Wednesday, May 19, 2010

பதின் வயது நினைவுகள்...

பதின் வயது நினைவுகளை மீட்டெடுக்கும் இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழர் ஜெயமார்த்தாண்டனுக்கு நன்றி.

பதின் வயது என்றெண்ணும் பொழுது....... அம்மாச்சி வீட்டில் கழித்த விடுமுறை நாட்கள்,பள்ளி நட்புகள்,சந்திரகாந்தா /மோக்லியுடனான ஞாயிறு காலைகள்,பல்லாங்குழி/ஆட்டம்,கல்லா-மண்ணா/தாயம்/கொக்கோ,அம்புலிமாமா-ராணி மிக்ஸ்,ஒலியும் ஒளியும்,பள்ளிக்கு தினமும் சென்று வந்த ரிக்சா பயணம்,பங்கு கொண்ட பேச்சு - கட்டுரை போட்டிகள்,பரிட்சைக்கு பயந்து தூங்காது கழித்த இரவுகள்,பிரியத்திற்குரிய ஆசிரியைகள்,ஏக்கமாய் இருந்த ரயில்பயணம்,கடலை காணும் பேராவல்,கிராமத்தில் கமலை கிணற்று குளியல்கள்,பட்டாசலை வாசலில் அமர்ந்து தாத்தாவிடம் பழங்கதைகள் பேசிய பொழுதுகள் என கலவையாக பலவும் நினைவிற்கு வந்து போகின்றன...மீண்டும் மீண்டும் பேசினாலும்/நினைத்தாலும் தீராத நாட்கள் அவை!!

படித்த பள்ளி..அம்மையும்,அம்மாச்சியும் படித்ததும் அங்கே தான்..முதல் நாளில் அதன் பிரம்மாண்ட தோற்றம் தந்த ஆச்சர்யம் விலக பல நாட்கள் பிடித்தது.ஆங்கிலேய காலத்து கட்டிடங்கள்,ஓங்கி வளர்ந்த மரங்கள்,பரந்த மைதானங்கள்,கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்கள்,சேல்ஸ் டே என வீட்டு பாடம்,கண்டிப்பான ஆசிரியைகள் தாண்டி பள்ளி நாட்கள் பிடித்து போக அனேக காரணங்கள் இருந்தன.பள்ளி தந்த நட்புகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன....மழை ஓய்ந்த ஒரு மாலையில் கூடை பந்து மைதானத்தில் சைக்கிளில் வட்டமடித்தபடி பிரிவை குறித்து பேசிகொண்டிருந்தேன் தோழிகள் இருவரோடு ....ஆச்சர்யமாய் இப்போது மூவருமே ஒரே பணியிடத்தில்.இப்பொழுதும் மழை நாட்களில் என் பள்ளியை நினைத்து கொள்வேன்,சில இடங்களை மழையோடு பொருத்தி பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை!!

மனோகரன் அண்ணா,தல்லாகுள வீதிகளில் எங்கே இடர்பட்டாலும் பெரிதாய் புன்னகைப்பார்..சட்டென,ரிக்சா 8:௦௦ மணிக்கு என பரபரத்த காலை பொழுதுகள் நினைவிற்கு வந்து மறையும்.ஒவ்வொரு வருடமும் நோட்டு/புத்தகங்களுக்கு அட்டை போட்டு லேபிளில் எழுதும் பொழுது, அப்பா "ம்ம்ம்..சார் பெரிய கிளாஸ் போறிங்களா" என சொல்லி கொண்டே தன் அழகிய கையெழுத்தில் பெயர்,வகுப்பு எழுதி தந்தது நேற்றைய நிகழ்வு போல உள்ளது...





விடுமுறை நாட்களை கழிக்க எப்போதும் எனக்கு இரண்டு சாய்ஸ் உண்டு.அம்மாச்சி வீடு அல்லது அப்பாவின் கிராமம்...அம்மாச்சி.பெரியம்மாக்கள் எல்லாரும் ஆசிரியர்கள் என்பதாலோ ஒரு வித மிலிட்டரி தனமான ஒழுங்கு முறை விடுமுறை நாட்களிலும்...நேரத்திற்கு சாப்பாடு,குளியல்,நிழலில் மட்டுமே விளையாட வேண்டும் என்று..இதற்கு தலைகீழாய் எங்கள் கிராமத்தில் தாத்தா பாட்டி உடன் கழித்த பொழுதுகள்,பேருந்து வசதியற்ற அன்றைய நாட்களில் பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து நடந்தே எங்கள் ஊருக்கு செல்வோம்..வீட்டை சென்றடைய எந்நேரம் ஆனாலும் பாட்டியை தேடி வயற்காட்டிற்கு ஓடி விடுவேன்..வாழை தோட்டத்திலோ,கடலை காட்டிலோ,தென்னந்தோப்பிலோ.....தேடி சென்று கட்டிக்கொள்வதில் ஒரு அலாதி பிரியம்!!

அங்கு தங்குதடைகள் எதுவும் இல்லை..புழுதி காட்டில் ஆடி திரியலாம்..பம்ப் செட்டில் குளித்து மகிழலாம்..மாலையானால் மந்தையில் பிள்ளைகளோடு விளையாடலாம்..... வளையல் வியாபாரிகள்,குச்சிஐஸ் வண்டிக்காரர்,பருத்திப்பால் வியாபாரிகள் என சில்லறை செலவு செய்ய காரணமானவர்கள் நிறைய..!!மாலை நேரங்களில் ஆட்கள் நிரம்பி சலசலவென இருக்கும் பட்டாசலையில்,அமைதியான பகல் பொழுதுகளில் அமர்ந்து தெருவை..அரிதாய் வரும் இரண்டொரு வியாபாரிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் கூட அன்றைய பொழுதுகளில் சுவாரஸ்யமே!!

தொலைகாட்சியின் ஆதிக்கம் இப்போது போல 90களில் இல்லாத காரணத்தினால் இயல்பாய் கவனம் வாசிப்பின் பக்கம் சென்றதில் வியப்பில்லை.சிறுவர்மலர்,அம்புலி மாமா,ராணி காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி,சிந்துபாத் கதைகள்,அரேபியன் நைட்ஸ்,ஈசாப் நீதி கதைகள்,தெனாலி ராமன்,பீர்பால் என விடுமுறை நேர பகல் பொழுதுகள் கற்பனைகள் நிறைந்ததாகவே கழிந்தன.வெள்ளி இரவு ஒலியும் ஒளியும்,ஞாயிறு காலை மோக்லி,சந்திரகாந்தா ..மற்றும் இரவு தந்தூரி நைட்ஸ்,ஓஷின்(வெகுவாய் ரசித்த தொடர் இது..),ஸ்ட்ரீட் ஹாக் என குழப்பிக்கொள்ள அதிகம் இல்லாது தொலைகாட்சியோடு கழிந்த பொழுதுகள்..தீவிர வாசிப்பும்,ராஜாவின் இசை மீதான கிறுக்கும் தொற்றிகொண்டது பதின்மங்களில் இறுதியில்.

பதின்மன் காலம் குறித்து யோசிக்க யோசிக்க மீண்டும் அதனுள் புகுந்து விடமுடியாதா என ஏக்கமே மிஞ்சுகின்றது..சுழட்டி அடிக்கும் எந்திர வாழ்க்கைக்குள் புகுந்தாகி விட்டது. இப்பெருநகர சிடுக்கில் தொடர்ந்து இயங்க நினைவுகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.அவ்வகையில் கீழ் உள்ள வண்ணதாசனின் வரிகள் அர்த்தம் மிகுந்ததாய் படுகின்றன.

"இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது"

-- வண்ணதாசன்


பதின்மன் கால நினைவுகளை தொடர நர்சிம்மை அழைக்கின்றேன்

30 comments:

கா.பழனியப்பன் said...

// சுழட்டி அடிக்கும் எந்திர வாழ்க்கைக்குள் புகுந்தாகி விட்டது. இப்பெருநகர சிடுக்கில் தொடர்ந்து இயங்க நினைவுகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன. //

உண்மைதாங்க.
எனக்கும் என் அம்மாச்சி வீடு நினைவுக்கு வந்து விட்டது.

ராம்ஜி_யாஹூ said...

அருமை லேகா. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

தல்லாகுளம், வடக்கு வெளி வீதி, அரசரடி போன்ற இடங்களை நினைக்கயிலேயே மகிழ்ச்சி ஏற்படுகிறது.

மதுரையில் காலை எழு மணி முதல எட்டு அரை மணி வரை பள்ளிக் குழந்தைகளை ரிக்ஷாவிலும், இட்லி, தோசை மாவு கடைகளில் காணும் பொழுதும் ஏற்படும் உத்வேகம் ஒரு தனி அனுபவம்.

அடுத்து கல்லூரி, வேலை அலுவலகம் அனுபவம் குறித்தும் எழுதுங்களேன்.

பாலராஜன்கீதா said...

//பதின்மன் காலம் குறித்து யோசிக்க யோசிக்க மீண்டும் அதனுள் புகுந்து விடமுடியாதா என ஏக்கமே மிஞ்சுகின்றது..சுழட்டி அடிக்கும் எந்திர வாழ்க்கைக்குள் புகுந்தாகி விட்டது. இப்பெருநகர சிடுக்கில் தொடர்ந்து இயங்க நினைவுகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.//
இங்கேயும் அவைதாம்.

yEsKaY said...

கீழ் கண்ட அனைத்தும் ,அக்காலங்களில் எனக்கும் நேர்ந்தவை .......
// சந்திரகாந்தா /மோக்லியுடனான ஞாயிறு காலைகள்,ஸ்ட்ரீட் ஹாக் ,சிறுவர்மலர்,அம்புலி மாமா,ராணி காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி,சிந்துபாத் கதைகள்,ராஜாவின் இசை மீதான கிறுக்கு //
உங்களின் இந்த பதிவு , என்னை போன்ற பலரது நினைவுகளை புரட்டி போட்டிருக்கும் !
உயிரோட்டமான இந்த அருமையான பதிவிற்கு நன்றி ..லேகா !! :)

yEsKaY said...

குறிப்பிட மறந்து விட்டேன் !!! அந்த நவீன ஓவியம் மிக அருமை (மற்றும் உங்களது ..பிற பதிவுகளில் இருக்கும் ஓவியங்களையும் மிகவும் ரசித்தேன் ...நன்றி !!!)

Radhakrishnan said...

இது போன்று பலர் எழுதுவதைப் படிக்கும்போது சில நேரங்களில் சொந்த கிராமத்துக்கேச் சென்று விடலாமா எனும் ஏக்கம் மனதை அப்பிக் கொள்கிறது. சின்னதாய் தத்தளிப்பு மனதில் வந்துவிடுகிறது. மதுரையில் படித்த காலங்களில் மனம் விட்டு அகலாத பல நினைவுகளை உங்கள் இடுகை நினைவுபடுத்தியது. மிக்க நன்றி.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

ஒரு பத்து,இருபது வருடங்ளூக்கு முன்பு வாழ்ந்த எல்லோருடைய வாழ்வின் சாரமாக இருக்கிறது உங்கள் எழுத்து.(நம் குழந்தைகளுக்கு இப்படியோரு வாழ்வு கிடைக்காது என்ற சோகமும் அடி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.)
அருமையான பதிவு. நன்றியும்,வாழ்த்துக்களும்.

Mugilan said...

//தொலைகாட்சியின் ஆதிக்கம் இப்போது போல 90களில் இல்லாத காரணத்தினால் இயல்பாய் கவனம் வாசிப்பின் பக்கம் சென்றதில் வியப்பில்//

உண்மைதாங்க!

Haripandi Rengasamy said...

நானும், என் அம்மாச்சி வீடு இருந்த தல்லாகுள பகுதிகளில் சுற்றித் திரிந்த காலம் ஞாபகம் வருகின்றன ... தல்லாகுள நடுத்தெருவை தாண்டாமல் இருக்க என் அம்மாச்சி வீட்டில் கூறிய "பெருமாள் கோவில் மாடு முட்டிரும்னு " குர்த நினைத்தால் இப்பொழுது சிரிக்காமல் இருக்க முடியவில்லை ...

நர்சிம் said...

//அடுத்து கல்லூரி, வேலை அலுவலகம் அனுபவம் குறித்தும் எழுதுங்களேன்//


ஆம் லேகா.. திரு ராம்ஜியாஹூ கூறுவது போல நீங்கள் எழுதி ஆக வேண்டும். ஆவலோடு காத்திருக்கிறோம். ..

ராம்ஜியின் பின்னூட்டம் மதுரையை கண்முன் நிறுத்தியது. சரஸ்வதியின் சபதம் படத்தில் சிவாஜிக்கு வாய்பேச இயலாதபோது சரஸ்வதி தேவி சிவாஜியின் நாக்கில் தடவியவுடன்..அம்ம்ம்..மா என சிவாஜி சொல்லும்பொழுது ஏற்படும் ஒரு உணர்வு எழுச்சி இவரின் பின்னூட்டம் கண்டதும் எழுகிறது என்றால் அது மிகையில்லை.. ;)

*****

நர்சிம் said...

பதின்ம வயது குறித்த பதிவில் அம்மா குறித்த ஏதும் இல்லாதது ஆச்சர்யமாய் இருக்கிறது. யோலியோக்ஸ் சொன்னது போல பெண்பிள்ளைகளின் ஆதர்சம் தந்தை மட்டுமே என்பதுவும் காரணமாய் இருக்கலாம்.

*****

தொடர என்னை அழைத்ததற்கு நன்றி லேகா.. எல்லாவற்றையும் நீங்கள் எழுதிய பிறகு என்னத்தத் தொடர? என்றாலும் முயற்சிக்கிறேன்.

நன்றி

Anonymous said...

hi,

subject: do u want to display only post titles instead of showing both post titles and its content in your blogger?

எஸ்.ராமகிருஷ்ணனின் இணையதளத்தை பாருங்கள். அவருடைய அத்தனை post titlesகளும் post titlesகளாக மட்டுமே displayஆகியுள்ளன.Post titlesகளுக்குரிய கட்டுரைகளும்(content) post titlesக‌ளோடு சேர்ந்து அவரின் இணையதளத்தில் display ஆகியிருக்கவில்லை. ஒரு பக்கத்திற்கு 50 post titlesகள் அவருடைய இணையதளத்தில் display ஆகின்றன. இதனால் வாசககள் மிக விரைவாக அவருடைய இணையதளத்தில் அத்தனை post titlesகளையும் பார்த்து விடுகிறார்கள். தங்களுக்கு விருப்பமான post titleளின் தலைப்பை click செய்து அத்தலைப்பிற்குரிய கட்டுரையை படிக்கிறார்கள்.


உங்கள் blogல் post titleகளோடு சேர்த்து அப்post titlesகளுக்குரிய‌ contentஉம் சேர்ந்து display
ஆகின்றன. இதை மாற்ற விரும்புகிறீர்களா? Post titlesகள் மட்டும் உங்கள் bloggerல் displayஆக வேண்டும் என விரும்புகிறீர்களா?



அப்படி என்றால் இந்த இணையதளத்தில் http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html சொல்லப்பட்டுள்ளவற்றை அப்படியே follow செய்யுங்கள். அதன் பின் உங்கள் பிளாகில் அத்தனை post titlesகளும் post titlesகளாக மட்டுமே display ஆகும். Post titleஐ click செய்தால் மட்டுமே அதனுடைய content display ஆகும்.



(பின்குறிப்பு: நான் என் model பிளாகில் post titlesகள் மட்டுமே display ஆகும்படி மாற்றியுள்ளேன். இதன் மூலம் ஒரு பக்கத்தில் 50 post titlesகள் வரை display ஆகும்படி set செய்திருக்கிறேன். இது மிகவும் user friendlyயானது. பார்க்கவும் என் மாடல் blogஐ http://justchuma.blogspot.com/ FORWARD THIS MESSAGE TO YOUR FRIENDS WHO USE BLOGGER)......

KARTHIK said...

// ராம்ஜியின் பின்னூட்டம் மதுரையை கண்முன் நிறுத்தியது. சரஸ்வதியின் சபதம் படத்தில் சிவாஜிக்கு வாய்பேச இயலாதபோது சரஸ்வதி தேவி சிவாஜியின் நாக்கில் தடவியவுடன்..அம்ம்ம்..மா என சிவாஜி சொல்லும்பொழுது ஏற்படும் ஒரு உணர்வு எழுச்சி இவரின் பின்னூட்டம் கண்டதும் எழுகிறது என்றால் அது மிகையில்லை.. ;) //

சேம் பிளட் தல :-))

இங்கைனு இல்லைங்க எல்லா இடத்திலையும் இவர் பின்னூட்டத்த தேடித்தேடி படிப்பேன் :-))
--
குப்பன்ஜீ ரசிகன்.

லேகா said...

நன்றி பழனியப்பன்

நன்றி ராம்ஜி :-))

நன்றி எஸ்கே

நன்றி பாலராஜன்கீதா

நன்றி ராதாகிருஷ்ணன்

அழைப்பிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெயமார்தாண்டன் :-)

நன்றி முகிலன்

நன்றி ஹரி

லேகா said...

@ நர்சிம்,

//பதின்ம வயது குறித்த பதிவில் அம்மா குறித்த ஏதும் இல்லாதது ஆச்சர்யமாய் இருக்கிறது. யோலியோக்ஸ் சொன்னது போல பெண்பிள்ளைகளின் ஆதர்சம் தந்தை மட்டுமே என்பதுவும் காரணமாய் இருக்கலாம்//

ஏன்...:-)?? வீட்ல ஏற்கனவே இத வச்சு பெரிய பூகம்பம் இப்போ தான் ஒஞ்சிருக்கு:-)
அம்மாவுடனான பிரிய தருணங்கள் குறித்து தனி பதிவே எழுதலாம்....எழுதுவேன்!!

//சரஸ்வதியின் சபதம் படத்தில் சிவாஜிக்கு வாய்பேச இயலாதபோது சரஸ்வதி தேவி சிவாஜியின் நாக்கில் தடவியவுடன்..அம்ம்ம்..மா என சிவாஜி சொல்லும்பொழுது ஏற்படும் ஒரு உணர்வு எழுச்சி இவரின் பின்னூட்டம் கண்டதும் எழுகிறது என்றால் அது மிகையில்லை.. ;)//

:-))))))))))))))))))))))))))))))))

லேகா said...

@கார்த்திக்

:-)))))

Calvin said...

அருமையான பதிவு.வெளியூரில் தங்கி இருக்கும் எங்களைப்போன்றவர்களுக்கு ,எதிர்பாராவிதமாக நம்மூர்க்காரர்களை சந்தித்தால் உள் மனசில் ஒரு உற்சாகம் பீறிடுமே, அது போல் இருந்தது. நன்றி.

Ahamed irshad said...

அருமையான பகிர்வு...நல்லாயிருக்கு லேகா..

தமிழன்-கறுப்பி... said...

nice...

பல நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன், வாழ்த்துக்கள் லேகா சுஜாதா விருதுக்கும்.

கோபி..., said...

உயிர்மை விருது பெற்றதற்கு என் வாழ்த்துக்கள் ..

கபிலன் said...

உங்களின் வலைதள அறிமுகம்
எனக்கு தற்போதுதான் வாய்த்தது. அருமையான பகிர்வு லேகா.
வாழ்த்துக்கள் பல.
உங்களின் ரசனைகளின் தொகுப்பை
வாசிக்க தொடங்கி இருக்கிறேன். நன்றி.

மதுரை முடிவில்லா ரசனைகளின் பெட்டகம்.நாம் எல்லோரும் தம் பதின் வயதுகளின், அவரவர்
சொந்த ஊர்களின் சிலிர்ப்பூட்டும் கணங்கள்,கதைகளை இரத்தின பொதிகளாய் சுமந்து திரிகிறோம்.
மதுரை பாக்கியம் பெற்றது. லேகா மற்றும் நரசிம் வழியில்.
மேம்போக்கான பெருநகர வாசிகள் துரதிஷ்டசாலிகளே.

senthilkumar said...

தொலைகாட்சியின் ஆதிக்கம் இப்போது போல 90களில் இல்லாத காரணத்தினால் இயல்பாய் கவனம் வாசிப்பின் பக்கம் சென்றதில் வியப்பில்லை.சிறுவர்மலர்,அம்புலி மாமா,ராணி காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி,சிந்துபாத் கதைகள்,அரேபியன் நைட்ஸ்,ஈசாப் நீதி கதைகள்,தெனாலி ராமன்,பீர்பால் என விடுமுறை நேர பகல் பொழுதுகள் கற்பனைகள் நிறைந்ததாகவே கழிந்தன.வெள்ளி இரவு ஒலியும் ஒளியும்,ஞாயிறு காலை மோக்லி,சந்திரகாந்தா ..மற்றும் இரவு தந்தூரி நைட்ஸ்,ஓஷின்(வெகுவாய் ரசித்த தொடர் இது..),ஸ்ட்ரீட் ஹாக் என குழப்பிக்கொள்ள அதிகம் இல்லாது தொலைகாட்சியோடு கழிந்த பொழுதுகள்..தீவிர வாசிப்பும்,ராஜாவின் இசை மீதான கிறுக்கும் தொற்றிகொண்டது
its recollect me past experience life in madurai thank u

Anonymous said...

தொலைகாட்சியின் ஆதிக்கம் இப்போது போல 90களில் இல்லாத காரணத்தினால் இயல்பாய் கவனம் வாசிப்பின் பக்கம் சென்றதில் வியப்பில்லை.சிறுவர்மலர்,அம்புலி மாமா,ராணி காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி,சிந்துபாத் கதைகள்,அரேபியன் நைட்ஸ்,ஈசாப் நீதி கதைகள்,தெனாலி ராமன்,பீர்பால் என விடுமுறை நேர பகல் பொழுதுகள் கற்பனைகள் நிறைந்ததாகவே கழிந்தன.வெள்ளி இரவு ஒலியும் ஒளியும்,ஞாயிறு காலை மோக்லி,சந்திரகாந்தா ..மற்றும் இரவு தந்தூரி நைட்ஸ்,ஓஷின்(வெகுவாய் ரசித்த தொடர் இது..),ஸ்ட்ரீட் ஹாக் என குழப்பிக்கொள்ள அதிகம் இல்லாது தொலைகாட்சியோடு கழிந்த பொழுதுகள்..தீவிர வாசிப்பும்,ராஜாவின் இசை மீதான கிறுக்கும் தொற்றிகொண்டது this part recollects me past experience life in madurai

லேகா said...

நன்றி கால்வின்

நன்றி இர்ஷாத்

நன்றி தமிழன் கறுப்பி :-)

நன்றி கோபி

நன்றி செந்தில் குமார்

AkashSankar said...

//சந்திரகாந்தா /மோக்லியுடனான ஞாயிறு காலைகள்,பல்லாங்குழி/ஆட்டம்,கல்லா-மண்ணா/தாயம்/கொக்கோ,அம்புலிமாமா-ராணி மிக்ஸ்,ஒலியும் ஒளியும்,//

எல்லாத்தையும் ஞாபகப்படுத்தீடீங்க...

Dhanaraj said...

About Madurai, anything is worth remembering.

Also the holidays in grand parents' house is a fantastic experience. This is the best experience that will be missed by the present generation.

Also, I hope that today's children know about the Comics Characters such as Phantom, Modesthy, Maayavi, etc.

hariprasad said...

Oru Time machine iruntha romba nalla irukkum! illa lekha!

Antha vazhkaiya marubadiyum vazhnthu pakkra mathiri irunthathu unnoda blog!

Namma school life time'la ammachi vidu mathiri oru sorgam enngayume irukkathu! Oru vagaila enakku ammachi vidu pudikka karanam anga kandikka yarum irukka matanngaa! :)
Mathavangalukku eppdinu theriyala!

Innum palla blogs engalai magizhvikka varum nabikkaiyodu, Vidaiperukiren!

Nandri,
Hariprasad

இனியாள் said...

லேகா வெகு நாட்களாய் எதுவுமே எழுதவில்லையே....

Unknown said...

puthiyavatrai thedukiren ungal blogil...

KARTHIK said...

என்னாச்சு உங்களையே நம்பி இருக்குர 229 பாலோயர்ஸ் மற்றும் 377 ரீடர்ல படிக்குரவிங்களுக்கு நீங்க என்ன சொல்லப்போரிங்க :-))