Wednesday, May 6, 2009

அழகிய பெரியவனின் " தகப்பன் கொடி"

பெருமாள் முருகனின் "கூள மாதாரி",இமயத்தின் "கோவேறு கழுதைகள்",பாமாவின் "கருக்கு' வரிசையில் தமிழில் மற்றும் ஒரு சிறந்த தலித் நாவல் "தகப்பன் கொடி".இந்நாவலுக்கு அழகிய பெரியவன் எழுதியுள்ள முன்னுரை தலைமுறை தலைமுறையாய் மாற்றங்கள் ஏதும் காணாது ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்களின் வாழ்க்கையை அழுத்தமாய் பதிவுசெய்கின்றது.நமது முந்தைய தலைமுறை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமும் ஆசையும் இயல்பானது.பாட்டன் காலத்து கதைகள் கேட்பதற்கு ஏதோ வேறு உலகில் நிகழ்தனவாய் தோன்றும்,கால மாற்றங்கள் வாழ்க்கை முறைகளில் ஏற்படுத்தி உள்ள வித்தியாசத்தை எண்ணி வியந்திடாமல் இருக்க முடியாது.



அழகிய பெரியவனின் இந்த நாவல் மூன்று தலைமுறை பற்றியது.அம்மாசி அவனின் தந்தை மற்றும் அவனின் மகன்கள் என ஒவ்வொரு தலைமுறையிலும் நிகழும் மாற்றங்கள் மிகை இன்றி நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.பண்ணை கூலிகளாய் இருக்கும் அம்மாசி,அபரஞ்சி தம்பதியர்கள் பண்ணையாரிடம் தங்களின் நிலத்தை இழந்து அபரஞ்சியின் ஊருக்கு பிழைக்க செல்கின்றனர்.நிலத்தில் அல்லும் பகலும் உழைத்து பழகிய அம்மாசிக்கு அவ்வூரும்,அங்கு செய்ய நேரும் தோல் தொழிற்சாலை வேலையும் புதிதாய் இருக்க..புதிய புதிய நட்புகள்,அரசியல் பேசும் தொழிலாளர்கள்,வண்ண திரைப்படங்கள் காட்டும் கொட்டகைகளும் என நகர சூழல் மெதுவாய் அவனுக்கு பழகிவிடுகின்றது.

அம்மாசியை முன்னிறுத்தி சுழலும் கதை அவனுக்கு பிரியமான தெருக் கூத்தை விஸ்தாரமாய் அலசுகின்றது.அர்ஜுனன் கூத்தில் அம்மாசி அர்ஜுனனை வேடம் தரித்து இராப்பொழுதொன்றில் கூத்து கட்டும் காட்சிகளின் விவரிப்பு எதையோ நாம் இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மீண்டும் நினைவூட்டுவதாய் உள்ளது.தோல்பாவை கூத்து,தெருகூத்து,ஒயிலாட்டம்,கரகம் என மெல்ல அழிந்து வரும் கலைகள் பல.அடுத்த தலைமுறைக்கு படம் காட்டி விளக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.மேலும் துப்பாக்கி கொண்டு தூரத்து மலையில் கட்டி இருக்கும் ஆட்டை சுடும் கிராமங்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டு குறித்த செய்தி புதிதாய் இருந்தது.

நாவலில் சோகம் படர தொடங்குவது அபரஞ்சியின் மரணத்திற்கு பிறகு..தனது இரு மகன்களும் படித்து உருப்பட நினைத்த அம்மாசியின் எண்ணம் நிறைவேறாது அவன் கனவிலும் நினைத்திடா பாதைகளில் அவர்கள் தம் வாழ்வை அமைத்து கொள்கின்றனர். இக்கதையில் தலைமுறை இடைவெளியை அழகாய் சொன்னதோடு அந்தந்த தலைமுறையின் மாற்றங்களை இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற்றவர்களாய் இக்கதை மாந்தர்கள் உள்ளனர்.விளிம்பு நிலை குறித்த இலக்கியமாய் இருப்பினும் நெஞ்சை பிழியும் சோகம் எதுவும் இன்றி வெகு இயல்பாய்,அதன் போக்கில் கதையை சொல்லி இருக்கும் விதம் அருமை.

வெளியீடு - தமிழினி
விலை - 65 ரூபாய்

16 comments:

Anonymous said...

Good novel. One thing about Azhagiya Periyavan's works is that he offers a perspective of old times where dalits held lands and were quite well to do. The tracing of their exploitation is clearly mentioned.

Cho.Dharman also writes good novels with a dalit background. Would recommend his novels 'Thoorvai' and 'KoolaMadhari'.

Ajay

Unknown said...

பரவாயில்லையே முன்பை விட துரிதமாக புத்தகக் குறிப்புகளைக் கொடுக்கிறீர்களே. மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்.

குப்பன்.யாஹூ said...

கோடானு கோடி நன்றிகள் லேகா.

தலித்துக்களின் எழுத்துக்களை அகில உலகத்தில் இருக்கும் தமிழர்களை உங்கள் பதிவு மூலம் அடைய செய்து உள்ளீர்கள்.

தலித்து எழுத்தாளர் எழுதி உள்ளார் என்பதை மறந்து வாசித்தொமானால் சுவையான எழுத்தை வாசிப்போம்.

நான் சொல்ல வருவது, தலித்து எழுத்தாளர்களை தனிமை படுத்த வேண்டாம். அவர்களும் ஜெயகாந்தன், வண்ணநிலவன், பாலகுமாரன, எஸ் ராமகிருஷ்ணன் போன்றோரே.

நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ

இனியாள் said...

AZhagiya periyavanin sirukathaigal niriaya padithirukiren, novelgal ethaiyum padithathu illai, nandri lekha pahirvirku.

Krishnan said...

குறிப்பிடத்தக்க புத்தகம், நன்றிகள் பல லேகா.

லேகா said...

Hi Ajay,

Tnx for your comments.

And tnx for introducing Cho,Dharman.
By the way "Koola Maathaari" is Perumal Murugan's Work.

லேகா said...

நன்றி கிருஷ்ணன் பிரபு

லேகா said...

உண்மைதான் குப்பன் யாகூ.இமயத்தின் கோவேறு கழுதைகள் படித்த பிறகு அதற்கு முன்வரை சில எழுத்துக்கள் மீதும்,வர்ணனைகள் மீதும் கொண்டிருந்த விருப்பம் தவிடு பொடியானது.

தமிழில் எனக்கு தெரிந்த சில சிறந்த தலித் படைப்புகள்,இமயத்தின் "கோவேறு கழுதைகள்",பெருமாள் முருகனின் "கூள மாதாரி" மற்றும் "ஏறு வெயில்",பாமாவின் "கருக்கு",தகழியின் "இரண்டு படி",அழகிய பெரியவனின் இந்நாவல்..

லேகா said...

நன்றி இனியாள்.

அழகிய பெரியவனின் சிறுகதை தொகுப்புகளை குறிப்பிடுங்களேன்.வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

லேகா said...

நன்றி கிருஷ்ணன் :-)

Anonymous said...

Hi,
Yeah I goofed up with Koola Madhari :). I wanted to mention 'Koogai' by Cho.Dharman.

Azhagiya Periyavan's short story collection are 'Theettu' and 'nerikkattu'. I think there is full collection of his stories. Tamizhini Publications.

Poomani could be considered the pioneer of dalit writing though his works were not classified as such.

Sivakami's works are also good pointer to the dalit life. They are published by Marudha.

Ajay

லேகா said...

Fantastic Ajay!!

I have Alagiya Periyavan's 'Nerikattu' wit me now..And tnx for reminding Poomani,Dad got few of his work i suppose..will read them soon!!

மொழி said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

லேகா said...

நன்றி மொழி

butterfly Surya said...

அருமையான அறிமுகத்திற்கு நன்றிகள் லேகா...

தங்கள் இலக்கிய வாசிப்பும் பகிர்தலும் என்னை பிரம்மிக்க வைக்கிறது. wow...

உலக சினிமா குறித்த என் வலை பூ பார்க்கவும்.

நிறை / குறை கூறவும்...

மீண்டும் நன்றியுடன் வாழ்த்துகள் தோழி...

லேகா said...

நன்றி வண்ணத்துபூச்சியார் :-)