Wednesday, February 2, 2011
Yesterday (2004 ) - THE MOTHER
நாயகியின் பெயரே yesterday.தந்தை தனக்கு yesterday என பெயரிட்டதை குறித்தான அவளின் சிறு விளக்கம், தன் மகளுக்கு அவள் Beauty என பெயரிட்டுள்ளதை நியாயபடுத்த போதுமானது.தூரத்து நகரமொன்றில் வேலை செய்யும் கணவனின் வரவை எதிர் நோக்கி,ஏழு வயது மகளுடன் அமைதியாய் கழியும் நாட்கள் அவளுக்கானவை.தாயும் மகளும் பேசிக்கொள்ளும் காட்சிகள் கொள்ளை அழகு.."நமக்கு ஏன் சிறகுகள் இல்லை...பறவையை போல..வேகமாய் உயரமாய் சென்றிட..","ஓடை நீரானது நிலத்தில் இருந்து மலைக்கு செல்லாதது ஏன்.......?" என சிறுபிள்ளையின் வியப்பும்,கேள்விகளும் நிறைந்த உலகினுக்குள் மலர்ந்த சிரிப்புடன் இவளும் பயணிக்கும் தருணங்கள்...உன்னதம்.
அழகும்,அமைதியும் நிறைந்த கிராமம்,அவ்வூரின் பள்ளிக்கு புதிதாய் வரும் ஆசிரியை..தாய் மற்றும் மகளின் பேரன்பிற்குரிய தோழியாய் மாறிப்போவது,குழாய் அடியில் சந்திக்கும் பெண்களின் வம்பு பேச்சுக்கள்,Yesterday க்கு நிகழும் எதிர்பாரா நிலையை அக்கிராமத்தினர் எடுத்துக்கொள்ளும் விதம்,கிராமங்களுக்கு அரசாங்கம் மறுத்தலிக்கும் மோசமான மருத்துவ வசதிகள் என யாவும் வெகு இயல்பாக படமாக்கப்பட்டுள்ளன.
ஏதோ ஒரு நோயின் அறிகுறிகளை கொண்டு,Yesterday அவதிப்படுவது சலனமில்லாமல் முதல் காட்சியில் இருந்தே தெரிவிக்கப்படுகின்றது.மெல்ல மெல்ல வீரியத்தை உணரும் பொழுது..நிலை குலைந்து போகாமல், எதிர்காலம் குறித்து திடமான முடிவு செய்யும் பக்குவபட்ட பெண்ணாக Yesterday இருக்கிறாள்."Your body is strong enough to resist the virus" என கூறும் மருத்துவரிடம்.."No,my mind is strong" என்கிறாள்.
எய்ட்ஸ் நோயின்மோசமான விளைவுகளை இத்தனை மென்மையாக சொல்ல இயலுமா என்றிருந்தது. கணவனின் போக்கால் அழகான குடும்பம் சிதைந்து போவதாக காட்டி இருந்தால் இத்திரைப்படம் முழு மதிப்பை பெற்றிருக்காது.மாறாக நோயாளிக்கு தேவையான மன உறுதியை yesterdayயின் மூலம் அழுத்தமாகவே பதிவு செய்கின்றது ஆர்ப்பாட்டம் இல்லாத காட்சிகளின் வழியே.
நோயால் பீடிக்கப்பட்டு ஊர் திரும்பும் கணவனை கவனித்து கொள்ள அவள் எடுத்து கொள்ளும் பிரயத்தனங்கள் கடுமையானவை.முகம் சுளிக்கும் கிராமத்தினரிடம் இருந்து அவனை பாதுகாத்து,கிராமத்திற்கு வெளியே தனியொரு வீட்டை உருவாக்கி கவனித்து கொள்ளும் yesterday ராட்சச பலம் பொருந்திய பெண்ணாக தோற்றம் கொள்வதில் வியப்பில்லை.
கொண்ட உறுதியுடன் மகளை முதல் நாள் பள்ளியில் சேர்க்கும் வரை நோயின் தீவிரத்தை நெருங்க விடாமல் மனவலிமை மிக்க பெண்ணாக Yesterday.வெள்ளந்தி சிரிப்பும் ,உணர்ச்சிபூர்வமான நடிப்புமாய் Yesterdayவாக வரும் லிலிடீயின் நடிப்பு அபாரம்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக புகுத்தப்பட்ட காட்சிகளோ..பிரச்சார நெடியோ சிறிதும் இல்லாத கதையமைப்பு.படிப்பறிவில்லாத,மனவலிமை பொருந்திய ஒரு தாயின் உணர்வு பூர்வமான பயணம்.எளிதில் மனதைவிட்டு அகல கூடியவள் அல்ல Yesterday .
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
Interesting post...
thanks lekha for sharing
நல்ல பகிர்வு. நன்றி.
நல்ல பகிர்வு. பாதுர வேண்டியது தான்.
அம்ரீக்கா என்ற அரபிக் படத்தை பாத்தாச்சா ? ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையும் துணிவையும் சொல்லும் படம். அவசியம் பாருங்கள். அந்த படத்தை பற்றி படிக்க....
http://nilamukilan.blogspot.com/2010/11/blog-post_27.html
பகிர்வுக்கு நன்றி லேகா!
நல்ல விமர்சனம்
நல்ல விமர்சனம்
நன்றி சுகிர்தா
நன்றி ராம்ஜி
நன்றி கனாக்காதலன்
@நிலா முகிலன்,நீங்க குறிப்பிட்டு இருக்குற திரைப்படம் பார்ததில்லைங்க.பகிர்வுக்கு நன்றி.
நன்றி கயல்
நன்றி கார்த்திக்
Torrent ல தேடித் பார்த்தேன், கிடைக்கல.. லிங்க் எதாச்சு பரிந்துரைக்க முடியுமா லேகா?
Sugirtha....I used watch movies in dvds.Really sorry,am not aware of any download links.
no problem... thank you! :)
நல்ல விமர்சனம்
http://vkschellam.blogspot.com/2011/03/blog-post_20.html
http://specialdoseofsadness.blogspot.com/
add tis movie blog to ur google reader...essays r written in simple english and very shortly...
add tis movie blog too
http://cliched-monologues.blogspot.com/
..d..
About AIDS the movie you may see is Philadelphia..
supereb film from Tom Hanks and equally from Denzel Washington..
the courtroom dramas and a scene when Tom listens to Opera and the way he explains the experience of listening to an opera are memorable..
Post a Comment