Friday, October 31, 2008

பாவண்ணனின் "எனக்கு பிடித்த சிறுகதைகள்" மற்றும் "கடலோர வீடு"

நாவலோ சிறுகதையோ படிக்கும் பொழுது அதன் மனிதர்களும்,நிகழ்வுகளும் ஏதோ ஒரு இடத்தில் நமக்கு மிக நெருக்கமாய் தோன்றலாம்.அவ்வாறு தான் மிகவும் நெருக்கமாய் உணர்ந்த சிறுகதைகளை தனக்கு நேர்ந்த நிகழ்ச்சிகளின் பின்னணி கொண்டு தொகுத்துள்ளார் பாவண்ணன்.தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் அனைவரின் சிறுகதைகளும் இதில் அடக்கம்.நாம் படித்த மற்றும் படிக்காத சிறுகதைகளை குறித்து முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மிக எளிமையாய் சொல்லியுள்ளார் பாவண்ணன்.


எனக்கு பிடித்த வண்ணதாசனின் "தனுமை" சிறுகதை மிக பிடித்தமானதாய் மாறிபோனது பாவண்ணனின் விமர்சனம் படித்த பின்னரே.சிறிதும் ஒத்து போகாத மனநிலை கொண்ட இருவர் ஒரே அறையில் தங்க நேரும் சங்கடத்தை சொல்லும் ஆதவனின் "ஒரு அறையில் இரு நாற்காலிகள்',விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை மிகையின்றி சொல்லும் ஜி.நாகராஜனின் "ஓடிய கால்கள்", விதவை தாயின் மனநிலையை சொல்லும் அசோகமித்ரனின் "அம்மாவுக்காக ஒரு நாள்", புதுமைபித்தனின் "மனித எந்திரம்" , சு.ரா வின் "பள்ளம்" என ஒவ்வொரு சிறுகதையையும் ரசித்து தம் அனுபவ நிகழ்ச்சிகளோடுகூறியுள்ளார் ஆசிரியர்.



பாவண்ணனின் சிறுகதை தொகுப்பு "கடலோர வீடு" .பெரும்பாலான கதைகள் மனிதனின் தனிப்பட்ட மனநிலையை,விருப்பங்களை முன்னிறுத்தி சொல்லப்பட்டவை.பெரியதொரு பறவைகள் சரணாலயத்தை விருப்பத்தோடு பராமரிக்கும் ஒரு முதியவரின் மனபோராட்டங்களை சொல்லும் கதை "பறவைகள்".
புராண நிகழ்வின் புனைவாக கிருஷ்னையை மணக்க வைக்கப்படும் சுயம்வரத்தில் வென்றிட துடிக்கும் துரியோதனனின் ஒவ்வொரு நொடி மனவோட்டத்தையும் விவரிக்கும் கதை "இன்னும் ஒரு கணம்".

முதியோர் இல்லத்தில் தங்க வைக்கபட்டிருக்கும் நண்பனின் உறவினரை காண செல்லும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை,தாள முடியாத சோகத்தில் தள்ளும் அப்பெண்மணியின் நிலையை வெகு நேர்த்தியாய் சொல்லும் கதை "விளிம்பின் காலம்" .பெருகி வரும் முதியோர் இல்லங்கள் மலிந்து வரும் பந்த பாசத்தை மறைமுகமாய் உணர்துபவையே!!நவீன உலகில் பிராணிகளுக்கு அளிக்கப்படும் மதிப்பும்,பிரியையும் சக மனிதர்களுக்கு தரப்டுவதில்லை என்பதை சற்றே நகைச்சுவை கலந்து சொல்லும் சிறுகதை "பாதுகாப்பு".


பாவண்ணனின் எழுத்துலகம் சராசரி மனித வாழ்வின் அவலங்களை வெகு நுட்பமாய் எடுத்தாளுகின்றது.மிக கடினமான கருத்துக்களை கதை போக்கில் இயல்பாக உணர்த்தி, மிக அழுத்தமாக பதிவு செய்கின்றார்.

"எனக்கு பிடித்த சிறுகதைகள்" - காலச்சுவடு வெளியீடு
"கடலோர வீடு" - காவ்யா வெளியீடு

9 comments:

Anonymous said...

சரித்திர நிகழ்வு எது என்பதையும் எது புராணம் என்பதையும் சரியாகக் குறிப்பிடவேண்டும்,(துரியோதனன், நித்யகன்னி - புராணம்; கலிங்கப்போர், M.G.R - சரித்திரம்) இது பெரிய பிழையில்லை, ஆனால் திருத்திக்கொள்ளக்கூடியதுதானே?

லேகா said...

பிழையை சுட்டி காட்டியதிற்கு நன்றி அனானி.

திருத்திவிட்டேன்.

Krishnan said...

Lekha: Yes I have come across Paavannan's Enakku Piditha Sirukathaigal in Thinnai website. Thanks yet again for sharing. You have a way with words, flows smoothly like a cascade.

லேகா said...

Tnx for ur comments Krishnan :-)

Pavannan's way of story telling is very simple n crisp!!

குப்பன்.யாஹூ said...

மற்றும் ஒரு பயனுள்ள புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

You try to get this book "Stephen Covey's The 7 habits of highly effective people. Second hand book is available in Tnagar (near sankarapnadian stor & pondybazar near petrol balk, near siva/Ratna store).

That book will chnage our thought process.


kuppan_yahoo

லேகா said...

நன்றி குப்பன்_யாஹூ!!

இந்த வார இறுதியில் இப்புத்தகத்தை வாங்க முயற்சிக்கின்றேன்.

குப்பன்.யாஹூ said...

வண்ண நிலவன் குறித்த எஸ் ராமகிருஷ்ணனின் உயிர்மை கட்டுரை படியுங்கள் இங்கு:

http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=௩௪௭

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி குப்பன் சார்.

சென்ற மாதம் அக்கட்டுரை படித்தேன்,ஒரு எழுத்தாளன் குறித்த மற்றொரு எழுத்தாளனின் பார்வை,எஸ்.ராவின் ஆழ்ந்த நோக்கு என வண்ணதாசனின் எழுத்துக்களுக்கு பின்னால் உள்ள எளிய பிம்பத்தை எடுதுரைப்பதாய் அமைந்த கட்டுரை!!

லேகா said...

மேலே உள்ள பின்னூட்டத்தில் வண்ணநிலவனுக்கு பதிலாக வண்ணதாசன் என குறிப்பிட்டு விட்டேன்!! :-(