Tuesday, June 17, 2008

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்
மரணமும்,அதை சார்ந்த நிகழ்வுகளும் எப்போதும் அச்சம் தருபவையே.... சம்பத்தின் மரணத்தை அடுத்து அவனூடான நினைவுகளோடு காலத்தை பின்னோக்கி பார்க்கும் அவனின் மூன்று நண்பர்களின் பார்வையில் செல்லும் இக்கதை எஸ்.ரா வின் சமீபத்திய குறுநாவல்.சம்பத் நிலையான எண்ணம்,சிந்தனை,செயல்,தொழில் இல்லாது அந்தந்த பொழுதினை போக்க பல வேடம் தரித்து யாருக்கும் நன்மை இன்றி வாழ்ந்து இறக்கிறான்.சில பொழுதுகளில் பெரும் சிந்தனையாளனாக,பேச்சாளனாக இருக்கும் அவன் சில பொழுதுகளில் தன் வசம் மறந்து சினம் கொண்டு மூர்க்கனாய் வெளிபடுகின்றான்..
சம்பத்தின் பால்ய காலம்,கல்லூரி வாழ்க்கை,காதல்,திருமணம்,அவன் மேற்கொண்ட தொழில்கள்,தந்தையுடன் அவன் கொண்ட மோசமான சண்டை,பிழைக்க கனவுகளோடு மட்டுமே சென்னை வந்தது.....என யாவும் அவனது நண்பர்கள் மூலமாகவே நமக்கு தெரியபடுதுகிறார் ஆசிரியர்.

சம்பத்தின் வாழ்கையை கல்லூரிக்கு முன்,கல்லூரிக்கு பின் என பிரித்து அறியலாம்..தமிழ் மீது கொண்ட பேரன்பினால் கல்லூரியில் தமிழ் பயில்கிறான்,உடன் பயிலும் சக மாணவியான யாழினியின் மீது கொண்ட பிரியத்தால் கடவுள் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து அவளோடு பல கூட்டங்களுக்கு சென்று உரையாற்றி நண்பர்கள் மத்தியில் நாயகனாய் வலம் வருகிறான். சென்னையில் ஒரு கூட்டத்தில் பகவத்கீதையை எரித்து சிறை செல்கிறான்..இவ்வாறாக ஒரு புரட்சியாளனாக,சிறந்த பேச்சாளனாக வாழ்வை எதிர்நோக்கி செல்கையில் குடி போதையால் மதி இழந்து இயக்கத்தினால் புறக்கணிக்கபடுகிறான்..

பின்பு லாட்டரி மோகம் கொண்டு தனி அறை எடுத்து தங்கி லாட்டரி சீட்டுக்கள் வாங்கியே மதுவோது நாட்களை களிகின்றான்.அவன் தங்கி இருக்கும் லொட்ஜ் அருகே தொலைபேசி பூத்தில் பணிபுரியும் ஜெயந்தியுடன் நட்புடன் காதல் கொண்டு அவளை மணக்கிறான்..பின்பு லாட்டரி தொழிலை விட்டு அச்சகம் ஒன்றில் பணியில் சேர்ந்து அங்கு பணத்தை கையாடல் செய்து மனைவியுடன் தப்பி சென்னை செல்கிறான்..இக்கதையில் சம்பத் மற்றும் அவன் சார்ந்த நிகழ்வுகள் யாவுமே மாயை என நினைக்க தோன்றுகிறது..அவான் அனுபவங்கள் யாவும் அடர்ந்த கட்டின் இரவு பொழுதை போல இருள் கவ்வி செல்கிறது ..

சென்னையில் அழகரை சந்திக்கும் சம்பத் மனைவியோடு பொருட்கள் வாங்கி கொண்டு புதிய வாழ்வை தொடங்கும் தெளிர்ச்சியில் உரையாடுவது அவன் மீது பரிதாபத்தை கூடுகின்றது..சம்பத்தின் கடைசி காலங்களில் அவனோடிருந்து அவன் சுக துக்கங்களில் பங்கு கொள்ளவது ராமதுரை.. அதனால் தான் எனவோ சம்பத்தின் மரணம் தாளாமல் தொடர்ந்து சிந்தனை செய்து கொண்டே மற்றவர்களிடம் அவனை குறித்த நிகழ்வுகளை பகிர்க்கிறான்.சம்பத் இறந்த பின் அவனது நண்பர்கள் மூவரும், மனைவியும்,கல்லூரி தோழி யாழினியும் மட்டுமே இருந்து இறுதி சடங்குகளை முடிக்கின்றனர்...

பொதுவாய் சிறப்பாய் வாழ்ந்து இறந்தவர்களின் கடந்த காலங்கள் மட்டுமே பேசுவதற்கும்,நினைப்பதற்கும் விருப்பமாய் இருக்கும்..கசப்பான நிகழ்வுகளை கொண்ட சம்பத்தின் வாழ்வை அவன் நண்பர்கள் நினைவோடையில் பின்னோக்கி சென்று பார்பதை நிறைந்த வெறுமை கொண்டு எஸ்.ரா விவரித்துள்ளது மரணத்தின் மீதான பயத்தை அதிகரிக்க செய்கின்றது..திட்டமிடாத வாழ்கையின் சோகத்தை எடுத்துரைக்கின்றது..மதுவின் தீமையை சொல்லுகிறது..வாழ்விற்கான தேடல் நிலையானதாக இருக்க வேண்டுமென சொல்லுகிறது....இக்கதை முழுதும் நிலவும் கனத்த மௌனம் சொல்லுபவை இன்னும் எத்தைனையோ..

6 comments:

Venky said...

this is really excellent story. it shows the reality of our society. lot of people around us living this life style.

லேகா said...

Hi Venky..

Yeah this is of the interesting novels i read..excellant work of S.Ra..a bit dry story line..but still well deserved novel..

Vignesh said...

ஒரு வாசகனாக உறுபசி என்னக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்....
மிக நன்றாக எழுதப்பட்ட கட்டுரை வாழ்த்துகள்....

லேகா said...

நன்றி விக்னேஷ்...எஸ்.ரா எழுத்துக்கள் எபோதும் இதமானவை..உறுபசி அதில் இருந்து சிறிது மாறுபட்ட நாவல்..மரணத்தின் சுவடுகளை அதனோடு பயணித்து அறிந்து கொள்வதாய் இருக்கின்றது இந்நாவல்.

KARTHIK said...

// கசப்பான நிகழ்வுகளை கொண்ட சம்பத்தின் வாழ்வை அவன் நண்பர்கள் நினைவோடையில் பின்னோக்கி சென்று பார்பதை நிறைந்த வெறுமை கொண்டு எஸ்.ரா விவரித்துள்ளது மரணத்தின் மீதான பயத்தை அதிகரிக்க செய்கின்றது..திட்டமிடாத வாழ்கையின் சோகத்தை எடுத்துரைக்கின்றது. //

நேரமிருந்தால் இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க சாவை பத்தின பயம் தெளியலாம் இடைவெளி-எஸ்.சம்பத்

லேகா said...

நன்றி கார்த்திக்,
எஸ்.சம்பத் எழுதிய இடைவெளி குறித்த கட்டுரை படித்தேன் மரணத்தின் மீதான மற்றுமொரு அழகிய படைப்பு....ஒரே அற்புத நூலை அறிமுகம் செய்ததற்கு நன்றி..