Monday, July 21, 2008

நோபல் பரிசு பெற்ற நாவல் :கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்க்வே



கடலும் கிழவனும் குறுநாவலை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..மறுவாசிப்பின் பொழுது நிச்சயமாய் சில புதிய ஆச்சர்யங்கள்,கருத்துக்கள் காணகிடைக்கும். நோபல் பரிசு பெற்ற இந்நாவலின் கதையமைப்பு மிக எளிமையானது.மிகுந்த கதைமாந்தரோ,சிக்கலான கதை பின்னணியோ,வாசிபாளனை கிறுகிறுக்க வைக்கும் யுக்தியோ எதுவும் இல்லாமல் ஒரு ஏழை மீனவ கிழவனின் ஒரு நாள் மீன்பிடி அனுபவத்தை விரிவாய் விவரிக்கும் கதையே இக்குறுநாவல்.

ஸாந்தயகா என்னும் பெயருடைய கிழவன் பல நாட்களாய் மீன்கள் எதுவும் சிக்காமல் வெறும்கையோடு கரை திரும்பி யாவரின் நகைப்பிற்கும் ஆளாகிறான்.கிழவனோடு தினமும் கடலுக்கு சிறுவன் ஒருவன் தன் தந்தையின் வற்புறுத்தலால் வேறு படகுக்கு செல்கிறான்.அச்சிறுவனுக்கும் கிழவனுகுமான உறவு அற்புதமானது. வேறு படகுக்கு சென்றாலும் தனக்கு மீன் பிடிக்க கற்று குடுத்த கிழவன் மீது அவன் கொண்டுள்ள அன்பு அளப்பெரியது.கிழவனும் அச்சிறுவனும் அடிக்கடி தங்களின் கடந்த கால மீன்பிடி அனுபவங்களை சொல்லி மகிழ்வது நிகழ கால கசப்பை மறப்பதற்கே...பெரிய மீன் எதுவும் கிடைக்காமல் தினம் கரை திரும்பினாலும் கிழவன் கொண்டுள்ள முயற்சியும் நம்பிக்கையும் சிறிதும் குறைவதில்லை.இந்நாவல் அழுத்தமாய் சொல்லவரும் கருதும் அதுவே...நாவலின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் கடல் மீன் வகைகளும்,கடல் சார்ந்த பறவைகளும் (Yellow Jack ,Man of War Bird,Fathoms,Bonita,Blue Rummer) அவற்றை காணும் ஆர்வத்தை தூண்டுகிறது.இன்று காக்கை தவிர வேறு பறவைகளை காண வழி இல்லாத நிலை ஏனோ மனதில் வந்து மறைந்தது..



எப்பொழுதும் போல ஒரு நாள் சிறுவனிடம் இருந்து விடைபெட்டிறு கொண்டு மீன் பிடிக்க செல்கிறான் கிழவன்.நீண்ட பயணத்திற்கு பிறகு பெரிய வகை மீன் ஒன்று அவன் வலையில் சிக்குகிறது.பெரும் எடை கொண்ட அம்மீனை படகினுள் இழுத்து போட இயலாததால் படகோடு அம்மீனை கட்டி கரைநோக்கி பயணத்தை தொடங்குகிறான்.இப்பெருத்த மீனும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகே அவனால் கொல்லப்படுகின்றது.சிறுவன் இல்லாத தனிமையை நிரப்ப தானே பேசிக்கொண்டு அம்மீனை சகோதரனாய் பாவித்து தன் பயணத்தை தொடர்கிறான்.இறந்த அம்மீனின் ரத்த வாசனை நுகர்ந்து கடல் பன்றி எனப்படும் சுறாமீன்கள் படகை நெருங்கி அம்மீனின் சிறு பகுதியை தின்று விட அவற்றோடு போராடி கொள்கிறான்..மீத முள்ள மாமிசம் மட்டுமே மிச்சம் அதனை எப்பாடுபட்டாது போராடி கரை சேர்த்திடும் கனவோடு கரையை நெருங்கும் சமயம் அவன் எதிர்பாரா வண்ணம் சுறா மீன்கள் படையெடுத்து வர தன் பழம் கொண்ட மட்டும் ஆயுதம் இன்றி தடியால் அவற்றை அடித்தும்,கொன்றும் விரட்டுகிறான்.இருப்பினும் அவனாம் வேட்டையாடிய மீனை அவற்றிடம் இருந்து காப்பாற்ற இயலாது வெறும் கூடு மட்டுமே மிஞ்சுகிறது..அம்மீனின் எலும்பு கூட்டின் பிரமாண்டத்தை பார்த்து யாவரும் வியந்து பேச கிழவன் தன் போராட்டத்தின் அயர்வினால் உறங்குகிறான் மறுநாள் மீன்பிடி பயணத்திற்காக.....

நாவலின் கதை எளிமையாய் இருந்தாலும் கூற வரும் கருத்து ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.எடுத்துக்கொண்ட காரியத்தில் பிரியமும்,ஆர்வமும் இருக்க அதனோடு விடா முயற்சியும் மேலான சிரத்தையுடன் கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம்..இவை யாவும் கொண்டு முயன்ற கிழவன் வெற்றியை சுவாசித்த திருப்தியோடு ஒவ்வொரு நாளும் தன் அடுத்த பயணத்தை நம்பிக்கையோடு தொடர்கிறான்.

19 comments:

Anonymous said...

Well done for this wonderful blog.

KARTHIK said...

நல்ல மொழிபெயர்ப்பு
நல்லருக்கு :-))

லேகா said...

Thanks a lot Fast Cash!!

லேகா said...

Thanks a lot Karthick..tnx for ur continuos encouragement..

தியாகு said...

"அவற்றை அடித்தும்,கொன்றும் விரட்டுகிறான்.இருப்பினும் அவனாம் வேட்டையாடிய மீனை அவற்றிடம் இருந்து காப்பாற்ற இயலாது வெறும் கூடு மட்டுமே மிஞ்சுகிறது..அம்மீனின் எலும்பு கூட்டின் பிரமாண்டத்தை பார்த்து யாவரும் வியந்து பேச கிழவன் தன் போராட்டத்தின் அயர்வினால் உறங்குகிறான் மறுநாள் மீன்பிடி பயணத்திற்காக....."

தமது நோக்கம் கைகூடவில்லை எனினும் கொண்ட செயலில் உழைப்பும் முழுமையான அர்பணிப்பும் இருந்தால் வெற்றியை சுவாசித்த திருப்தி கிடைக்கும் என்று இந்நாவல் தெளிவாக விவரிக்கின்றது . தங்கள் எழுத்து நடை அழகாக உள்ளது .

லேகா said...

நன்றி தியாகு, உங்கள் விமர்சனம் மேலும் எழுத உற்சாகமூட்டுவதாய் இருக்கின்றது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்த நாவலைப் பல வருடங்களுக்கு முன் படித்தது.

தமிழிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன.

லேகா said...

//இந்த நாவலைப் பல வருடங்களுக்கு முன் படித்தது.

தமிழிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன.//

உங்கள் பதிவிற்கு நன்றி சுந்தர்.
நான் படித்து யோகியார் என்பவற்றின் மொழிபெயர்ப்பு.

naren said...

கடலும் கிழவனும் - இந்த நாவலில் பயன்படுட்ட பட்டவை குறியீடுகளே என சொல்ல தோன்றுகிறது லேகா !..வெறும் கைய்யோடு போகும் கிழவன் , மிகுந்த போராட்டத்திற்கு பிறகும் வெறும் கையோடே திரும்ம்புகிறான் . வாழ்கை பலருக்கு அத்தகையது தான் . வாழ்கை எனும் ஆழமான கடலில் சிலருக்கு சுறாக்கள் கிடைக்கின்றன , சிலருக்கு விரால் மீன்கள் கிடை கின்றன . ஆனால் அனைவரும் இருப்பதை வைத்து போராடுகிறோம் ...சிலவற்றை இழக்கிறோம் , கிடைப்பதை உண்கிறோம் ,நமக்கு நேம் ஆறுதல் சொல்கிறோம். நம்மை நாமே தேறுதல் சொல்கிறோம் . ( சென்னை வீதிகளில் பலர் தனுக்கு தானே மெல்லிய குரலில் பேசி செல்வதை நீங்கள் கண்டிருக்கலாம் - நான் பைத்தியங்களை சொல்லவில்லை )....வாழ்கையின் இறுதியில் பலருக்கு மிஞ்சுவது- நமது வாழ்கை போராட்டத்தின் அனுபவ காயங்கள் ( அந்த மீன் கூட்டை போல )...
உண்மையில் லேகா , அருமையான தோல்வியை அனுபவித்து ருஸித்தவர்கலுக்கு (!?) இந்த கதையின் ஆழம் புரியும் .
.
இது உங்களுக்கு தெரியும் என நினைகிறேன் .....இந்த கதையை ஹெமிங்க்வே எழுதி முடித்து , பல பதிப்பகங்களை நாடினார்..அவர்கள் யாரும் இதை பதிப்பிக்க தயாராக இல்லை " என்னையா இது !..ஒரு கிழவன் போறான் , மீன் பிடிக்கிறான் ,சிறுநீர் கழிக்கிறான்..இதில் என்னையா இருக்கு என்றார்களாம் !...வெகு காலம் யாரும் பதிப்பிக்கவில்லை ...மிகுந்த போராட்டத்திற்கு பிறகே அதை வெளி கொண்டு வந்தார் ..அதன் பின்பு " அகா!...வாழ்க்கைன்னா என்னனு அழகா சொல்லிட்டாருப்பா !" என்றார்களாம் .வேடிக்கை மனிதர்கள் !
போராடி தோல்வியை -கவித்துவமான தோல்வியை ருசிட்டவனுக்கு புரியும் அந்த கிழவனின் போராட்டமும் ,கடல் தந்த காயமும் அந்த தூக்கத்தின் ஆழமும் .ஏனனில் , இங்கே பலரின் வீட்டு வாசலிலும் ,அந்த மீனின் கிழவனுக்கு இறுதியில் கிடைத்ததை போல தன் தோல்வியை பறைசாற்றும் முல்லெலும்ம்பு தொங்கிக்கொண்டுள்ளது

லேகா said...

நீண்டதொரு விளக்கத்திற்கு நன்றி நரேன்.

//வாழ்கையின் இறுதியில் பலருக்கு மிஞ்சுவது- நமது வாழ்கை போராட்டத்தின் அனுபவ காயங்கள்//

உண்மை தான்.முதல் வாசிப்பின் பொழுது பிடிபடாத பல விஷயங்கள் மறு வாசிப்பின் பொழுது புலர்ந்தது.

naren said...

athu sari lekha ..neenga salma,sugirtharani kavithaikal padithatunda..siruvar ilakkiyam na enna nu ketirunthen .athu enna lekha?.

naren said...

ennanga lekha ithu?..thaguthi konda ungalidam pathilai naan ethir paarthaal ,pathil solluvathai thavirthu kelviyai mattum pirasurikkireerkale? :)

naren said...

ennanga lekha ithu?..thaguthi konda ungalidam pathilai naan ethir paarthaal ,pathil solluvathai thavirthu kelviyai mattum pirasurikkireerkale? :)

லேகா said...

அன்பின் நரேன்,

மன்னிக்கவும் ,தங்களின் கேள்வி எந்த பதிவில் வந்தது என்பதை அறியாது விட்டுவிட்டேன்.நீண்ட தேடலுக்கு பிறகு ஒருவழியாய் கண்டு கொண்டுவிட்டேன்.

சிறுவர் இலக்கியம் குறித்து இதோ!!

இன்றும் எனக்கு நினைவில் உள்ளது நான் வாசித்த முதல் நாவல்.கி.ரா வின் "பிஞ்சுகள".சிறுவர் இலக்கிய விருது பெற்றது எனகூறி அப்பா வாசிக்க தந்த பொழுது எனக்கு வயது 14.ஒரு வெற்று மனநிலையில் வாசிக்க தொடங்கிய அந்த நாவல் தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.குழந்தைகள் உலகம்,அதற்கே உரிய ஏக்கங்கள்,விளையாட்டுகள்,கனவுகள்,கற்பனைகள் என விரியும் இக்கதை தமிழில் வந்த மிக சிறந்ததொரு சிறுவர் இலக்கிய நூல்.

சிறுவர்களுக்கு என,சிறுவர்கள் உலகை தெளிவாய் பகிர்ந்தளிக்கும் யாவும் சிறுவர் இலக்கியமே.
என் புரிதல் கொண்டு விளக்கியுள்ளேன்.

லேகா said...

நரேன்,

கவிதைகளில் அவ்வளவு நாட்டமில்லை.இருப்பினும் தேர்ந்த தொகுப்புகள் சிலவற்றை பரிந்துரைக்கவும்.வாசிக்க முயல்கிறேன்.

naren said...

அன்பு தோழி லேகா ...எனது பரிந்துரைபுகளுக்கு பஞ்சமே இல்லை ...
இவைகளில் நான் படித்தது கொஞ்சமே ..இந்த ஆண்டுக்குள் கீழ்கண்டவைகளை படித்து விட சபதம் பூண்டிருக்கிறேன் (எண் அக்கா விடம் பெட் கட்டியிருக்கிறேன் ). சரி அதை விடுங்கள் ...உங்களது உடனடி பத்தி என்னை உற்சாகம் கொள்ள வைக்கிறது .நன்றி ..

அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.

பெரியபுராணம் - சேக்கிழார்.

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.

அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.

வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.

தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.

வரும்போகும் - சி. மணி.

சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.

கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.

ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.

நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.


படிக்கவேண்டிய புத்தகங்கள்

கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.

மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்.

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.

பொன்னியின் செல்வன் - கல்கி.

வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன்.

தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.

மோகமுள்,செம்பருத்தி -தி.ஜானகிராமன்.

பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.

எங்கே போகிறோம் - அகிலன்.

ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.

ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.

18 வது அட்சக்கோடு,கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.

அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.

சாயாவனம் -சா. கந்தசாமி.

குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி.

குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா.

கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்.

கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.

கடல்புரத்தில் -வண்ணநிலவன்.

சிறகுகள் முறியும் -அம்பை.

என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.

இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.

தேவன் வருகை -சுஜாதா.

யவனராணி -சாண்டில்யன்.

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.

ஒரு மனுஷி -பிரபஞ்சன்.

கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.

அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.

பச்சைக்கனவு - லா.ச.ரா.

தலைமுறைகள் -நீலபத்மநாபன்.

ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.

பிறகு -பூமணி.

புத்தம் வீடு -ஹப்சி.பா.ஜேசுதாசன்.

நுணலும்,புனலும் -ஆ.மாதவன்.

மௌனி சிறுகதைகள் -மௌனி.

நினைவுப்பாதை -நகுலன்.

சம்மதங்கள் -ஜெயந்தன்.

நீர்மை -ந.முத்துசாமி.

சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம்.

புதிய கோணங்கி - கிருத்திகா.

வாசுவேஸ்வரம் - கிருத்திகா.

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி

கடலோடி - நரசையா.

குசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா

சின்னம்மா - எஸ்.ஏ.பி.

படகு வீடு - ரா.கி.ரங்கராஜன்.

வழிப்போக்கன் - சாவி.

மூங்கில் குருத்து - திலீப்குமார்.

புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்.

ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.

ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.

மிஸ்டர் வேதாந்தம்,ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.
பாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.

வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.

பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.

சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி.

வளரும் தமிழ் - தமிழண்ணல்.

மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.

என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.

காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.


நாடகங்கள்

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.


மொழிபெயர்ப்புகள்:

அழிந்த பிறகு - சிவராமகரந்த்

பாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்

அந்நியன் - ஆல்பெர்காம்யு

சிறுகதைகள் - ஒ' ஹென்றி

முஹம்மது ,ஹாரிஸ் said...

சிலமாதங்களுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகத்துக்கு சென்றிருந்த
போது இதை வாங்கி அறைக்கு வந்து சேரும் முன்னரே வசித்து முடித்து விட்டேன். அத்துணை விறுவிறுப்பு காட்சி விரிப்பு. அதை வாசிக்கும் போது நீங்கள் மேலே விவாதித்த அன்றாட வாழ்கை
போரட்டங்களும் அதன் இறுதி காயங்களும் நினைவுக்கு வர தவறவில்லை. ஜெயமோகனின் காடு நாவலை வாசித்துவிட்டு,
இன்னொரு மொழிபெயர்ப்பு நாவலான என் பெயர் சிவப்பு வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். நீங்களும் இதை வாங்கி இருப்பிர்கள் என்று நினைக்கிறன். விரைவில் என் பெயர் சிவப்பில்
சந்திப்போம்

Pasanga said...

தகவலுக்காக
------------

அடுத்தகட்ட வாசிப்புக்கு உதவக்கூடும்.

Source :-

http://omnibus.sasariri.com/2013/03/blog-post_2579.html

இந்தக்கதையை மீன் பிடிப்பது பற்றிய கதையாக மட்டும் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது அபத்தம். மீன்பிடி நுட்பங்கள் என்பது இக்கதையில் ஒரு தளம் அவ்வளவு தான். அதைத்தாண்டி இக்கதை வாழ்க்கையை, அதன் இரக்கமற்ற தன்மையை பேசும் கதையாகவும் காணலாம். உறவுக்கான ஏக்கமும் வெல்ல முடியாத தனிமையையும், விளிம்புகளற்று நிரம்பியிருக்கும் சூனியத்தையும், வாழ்வின் நோக்கம்/சாரம் என்றும் நாம் சாதித்தவை என்றும் இறுமாந்திருக்கும் அனைத்தையும் கடித்து கிழிக்கும் கோரை பற்கள் கொண்ட காலத்தின் கருணையற்ற அகோர முகத்தினை காட்டும் கதை என்றும் வாசிக்கலாம். மனிதனும் இயற்கையும் கொள்ளும் உறவை பற்றிய தத்துவ விசாரணையாகவும் அணுகலாம். வேகமும் போட்டியும் நிறைந்த இவ்வுலகில் தன் அடையாளத்தை நிலைநாட்ட துடிப்பவனின் கதை என்றும் சொல்லலாம் (ஹெமிங்வேயின் முந்தைய படைப்பு விமர்சகர்களால் வெகுவாக விமர்சிக்கப்பட்டு, கிழவனும் கடலும் வழியாகவே அமெரிக்க எழுத்துலகில் தன்னை மீண்டும் நிறுவினார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்). விவிலிய படிமங்களை ஹெமிங்வே இக்கதையில் பெருவாரியாக பயன்படுத்தியிருக்கிறார், விவிலிய தளத்திலும் ஒரு வாசிப்பு சாத்தியம் தான். அவ்வளவு ஏன் பலனை எதிர்நோக்காத கர்மம் – எனும் கீதையின் சாரத்தை சொல்லும் கதையாக கூட இதை வாசிக்க முடியும்.

Pasanga said...

தகவலுக்காக

omnibus தளம் அடுத்தகட்ட வாசிப்புக்கு உதவக்கூடும்.

Source :-

http://omnibus.sasariri.com/2013/03/blog-post_2579.html

இந்தக்கதையை மீன் பிடிப்பது பற்றிய கதையாக மட்டும் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது அபத்தம். மீன்பிடி நுட்பங்கள் என்பது இக்கதையில் ஒரு தளம் அவ்வளவு தான். அதைத்தாண்டி இக்கதை வாழ்க்கையை, அதன் இரக்கமற்ற தன்மையை பேசும் கதையாகவும் காணலாம். உறவுக்கான ஏக்கமும் வெல்ல முடியாத தனிமையையும், விளிம்புகளற்று நிரம்பியிருக்கும் சூனியத்தையும், வாழ்வின் நோக்கம்/சாரம் என்றும் நாம் சாதித்தவை என்றும் இறுமாந்திருக்கும் அனைத்தையும் கடித்து கிழிக்கும் கோரை பற்கள் கொண்ட காலத்தின் கருணையற்ற அகோர முகத்தினை காட்டும் கதை என்றும் வாசிக்கலாம். மனிதனும் இயற்கையும் கொள்ளும் உறவை பற்றிய தத்துவ விசாரணையாகவும் அணுகலாம். வேகமும் போட்டியும் நிறைந்த இவ்வுலகில் தன் அடையாளத்தை நிலைநாட்ட துடிப்பவனின் கதை என்றும் சொல்லலாம் (ஹெமிங்வேயின் முந்தைய படைப்பு விமர்சகர்களால் வெகுவாக விமர்சிக்கப்பட்டு, கிழவனும் கடலும் வழியாகவே அமெரிக்க எழுத்துலகில் தன்னை மீண்டும் நிறுவினார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்). விவிலிய படிமங்களை ஹெமிங்வே இக்கதையில் பெருவாரியாக பயன்படுத்தியிருக்கிறார், விவிலிய தளத்திலும் ஒரு வாசிப்பு சாத்தியம் தான். அவ்வளவு ஏன் பலனை எதிர்நோக்காத கர்மம் – எனும் கீதையின் சாரத்தை சொல்லும் கதையாக கூட இதை வாசிக்க முடியும்.