத் தொகுதி சந்தியா பதிப்பகம் சில வருடங்கள் முன் கொண்டு வந்திருந்தது.//

ஆமாம் சுந்தர்.அவரின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பு அது.நூற்றிற்கும் மேல்பட்ட சிறுகதைகள் அடங்கும்.இந்த தொகுதி தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் கொண்டது.

வண்ணதாசனின் வலைதள முகவரியை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

லேகா said...

நன்றி கார்த்திக்.
வண்ணநிலவனின் "பாம்பும் பிடாரனும்" சிறுகதை படித்ததில்லை.இம்முறை புத்தக கண்காட்சியில் அவரின் சிறுகதைகளின் மொத்த தொகுதி கிடைத்தால் வாங்க வேண்டும்.

Bee'morgan said...

இவ்வளவு சீக்கிரமா.. ???
nandri hein :)
வண்ணதாசன் வலைப்பக்கம் இங்கே..
http://vannadhasan.blogspot.com/2008/03/blog-post.html

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

bee'morgan தந்துவிட்டார் :)

ஆனால் இடுகைகளே இல்லை அவரது வலைப்பதிவில் :( (except one!).

லேகா said...

மிக்க நன்றி.எனக்கு தமிழ் வாசிப்பின் மீது விருப்பம் கூடியது வண்ணதாசனின் எழுத்துக்கள் மூலமே!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/எனக்கு தமிழ் வாசிப்பின் மீது விருப்பம் கூடியது வண்ணதாசனின் எழுத்துக்கள் மூலமே!!/

ஆம். ஆனால் ஒரு கட்டத்திற்குமேல் போரடிக்கக்கூடியது அவரது எழுத்துமுறை :(

லேகா said...

ம்ம்ம்....ஆமாம் சுந்தர்.மார்ச் மாதத்திற்கு பிறகு பதிவுகளே இல்லை!! எனினும் வண்ணதாசனின் எழுத்துக்களை இணையத்தில் பார்த்ததில் மகிழ்ச்சியே..

லேகா said...

//ஆம். ஆனால் ஒரு கட்டத்திற்குமேல் போரடிக்கக்கூடியது அவரது எழுத்துமுறை :(//

:))நிகழ்வுகளின் பதிவை இயல்பாய் விளக்குபவை அவரது எழுத்துக்கள்.கதைக்கு சுவாரஸ்யம் கூட்ட தேவையற்ற பூச்சுகளை எப்பொழுதும் அவர் கையாண்டதில்லை.நீங்க சொல்வது போல அவ்வகை எழுது நடை ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பு தரக்கூடியவைதான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு காலத்தில் அவரது மயக்கும் நடையில் கட்டுண்டு கிடந்திருக்கிறேன். ‘எல்லோர்க்கும் அன்புடன்' அவருடைய கடிதத் தொகுதி. அவருடைய சிறுகதைகளைவிட மயக்கும் மொழிநடை இதில் இருக்கும்.

அவர் எனக்குக் கடிதமெழுதியிருக்கிறார் (அந்தப் புத்தகத்தில் ஒரு கடிதத்தில் அவர் சொல்லியிருப்பது). ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை :(

லேகா said...

//‘எல்லோர்க்கும் அன்புடன்' அவருடைய கடிதத் தொகுதி. அவருடைய சிறுகதைகளைவிட மயக்கும் மொழிநடை இதில் இருக்கும்.//

"எல்லாருக்கும் அன்புடன்" கடித தொகுதியில் என் அப்பாவின் கடிதமும் இடம்பெற்று இருந்தது.

//அவர் எனக்குக் கடிதமெழுதியிருக்கிறார் (அந்தப் புத்தகத்தில் ஒரு கடிதத்தில் அவர் சொல்லியிருப்பது). ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை :(//

கிடைக்காதது சோகமே..

Jags said...

உங்கள் நடை பிரகாசமாய் உள்ளது...சுருங்க சொன்னாலும் சுவையாய் சொல்கிறீர்கள்...
//"இன்றைய பொழுதுகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட நினைவுகளின் பகிர்தல் மிக அவசியமானதே!!"...
உண்மையான உண்மை...
நான் ரசித்த மிக நல்ல பதிவு....
வாழ்த்துக்கள்..

லேகா said...

Tnx jags :-)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

சிறந்த விமர்சனங்களை வாசிப்பதும் கூட ஒரு நல்ல அனுபவம்தான்! உங்களின் விமர்சனங்கள் அப்படிபட்டவை. வாழ்த்துக்கள்!

குப்பன்.யாஹூ said...

மற்றும் ஒரு பயனுள்ள சுவை உள்ள பதிவு.

ஒவ்வொரு பதிவிலும் ஒரு உயர்ச்சி, முன்னேற்றம் தெரிகிறது தங்களிடம்.

பாலகுமாரன் எழுத்துக்களில் கண்ட அடக்கம், சத்தியம் உங்களின் எழுத்துக்களில் காண முடிகிறது.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வலைபதிவாளர் உலகம், என்னும் உயர்ந்த நோக்கம் போற்றுதலுக்கு உரியது.

தங்கள் மென்மேலும் சிறப்பு அடைய மனம் நிறைத்து வாழ்த்துகிறேன்.

இந்த சிறுகதை தொகுப்பு வாங்கி விரைவில் படிக்கிறேன், நன்றி.

கிடைக்கும் புத்தக கடை விவரமும் எழுதினால் என் போன்ற சோம்பேறிகளுக்கு இன்னும் உதவியாக இருக்கும். (i am in chennai now)

Krishnan said...

Thanks again for crisp and lovely review of the book. Looks like you have exhausted all of Vannadasan's and Vannanilavan's works. Are they writing currently ? Rarely I come across their stories nowadays.

லேகா said...

@குப்பன்_யாஹூ

ஊக்கமூட்டும் உங்கள் பின்னூடலுக்கு நன்றி.

வண்ணதாசனின் மொத சிறுகதைகளின் தொகுதியை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லாண்ட்மார்க்கில் பார்த்த நியாபகம்.

சென்னை புத்தக கண்காட்சியில் நிச்சயம் கிடைக்கும்.பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள்..

லேகா said...

நன்றி சதீஷ்.

லேகா said...

@ Krishnan

Tnx 4 ur comments!

No they are not writing now.Vannadasan was writing a weekly article "Agamum Puramum" in Aanda vigatan somedays back,tat too is not coming now a days.

Ramesh D said...

Vannadasan endru theriyamaleye avarudan nan kalitha poluthukali en ninaivu...

Ramesh D
Chettikurichi

லேகா said...

@ Ramesh

:-)

Krishnan said...

லேகா : To digress, இம்மாத உயிர்மை இதழில் வண்ணநிலவன் பற்றி எஸ்ரா அருமையான கட்டுரை எழுதி இருக்கிறார். Don't miss it. You will enjoy it I'm sure.

லேகா said...

கிருஷ்ணன்,
வண்ணநிலவன் குறித்த எஸ்.ராவின் "அவர் அப்படி தான்" கட்டுரை நேற்று தான் படித்தேன்.அவரது இலக்கிய,சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்கை குறித்த எஸ்.ராவின் பார்வை அருமையாக இருந்தது!!விடுபட்டு போன சில சிறுகதைகளை அதில் குறிப்பிட்டு இருந்தார்.வண்ணநிலவனின் மொத்த சிறுகதைகளை தொகுத்து காலச்சுவடு வெளியிட்டு இருப்பதாக அப்பா சொன்னாங்க,எப்படியும் இம்முறை வாங்கிவிடுவேன்!!

உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி!!

Dhinakar said...

நான் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை மிகவும் கவர்ந்த, நுட்பமான பல உணர்வுகளை மிக எளிய மனிதர்களின் உரையாடல் மூலமாக நான் மிக விரும்பும் எழுத்தாளர் திரு. வண்ணதாசன் எழுதியிருக்கும் தொகுப்புதான் - நடுகை. அதிலும் காற்றின் வெளி மற்றும் நடுகை மிகப் பிரமாதம்.
அவர் எழுத்துக்களை போலவே மிக அருமையான மனிதரும் கூட. திருநெல்வேலியில் அவரது இல்லத்தில் அவரை சந்தித்து உரையாடிய ஒரு மணி நேரம், எனது சிறந்த தருணங்களில் நிச்சயமான ஒன்று.
வாழ்வின் மீதும், எவர் மீதும் எந்த எதிர்மறை எண்ணங்களற்ற இவர் போல ஒருவரை நான் இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை.
வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், அற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக வண்ணதாசனைப் படிக்க வேண்டும்.

Dhinakar said...

நான் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை மிகவும் கவர்ந்த, நுட்பமான பல உணர்வுகளை மிக எளிய மனிதர்களின் உரையாடல் மூலமாக நான் மிக விரும்பும் எழுத்தாளர் திரு. வண்ணதாசன் எழுதியிருக்கும் தொகுப்புதான் - நடுகை. அதிலும் காற்றின் வெளி மற்றும் நடுகை மிகப் பிரமாதம்.
அவர் எழுத்துக்களை போலவே மிக அருமையான மனிதரும் கூட. திருநெல்வேலியில் அவரது இல்லத்தில் அவரை சந்தித்து உரையாடிய ஒரு மணி நேரம், எனது சிறந்த தருணங்களில் நிச்சயமான ஒன்று.
வாழ்வின் மீதும், எவர் மீதும் எந்த எதிர்மறை எண்ணங்களற்ற இவர் போல ஒருவரை நான் இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை.
வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், அற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக வண்ணதாசனைப் படிக்க வேண்டும்.

Dhinakar said...

நான் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை மிகவும் கவர்ந்த, நுட்பமான பல உணர்வுகளை மிக எளிய மனிதர்களின் உரையாடல் மூலமாக நான் மிக விரும்பும் எழுத்தாளர் திரு. வண்ணதாசன் எழுதியிருக்கும் தொகுப்புதான் - நடுகை. அதிலும் காற்றின் வெளி மற்றும் நடுகை மிகப் பிரமாதம்.
அவர் எழுத்துக்களை போலவே மிக அருமையான மனிதரும் கூட. திருநெல்வேலியில் அவரது இல்லத்தில் அவரை சந்தித்து உரையாடிய ஒரு மணி நேரம், எனது சிறந்த தருணங்களில் நிச்சயமான ஒன்று.
வாழ்வின் மீதும், எவர் மீதும் எந்த எதிர்மறை எண்ணங்களற்ற இவர் போல ஒருவரை நான் இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை.
வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், அற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக வண்ணதாசனைப் படிக்க வேண்டும்.