Monday, September 6, 2010

அகிராவின் "RASHOMON"

"Japan does not understand very well that one of its proudest cultural achievements is in film" - Akira Kurosawa


எந்த திரைப்படத்தையும் இத்தனை நுணுக்கமாய் இதற்கு முன்னர் நான் அணுகியதில்லை.பார்வையாளனுக்கு நேரடியாவும்,மறைமுகமாகவும் தன் படங்களின்
மூலம் முழுமையான சினிமாவை குறித்த அத்தனை நேர்த்திகளையும் அகிரோ கற்பிப்பதாகவே தோன்றியது.ஒரு கொலையை பல்வேறு கோணங்களில் அணுகி இருக்கும் இத்திரைப்படம் முடிவை பார்வையாளன் வசம் விட்டுவிடுகின்றது.சூழ்நிலையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சுயநலமாய் மாறிப்போக தயங்காதது மனித மனங்கள் என உணர்த்துவதான கதை.இசையும்,ஒளிப்பதிவும்,காமிரா கோணங்களும் காட்சிகளுக்கு மேலும் அர்த்தம் கூட்டுகின்றன.

பெருமழை நேரத்தில்,சிதைந்த கட்டிடம் ஒன்றில் ஒரு துறவியும் விறகுவெட்டியும் தாம் நீதிமன்றத்திற்கு சாட்சியாய் போன ஒரு கொலை குறித்து அதிக மன அழுத்தத்தோடு புலம்பி கொண்டிருக்கும் காட்சியோடு படம் தொடங்குகின்றது.அவ்விடம் வரும் மூன்றாவது மனிதனிடம் தாங்கள் கூறிய சாட்சியத்தையும்,கேட்ட சாட்சியங்களையும் கூறுகின்றனர்.
மழையினால் காட்சிகளுக்கு இத்தனை அழுத்தம் கூட்ட முடியும் என முதல் முறை உணர செய்த படம் இது.

காட்டு வழி பயணம் மேற்கொள்ளும் சாமுராயை கொலை செய்து அவன் மனைவியை கற்பழித்து விட்டதாக பாண்டிட்(வழிப்பறி கொள்ளையன்) மீது நீதி மன்றத்தில் புகார் சொல்லபடுகின்றது.கொலைக்கான சாட்சியங்களான பாண்டிட்,சாமுராயின் மனைவி,சாமுராய்(ஆவி ஊடகம் மூலம் பெண்ணொருத்தியின் உடலில் புகுந்து சாட்சியம் சொல்லுகின்றான்) மற்றும் விறகுவெட்டி ஆகியோர் நீதி மன்றத்தில் தங்களின் சாட்சியத்தை சொல்லுகின்றனர்...ஒவ்வொருவரும் ஒரு விதமாய்.எதிலும் நம்பத்தன்மை இல்லை.இதில் பாண்டிட் அவள் மனமுவந்து தன்னோடு வர சம்மதித்து கணவனை கொலை செய்ய தூண்டியதாய் கூறுகின்றான்.அப்பெண்ணோ கணவனின் நிலையை பொறுக்க முடியாமல்,குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி பாண்டிட்டுடன் அவனை வாள் சண்டை இட சொன்னதாய் கூறுகிறாள்.சாமுராயின் ஆவி மனைவி மீது பலி சுமத்துகின்றது.கொலையை நேரில் கண்டதாக சொல்லும் விறகுவெட்டி நீதி மன்றத்தில் அதை முற்றிலுமாய் மறைக்கின்றான்.சாட்சியங்களும் யாவும் பார்வையாளனிடம் நேரடியாக பேசுகின்றன. விறகுவெட்டியும்,துறவியும் பிற சாட்சியங்களின் பொழுது பார்வையாளர்களாய் வீற்றிருக்கின்றனர்.எல்லா காட்சிகளும் திறந்த வானத்தின் கீழ் நடப்பதாகவே உள்ளன.நீதிமன்ற மற்றும் சாமுராயின் கொலை சம்பவ கடந்த கால காட்சிகள் வெயிலிலும்,இது குறித்து விறகுவெட்டியும்,துறவியும் வேதனையோடு உரையாடும் நிகழ கால காட்சிகள் மழையிலும் நிகழ்கின்றன.படத்தின் ஓட்டத்தில் இயற்கையும் பெரும்பங்கு வகிக்கின்றது.வன்மமும்,சுயநலமும்,பொய்யும்,பேராசையும் நிறைந்ததான கடந்த கால காட்சிகள் வெயிலின் உக்கிரம் கொண்டு உணர்த்தபடுகின்றன.அதற்கு முற்றிலும் எதிர்மறையாய் நிகழ கால காட்சிகள்,அன்பு நிறைந்த வாழ்க்கை குறித்து அதிக அக்கறை கொள்ளும் துறவி மற்றும் விறகு வெட்டியின் மனங்களை மழையினால் உணர்ந்துகின்றன.

சாமுராயின் கொலை குறித்தான மர்மம் கடைசி வரைக்கும் நீடிக்கின்றது.ஒவ்வொரு சாட்சியத்தின் கதையிலும் மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க முயன்று பார்வையாளன் தோற்கின்றான்,அதுவே அகிராவின் வெற்றி என தோன்றுகின்றது.அன்பு நிலைத்திருக்க சுயநலமும்,நேர்மையற்றதனமும் முற்றிலும் நீங்க வேண்டும் என்பதை கலை நேர்த்தியோடு சொல்லும் இத்திரைப்படம் தந்த பிரம்மிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. முழுமையானதொரு திரைப்படத்தை பார்த்த திருப்தி.

8 comments:

Unknown said...

எழுத்தாளர் பெயர் ஞாபகம் வரவில்லை. அவர் எழுதிய இரண்டு சிறுகதைகளின் கலவைதான் இந்த சிறுகதை. அந்த பாழடைந்த கட்டிடத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை மிக அருமையாக இருக்கும்.

ஆழி பதிப்பகம் இரண்டு சிறுகதைகளும், திரைக்கதையையும் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். அந்த சிறுகதையை அவசியம் வாசித்துப் பாருங்கள்.

http://aazhipublishers.com/node/82

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் லேகா.

என்ன இந்த வருடம் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது

Anonymous said...

3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html

லேகா said...

கிருஷ்ணா,

ரஷோமான் திரைப்படத்தின் திரைக்கதை புத்தகமா வெளிவந்து இருக்கா? பகிர்தலுக்கு நன்றி.
மேலும் எந்த சிறுகதைகள் குறித்து சொல்றிங்கன்னு புரில..

லேகா said...

நன்றி ராம்ஜி

எஸ்.கே said...

திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான படங்களில் ஒன்றான இதை விமர்சித்த தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். விமர்சனம் நன்றாக உள்ளது!

Anonymous said...

http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_16.html

Anonymous said...

Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

lekha forward the above link to persons you know who write in blogger...

(I'm not a regular blogger...the above link is too a dummy blog of me...i dont know whether you read the emails which I'm sending you along with other known writers)