Monday, January 18, 2010

எஸ்.ராவின் கிறுகிறுவானம்

தமிழில் நான் வாசித்த வரையில் குழந்தைகள் உலகினுள் எளிதாய் புகுந்து இலக்கியம் படைப்பதில் கி.ரா விற்கு அடுத்த படியாய் சிறந்தவர் எஸ்.ரா மட்டுமே.எஸ்.ரா வின் "ஆலீஸின் அற்புத உலகம்" மொழிபெயர்ப்பை புத்தக கண்காட்சியில் வாங்க தவறிவிட்டேன்.அதற்கு மாற்றாய் இந்த நூல் கிடைத்தது.துடுக்கான சிறுவன் ஒருவன் அவனின் பிரத்தியேக உலகினுக்குள் நம்மை அழைத்து செல்வதாய் உள்ளது இந்நூல்.மீண்டும் மீண்டும் பேசினாலும்,வாசித்தாலும் அலுக்காத குழந்தைகளின் உலகம் சுலபமாய் நம்மை உள்ளிழுத்து கொள்கின்றது.

சிறுகதையோ,நாவலோ பிரதான பாத்திரத்திற்கு உருவம் கொடுத்து வாசிப்பதில் பல சௌகரியங்கள் உண்டு.இந்நாவலின் நாயகன் ஓட்ட பல்லு செம்பாவிற்கு உருவம் ஏதும் சட்டென தோன்றவில்லை காரணம்,ஒவ்வொரு காரியங்களாய் அவன் விவரிக்கும் பொழுது நமது பால்ய காலமே கண்முன் வந்து போகின்றது.செம்பா தனது ரகசியங்கள் என கருதும் பலவற்றையும் தயக்கமின்றி வாசகனோடு பகிர்ந்து கொள்கின்றான் விரிவான தனது அறிமுகத்தோடு!!சாப்பாடும் கூப்பாடும்,குழந்தைகளின் பசி எல்லோரும் அறிந்ததே..இன்ன வேலை என்றில்லாமல் நினைத்த போதெல்லாம் தின்று திரியும் வயசு..தனது பசி குறித்து வேடிக்கையாய் செம்பா விளக்குவது தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்து,உண்டு பிறகு திரும்பி தூங்கி போகும் கி.ராவின் கோபல்ல கிராமத்து சிறுவன் ஒருவனை நினைவூட்டியது..



கை நிறைய பொய்,கள்ளன் கணக்கு பகுதிகளில் செம்பா சொல்லுவது சிறு பருவத்தில் சகஜமான கபடமற்ற திருட்டும்,பொய்யும்.சின்ன சின்ன திருட்டுக்கள், நண்பர்களை,பெற்றோரை ஏய்க்க கூறிய பொய்கள் இப்பொழுது நினைவில் இல்லாவிடினும் அவை மறுப்பதிற்கில்லை.கிறுகிறுவானம்,இதை விளையாடாமல் யாரும் பால்ய காலத்தை தாண்டி வந்திருக்க முடியாது..கிறுகிறுவானம் சுத்தி கீழே விழுந்து வானத்தை பேரதிசியமாய் பார்த்த நினைவுகள் மீண்டும் துளிர்த்தெழுந்த சந்தோசம்!!.கிறுகிறுவானம் தவிர்த்து கள்ளன் போலீஸ் ,கிளியாந்தட்டு,கபடி,கோலி,கிட்டி என மறந்து போன விளையாட்டுகள் பலவற்றையும் நினைவூட்டுகிறது இப்பகுதி.இவை தவிர்த்து ஆற்றில் மீன் பிடிப்பது,கனவுகள் சுமந்து திரியும் தனது பால்ய காலத்தில் செம்பா விரும்பும் குதிரை சவாரி,புது துணி அணிந்து கொள்ளும் சமயம் ஏற்படும் மகிழ்ச்சி,பேய்கள் குறித்தான விளங்க முடியா அச்சம்,பிள்ளைகள் மொய்க்க இரவில் வரும் பலகார வண்டி என அந்த வயதிற்கே உரிய விஷயங்களை ஒன்று விடாமல் நினைவூட்டுகின்றன செம்பாவின் வர்ணனைகள்..

செம்பா விவரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஊடாக எண்ணற்ற சிறுவர் நாடோடி கதைகளும் வருகின்றன.பெரும்பசி கொண்ட பூசணிக்காய் சாமியார் கதை,தூங்கு மூஞ்சி சோணன் கதை,கால் திருடன்-அரை திருடன் - முழு திருடன் கதை,ஊசி கள்ளன் கதை என படிக்க சுவாரஸ்யமான சில நாடோடி கதைகள் இத்தொகுப்பில் உண்டு.நட்சத்திரங்களோடு பேசும் சிறுவர்கள் யாரேனும் இப்பொழுது உண்டா??!! குழந்தைத்தனம் மீறி சினிமாத்தனம் அதிகம் கொண்டுள்ள இக்காலத்து சிறுவர்கள் இழந்து கொண்டிருப்பவை எத்தனையோ என்பதை மீண்டும் அழுத்தமாய் நினைவூட்டுவதாய் உள்ளது இந்நூல்.குழந்தைகளுக்கான இலக்கியங்களை தொடர்ந்து படைத்து வரும் எஸ்.ராவிற்கு நன்றிகள்.

எஸ்.ராவின் "ஏழு தலை நகரம்" குறித்தான எனது பதிவு

கி.ராவின் "பிஞ்சுகள்" குறித்த எனது பதிவு

வெளியீடு - பாரதி புத்தகாலயம்
விலை - 25 ரூபாய்

33 comments:

சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி,

நானும் வாங்க தவறிவிட்டேன், நேரே பதிப்பகம் சென்று வாங்க எண்ணம்

Baski.. said...

நானும் இந்த புத்தகத்தை கொஞ்ச நாளாக தேடறேன்... கிடைக்க மாட்டேன்றது.... நீங்க வேற ஆவல தூண்டி விடறீங்க.... நல்ல பதிவு....

அன்புடன்,
பாஸ்கர்

லேகா said...

நன்றி சங்கர்

நீங்கள் குறிபிடுவது ஆலீஸின் அற்புத உலகமா இல்லை கிறுகிறுவானமா??!!
"ஆலீஸின் அற்புத உலகம்" நூல் கிடைக்கும் இடம் குறித்து அறிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

லேகா said...

நன்றி பாஸ்கி,

நண்பருக்கு காத்திருந்தவேளையில், எதிர்பாராமல் வாங்கிய புத்தகம் இது.
முடிந்தால் வாங்கி வாசித்து பாருங்கள்.

புத்தக கண்காட்சியில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:-)

Baski.. said...

மன்னிக்கவும்... எதிர்பாராமல் உங்களை பார்த்தால் பதற்றத்தில் நிறைய பேச நினைத்தும் பேச முடியவில்லை... நீங்க போன பிறகு ரொம்ப வருத்தப்பட்டேன்...

அன்புடன்,
பாஸ்கர்

அண்ணாமலையான் said...

நல்ல புத்தகம். பகிர்வுக்கு நன்றி..

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

கிறுகிறு வானம் படிக்கத்தூண்டியமைக்கு நன்றி.
கி.ரா எழுதிய "பிஞ்சுகள்" வாசித்து இருக்கிறீர்களா? மிக அற்புதமான குறுநாவல் வாசித்ததில்லையென்றால் கட்டாயம் படியுங்கள்

சங்கர் said...

'ஆலிஸ்' ஏற்கனவே வாங்கி விட்டேன், பதிப்பக விவரங்களை வீடு சென்று பார்த்துச் சொல்கிறேன்

லேகா said...

நன்றி சங்கர்

லேகா said...

பாஸ்கி,

இதுக்கு எதுக்குங்க மன்னிப்பு...சந்தித்ததில் மகிழ்ச்சி

லேகா said...

ஜெயமார்தாண்டன்,

வாசிக்க அப்பா எனக்கு அளித்த முதல் புத்தகம் "பிஞ்சுகள்".எத்துணை முறை அதை படித்திருப்பேன் என தெரியாது.அதில் வரும் விதவிதமான பறவைகளும்..துடுக்கான வேதி நாயக்கரும் என்றும் என் நினைவில் இருந்து மறையாதவர்கள்.
"பிஞ்சுகள்' குறித்து இங்கும் பகிர்ந்துள்ளேன்.

http://yalisai.blogspot.com/2008/07/blog-post_24.html

லேகா said...

நன்றி அண்ணாமலையான்

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

//வாசிக்க அப்பா எனக்கு அளித்த முதல் புத்தகம் "பிஞ்சுகள்".//

You are Blessed இப்படி ஒரு அப்பா கிடைக்க.

உங்கள் பிஞ்சுகள் பதிவும் அருமை

லேகா said...

//You are Blessed இப்படி ஒரு அப்பா கிடைக்க.//

உண்மை தான் :-)...மிக்க நன்றி

அன்புடன் அருணா said...

உடன் வாசிக்கத் தூண்டுகிறது!

குப்பன்.யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் லேகா.

இந்த மாதிரி புத்தகங்களை நம் பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கலாம்

இன்னமும், நம் மாணவர்கள் -குற்றாலக் குறவஞ்சி, திருக்குறள், பாஞ்சாலி சபதம் போன்றவற்றை புரியாமலும், ஈடுபாடு இல்லாமலும் மதிப்பெண்களுக்காக மட்டுமே மனப்பாடம் செய்து படிக்க வேண்டுமா.

லேகா said...

நன்றி அருணா

லேகா said...

ராம்ஜி உண்மை தான் நீங்கள் சொல்லுவது.நமது பாடத்திட்டங்கள் படுமோசம்..

Unknown said...

தொடரட்டும் உங்கள் பணி...வாழ்த்துக்கள்!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

மதுரையில் நேற்றுத்தான் எதேச்சையாக வாங்கினேன்.. மீம்ண்டும் ஒருமுறை பாளயத்துக்கு போய் வந்த உணர்வு.. பகிர்வுக்கு நன்றி..

லேகா said...

நன்றி Anto

லேகா said...

@கார்த்திகை பாண்டியன்,
பால்ய கால நினைவுகளை மீண்டும் தேடி சென்ற அனுபவத்தை தந்தது இந்நாவல்...சின்ன சின்ன விஷயங்களை கூட மிகுந்த கவனம் கொண்டு எஸ்.ரா தொகுத்தளித்துள்ளார்.

Shyama said...

the book "ஆலீஸின் அற்புத உலகம்"
is available at http://udumalai.com

Search for S.R links u will get that book listed

லேகா said...

Tnx Shyama

மாதவராஜ் said...

கேள்விப்பட்டு இருக்கிறேன். படித்ததில்லை. வாங்கிப் படிக்கணும் எனத் தோன்றுகிறது.

குழந்தைகள் உலகத்தில் மிகச் சுலபமாய் நுழைந்து இலக்கியம் படைப்பதில் இர.நடராஜனும் மிக முக்கியமானவராய் எனக்குப் படுகிறது.

லேகா said...

மாதவராஜ்,

நன்றி,ம.நடராசன் குறித்த அறிமுகத்திற்கு.

குழந்தைகள் நாடக கலைஞர் வேலு சரவணன் குறித்து இலக்கிய இதழ்களில் வாசித்தது உண்டு..
இவரின் 'தங்க ராணி' நூலை வம்சியில் வாங்கினேன்.படித்ததும் பகிர்ந்து கொள்கின்றேன்.

குப்பன்.யாஹூ said...

I guess after this year book exhibition, your blog has become more popular, its happy to see lot of pinnoottams and traffic

லேகா said...

Ramji,

Aahaa..is it so!!happy then..!!

As u know am not bothered abt comments count,i ll b happy if these books reach many..

Tnx a lot for ur support n continuoas encouragement..

சங்கர் said...

தாமதத்திற்கு மன்னிக்கவும்,

ஆலிஸின் அற்புத உலகம்
கனவுப் பட்டறை
111, பிளாசா சென்டர்
129, ஜி.என். செட்டி ரோடு

044-55515992

G Tamilmani said...

Childhood memories are very well presented in Konangi's earlier short stories in his first two collections mathinimarkalin kathai,
and kollanin aaru penmakkal. His first 70 stories collection is published by Adaiyalam publishers as Saloon Narkaliyil sulanrapadi.Give a try you may like it.
tamilmani

லேகா said...

நன்றி சங்கர்.:-)

@தமிழ்மணி..

கோணங்கியின் நூல்கள் எதுவும் படித்ததில்லை.அறிமுகத்திற்கு மிக்க நன்றி.இவரின் மதினிமார்கள் கதை வாசிக்க வேண்டிய நூல்கள் வரிசையில் உண்டு.

Joe said...

சுவாரஸ்யமான புத்தக விமர்சனம்.

//
குழந்தைத்தனம் மீறி சினிமாத்தனம் அதிகம் கொண்டுள்ள இக்காலத்து சிறுவர்கள் இழந்து கொண்டிருப்பவை எத்தனையோ
//
அப்பட்டமான உண்மை, இதைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

லேகா said...

வருகைக்கு நன்றி ஜோ.

வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.அது கற்பனை திறனை வளர்ப்பதோடு,மேலும் பக்குவ பட உதவும்.