Wednesday, February 25, 2009

பஷீரின் "பாத்திமாவினுடே ஆடு / பால்ய கால சகி" - குறுநாவல் தொகுப்பு

மலையாள நாவல்கள் வரிசையில் தகழியின் "செம்மீன்", "தோட்டியின் மகன்",பாறபுரத்துவின் "அப்பாவின் காதலி" யை தொடர்ந்து எனது விருப்ப பட்டியலில் உள்ள நாவல் பஷீரின் "பால்ய கால சகி".எல்லா நாவக்களும் மறுவாசிப்பிற்கு உகந்ததாய் இருக்காது.சில நாவல்கள் பாதி படித்து கொண்டிருக்கும் பொழுதே அயர்ச்சியின் காரணமாய் கடைசி அத்தியாயத்திற்கு இழுத்து செல்லும்.எத்தனை முறை படித்தாலும் சலிக்காத நாவல் என்றால் என்னளவில் கி.ரா வின் 'கோபல்ல கிராமத்தை" சொல்லுவேன்.பஷீரின் "பால்ய கால சகியும்" அது போலவே."பாத்திமாவின் ஆடு" மற்றும் "பால்ய கால சகி" இரு குறுநாவல்களின் தொகுப்பை மீண்டும் வாசிக்க ஆர்வம் மேலிட உடனே படித்து முடித்தேன்.
பஷீரின் பெரும்பாலான கதைகள் சொந்த அனுபவங்களை கொண்டு எழுதப்பட்டவை.மேலும் தீவிர இலக்கண பிடிப்பின்றி பேச்சு வழக்கில் அமைக்கப்பட்டவை இவரின் கதாபாத்திரங்களின் உரையாடல்கள்."பாத்திமாவின் ஆடு" முழுக்க முழுக்க அவர் தம் குடும்பத்து மனிதர்களை பற்றியது.தம்பிமார்கள்,தங்கைகள் இவர்களின் குழந்தைகள் மற்றும் தனது தாயுடன் கழித்த நாட்கள் குறித்த குறிப்புகளை ஹாசியம் கலந்து விவரித்துள்ளார்.தம் குடும்பத்தில் பணத்தின் பொருட்டு எழும் சிறு சிறு ஊடல்களும்,அதனை முன்னிட்டு உறவுகளுக்குள் நிகழும் சிறு சச்சரவுகளும் மிகையின்றி வெளிப்படையாய் கூறி உள்ளார்.தனது தங்கையின் ஆட்டை முன்வைத்து அவ்வீட்டு பெண்களுக்கும் ஆண்களுக்கும் எழும் பூசல்கள் நகைச்சுவையாய் கூறப்பட்டாலும்,வறுமையின் பிடியில் சிறு விஷயங்கள் தேவையின் பொருட்டு பூதாகரபடுத்தப்படுவது கசப்பான உண்மை.

"பால்ய கால சகி",ஹஜ்ரா - மஜீத் சிறு வயது முதல் பேரன்பு கொண்டு பழகும் இவர்களின் வாழ்க்கை கால சுழற்சியில் துன்பத்தின் பிடியில் முற்றிலுமாய் சிக்கி சிதிலடைவதே இக்கதை.குழந்தை பருவத்து காட்சிகள் எதனை கதைகளில் படித்தாலும் சலிக்காதது.இக்கதையிலும் இவர்களின் பால்ய கால நாட்கள் விவரிக்கப்பட்டுள்ள விதம் மீண்டும் மீண்டும் அந்த அப்பருவத்தின் மீதான பிரியத்தை அதிகரிக்க செய்வது.பால்ய காலம்,பதின் பருவம்,நடுத்தர வயது என ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்களின் பிரிவு சத்தமின்றி அதிகரிப்பதும் கொண்டகாதல் அதனினும் மேலாக பெருகுவதும் சோகம் கொண்டு சொல்லபடுவதால் இக்கதை காவியம் ஆகின்றது.

இவ்விரு நாவகளிலும் சில வார்த்தைகள் புரியவில்லை.மொழிபெயர்ப்பாளர் எதற்கு வம்பு என்று அப்படியே விட்டு விட்டார் போல.புரிய சொற்களை குறிப்பெடுத்து கொண்டு அலுவலக தோழியிடம் (கேரளத்தவர்) அர்த்தம் கேட்டேன்,அவருக்கும் தெரியவில்லை.இருப்பினும் சில சுவாரசிய தகவல் கிடைத்தது.பஷீரின் இவ்விரு நாவல்களும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ளதாம்.அது மட்டும் இன்றி தகழி,வாசுதேவன் நாயர் ஆகியோரின் கதைகளும் உண்டாம்.வாசிப்பு மீது ஈடுபாடு இல்லாதிருப்பினும் தம் தேசத்தின் எழுத்தாளர்களையும்,அவர்களின் படைப்புகளையும் அறிந்து வைத்திருக்கின்றனர்.என்னுடைய பள்ளி காலத்தில் அழகிரிசாமியின் "ராஜா வந்திருகின்றார்" சிறுகதை மட்டுமே பாடத்திட்டத்தில் இருந்தவற்றுள் உருப்படி.:-((

சுயசரிதை எழுத துணிவோர் ஒளிவு மறைவுகளை முற்றிலுமாய் துறந்திட வேண்டும் என Mc.Court இன் சுயசரிதை நூலான "Teacher Man" பற்றிய தன் கட்டுரை ஒன்றில் முத்துலிங்கம் குறிப்பிட்டு இருப்பார்.பஷீரின் எழுத்துக்கள் அவ்வகையில் நிஜத்தை மட்டுமே பகிர்ந்தளிப்பது.

வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட்

20 comments:

narsim said...

//சுயசரிதை எழுத துணிவோர் ஒளிவு மறைவுகளை முற்றிலுமாய் துறந்திட வேண்டும் என Mc.Court இன் சுயசரிதை நூலான "Teacher Man" பற்றிய தன் கட்டுரை ஒன்றில் முத்துலிங்கம் குறிப்பிட்டு இருப்பார்.பஷீரின் எழுத்துக்கள் அவ்வகையில் நிஜத்தை மட்டுமே பகிர்ந்தளிப்பது//

நல்ல வார்த்தைகள்.. படிக்கும் ஆவலைத் தூண்டியதற்கு நன்றி!!

சந்திப்பு said...

சமீபத்தில் பஷீரின் 100வது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடினோம். பஷீரின் கதைகளை அறிமுகப்படுத்துவது இக்காலக்கட்டத்திற்கு மிகச் சிறந்த அம்சமாகும். குறிப்பாக யதார்த்தவாதத்தை முன்வைக்கும் அவரது கதைகள் மிக எளியவர்களே. குறிப்பாக பாத்துமாவின் ஆடு கதையில் அவரது வீட்டுச் சூழலை நன்கு உணர முடியும். ஆடுகளிடத்தில் அவரது புத்தகத்தையும், 10 ரூபாய் நோட்டையும் உணவாக கொடுப்பது ரசிக்கத்தக்கது. அவரது கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது மூக்கு. அதேபோல் நீங்கள் குறிப்பிட்டுள்ள பால்ய கால சகி - இளம் பருவத்து தோழி மிகவும் துயரமான காதல் கதை... அந்த மாமரத்தின் நிழலில் ஒளிவீசும் முகம்தான் எனக்கு இக்கதையில் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள் நன்பரே!

சந்திப்பு said...

சமீபத்தில் பஷீரின் 100வது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடினோம். பஷீரின் கதைகளை அறிமுகப்படுத்துவது இக்காலக்கட்டத்திற்கு மிகச் சிறந்த அம்சமாகும். குறிப்பாக யதார்த்தவாதத்தை முன்வைக்கும் அவரது கதைகள் மிக எளியவர்களே. குறிப்பாக பாத்துமாவின் ஆடு கதையில் அவரது வீட்டுச் சூழலை நன்கு உணர முடியும். ஆடுகளிடத்தில் அவரது புத்தகத்தையும், 10 ரூபாய் நோட்டையும் உணவாக கொடுப்பது ரசிக்கத்தக்கது. அவரது கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது மூக்கு. அதேபோல் நீங்கள் குறிப்பிட்டுள்ள பால்ய கால சகி - இளம் பருவத்து தோழி மிகவும் துயரமான காதல் கதை... அந்த மாமரத்தின் நிழலில் ஒளிவீசும் முகம்தான் எனக்கு இக்கதையில் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள் நன்பரே!

லேகா said...

நன்றி நர்சிம் :-)

லேகா said...

//சமீபத்தில் பஷீரின் 100வது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடினோம்//
சந்தோஷம் அளிக்கும் செய்தி இது.

//ஆடுகளிடத்தில் அவரது புத்தகத்தையும், 10 ரூபாய் நோட்டையும் உணவாக கொடுப்பது ரசிக்கத்தக்கது. //

இது நான் சொல்ல நினைத்து மறந்தது.

வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.

இனியாள் said...

Nalla pathivu lekha, en siru vayathil kalki vaara ithalil basheerin kathai ondru veli vanthathu, ethuvume puriyamale oru vaaram kooda vidamal athai padiththu vanthirukiren. Eninum bhasheerin padaipugalai athigamai vaasikka thoondukirathu ungal vimarsanam.

லேகா said...

வருகைக்கும்,பகிர்விற்கும் நன்றி இனியாள்:-)

குப்பன்.யாஹூ said...

அருமையான பயனுள்ள பதிவு லேகா. மற்றும் ஒரு பயனுள்ள எழுத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

கூகுளில் மொழி பெயர்த்து கொள்ளலாமே, மலையாளம் சொற்களை.


என்னதான் நாம் வீராப்பாக சலனம் அற்று இருப்போம் என்று முடிவோடு உக்காந்தாலும் பஷீர் எழுத்துக்கள் நம் மனதின் உள்ளே ஆழமாக சென்று தங்கி விடும்.வலிமை கொண்டவை.

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி ராம்ஜி:-)

ரௌத்ரன் said...

சில தினங்களுக்கு முன் தான் பால்ய கால சகி வாசித்தேன்.அழகான கதை...

அ.மு.செய்யது said...

பயனுள்ள பதிவு லேகா...

படிக்கும் ஆவலை வெகுவாக தூண்டுகிறது உங்கள் எழுத்துக்கள்..

VASAVAN said...

Nice, should be appreciated.
//இவ்விரு நாவகளிலும் சில வார்த்தைகள் புரியவில்லை.மொழிபெயர்ப்பாளர் எதற்கு வம்பு என்று அப்படியே விட்டு விட்டார் போல.புரிய சொற்களை குறிப்பெடுத்து கொண்டு அலுவலக தோழியிடம் (கேரளத்தவர்) அர்த்தம் கேட்டேன்,அவருக்கும் தெரியவில்லை//
Please feel free to post the unknown words for translation. I hope that I can.

Try to find out some valuable books of MT Vasudevan Nair.
* Manju (Mist)
* Kalam (Time)
* Nalukettu (Ancestral House)
* Asuravithu (Seed of the Demon)
* Vilapayathra (The Funeral Procession)
* Pathiravum Pakalvelichavum (Midnight and Daylight)
* Arabipponnu (The Gold of Arabia, written with N. P. Muhammed)
* Randamoozham (Second Turn)
* Varanasi (Benares)

லேகா said...

வருகைக்கு நன்றி செய்யது.

லேகா said...

நன்றி வாசவன்.புரியாத வார்த்தைகள் யாவும் மலையாள பேச்சு வழக்கில் உள்ளவை போல.வாசுதேவன் நாயரின் நூல்கள் குறித்த உங்களின் அறிமுகத்திற்கு நன்றி.நிச்சயம், வாங்கி படிகின்றேன்.

லேகா said...

நன்றி ரௌத்திரன்

Krishnan said...

பஷீரை இதுவரை படித்ததில்லை. கட்டாயமாக படிக்க தூண்டிகிறது தங்களுடைய பதிவு.

லேகா said...

நன்றி கிருஷ்ணன் :-)

Thamiz Priyan said...

சில தினங்களுக்கு முன் இந்தியாவில் இருந்த போது மதுரை, சென்னையில் பல கடைகள் ஏறி இறங்கியும் பால்யகால சகி கிடைக்கவில்லை. கோபல்ல கிராம மக்கள் வாங்கி வந்தேன்.

லேகா said...

என்னிடம் உள்ள இந்நாவல் 1990 களில் வாங்கியது.தற்பொழுது எங்கு கிடைக்கும் என தெரியவில்லை.

கோபல்ல கிராம மக்கள் மற்றும் கோபல்ல கிராமம் இரண்டுமே வெகு அற்புதமான நாவல்கள்.

முஹம்மது ,ஹாரிஸ் said...

நீங்கள் காலச்சுவடு வெளிட்டுள்ள பசிரின் சிறுகதை தொகுப்பான உலகப் புகழ் பெற்ற முகுவை படித்திர்களா. அருமையான சிறுகதை தொகுப்பு.
dont miss that