Thursday, January 21, 2010

அய்யனாரின் "நானிலும் நுழையும் வெளிச்சம்" கவிதை தொகுதி

பூக்களாலும்,தேவதைகளாலும், பூனைகளாலும்,முத்தங்களாலும் நிறைந்த சௌந்தர்யம் கொண்டது அய்யனாரின் கவிதையுலகம் !! எனக்கு கவிதைகள் மீதான ஆர்வம் கூடிட முக்கிய காரணம் இவரின் கவிதைகள்..அய்யனாரின் மொத்த கவிதைகளையும் மின்னூலில் ஒரே நாளில் படித்து முடித்த பின் உண்டான ஏகாந்த மனநிலையை விவரிக்க இயலாது!!!!அய்யனாரின் கவிதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்ட எனது முன்னுரை அவசியப் படாது.எப்போதும் நெருக்கமாய் உணர செய்யும் மென்கவிதைகள் சில இந்த தொகுதியில் இருந்து....



மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல் குட்டியையே
நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லை என

-------------------------

தோட்டத்து நாகலிங்க பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்த கிளர்வில்
இருளை கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழ புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக்
கொள்ளலாம்.

---------------------------

கூடுகளை விரும்பிடாத
பறவையின் பின்
தொடர்ச்சியாய் பயணித்துக்
கொண்டிருக்கின்றேன்
இளைபாரல்களில் மிகுந்த ஆர்வம்
கொண்டவனேனினும்
இளைப்பாரல்களை
தொலைத்துவிடச் செய்தது
இதுவரை கடந்திடாத
தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்து
கொண்டிருக்கிறேன்
-----------------


நீளத்தின் கடலும்
கடலின் ஆகாயமும்
ஒன்றென்றேன்
எப்படி யென்றால்
இதழ்களை கவ்வியபடி
முணுமுணுத்தேன்
"முத்தமிடுகையில்"

-------------------------------

புத்தகங்களாலும் அழுக்குத்
துணிகளாலும்
நிரம்பி கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடி தொட்டிக்குள்
உலவுகின்றன
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசி கொள்வதாய்
சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கின்றேன்
ஒரு முறை வந்து
பார்த்துவிட்டுபோயேன்.

* * *

புத்தக கண்காட்சியில் இம்முறை பெரிதாய் எதிர்பார்த்தது அய்யனாரின் நூல்களே, எதிர்பார்த்தது பொய்க்கவில்லை..தேர்ந்தெடுத்த காதல் கவிதைகளை அழகிய நூல் வடிவில் வெளியிட்டுள்ள வம்சிக்கு நன்றிகள்..வாழ்த்துக்கள் அயிஸ்!!

ஆசிரியர் - அய்யனார்
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்

24 comments:

அண்ணாமலையான் said...

நல்ல நல்ல கவிதைகள்..

குப்பன்.யாஹூ said...

நன்றிகள் கோடி லேகா.

ஒரு தேர்ந்த எழுத்தாளரின் (கவிஞரின், பதிவரின்) எழுத்துக்கு தேர்ந்த வாசகர் (பதிவர்) இடமிருந்து வந்து உள்ள சிறந்த பாராட்டு வரிகள், வாசிப்பு அனுபவங்கள் .

வாழ்க தமிழ், வாழ்க அய்யனார், வாழ்க பதிவுலகம்.

Baski.. said...

மின்னூல் அனுப்ப இயலுமா???

gnanabaskarr@yahoo.com

Krishnan said...

மிகவும் ரசித்தேன்..நன்றி லேகா

கார்க்கிபவா said...

//மொத்த கவிதைகளையும் மின்னூலில் ஒரே நாளில் படித்து முடித்த பின் உண்டான ஏகாந்த மனநிலையை விவரிக்க இயலாது!//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ராவா அடிச்ச மாதிரி இருகுக்மே :))))

ஆனாலும் உங்களுக்கு தைரியங்க. பில்டிங் பேஸ்மெண்ட் எல்லாமே ஸ்ட்ராங்குதான்..

Krishnan said...

மின்னூல் PDF format-ல் கிடைக்குமா லேகா ?

லேகா said...

நன்றி அண்ணாமலையான்

லேகா said...

நன்றி ராம்ஜி.

எனக்கு மிக பிடித்த அய்யனாரின் கவிதைகளில் வெகு சிலவற்றை இங்கே குறிபிட்டுள்ளேன்..
தொகுப்பாய் இந்நூல் அழகாய் வந்துள்ளது.படித்து பாருங்கள்.

லேகா said...

நன்றி பாஸ்கி

நன்றி கிருஷ்ணன்

மின்னூல் தற்சமயம் என்னிடம் இல்லை.மனிக்கவும்.
அதில் உள்ள கவிதைகளையே இரு தொகுதியாய் வம்சி வெளியிட்டுள்ளது.

லேகா said...

கார்க்கி,

:-)))))

வெகுவாய் ரசித்தேன் அய்யனாரின் கவிதைகளை..

நீங்க சொல்லும் மனநிலை குறித்து நோ ஐடியா!! :-)

பா.ராஜாராம் said...

அருமையான பகிரல்.நன்றிங்க.

குப்பன்.யாஹூ said...

got this link while doing search.

old writings of vannadasan,kiraa, vannanilan.

http://www.scribd.com/doc/8970158/Vannadasan-Asohamithiran-Kathaigal-Tamil

Ayyanar Viswanath said...

பகிர்வுகளுக்கு நன்றி லேகா :)

பின்னூட்ட நண்பர்களுக்கும் நன்றி.

லேகா said...

நன்றி ராஜாராம்

லேகா said...

Ramji,

This is excellant...tnx a lot for sharing!!

லேகா said...

வாழ்த்துக்கள் அய்யனார்!!

கார்க்கிபவா said...

//அய்யனார் said...
பகிர்வுகளுக்கு நன்றி லேகா :)

பின்னூட்ட நண்பர்களுக்கும் நன்றி/


பாருங்க. அவரே நான் சொல்றது உண்மைன்னு நன்றின்னு சொல்லிட்டு போயிட்டாரு. :))

KARTHIK said...

வாழ்துக்கள் அய்ஸ்

புத்தகம் இன்னும் இங்க இன்னும் வரலங்க
மின்னூல் படிக்கமுடிவதில்லை
நிச்சையம் வாங்கனும்.

லேகா said...

நன்றி கார்த்திக்..

@ கார்க்கி..:-)))))))))))))))

ராகவன் said...

அன்பு லேகா,

நிரம்ப நாட்கள் கழித்து மீண்டும் வருகிறேன். ரொம்ப அழகான பகிர்வு, இன்னும் கொஞ்சம் விவரிப்புடன், உங்கள் பார்வையையும் முன் வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கு நீங்கள் பகிர்ந்த ஒவ்வொரு கவிதையையும் சிலாகித்தும், என் பார்வைகளையும் முன் வைத்தும் எழுத ஆசையாத் தான் இருக்கு. அதற்கு முன் முழுத் தொகுதியையும் படித்துவிட்டு எழுத வேண்டும் என்பதால், என் ஆர்வத்தை அடக்கிக் கொள்கிறேன்.

தனிமையின் இசை, எல்லோருக்கும் பொதுவென...

வாழ்த்துக்களுடன், அன்பும்
ராகவன்

லேகா said...

நன்றி ராகவன். :-)

அவசியம் புத்தகத்தை வாங்கி வாசித்து பாருங்கள்...

முஹம்மது ,ஹாரிஸ் said...

நீங்கள் இனிமையான காதல் கவிதை படிக்க விரும்பினால் Khalil Gibran னின் Sand and Foam வாசியுங்கள். அதை 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களுருவில் இருக்கும் போது வசித்தது. அதன் தாகமும் சில வரிகளும் இன்னும் என் நினைவில் இருக்கிறது. காதலின் துயரத்தின் நறுமணம் என்னை சுற்றி கமல்வதை போன்ற உணர்வை
தந்து.

முஹம்மது ,ஹாரிஸ் said...

நல்ல சொற் தேர்வுகள். உணர்வுக்குக் ஏற்றவகையில் நன்றாக கோர்த்து இருக்கிறார்.ஆனால் காதல் கவிதைகளை படிக்கும் போது இதுபோன்று ஏற்கனவே படிதாகி விட்டது என்பது போன்ற மணநிலை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை

கமலேஷ் said...

மிகவும் நல்ல பகிர்வு தோழி..மிக்க நன்றி...