Sunday, July 27, 2008

மத கலவரத்தின் மீதான ஒரு மாற்று திரைப்பார்வை - Mr & Mrs Iyerதிரைப்படங்கள் காதலை பல வழிகளில் சொல்ல முயன்று வெற்றி பெற்றிருக்கின்றன...சாத்தியம் இல்லாத ஒரு உண்மை காதலை இந்தியாவில் நிகழும் மதவெறி சண்டைகளின் கோர முகதினூடே வித்யாசமாய் சொல்லும் இத்திரைப்படம் ஓர் துணிச்சல் முயற்சி. 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் வழக்கமான மசாலா பாணி பாலிவுட் படங்களுக்கு மத்தியில் வந்த பெரிய ஆறுதல். சில திரைப்படங்கள் எதேர்ச்சையாய் பார்க்க நேர்ந்து மனதை விட்டு என்றும் நீங்காது இருக்கும்..இத்திரைப்படம் எனக்கு தந்த அனுபவம் அதுவே.தமிழ் பெண்ணான மீனாட்சி(கொங்கனா சென்) வட இந்தியாவில் இருந்து சென்னை நோக்கி தன் கைக்குழந்தையுடன் பேருந்தில் பயணிக்கிறாள்..குடும்ப நண்பர் ஒருவர் மூலமகா சக பயணியான ராஜா (ராகுல் போஸ்) அறிமுகம் ஆகிறான்.தனியே செல்லும் தன் மகளை பார்த்துக்கொள்ளும் படி மீனாட்சியின் பெற்றோர் ராஜாவை கேட்டு கொள்கின்றனர்.இருப்பினும் ராஜா முஸ்லீம் என்பதை அறிந்து பிராமண பெண்ணான மீனாட்சி அவனிடம் பலகை தயக்கம் காட்டுகிறாள்.அவனிடம் தண்ணீர் வாங்கி குடித்ததை நினைத்து மீனாட்சி அருவருப்பு அடையும் காட்சி இதற்கோர் உவமை.பலதரப்பட்ட மக்கள் பயணிக்கும் பேருந்து காட்சிகள் சினிமாத்தனம் அற்றது.அமைதியாய் செல்லும் பேருந்து பயணம்,திடீரென மத வெறியர்களால் தாக்கப்படுகின்றது,இந்து மத வெறியர்கள் பேருந்தில் நுழைந்து முஸ்லீம் பெரியவர் ஒருவரை கொலை செய்து பின் பேருந்தில் முஸ்லீம் யாரேனும் உள்ளரனா என சோதனை செய்கின்றனர்...நிலைமையை உணர்த்து மீனாட்சி தன் குழந்தையை ராஜாவிடம் தந்து தம் இருவரை Mr&Mrs Iyer என அறிமுகம் செய்து கொள்கிறாள்.அதில் இருந்து பேருந்தில் யாவரும் அவர்களை கணவன் மனைவி என நினைக்கின்றனர்.மத கலவரத்தினால் பேருந்து பயணிகள் யாவரும் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் தங்க வைக்கபடுகின்றனர்.பயணிகள் யாவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் பொழுது,மீனாட்சியிடமும்,ராஜாவிடமும் அவர்கள் தேனிலவு சென்ற இடங்களை குறித்து வினவ..ராஜா வெய்நாட் காடுகளுக்கு சென்றதை அந்த கற்பனை தேனிலவு காட்சிகளை விவரிகின்றான்.திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது.ஒரு புகைபடகாரனுகே உரிய அனுபவ நேர்த்தியோடு அக்காட்சிகளை ராஜா விவரிக்கும் விதம் கவிதை.அவனது கற்பனை காட்சிகளில் தானும் பங்கு பெரும் மகிழ்ச்சியோடு மீனாட்சி அந்த காட்சியில் வார்த்தை இன்றி அமர்ந்து இருக்கும் காட்சி அழகு.

அன்று இரவு மீனாட்சியும் ராஜாவும் காட்டில் அமைந்து இருக்கும் பங்களா ஒன்றில் தங்க வைக்கபடுகின்றனர்.இரவில் இவர்கள் எதிர்பாரா வண்ணம் அங்கு நிலவும் அமைதியை குலைக்கும் வண்ணம் ஒரு வன்முறை கும்பல் ஒருவனை விரட்டி கொலை செய்கின்றது.இருவருக்கும் தங்களின் மதத்தின் மீதும் அதனூடான நம்பிக்கைகளிலும் ஏற்படும் கசப்பு தன்மை அக்காட்சியில் நிறைவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.மறுநாள் காலை மரங்களோடும் செடிகளோடும் வைத்து ராஜா மீனாட்சியையும்,அவளது குழந்தை சந்தானத்தையும் புகைப்படம் எடுக்கிறான்...அவர்களின் அர்த்தம் மிகுந்த பிரியமான நாட்கள் நிறைவுற போவதை சொல்லாமல் சொல்லும் காட்சி அது.இப்படத்தின் இயக்குனர் அபர்ணசென் மேற்கு வங்காளத்தின் பிரபல நடிகை,சத்யஜித்ரேயின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.தேர்ந்த இயக்குனருக்கு உரிய நேர்த்தியோடு இத்திரைபடத்தை இயக்கி உள்ளார்.மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கொங்கனா சென் மற்றும் ராகுல் போசின் நடிப்பு.கொன்கனா சென் அபர்னா சென்னின் மகள்,முதல் திரைப்படம் என்கிற சுவடே இல்லாமல் இயல்பாய் மீனாட்சியை வாழ்ந்துள்ளார்.ராகுல் போஸ் - மேடை நடிகரான இவருக்கும் இதுவே முதல் படம் மிகை இல்லாத நடிப்பும்,மெல்லிய புன்னகையுமாய் படம் முழுதும் வந்து கவர்கிறார்.வாழ்வில் எந்த நேரத்திலும் யார்மீதும் நேசம் பிறக்கும் என்பதை கவிதை நடையோடு சொல்லியதோடு,மத கலவரத்தின் கோர முகத்தையும் படம் பிடித்து காட்டியுள்ளார் அபர்ணா சென்.

4 comments:

KARTHIK said...

நல்லாருக்குங்க.

லேகா said...

Thanx Karthick :-)

Venky said...

I agree. this is a good movie...

லேகா said...

tnx Venky :-)