Thursday, September 11, 2008

ஜெயமோகனின் "ரப்பர்" -ஒரு தலைமுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

ஜெயமோகனின் எழுத்துக்கள் அவரது இணையத்தளம் மூலமாகவே பரிட்சயம்.அவரின் சிறுகதைகளை இலக்கிய இதழ்களில் படித்திருக்கின்றேன்.முற்றிலும் மாறுபட்ட மொழியாடல் கொண்டு வரும் அவரின் படைப்புக்களை இதுவரை படித்த வாய்ப்பு கிட்டாமல் இருந்து.ஒரு வழியாய் ஜெயமோகனின் முதல் நாவலான "ரப்பர்" படிக்க கிடைத்தது.

நாவலின் பெயரிலேயே இதன் கதை அடங்கி உள்ளது.அதிக நீரை உறிஞ்சி,நெடுக வளர்ந்து நிற்கும் ரப்பர் மரங்கள் ரப்பர் பாலிற்காக அறுபட்டு,பெரும் காயங்களோடு இறுதி காலத்தை கடப்பவை,அது போலவே வாழ் நாள் முழுதும் பிறரின் ரத்தத்தை உறிஞ்சி சுக வாழ்வு வாழ்ந்து தன் இறுதி நாட்களில் படுக்கையில் துன்பப்படும் பெரியவர் பொன்னு பெருவட்டரின் தலைமுறை பற்றிய கதை.




ஒரு கூட்டத்தாரின் சுயநலம் இல்லாது,பெரு முயற்சி கொண்ட உழைப்பின் பயனே ஒரு சமூகம் உருவாக காரணமாய் இருக்கும்.கிராமங்கள் உருவாகிய கதைகள் கேட்பதற்கு என்றும் இனிமை.கி.ரா வின் கோபல்ல கிராமம் அதற்கோர் இனிய எடுத்துகாட்டு.பொன்னு பெருவட்டரின் குழந்தை பிராயமும்,இளமை காலங்களும் விவரிக்கப்படும் பெரும் துன்பம் நிறைந்தவை.வாழ வழியின்றி பிழைப்பு தேடி வேறு ஊருக்கு செல்லும் பொன்னு பெருவட்டார் குடும்பம் அடிமை வாழ்கைக்கு பணிகிறது.தனது காலத்தில் பெரும் முதலாளி ஒருவரிடம் தரிசான கரடு நிலைத்தை இனாமாக பெற்று தம் கூட்டத்தாரோடு பெரும் முயற்சி கொண்டு அதை விளைநிலமாக மாற்றுகிறார்.பின்பு அந்நிலமே பெரும் ரப்பர் காடாக மாறி அவரை செல்வந்தர் ஆக்குகின்றது.

பொன்னு பெருவட்டரின் குணாதிசயங்கள் ஒரு முரட்டு முதலாளிக்கே உரியது.எப்பொழுதும் கோவம் கொண்டு,வேலையாட்களை துச்சமாக மதித்து,முடிந்த வரை தன்னிடம் வேலை செய்யும் கூலிகளை ஏமாற்றி செல்வம் சேர்கிறார்.தனது மூத்த மகனோடும் மருமகலோடும் இருக்கும் பெருவட்டார் தன் இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் நாட்களில் கதை நகர்கிறது.அவரின் கடந்த காலங்கள் யாவும் இடைஇடையே சொல்ல படுகின்றது.

பெருவட்டரின் மகன் அரசியல் மோசடியால் பெரும் தொகையை இழந்து,தனது ரப்பர் காடுகளை விற்கும் நிலைக்கு தள்ளபடுகிறார்,அவரின் மனைவி பெருவட்டதி ஆடம்பர மோகம் கொண்டு எதார்த்த வாழ்வில் நாட்டம் இன்றி திரியும் சராசரி பணம்படைத்த பெண்.பெருவட்டதியின் இளைமைகால வர்ணனைகள் அவளின் இப்பொழுதைய நிலைக்கு முக்கிய காரணமாய் சொல்லப்படுகின்றது.




பொன்னு பெருவட்டருக்கு இரண்டு பேரன்கள் லிவி மற்றும் திரேஸ்.பொறியியல் படிக்கும் லிவி சராசரி இளைஞன்,எதிலும் நாட்டம் இல்லாது பெருவட்டரை தொல்லை என நினைக்கிறான்.திரேஸ் ஊதாரியாக,பெரும் குடிகாரனாக படிப்பை பாதியில் விட்டு யாவரின் வெறுப்பிற்கும் ஆளாகிறான்.ஆனால் திரேசின் மீது பொன்னு பெருவட்டருக்கு எப்பொழுதும் ஒரு தனி பிரியம் இருக்கின்றது.ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் யாவரும் ஒவ்வொரு குணம் கொண்டு,பணம் ஒன்றினையே குறிகோளாய் கொண்டு ஆடம்பர வாழ்வின் மிதப்பில் இறுதியில் யாவற்றையும் இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

இரவு பகல் பாராது உழைத்து சேர்ந்த பெருவட்டரின் சொத்து யாவும் அவரின் தலைமுறையினரால் ஒன்றும் இன்றி ஆகிறது.மூத்தோர் நமக்கு அளித்த செல்வம் அது பணமோ,நிலமோ,நல்ல குணநலன்களோ,குடும்ப மதிப்போ எதுவாயினும் அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்த்தும் இந்நாவலின் மொழியாடல் நாகர்கோவில் பகுதி தமிழ் நடையில் உள்ளது.இந்நாவல் முற்றிலும் ஒரு வித்தியாச வாசிப்பு அனுபவமே.

18 comments:

narsim said...

ரப்பர்.. இதில் வரும் சொல்லாடல்களும் கோர்வையும் மிக நெருக்கமாய் பதியப்பட்ட ஒன்று..

நல்ல பதிவு தோழி..

நர்சிம்

லேகா said...

Nandri Narsim :-)

Jags said...

வைரமுத்து கருவாச்சி காவியத்தில், "மூன்று தலைமுறையாய் நன்றாக வாழ்ந்த குடும்பமும் இல்லை, மூன்று தலைமுறையாய் நொதிந்த குடும்பமும் இல்லை" என்கிறார். உண்மைதான் போலும்.

//அதிக நீரை உறிஞ்சி,நெடுக வளர்ந்து நிற்கும் ரப்பர் மரங்கள் ரப்பர் பாலிற்காக அறுபட்டு,பெரும் காயங்களோடு இறுதி காலத்தை கடப்பவை,அது போலவே...//

ரப்பர் நான் முன் படிதிருந்தபோதும், அந்த தலைப்புக்கான காரணம் இன்றுதான் யோசித்தேன் - உங்கள் விளக்கத்தின் மூலமாக..

நல்ல பதிவு ..வாழ்த்துக்கள்..

Krishnan said...

I went to AnyIndian book shop today, it seems Rubber is out of print :-( I bought Vannadasan's Krishnan Vaitha Veedu and Kaadugal by M V Venkatram. Again the shop did not have on hand other works of Vannadasan and Vannanilavan but helpfully the person in charge said he will help procure them.

லேகா said...

Tnx Jags :-))

லேகா said...

Hi Krishnan!!

Nice to hear from you.
I have never been to anyindian bookshop,heard from frds tat it got good collection og books.Now a days its hard to get vannadasan and vannanilavan books.try out in land mark(Spencers)- whole of vannadasan's short story collection(Vannadasan sirukathaigal) is available there,just chk out whether it ster now!!

Krishnan said...

Hi Lekha, it is me again. Today The Hindu in Friday Review features an article on Vannanilavan, I am not able to give you a link. I hope you get to read it. Let me give you an extract:

He should be given an award for refusing awards.....he craves anonymity.

Krishnan said...

Update! here is the link:

http://www.nhm.in/blog/news/2008/09/mirror-to-human-nature-hindu-120908.html

லேகா said...

Hi Krishnan,

Thanks for this update.I am very happy that u r this much interested in reading Vannadasan & vannanilavan,i am a die hard fan of both of them.


Didnt you get Vannanilavan's "Kamba Nathi" in anyindian bookshop?? i have seen the book avail in their website.

Wait for the Chennai book exhibition,surely u will b getting the books of them! :-)))

லேகா said...

Read the Article on Vannadasan,excellent one!!Tnx Krishnan :-))

Bala said...

Good to know your readings...ended up here searching for amelie

treasured_creatives said...

Ultra Tamil Chauvenism it seems.... Let others who don't know how to read your language read and appreciate what you have to say...

லேகா said...

Tnx Bala & Sahasi :-)

senthil said...

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

லேகா said...

@ Senthil

Tnx :-))

தியாகு said...

Hi Leha,

I read the Rubber novel couple of weeks ago, It was not "Thrase" who is Mr.Ponnu's elder grand son I guess. "Thrase" is the name of his daughter in law. If I remeber correctly, it is "Francis" I guess.

I am writing this from my memory, lended the book to somebody so can't cross check. Correct me if I am wrong.

தியாகு said...

Hi Leha,

I read the Rubber novel couple of weeks ago, It was not "Thrase" who is Mr.Ponnu's elder grand son I guess. "Thrase" is the name of his daughter in law. If I remeber correctly, it is "Francis" I guess.

I am writing this from my memory, lended the book to somebody so can't cross check. Correct me if I am wrong.

Costal Demon said...

நல்ல நாவல். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு சிறிய திருத்தம். பெருவட்டரின் பேரன்கள் லிவியும், பிரான்ஸிசும். திரேஸ் அவரது மருமகள்.