எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் மரணத்திற்கு பிறகு குமுதம் இதழ் ஒரு பக்க அளவில் அஞ்சலி கட்டுரை வெளியிட்டு இருந்தது,அதற்கு முன்பு வரை கோபியை பற்றிய எந்த அறிமுகமும் இருந்ததில்லை.வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறிய படாத எழுத்தாளர்கள் வரிசையில் பா.சிங்காரத்தை போல கோபியும் உண்டு.
நண்பர்கள் மூலமாகவும்,வலைத்தளங்களிலும் இவரின் "உள்ளே இருந்து சில குரல்கள்" நாவல் குறித்த விமர்சனங்கள் இந்நாவலை படிக்கும் ஆவலை தூண்டியது.நாவலை படித்து கொண்டிருந்த கணங்களில் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள வழியின்று பல சமயம் பாதியில் புத்தகத்தை மூடி வைத்தேன்..கனத்த வலி தரும் மனித நிலைகளின்(பிறழ்வு) தொகுப்பு வெகுவான ஏற்ற இறக்கம் இன்றி சீராக பயணிக்கின்றது.
மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருக்கும் மனநிலை பாதிக்கபட்டோர் அல்லது அவர்களின் உறவினரின் நேரடி கூற்றாக ஒவ்வொரு நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது.ஐம்பதிற்கும் மேலான மனநிலை வெளிப்பாடுகளில் பெரும்பாலான பிறழ்வுகளுக்கு காரணமாய் அமைவது அதீத கடவுள் பக்தி,திருமண/காதல் தோல்வி,உறவுகள்,வேலை,அர்த்தம் அற்ற பயம்,சந்தேகம் என பொதுவாய் கொள்ளலாம்.இவ்வாறு சிறு சிறு அதிர்வுகளை உள்வாங்கி ஒவ்வொரு நிலையும் கடக்க வேண்டியுள்ளது.மன பிறழ்வை நோய் என கூறுவதை காட்டிலும் ஒரு வகை பாதிப்பு என சொல்வது சரியாக இருக்கும்,சில நிலைகளை படிக்கும் பொழுது நமக்கும் அவர்களுக்குமான வித்யாசம் பெரிதாய் இல்லை.சிந்தனையையும்,மனவோட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நமது நிலை குழப்பம் இன்றி தொடர்கின்றது.
இது தவிர்த்து நாவலின் இறுதியில் மன நல பாதிப்பிற்க்கு வைத்தியம் (?!) செய்யும் சில சாமியார்கள், மற்றும் மாந்த்ரீகர்களின் சந்திப்புகள்,மன நலம் குறித்து விவாதிக்கும் பல நூல்களின் மேற்கோள்கள் என இறுதி பகுதி முழுவதும் மன பிறழ்வு குறித்து முழுதுமாய் உணர்ந்து கொள்ள உதவுகின்றது.
மனித மனங்களின் வலிகளை,இருண்ட வாழ்வின் அவலங்களை மிக அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல்.கோபி குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை இந்த எழுத்தாளனுக்கு சிறந்ததோர் அஞ்சலி.
வெளியீட்டார் - வம்சி புக்ஸ்
விலை - 80 ரூபாய்
Friday, October 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
I came to know of Gopi through S. Ramakrishnan's chapter on him in ThunaiEzhuthu. Nice of you to write a review of his book. The picture i get through S. Ramakrishnan's article is that of a tormented soul leading a life of poverty. It is heartrending to know that he died young too.
நல்லா எழுதி இருக்கீங்க,
டேபிள் டென்னிஸ், தூயோன் இதையும் கிடைச்சா படிச்சிப்பாருங்க.
நீங்கள் சொல்லிய அதே குமுதம் கட்டுரையின் மூலமாகத்தான் அவர் இறந்ததே எனக்குத் தெரியவந்தது :( தினசரிகளில் பெரிய அளவில் செய்தி வராததே காரணம்.
1990லிருந்து கோபியை வாசித்து வருகிறேன். தமிழின் மிக முக்கியமான ஒரு எழுத்தாளர் கோபிகிருஷ்ணன். வலைப்பதிவில் அய்யனார், ஜமாலன் இவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
(குறிப்பு : loader, caterpillar bulldozer எல்லாம் spam!).
@ Krishnan
Tnx for your Comments Krishnan
//The picture i get through S. Ramakrishnan's article is that of a tormented soul leading a life of poverty.//
Very true,I felt the same after reading abt Pa.Singaram who wrote 'Puyalile Oru Thoni".
@ கென்
நன்றி கென்,நிச்சயமா வாங்கி படிக்கின்றேன்!! :-)
@ ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி சுந்தர்.
//1990லிருந்து கோபியை வாசித்து வருகிறேன். தமிழின் மிக முக்கியமான ஒரு எழுத்தாளர் கோபிகிருஷ்ணன். //
கோபியின் மற்ற படைப்புகள் குறித்து அறிய ஆவலாய் உள்ளது.
மற்றும் ஒரு அருமை பதிவு.
தங்களின் வாசிப்பு தீவிரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைவதை உணர முடிகிறது, வாழ்த்துக்கள். எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார்.
படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது( 25 days over- இன்னும் நடுகை புத்தகம் வாங்க போக வில்லை, தினமும் என் செல்பேசி உம், அவுட்லுக் உம் ரிமைன்டர் செய்து கொண்டுதான் இருக்கின்றன).
அய்யனார் பதிவில் (நவம்பர் 2007 என நினைக்கிறேன், வேறு லிங்கும் கொடுத்திருந்தார்).
எஸ் ராவின் அந்த கட்டுரை மிக அருமை, எஸ் ரா மிக இயல்பாக எழுதி இருப்பார்,
ஆனால் பொருளாதார வறுமை நிறைய எழுத்தாளர்களை நெருக்கி உள்ளது.
இந்த புத்தகதையும் வாங்க வேண்டிய பட்டியலில் சேர்த்து கொள்கிறேன். நன்றிகள்.
வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ
@ குப்பன்_யாஹூ
நன்றி
உங்க பட்டியல சுந்தர் குறிபிட்டுள்ள "டேபிள் டென்னிஸ்", "தூயோன்" நாவல்களையும் சேர்த்துகோங்க!!
//ஒரு வகை பாதிப்பு என சொல்வது சரியாக இருக்கும்,சில நிலைகளை படிக்கும் பொழுது நமக்கும் அவர்களுக்குமான வித்யாசம் பெரிதாய் இல்லை. சிந்தனையையும், மனவோட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நமது நிலை குழப்பம் இன்றி தொடர்கின்றது.//
மிக எதார்த்தமான உண்மையான வரிகள்...
கண்ணீர் என்ற அற்புதமான விஷயம் இல்லை என்றால் நாம் எல்லோருமே மனபிரழ்வோடுதான் இருந்திருப்போம் என தோன்றுகிறது...
நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்...
என்னை மிகவும் தாக்கிய புத்தகம்!
இது பற்றி ஒரு தொடர் பதிவும் எழுத உள்ளேன்
Tnx Jags :-)
@ Arun
tnx for ur comments
Seriously, a good one!! Waiting to see ur views on this novel
// மன பிறழ்வை நோய் என கூறுவதை காட்டிலும் ஒரு வகை பாதிப்பு என சொல்வது சரியாக இருக்கும்,சில நிலைகளை படிக்கும் பொழுது நமக்கும் அவர்களுக்குமான வித்யாசம் பெரிதாய் இல்லை.//
உண்மைதான் லேகா
பெரிதாக வெளியே அறியப்படதா குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
ஈரோட்டில் நடந்த புத்தகத்திருவிழாவில் ஒரு கடையில் கூட இவரது புத்தகங்கள் விற்கப்படவில்லை. நல்ல எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதில் அவர்கள் பங்கு அதிகம்.
//ஈரோட்டில் நடந்த புத்தகத்திருவிழாவில் ஒரு கடையில் கூட இவரது புத்தகங்கள் விற்கப்படவில்லை. நல்ல எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதில் அவர்கள் பங்கு அதிகம்//
தரமான புத்தக கண்காட்சிகள் பெரிதாக எங்கும் நடத்தபடுவதில்லை.சங்க தமிழ் வளர்த்த மதுரையிலும் இதே நிலை தான்.
பகிர்தலுக்கு நன்றி கார்த்திக்.
இவரை பற்றி முன்பொருமுறாஇ சுஜாதா அறிமுகம் செய்திருந்தார். எனக்கு இவரது புத்தகங்கள் நிறைய நாட்களாய் கிடைக்காமல் அண்மையில் தான் கனடாவில் இருந்து வெளிவரும் காலம் தீவிர இதழின் ஆசிரியர் செல்வம் மூலமாக “மோகினி பேய்களும்............”கிடைத்தது. மிகப்பெரிய உணார்வுமாறுதல்களை அடுத்தடுத்து ஏற்படுத்திய நாவல அது. எந்த நிலையிலும் தன்னை சமரசம் செய்யாத ஒரு இனிய மனிதனின் கதையாக அது என்னுள் பதிந்தது
அறிமுகத்துக்கு நன்றி
இவரை பற்றி முன்பொருமுறாஇ சுஜாதா அறிமுகம் செய்திருந்தார். எனக்கு இவரது புத்தகங்கள் நிறைய நாட்களாய் கிடைக்காமல் அண்மையில் தான் கனடாவில் இருந்து வெளிவரும் காலம் தீவிர இதழின் ஆசிரியர் செல்வம் மூலமாக “மோகினி பேய்களும்............”கிடைத்தது. மிகப்பெரிய உணார்வுமாறுதல்களை அடுத்தடுத்து ஏற்படுத்திய நாவல அது. எந்த நிலையிலும் தன்னை சமரசம் செய்யாத ஒரு இனிய மனிதனின் கதையாக அது என்னுள் பதிந்தது
அறிமுகத்துக்கு நன்றி
Hi,
Have you read his collection 'Manida Vaazhvu Tharum Anandham'?
The title of the collection itself is so evocative and expresses the author's beautiful mind.
It is with a mixture of sadness/happiness that I see Gopi Krishnan being read a lot more these days which we consider that he died in near penury. Even now it seems that his family is not well off.
Post a Comment