Sunday, November 15, 2009

மழை... இசை..ஒரு தூர பயணம்!!

மழை..!!!எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு மழை குறித்து அதிகமாய் நண்பர்களிடம் பேசுகின்றேன்..மழையை வெறுக்க போதுமான காரணங்கள் சென்னையில் இருப்பினும் அது தரும் மகிழ்ச்சியும் நிறைவும் தவிர்க்க முடியாதது.மழையை சில இடங்களோடு பொருத்தி பார்க்க மிகவும் பிடிக்கும்.மதுரையில் பரந்து விரிந்து இருக்கும், 100 ஆண்டுகள் பழமையான எனது பள்ளி, மழை நாட்களில் இன்னும் அழகாய் இருப்பதாய் தோன்றும்..பெருமழை பொழுதில் மந்தையில் இருந்து அடித்து வரும் மழைநீரானது எங்கள் கிராமத்தின் ஆள் அரவம் அற்ற நடுவீதியில் செல்லும் காட்சி,அழகர் மலை காற்றோடு அடிக்கும் சாரல்,மழை..சாரல் என்றதும் நினைவிற்கு வரும் குற்றாலம்,சாரல் பொழுதில் செல்லும் மின்சார ரயில் பயணம்..மஞ்சள் வெயிலோடு பெய்யும் மழை...வேனிற்கால தூரல்கள் எழுப்பும் மண்வாசனை.....என.




கடந்த வாரத்தில் ஒரு மழை நாளில் மதுரைக்கு அருகில் இருக்கும் அணைப்பட்டிக்கு செல்வதென திடீரென முடிவு செய்து மூவரும் புறப்பட்டோம்.பெருமழையின் பொழுது வயல்வெளிகளில் பயணம் செய்வது அதுவே முதல் முறை.சோழவந்தான்,வாடிப்பட்டி வழியே மட்டபாறை,கரட்டுப்பட்டி கிராமங்களை கடந்து, இன்னும் இன்னும் என மழையை ரசித்த படி சென்றது மறக்கமுடியாதது.அணைபட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அப்பகுதியில் பிரசித்தம்..அம்மாவிற்கு விருப்பமானது.வைகையில் நீரை எதிர்பார்த்து சென்றது மட்டும் வீணானது..இருப்பினும் மழை காட்சிகள் அந்த குறையை மறக்கடித்துவிட்டன.


கொட்டும் மழையில் செம்மண் காட்டிற்கு நடுவே பார்த்த கிடை மாடுகள் கூட்டம்!!ம்ம்.....அப்பாவிற்கு பிடித்தமான காட்சி அது.அரிதான காட்சியும் கூட..இனிமையான மணியோசையோடு கூட்டமாய் வயல்வெளிகளில் திரியும் கிடை மாடுகள் குறித்த தனது பள்ளி கால நினைவுகளை அப்பா சொல்லி கேட்டதுண்டு..அடுத்த தலைமுறைக்கு செய்தியாய் மட்டுமே சென்றடைய போகும் விஷயங்களில் இதுவும் ஒன்று.கரட்டு காட்டில் பெய்த மழை நீரானது ..வழியெங்கும் ஓடையில்..வாய்காலில்....ஏன் வழியெங்கும் குண்டும் குழியுமான சாலைகளில் கூட வழிந்தோடியது அழகாய்!!"இன்னும் என்னை
வெகு தூரம் கூட்டி செல்லடி........" என ராஜாவின் இசையில் மயங்கியபடி சென்று வந்த இந்த பயணம் சில மணி நேரமே என்றாலும் அது தந்த உற்சாகம் சொல்லில் அடங்காதது.





சமீபத்தில் எங்கோ கண்ட மழை குறித்தான இந்த வாசகம் "If someone tells sunshine brings happiness,then they might not hav danced in the rain" எவ்வளவு உண்மை என தோன்றியது.மீண்டும் சென்னை வந்து எந்திர சுழற்சியில் உள்புகுந்தாகிவிட்டது!! "ஆதவன் பார்த்தாச்சா","Q3 ரிசல்ட் நல்லா இருக்காமே " வகையறா உரையாடல்களுக்கு மத்தியில்..மீண்டும் மீண்டும் அணைபட்டியில் எடுத்த புகைப்படங்களை புரட்டி கொண்டிருக்கின்றேன்..மழையின் ஈரம் அதில் கொஞ்சமேனும் மிச்சமிருக்கும் என்கிற நம்பிக்கையில்!!

26 comments:

கே.என்.சிவராமன் said...

க்ளாஸ்...

இதுமாதிரியான உணர்வு இடுகைகளையும் அப்பப்ப எழுதுங்க...

சரி, 'ஆதவன்' பார்த்தாச்சா? :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்.

லேகா said...

நன்றி சிவராமன்..

ஹா ஹா..நீங்க வேற!!அது போன்ற தவறெல்லாம் செய்ய மாட்டேன்!!

அ.மு.செய்யது said...

ர‌ச‌னைக்குரிய‌ ப‌திவு லேகா..திரும்ப‌த் திரும்ப‌ வாசிக்க‌த் தூண்டுகிற‌து எழுத்துக்கள்.

இருந்தாலும் ந‌க‌ர‌த்தில் ம‌ழையை ர‌சிக்க‌ முடியாதென்று யார் சொன்ன‌து ??

இந்த வார‌ வ‌லைச்ச‌ர‌ ப‌திவில் நீங்க‌ளும் இருக்கிறீர்க‌ள்.நேர‌ம் கிடைக்கும் போது
பார்க்க‌வும்.

Unknown said...

நீங்களும் மழை ரசிகையா? நல்லா இருந்துச்சு படிக்க.

/-- ஹா ஹா..நீங்க வேற!!அது போன்ற தவறெல்லாம் செய்ய மாட்டேன்!! --/

குபீர்னு சிரிப்பு வந்தது இந்த கமெண்டை படித்ததும்.

லேகா said...

நன்றி கிருஷ்ணன் பிரபு.
ம்ம்..ஆமாம் மழையின் ரசிகை தான்!!மழை...... ஒவ்வொரு சமயமும் ஏதோ ஒரு நிறைவை விட்டு செல்கின்றது மனதோடு !!

சூர்யா வித்தியாச முயற்சிகளில் இறங்கி வேறு வடிவம் பெறுவார் என நினைத்திருந்தேன்..
அவரோ விஜய்யை பின்பற்ற தொடங்கி விட்டார்..பிழைக்க தெரிந்தவர் வேறென்ன சொல்ல!!
கே.எஸ்.ஆர் படங்கள் என்றாலே ஒரு அலர்ஜி...கமர்சியல் குப்பை!!

லேகா said...

நன்றி செய்யது!!
நகரத்தில் மழையை ரசிக்க முடியாது என சொல்லவில்லை...அலுவலகத்தில் இருக்கும் சமயம் மழை வந்தால்..ஜன்னல் ஓரம் லயித்து விடுவேன்!!சென்னையை கூட அழகாக ஆக்கி விடுகின்றது இந்த மழை:-)

உங்கள் பதிவு அருமை!!புத்தகம் குறித்தான அந்த கவிதை

நேசமித்ரன் said...

எங்க ஊருபக்கம் போயிட்டு வந்திருக்கீங்க தலைவரே

சந்தோஷம் !

ரொம்ப நல்ல உணர்வை அழகா சொல்லி இருக்கீங்க நன்றி

குப்பன்.யாஹூ said...

அருமையான சுவையுள்ள பதிவு லேகா.

மழை வரும் பொது சென்னை போரூர் தாண்டி காஞ்சிபுரம் செல்லும் சாலை செல்லுங்கள் (ஆலந்தூர் பட் ரோடு, போரூர் வழி).

அங்கு கிராமிய சூழலில் மலையை ரசிக்கலாம்.

பாலராஜன்கீதா said...

மழையில் நனைந்தீர்களா இல்லையா ?
:-)

கிருஷ்ண மூர்த்தி S said...

மழையை ரசிப்பது, கலப்படம் இல்லாத குழந்தைத் தன்மையைக் காட்டுகிறது அல்லது குழந்தைகளாகவே மாறி விடுகிறோம் என்று தான் தோன்றுகிறது!

அணைப்பட்டி ஆஞ்சநேயர் படத்தைக் காணோமே?

லேகா said...

நன்றி ராம்ஜி,

காஞ்சிவரம் சென்றதில்லை இதுவரை......ம்ம்ம்...முயற்சிக்கின்றேன்!!

லேகா said...

நேசமித்திரன்..

என்னை தலைவர் ஆக்கிடிங்க ??!!ஹா ஹா...
வருகைக்கு நன்றி!!

லேகா said...

கீதா
நனையாமலா........:-)

சென்ற மாதம்..பெருமழையின் பொழுது கடற்கரையில் நனைந்தது மறக்க முடியாதது !!

லேகா said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி!!

அகநாழிகை said...

ரசனையான பதிவு. வாழ்வை உணரும் தருணங்கள். பகிர்தலுக்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

லேகா said...

நன்றி வாசு :-)

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் பதிவில் நான் என் அனுபவங்களுடன் தொடர்ப்புபடுத்தி கொண்ட விஷயம் - பயணத்தில் இளையராஜா. விடியக்காலை, மதியம், இரவு என எந்த நேரத்தின் பயணமாக இருந்தாலும் இளையராஜாவின் இசை அதனை ரசிக்கும் தருணமாக்கிவிடுகிறது. அதுவும் மனதோடு ரசிக்கும் மழைக்காலமும், கிராமத்து சாலைகளும் இளையராஜாவும் - அற்புதமான உணர்வு

எம்.எம்.அப்துல்லா said...

நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு..

எனக்குப் பிடித்தது “மழை நேரத்துச் சென்னையும், மாலை நேரத்துச் சென்னையும்” என்று.

தொடர்ந்து உங்களை வாசித்தாலும் இன்று பின்னூட்டமிடத் தூண்டியது மழைதானே :)

லேகா said...

//மனதோடு ரசிக்கும் மழைக்காலமும், கிராமத்து சாலைகளும் இளையராஜாவும் - அற்புதமான உணர்வு/

அதேதான்!! ரம்யமான உணர்வு!!:-))

லேகா said...

அதேதான்!! ரம்யமான உணர்வு!!

KARTHIK said...

நல்ல மழைல ஜர்க்கின் போட்டுகிட்டு வண்டில போரது தனிசுகம்

நல்ல பதிவுங்க
தொடர்ந்து இது மாதிரியும் எழுதுங்க.

Bee'morgan said...

வாவ்.. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..

முதலில் அவசரமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன்.. முடிக்கும் போதும் சொல்லவொனாத குதூகலம் வந்து ஒட்டிக்கொள்ள மீண்டும் ஒரு முறை நிதானமாக நனைந்து முடித்தேன் :)

இது போன்றும் தொடர்ந்து எழுதவும்.

லேகா said...

நன்றி கார்த்திக்.. :-)

லேகா said...

நிச்சயமாக..நன்றி மார்கன்!!

தேவன் மாயம் said...

மழையின் ஈரத்தை மனசுக்குள் பதுக்கி வைத்துள்ளீர்!!

Rajasekar SN said...

I did't expect this much good tamil article from a s/w engg...Keep it up..e