
தான் சேர்ந்த இயக்கத்தின் போராட்டத்தில் குடும்பத்தையும்,காதலனையும் இழக்கும் மல்லி அரசியல் தலைவர் ஒருவரை தற்கொலை தாக்குதலினால் கொலை செய்ய பொறுப்பேற்று அழகிய கிராமம் ஒன்றில் ஊரின் பெரிய மனிதர் வீட்டில் தங்குகின்றாள். இயக்க நண்பர்கள் இருவர் அவ்வப்பொழுது வந்து திட்டங்களை விளக்கி கொண்டு செல்ல அவளின் நீண்ட பகல்கள் அவ்வீட்டின் பெரியவரோடு கழிகின்றது.மகனின் பிரிவால் கோமா நிலையில் உள்ள மனைவியோடு வசிக்கும் அப்பெரியவர் மல்லி மீது மிகுந்த அன்பு கொண்டு வாழ்வின் மீதான பிடிமானங்களை மெல்ல மெல்ல உணர்த்துகிறார்.
முழுதுமாய் வாழ்வை வெறுத்து,சமூகத்தின் மீதும்,சக உறவுகள் மீதும் நம்பிக்கை இழந்து இயக்கத்திற்காக முழு மனதுடன் சாவை ஏற்கும் மனநிலை கொண்டு இருக்கும் மல்லியின் மனநிலையில் தடுமாற்றம் நிகழ்வது அவள் தான் கர்ப்பமுற்று இருப்பதை உணரும் நேரம் முதல்.வெடிகுண்டு பொருத்திய பெல்டை இடுப்பில் அணித்து கொண்டு தலைவரை கொல்ல பயிற்சி அளிக்கப்படும் மல்லி திட்டத்தை நிறைவேற்றினாலா இல்லையா என்பதே முடிவு.உணர்ச்சிகள் மரத்து இறுக்கத்தோடு வளைய வரும் மல்லியிடம் கிராமத்து பெரியவர் நடத்தும் உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.செடியின் விதையை கொண்டு பூமிக்கும் வானுக்கும் உள்ள உறவை சொல்லும் இடமும்,மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் மனைவியை அன்போடு அணுகும் இடமும் இதில் குறிப்பிடத்தக்கவை .
இதில் மல்லியாய் நடித்துள்ள ஆயிஷா நல்ல தேர்வு. இறுக்கம், வன்மம்,கனவுகள்,ஆச்சர்யம்,ஆச்சர்யம்,பயம் என மாறி மாறி காட்டும் முகபாவனைகள் அற்புதம்.சந்தோஷ் சிவனின் காமிரா,அழகிய அச்சிறுகிராமத்தை வெயிலோடும்,மழையோடும் கவித்துவமாய் படம்பிடித்துள்ளது.தற்கொலைபடையை சேர்ந்த பெண்ணொருத்தியின் நிச்சயிக்கப்பட்ட மரண நாளின் முந்தைய நாட்கள் குறித்த இப்படம் ஆவணபடங்களுக்கே உள்ள சில குறைபாடுகளை கொண்டிருப்பினும் காணப்படவேண்டிய ஒன்று.
16 comments:
நான் இன்னும் பார்க்கலை, பார்க்க முயலுகிறேன்.
உண்மையிலேயே தனு எப்படித்தான் அந்த stress tensionai manage செய்தாரோ. (that one hour before the bomb balst must be so stressful)
இன்றும் ஸ்ரீ பெரும்புதூரை கடக்கையில் என் மனது தனுவின் வில் பவர் நினைத்துதான் ஆச்சர்ய படும்.
குப்பன்_யாஹூ
.
நன்றி ராம்ஜி
//எப்படித்தான் அந்த stress tensionai manage செய்தாரோ//
முழுக்க முழுக்க இதை மையமாய் வைத்து தான் இக்கதையும் உள்ளது.
அவசியம் பார்த்திடுவோம் ...
படம் இதுவரை பார்த்ததில்லை....
ஆனால் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவை தளபதி முதல் உயிரே வரை ரசித்திருக்கிறேன். இந்தியாவில் சந்தோஷ் சிவனை போன்று கேமிராவிலே கவிதை எழுதும் ஒளிப்பதிவாளர்கள் வெகுசிலரே !!!
கனடாவில் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தை பார்த்து வியந்திருக்கின்றேன்
ஏனோ தெரியல இன்னும் இந்தப்படம் நான் பாக்களை.பல தடவ world moviesல கூட போட்டாங்க.பாக்கவேண்டிய படம்.
// வெடிகுண்டு பொருத்திய பெல்டை இடுப்பில் அணித்து கொண்டு தலைவரை கொள்ள பயிற்சி அளிக்கப்படும் மல்லி திட்டத்தை நிறைவேற்றினாலா இல்லையா என்பதே முடிவு.//
இது எப்படி இருக்கு.பதிவ படிக்கரவங்களுக்கு படம் பாக்கனும்னு தூண்டும்ல.
நல்ல விமர்சனங்க.
நன்றி ஜமால்
நன்றி செய்யது
//ஆனால் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவை தளபதி முதல் உயிரே வரை ரசித்திருக்கிறேன்.//
தளபதிக்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் என நினைத்திருந்தேன்.
வருகைக்கு நன்றி அருண் :-)
வருகைக்கு மிக்க நன்றி.
// வெடிகுண்டு பொருத்திய பெல்டை இடுப்பில் அணித்து கொண்டு தலைவரை கொள்ள பயிற்சி அளிக்கப்படும் மல்லி திட்டத்தை நிறைவேற்றினாலா இல்லையா என்பதே முடிவு.//
கார்த்திக் இந்த வரி எழுதும் பொழுது,முன்பு நாவல்கள் மற்றும் படங்களின் முடிவை வெளியிட வேண்டம் என நீங்கள் கேட்டிருந்தது நினைவில் வந்து போனது :-))
//If you are realy interested resign your job and go to srilnaka and fight for Tamil, Tamil eelam
etc.//
http://salemsenthil.blogspot.com/
2009_02_01_archive.html
இதில் குப்பன் யாஹூ பின்னுட்டம் இட்டிருப்பது சரியா? ஒட்டு மொத்தமாக தமிழையும், தமிழர்களை குறை கூறுவது போல் உள்ளதே ...
மிக வருத்தமாக உள்ளது .
ருத்ரன்
//If you are realy interested resign your job and go to srilnaka and fight for Tamil, Tamil eelam
etc.//
http://salemsenthil.blogspot.com/
2009_02_01_archive.html
இதில் குப்பன்_யாஹூ ( http://kuppan-yahoo.blogspot.com/) பின்னுட்டம் இட்டிருப்பது சரியா? ஒட்டு மொத்தமாக தமிழையும்,
தமிழர்களை குறை கூறுவது போல் உள்ளதே ... மிக வருத்தமாக உள்ளது .
ருத்ரன்
தலைவரை கொள்ள? --> கொல்ல
குறிப்பிடதக்கவை --> குறிப்பிடத்தக்கவை
சில பல எழுத்துப்பிழைகளை நீக்கிப் பார்த்தால், நல்லதொரு பதிவு.
வருகைக்கு நன்றி ஜோ.பிழைகளை திருத்திவிட்டேன்.
நன்றி லேகா..!! மிக அருமையான படத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியமைக்கு...!!
இது போன்ற படங்கள் வெகுஜன ஊடகங்களில் பிரபலமாக்கப் படாதது ஒரு குறையே..!!
தீ, படிக்காதவன் போன்ற தரமற்ற படங்களை முழு கவனத்தோடு பிரபலப் படுத்தும் நம் ஊடகங்களின் கண்ணிற்கு இவை படா..!!
நன்றி சுரேஷ் அண்ணா.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை வலை பூவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி:-)
Post a Comment