Wednesday, January 13, 2010

கல்யாண்ஜியின் "இன்னொரு கேலி சித்திரம்" - கவிதை தொகுதி

கொஞ்ச நாட்களாய் கவிதைகள் வாசிக்க ஆர்வம் வந்துள்ளது.இலக்கிய இதழ்களிலும்,பதிவர்களின் கவிதைகள் மட்டுமே அறிமுகம் இதுவரையில்.இந்தாண்டு புத்தகசந்தையில் சில கவிதை தொகுதிகளும் வாங்கினேன்.வண்ணதாசனின் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இங்கு அதிகமாகவே பகிர்ந்துள்ளேன் ..மீண்டும் கவிதைகளில் அதே உணர்வை பகிர்ந்துள்ளார் கல்யாண்ஜியாய்.இவரின் "இன்னொரு கேலி சித்திரம்" தொகுதியின் கவிதைகள் சில...ஓவிய போட்டியில் பரிசு வாங்க
வந்த சிறுவன் அவசரமாக
ஒன்றுக்கு இருக்க உட்காந்த
இடத்தில
உதிர்ந்து கிடந்தன இருட்டுக்குள்
பன்னீர் பூக்கள்
பார்த்தவுடனே எழுந்து போய்
தூரத்து மரத்தடியில்
அமர்ந்தவனை
பார்த்து சிலிர்த்தது வாசனை
அனுப்பி பன்னீர் மரம்.

----------------------------------------------------------

பார்த்து கொண்டிருக்கும் பொழுதே
காணாமல் போய்விட்டது வானவில்
தட்டான் பிடிக்க தும்பைச்செடி
மிதித்தொடும் குழந்தைகள் முகத்தில்
படர்ந்திருந்தன ஏழு நிறங்கள்

----------------------------------------------------------
.... நேரடி வானத்தில்
தெரிவதைவிட
நிலா அழகாக இருப்பது
கிளைகளின் இடையில்..

----------------------------------------------------------

மழை இதுவரை உங்களிடம் ஏதேனும் புகார்
சொல்லி இருக்கிறதா.....
ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக.....
ஒரு வானவில் மீன்கொத்தி சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டு சிறுவனை
நனைய கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பார்க்காமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக....
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து இவ்வளவு புகார்களை
வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே
சொல்லி கொண்டு இருக்கின்றீர்கள்?வெளியீடு - சந்தியா பதிப்பகம்

14 comments:

அண்ணாமலையான் said...

நல்ல ரசனை உங்களுக்கு.........

Anonymous said...

nice poems, simple words laden with meaning. Have you read Kanimozhi's " sigarangalil uraikirathu kalam"? I liked the title and bought the book..... is still on its way from chennai

குப்பன்.யாஹூ said...

பகிர்தலுக்கு மிகுந்த நன்றி லேகா.

கல்யாண்ஜி பற்றி சொல்லவா வேண்டும், கவிதை அரசன் அல்லவா அவர்.

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு லேகா.நன்றி!

கிருஷ்ண மூர்த்தி S said...

மிக அருமையான ஆர்வம்!

நூறு வார்த்தைகளில், நூறு பக்கங்களில் சொல்ல முடியாததைக் கூட ஒரே ஒரு படிமத்தை எடுத்துக் கொண்டு, முழுமையாகச் சொல்லிவிடுகிற வலிமை கவிதைக்கே உண்டு!

பன்னீர் மரமும், சிறுவனும் சொல்லில் சொல்லாமலேயே பரிமாறிக் கொள்ளும் உணர்வு மிக அழகாக இருக்கிறது!

அதே மாதிரி, மழை எந்தப் புகாரும் எவர் மீதும் சொல்லாமல் இருக்கும் இயல்பு!

தேர்ந்தெடுத்த வரிகளும், ரசனையும் மிக நன்றாக இருக்கின்றன! வாழ்த்துக்கள்! அடிக்கடி கவிதை மழையில் நனையுங்கள்!

இனியாள் said...

arumaiyana kavithaigal leka. Pahirthamaiku nandri.

லேகா said...

நன்றி அண்ணாமலையான் :-)

லேகா said...

@ anony,

I havent read the book u have quoted..sure will try out..thanks!!

லேகா said...

நன்றி ராம்ஜி

நன்றி ராஜாராம்

லேகா said...

@ கிருஷ்ணமூர்த்தி

வார்த்தை சுழற்சி ஏதும் இல்லாது வெகு இயல்பான வரிகளில் ஆயிரம் அர்த்தம் பொதிந்த கவிதைகள் வரிகள் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டின.

நன்றி.

லேகா said...

Tnx a lot Iniyal!!

பிரேமா மகள் said...

மற்றவர்களை பாராட்ட நல்ல மனம் வேண்டும், அது உங்களிடம் இருக்கிறது. சூப்பர்

இளைய அப்துல்லாஹ் said...

உயிர்மையின் பரிசுக்குரியவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் லேகா உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

இளைய அப்துல்லாஹ் said...

லேகா நீங்கள் உயிர்மையின் தேர்வில் வென்றுள்ளீர்கள் மனதார்ந்த பாராட்டுக்கள்