Saturday, January 30, 2010

கிருத்திகாவின் "வாசவேச்வரம்"

காலச்சுவடு கிளாசிக் வரிசையில் மற்றுமொரு நல்ல நாவல்.1966 இல் எழுதப்பட்டுள்ள இந்நாவல் ஆண்டுகள் பல கடந்தும் அதன் புத்துணர்ச்சி குறையாமல் உள்ளது.வாசவேச்வரம் என்னும் கற்பனை கிராமத்தின் கதை.கிராமத்தின் ஆறு குளங்கள்,கோவில்கள,வயல்வெளிகள் குறித்தெல்லாம் விவரணைகள் அதிகம் தேவை இல்லை என கருதி நேரடியாய் அக்கிராமத்தின் பிரதான குடும்பங்களின் குறித்த அறிமுகத்தோடு நாவல் தொடங்குகின்றது. சுப்பு குட்டி சாஸ்திரியின் கதாகாலசேபத்துடன் தொடங்கும் இந்நாவல் அவரின் கதாகாலசேபத்துடன் முடிகின்றது.இடைப்பட்ட காலத்தில் நிகழும் கதை, குடும்ப வாழ்வின் சிடுக்குகளை..அதிலும் முக்கியமாய் பெண்களின் ஊற்றெடுக்கும் ஆசைகளை அதன் காரணமாய் உண்டாகும் சங்கடங்களையும் சொல்லுகின்றது.


பாட்டா,வாசவேச்வரம் கிராமத்தின் மரியாதைக்குரிய பெரியவர்.இவரின் கம்பீரமும் தீர்க்கமான மனதைரியமும் பல இடங்களில் புலப்படுகின்றது.ரோஹிணி,அக்கிராமத்தின் படித்த,சௌந்தர்யம் மிக்க ஒரே பெண்..இவளின் கணவன் சந்திரசேகர் ஐயர்,வயற்காட்டு வேலைகள் மீது மட்டுமே மோகம் கொண்டு,புத்திகூர்மை கொண்ட ரோஹினியின் முன்னர் தாழ்மைஉணர்ச்சி கொண்டு இருக்கும் சராசரி மனிதர்.டாக்டர் சுந்தா,எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம் செய்யும் முன்கோபி.முற்போக்கு சிந்தனைகள் கொண்ட வாசுவேச்வரத்தின் இளைங்கர்களை எல்லா விதத்திலும் எதிர்க்க துணிந்த மூடன்.சுப்பையா,பெயர் தெரியா வியாதியின் பிடியில் மட்டும் அல்லாது சதா திட்டி கொண்டிருக்கும் மனைவி விச்சுவின் பிடியிலும் உழல்பவர்.




வாசவேச்வரத்தின் ஆண்கள் பலர் மனைவி மீது கொண்டுள்ள பிரியத்தை காட்டிலும் மற்ற பெண்டிரின் மீது மோகம் கொண்டவராகவும் உள்ளனர்சுப்பு குட்டி,சுந்தாவை போல,பெண்கள் சிலர் கொண்டவனை எப்போது குறை கூறி,இயலாமையில் பொறாமை கொண்டவர்களாக உள்ளனர் விச்சுவை போல.முக்கியமான பாத்திரபடைப்பு பிச்சாண்டியுடையது.எழுச்சி மிக்க சிந்தனை கொண்டவனாக,புரட்சிகாரனாக ஊரில் கலகங்கள் செய்து திரியும் இவனுக்கும் ரோஹிணிக்குமான பிரியம் அர்த்தம் மிகுந்தது.


குழப்பமும்,சங்கடங்களும் நிறைந்ததாகவே இருப்பினும் வாசவேச்வரதினரின் அன்றாட வாழ்க்கை அதன் போக்கில் சென்ற கொண்டிருக்கின்றது....தேர் திருவிழாவிற்கு முன்வரை..எதிர்பாராது நிகழும் ஒரு கொலையின் பொருட்டு ஏற்படும் குழப்பங்கள்..பாட்டா அதன் உண்மையை அறிய முயல்வதும்..அதன் தொடர்ச்சியாய் ஒரு தற்கொலையும் என முடிகின்றது.ஒரு சிறு கிராமத்தின் வெவ்வேறு மனித மனங்களின் ஆசைகள்,ஏக்கங்கள்,தாழ்வுணர்ச்சி,ஈடேரா காதல்,புரிதல் அற்ற வாழ்வு,போலித்தனங்கள் ஆகியவற்றை பூடகமாய் சொல்லுகின்றது இந்நாவல்.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 140 ரூபாய்

19 comments:

பிச்சைப்பாத்திரம் said...

லேகா, நீண்ட காலமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நாவல். இப்போதுதான் கிடைத்திருக்கிறது. உங்கள் அறிமுகமும் விரைவில் வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி.

குப்பன்.யாஹூ said...

புதிது புதியதாய் புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்வதற்கு நன்றிகள் லேகா.
உங்கள் விமர்சனமும் மிக அருமை.

இந்த எழுத்தாளர் பற்றியும் தெரிந்தால் எழுதவும் (விக்கிபீடியா, கூகிள் தேட சோம்பல்)

சங்கர் said...

வாங்கி வச்சிருக்கேன், படிக்கணும்,

தலைவர் இந்தப் புத்தகம் பற்றி கணையாழி கடைசிப் பக்கங்களில் எழுதி இருக்கிறார்

சங்கர் said...

இடுகை ரெண்டு நாளாய் டிராப்டில் இருந்ததோ ?

அண்ணாமலையான் said...

அழகான அறிமுகம்.. முயற்சிக்கறேன் வாசிக்க..

KARTHIK said...

இத விட சுருக்கமா ஒரு புத்தகத்துக்கு விமர்சன்ம் எழுதவே முடியாது போங்க :-))

லேகா said...

நன்றி சுரேஷ்,

இந்நாவலில் வாசகன் புரிதலுக்கே அனேக விஷயங்கள் விடப்பட்டுள்ளன....

வெகுநாளாய் படிக்க வேண்டிய விருப்ப பட்டியலில் இருந்த நூல் இது.

லேகா said...

நன்றி ராம்ஜி,

கிருத்திகாவை குறித்து நூலில் இருந்தது சொற்பமே.நாளை விரிவாய் பின்னூட்டமிடுகிறேன்.

லேகா said...

நன்றி சங்கர்..ட்ராப்ட்ல இருந்தது தான்..??!!

நன்றி அண்ணாமலையான்

லேகா said...

வருகைக்கு நன்றி கார்த்திக்.

நீங்க சொல்லவருவதின் அர்த்தம் புரியவில்லை..

நர்சிம் said...

அறிமுகத்திற்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு இந்தப் புத்தகம் புதிய அறிமுகம்.. நன்றிங்க

சங்கர் said...

டேஷ்போர்டில் வந்த தேதி பிப் 1, இடுகை காட்டுவதோ ஜன. 30 , அதனால் தான் கேட்டேன்

லேகா said...

நன்றி நர்சிம் :-)

@கார்த்திகை பாண்டியன்

நன்றி

bogan said...

கிருத்திகா தி ஜா வுக்கு இணையாக கவனம் பெற்றிருக்க வேண்டியவர்

லேகா said...

போகன்,

சரியாக சொன்னீங்க.இந்த நாவல் படிக்கும் பொழுது ஏதேனும் ஒரு இடத்திலாவது தி.ஜா குறித்து நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழில் கவனம் பெறாமல் போன எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

bogan said...

குறிப்பாக மலைமேல் ரோகிணியும் பிச்சாண்டியும் சந்திக்கும் காட்சியில் சூரிய அஸ்தமன பின்னணியும் அவர்கள் சம்பாஷனையும் அற்புதம் தி ஜா நாவல்களில் இதே போன்று இயற்கையும் மனிதமனமும் சரியாக சுருதி சேர்ந்த தருணங்கள் நிறைய காணலாம்

bogan said...

குறிப்பாக மலைமேல் ரோகிணியும் பிச்சாண்டியும் சந்திக்கும் காட்சியில் சூரிய அஸ்தமன பின்னணியும் அவர்கள் சம்பாஷனையும் அற்புதம் தி ஜா நாவல்களில் இதே போன்று இயற்கையும் மனிதமனமும் சரியாக சுருதி சேர்ந்த தருணங்கள் நிறைய காணலாம்

Anonymous said...

hi
can you tell me where to get the book..
been searching for a while