இரண்டு தமிழர்கள் பார்த்து பேசினால் அங்கு சினிமா குறித்த பேச்சு கட்டாயம் இருக்கும் என கூற கேட்டு இருக்கின்றேன்.அந்த அளவில் திரைபடங்கள் நம் தின சரி வாழ்கையில் ஒன்றாகிவிட்டது!!அமைதியாய் இத்தொடர் ஓட்டத்தை கவனித்து கொண்டிருந்தேன்..அய்யனாரின் அழைப்பை ஏற்று நானும் இங்கே..
1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
(அதிகம் யோசிக்க வைத்த கேள்வி இது)முதலில் பார்த்த படம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை..சிறு வயதில் சனி,ஞாயிறு மத்திய பொழுதுகளில் டிடி யில் ஒளிபரப்பான இரு குறும்படங்கள் இன்றும் என் நினைவில் உண்டு.
-முதலை தன் முட்டைகளை பாதுகாப்பதை வியந்து பார்க்கும் கிராமத்து சிறுவன்,தானும் பகல் பொழுதுகளில் அதற்கு துணையாய் இருப்பதாய் வரும்.
-வெளிநாட்டு பெண்ணை மனது வரும் மகனுக்கும் படிப்பறிவில்லாத மாடு மேய்க்கும் தாய்க்குமான உறவின் பிணைப்பு சொல்லும் படம்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சிவாஜி - சாவித்திரி நடித்த நவராத்திரி.கேபிள் சானல் ஒன்றில் பார்த்தது.இருவரின் நடிப்பு வியப்பில் ஆழ்த்தியது,அதிலும் முக்கியமாக அந்த தெரு கூத்து நடனம்.
எஸ்.ரா வின் சமீபத்திய கட்டுரையான "இரு புகைப்படங்கள்" ளில் சாவித்திரியின் இறுதி நாட்கள் குறித்த செய்திகள் நினைவில் வந்து மனதை பிசைந்தது!!
4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
மஹாநதி - ஒரு மனிதனின் ஒரு நிமிட சபலத்தால் குடும்பமே சீரழியும் கதையை
மிகுந்த எதார்த்தத்தோடு சித்தரித்த படம்.
அவள் அப்படிதான் - இப்படம் குறித்து தனியே பதிவு போடும் அளவிற்கு பாதித்தது
மஞ்சுவின் பாத்திர படைப்பு.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எதுவும் இல்லை
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.நிவாஸ் ஒளிப்பதிவு குறித்து அப்பா எப்பொழுதும் ஸ்லாகித்து சொல்வதுண்டு.
பாரதிராஜா - நிவாஸ்(பெரும்பாலான படங்கள்)
மஹேந்திரன் - பாலுமகேந்திரா(முள்ளும் மலரும்,உதிரி பூக்கள் )
மணிரத்தினம்-பி.சி.ஸ்ரீராம்(அக்னி நட்சத்திரம்)
நாம் தினம் காணும் காட்சிகளை தங்கள் காமெராக்கள் மூலம் கவிதையாக்கிய இவர்களின் எதார்த்த நிலை இப்பொழுது எவரிடமும் காணகிடைப்பதில்லை.அதி நவீன தொழில் நுட்பம் என்கிற பெயரில் தற்பொழுதைய திரைப்படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அபத்தத்தின் உச்சம்.
இளையராஜாவின் பின்னணி இசை (சிகப்பு ரோஜாக்கள்,மௌன ராகம் )
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம்,விகடனில் வாசிப்பதோடு சரி.முன்பெல்லாம் ஒரு பக்கம் மட்டுமே சினிமா செய்திகளுக்கு ஒதுக்கி இருப்பர்,இப்போ நிலைமை தலைகீழ்.பெரும்பாலான பக்கங்கள் நடிகையர் பேட்டி,புகைப்படம் என நிரம்பி வழிகின்றது!!விகடனும் தன் தரத்தை இழந்து வருகின்றது.
7. தமிழ்ச்சினிமா இசை?
எப்பொழுதும் இளையராஜா.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ரசித்து பார்த்த உலக மொழி படங்கள் - Amelia,Monster,cider house rules
வேற்று மொழி படங்கள் - செம்மீன்(மலையாளம்),கடஷ்ரேத (கன்னடம்)
Mr & Mrs Iyer,Fire இன்னும் சில
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாலா,அமீர்,ராம்,சேரன்,தங்கர் பச்சன்,ராதாமோகன்,செல்வா ராகவன் என நம்பிக்கை கூட்டும் இயக்குனர்களும் சூர்யா,விக்ரம்,ஜீவா போன்ற படத்தின் தேவைகேற்ப தம்மை வருத்தி கொள்ளும் நாயகர்களும் ஒரு புறம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் மகிழ்வூட்டுவதே!! அதே சமயம் குத்து பாட்டு,தாலி சென்டிமன்ட்,3 டூயட்,நாலு பைட் பார்முலாக்களை விடாது பற்றி படம் எடுக்கும் பேரரசு வகையறாக்களை நினைத்தால் தமிழ் சினிமா எதிர்காலம் புகைமூட்டமாகவே தெரிகின்றது!!
மேம்போக்கான இக்கேள்விகளை தவிர்த்து இன்னும் சில கேள்விகள் இணைக்கப்பட்டு இருக்கலாம் என தோன்றுகின்றது..உதாரணமாக "சிறந்த பத்து தமிழ் படங்கள்","நாவலை தழுவி எடுக்க பட்ட படங்கள் குறித்து","இசையை மையமாய் கொண்ட திரை படங்கள்" "தமிழ் சினிமாவில் பெண்ணியம்" என்று..
இத்தொடர் ஓட்டத்தில் பங்கு கொள்ள நான் அழைப்பது
'ரகசிய கனவுகள்' கார்த்திக் மற்றும் வால் பையன் 'அருண்'
Wednesday, October 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
:))
இணையத்தளம் வந்து 8 வருடங்களாக என்னை கமல், ரஜினி, ஷங்கர், மணிரத்தனம் அல்லது வேறு திரைப்படங்கள் அந்த அளவு தொந்தரவு செய்வதில்லை இப்போது.
2.30மணி நேரம் திரை அரங்கில் உட்காரும் நேரத்தில் 200 பதிவுகள், 40 சாட்டர்களின் பாடல்கள், விவாதங்கள் கேட்டு விடுவேன்.
குப்பன்_யாஹூ
இந்தத் தொடர் பதிவுகள், அதே கேள்விகள், கிட்டத்தட்ட ஒரே வட்டத்துக்கள் வரும் பதில்கள் என்றாலும், சுவாரஸ்யம்தான். சினிமாவின் வலிமை அதுதான்.
சிறந்த பத்து படங்கள் ஓகே. நாவல் பற்றி பேசினால் சோகமாக இருக்கும். பல நாவல்கள் சின்னாபின்னமான தகவல்கள் வெளிவரும். பெண்ணியம்? நீங்களே துவங்கியிருக்கலாம். 'பெண்ணின் பெருமை, புதுமைப் பெண், அவள் அப்படித்தான், கல்கி, மறுபடியும்' என்றெல்லாம் தோன்றுகிறது. இணையம் வருவதற்கு முன் பெண்ணியம் பற்றி ஒன்றுமே தெரியாது. 'சரஸ்வதி சபதம்' என்று சொல்லியிருப்பேன்.
அனுஜன்யா
One small correction
the cinematographer for anjali was
madhu ambat
இந்த பதிவை படித்த பிறகு, "வாங்க couple-a சந்திக்கலாம்.."-னுதான் சொல்ல தோணுது...அட ஆமாங்க சன் டிவி-ல வர்ற "நீங்கள் கேட்ட பாடல்-தான்.."... நெறைய கேள்விகள் கேட்கபடனுமே-ன்னு கேட்குற மாதிரி தெரியுது....நல்ல உதாரணம்...
//கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
இந்த கேள்வி எதுக்காக..? இதுக்கும் வர போற கேள்விககுக்கும் என்ன சம்பந்தம்...??
இந்த "தொடர் ஓட்டத்திற்கான" நோக்கம் சுத்தமா விளங்கல..
ஹிந்து நாளிதழ் மொதல்ல வரும்போது, எல்லோரும் என்னபா ஆங்கிலம் இவ்வளவு கஷ்டமா இருக்குன்னு நெனச்சாங்க..அதுக்காக ஹிந்து தன்னுடைய தரத்த குறைசுக்கல..
கூடிய சீக்கிரம் மக்கள் அந்த தரத்துக்கு தங்கள தயார் படுதிக்குட்டாங்க..
அய்யனார், லேகா போன்றோர நான் "ஹிந்து நாளிதழ்" மாதிரி நெனைக்கிறேன்...
நன்றி உமா கதிர் :-)
//2.30மணி நேரம் திரை அரங்கில் உட்காரும் நேரத்தில் 200 பதிவுகள், 40 சாட்டர்களின் பாடல்கள், விவாதங்கள் கேட்டு விடுவேன்//
நீங்கள் சொல்வதென்னவோ சரி தான்.மொக்கை படங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
@ அனுஜன்யா
//நாவல் பற்றி பேசினால் சோகமாக இருக்கும்.//
ரொம்ப சரி
மோகமுள்,என்னை போல் ஒருவன்,பிரியா,கரையெல்லாம் செண்பக பூ, காயத்ரி,சொல்ல மறந்த கதை,ஒன்பது ரூபாய் நோட்டு என நீளும் நாவலை தழுவி எடுக்க பட்ட பட வரிசையில் பெரும்பாலானவை வணிகரீதியாக வெற்றி பெற்றதில்லை.நாவலின் எளிமையும்,எதார்த்தமும் திரை வடிவத்தில் இல்லாது இருப்பது ஒரு காரணமே.அதே போல முழு நாவலை இரண்டு மணி நேரத்திற்குள் கொண்டு வர செய்யபடும் பிரயத்தனங்கள்!!
//இந்த பதிவை படித்த பிறகு, "வாங்க couple-a சந்திக்கலாம்.."-னுதான் சொல்ல தோணுது...அட ஆமாங்க சன் டிவி-ல வர்ற "நீங்கள் கேட்ட பாடல்-தான்.."... //
இந்த பதிவை பார்த்திட்டுனு ரொம்ப நொந்து போய் இருக்கீங்க புரியுது!!
//இந்த "தொடர் ஓட்டத்திற்கான" நோக்கம் சுத்தமா விளங்கல..//
:-)))எனக்கும் தான்..சரி விடுங்க எவளவோ செய்றோம்!!
@ travis bickle
//the cinematographer for anjali was madhu ambat//
Thanx for pointing out this.Will change it!!
நான் Jags கருத்தை வழி மொழிகிறேன். லேகா, அய்யனார், டுபுக்கு, மாமி போன்றோர் ஹிந்து, பீ பீ சி போல.
இருந்தாலும் தமிழிழ் எத்தனயோ நல்ல படங்கள் உண்டு.
மூன்றாம் பிறை, வெய்யில், உன்னால் முடிஉம் தம்பி, அஞ்சலி, புதிய மன்னர்கள், அன்பே சிவம், படிக்காத மேதை, ஜென்டில் மென், ௧௬ வயதினிலே, பருத்தி வீரன்.
வானமே எல்லை, சலங்கை ஒலி.
என் பார்வையில் டி ராஜெண்டேர் தந்து சினிமாவில் பெண்ணுரிமை கொடுப்பார்
குப்பன்_யாஹூ
ஆனந்த விகடன் தீபாவளி மலர் வந்து விட்டது. வாங்கி படியுங்கள்
மனுஷ்ய புத்திரன் கட்டுரை, சுஜாதா சிறுகதை, கனிமொழி அக்கா நேர்காணல், பாடலாசிரியர் தாமரை சிறுகதை....
வலைபதிவர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
மனுஷ்யபுத்திரன் சொல்வது போல சுஜாதா எழுத்து இல்லாத தீபாவளி மலர் இது.
குப்பன்_யாஹூ
@குப்பன்_யாஹூ
உங்கள் பகிர்தலுக்கு நன்றி.
விகடன் திபாவளி மலரில் எப்பொழுதும் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் உண்டு..முந்தய இதழகளை பத்திரமாய் சேர்ந்து வைத்திருக்கிறோம் வீட்டில்..இவ்வாண்டு இதழை படித்து முடித்ததும் அது குறித்து விவாதிக்கலாம்.:-)
அழைப்பிற்கு நன்றி!
தற்ச்சமயம் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருப்பதால்
அடுத்த வாரம் எழுதுகிறேன்
நன்றி அருண்.அவசரமே இல்ல..மெதுவா எழுதுங்க!!
Intha aandu deepavali vikatan waste,suthama onume illai,yarum vangi panathai veenaka vendam,onrume theravaillai,van gough thodar matrum oru sirukathai etho paravaillai,inimel vikatan vanga kudathenru mudiveduthuirukiren
@ Travis Bickle
Will read it n share my views wit you!
Post a Comment