Thursday, January 7, 2010

கி.ராவின் "அந்தமான் நாயக்கர்" மற்றும் "சிறுவர் நாடோடி கதைகள்"

கி.ராஜநாராயணன்,இலக்கிய வாசிப்பை தொடர்ந்து கொண்டிருக்க காரணமான பிரதான எழுத்தாளர்களில் ஒருவர்.எப்பொழுதும் எனது "default buy list" இருக்கும் பெயர் கி.ரா.கி.ராவின் "அந்தமான் நாயக்கர்" நாவல் நீண்ட தேடலுக்கு பிறகு இந்தாண்டு புத்தக சந்தையில் கிடைத்தது.இவரின் "கோபல்ல கிராமம்" மற்றும் "கோபல்ல கிராம மக்கள்" நாவல்களின் தொடர்ச்சியாய் இந்நாவலை கொள்ளலாம்.அவ்விரு நாவல்களை படித்திராதவர்களுக்கு புரிதலில் சிக்கல் ஏதும் இராது.இந்நாவல் முன் வைக்கும் முக்கிய செய்தி நம்பிக்கை துரோகத்தின் வலி.இது பல்வேறு நிகழ்ச்சிகளால் ,கிளைக்கதைக்களால் அழுத்தமாக சொல்லபடுகின்றது.சோகத்தை எடுத்து சொல்வதாக இருப்பினும் கி.ரா வின் வழக்கமான பகடிக்கும்,கிளை கதைகளுக்கும் பஞ்சமில்லை.


சுதந்திரம் பெருவதிற்கு முன்பு வெள்ளையனும்,சுதந்திரம் பெற்ற பின்பு அரசு அதிகாரிகளும் ஏதும் அறியா அப்பாவி முதியவருக்கு இளைத்த நம்பிக்கை துரோகத்தை பற்றியது இக்கதை.அழகிரி நாயக்கர்,ஆங்கிலேய இந்தியாவில் விளையாட்டாய் தேசிய கொடியை கட்டியதிற்காய் அந்தமான் சிறை சென்று வாழ்கையின் பெரும் பகுதியை கழிக்கின்றார்.அவர் சிறையில் இருந்து திரும்பி வரும் பொழுது சுதந்திர இந்தியாவின் மாற்றங்கள் யாவும் நகரத்தாற்கு மட்டுமே சாதகமாவும்,விவசாயிகளின் நிலையில் மாற்றம் ஏதும் இல்லாதிருப்பதும் மெல்ல மெல்ல புலப்படுகின்றது.விவசாய புரட்சி தீவிரம் அடைந்து எங்கும் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்ட சமயத்தில் இந்திய காவல்துறையால் அடித்து கொல்லபடுகின்றார் அழகிரி என்கின்ற அந்தமான் நாயக்கர்.



அந்தமான் நாயகரின் கதையின் ஊடே..சின்ன சின்ன கிளை கதைகள் சொல்லபடுகின்றன.நம்பிக்கை துரோகத்தின் விளைவை சொல்லும் விரலக்கா கதை அதில் முக்கியமானது..எல்லாவற்றின் மையமும் நம்பிக்கை துரோகம்!!!நாவல் ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் நிகழ்காலமும் ,கடந்த காலமும்,கிளை கதைகளும் மாறி மாறி சொல்லப்பட்டு இருப்பது அலுப்பை தரவில்லை.அந்தமான் நாயக்கர் நாவலில் கி.ரா வின் பின்னுரை முக்கியமாய் கவனிக்க பட வேண்டியது.நாவலில் சொல்லபட்டதை காட்டிலும் வெகு அழுத்தமாய் விவசாயிகளின் நிலை குறித்த தமது கருத்துக்களை முன்வைக்கின்றார்.


சிறுவர் நாடோடி கதைகள்,தலைமுறை தலைமுறையாய் சொல்லபட்டு வரும் கதைகள் எத்தனையோ.."பணியார மழை","செக்கு குட்டி போடுமா" ஆகிய கதைகள் தவிர்த்து இத்தொகுப்பில் மற்றவை யாவும் கேள்விபடாத கதைகளே..!!காரண கதைகள் படிப்பதிற்கு சுவாரஸ்யமானவை.அதீத கற்பனையின் வெளிப்பாடான இக்கதைகள் நம்பிக்கைகளின் கதை வடிவம்.காரண கதைகள் படிப்பதிற்கு சுவாரஸ்யமானவை.அதீத கற்பனையின் வெளிப்பாடே இக்கதைகள்.இதொகுப்பிலும் பெரும்பாலானவை காரண கதைகளே..மொச்சை பயரின் நடுவில் இருக்கும் வெள்ளை நிற தோலுக்கும்,நிலவின் கரையாய் புலப்படும் கிழவிக்கும் சொல்லப்படும் கதைகள்,சனிக்கிழமை விடுமுறை என மாறியது எப்படி என பல காரண கதைகள்.கற்பனை நிறைந்த குழந்தைகள் உலகம் அற்புதமானது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக்குகின்றன இது போன்ற கதைகள்.

வெளியீடு - அன்னம்

17 comments:

பிச்சைப்பாத்திரம் said...

லேகா, நல்ல பதிவு. 'கரிசல் இலக்கியம்' என்கிற வகை தோன்றியதின் காரணகர்த்தா கி.ரா. அவரைப் பின்பற்றி எழுத வந்தவர்களும இதைப் புறக்கணிக்க முடியாத வடிவமாக ஆக்கி சிறப்பு சேர்த்தனர். கி.ரா.வின் பால்ய நண்பர் கு.அழகிரிசாமியின் படைப்புகளையும் -இது வரை இல்லையென்றால் - வாசித்துப் பாருங்கள்.

கே.என்.சிவராமன் said...

அன்பின் லேகா,

நீண்ட நாட்களாக (வருடங்களாக?) நீங்கள் தேடிய புத்தகத்தை கண்டடைந்திருக்கிறீர்கள். அந்த பரவசம் இடுகையிலும் இருக்கிறது. நல்ல விஷயம்தான்.

நண்பர் சுரேஷ் குறிப்பிட்டதைப் போல நேரமும் சந்தர்ப்பமும் அமையும்போது கு.அழகிரிசாமியின் உலகுக்குள் நுழைந்து பாருங்கள். மறக்கப்பட்ட ஆளுமை.

கிராவுக்கும் அவருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து நூலாக வந்திருக்கிறது.

முதன்மையான கடித இலக்கியங்களில் அதுவும் ஒன்று.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

குப்பன்.யாஹூ said...

லேகா பதிவு மிக அருமை,

எப்படி உங்களுக்கு கி ரா புடித்த எழுத்தாளரோ அதே போலவே எனக்கும் பிடித்த எழுத்தாளர்.

பைத்தியக்காரன் பதிவர் சொல்வது போல நீங்கள் தேடிய புத்தகம் கிடைத்து படித்த மகிழ்ச்சியை உங்கள் எழுத்தில் காண முடிகிறது.

எஸ் ராவிற்கு பிறகு புத்தகங்கள், எழுத்தாளர்கள் குறித்து தமிழில் சிறப்பாக எழுதும் மற்றொரு எழுத்தாளர் நீங்கள் என்றால் அது மிகை ஆகாது.

லேகா said...

சுரேஷ்,

பகிர்தலுக்கு நன்றி.

கி.ரா...அன்பிற்குரிய தாத்தாவின் அருகில் அமர்ந்து கதை கேட்பது போன்றதொரு சூழலை உருவாக்கி விடுவார் தமது எழுத்தில்.
அது சிறுகதையோ,நெடு நாவலோ,கட்டுரையோ,கடிதமோ... மாறி வரும் வாழ்க்கை சூழலில் கரிசல் நிலத்து இலக்கியங்கள் கோடிட்டு காட்டும் விஷயங்கள் அதிகம்.இவரின் படைப்புகள் யாவும் போற்றி பாதுகாக்க வேண்டியவை.

கு.அழகிரிசாமியின் நூல்கள் எதுவும் படித்ததில்லை.கி.ராவுடன் இணைந்து அவர் வெளியிட்ட "மறைவாய் சொன்ன கதைகள்" மட்டுமே படித்துள்ளேன்.

கு.அழகிரிசாமியின் பிற நூல்களை பரிந்துரைக்க வேண்டும் நீங்கள்.

லேகா said...

சிவராமன் அண்ணா,

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

ஆம்,வெகு நாட்களாய் தேடிய நாவல் இது..வாங்கியதும் முதல் காரியமாய் படித்து முடித்துவிட்டேன்.

கு.அழகிரிசாமியின் நூல்கள் சிலவற்றை பரிந்துரைக்கவும்.

லேகா said...

நன்றி ராம்ஜி.

அண்ணாமலையான் said...

அருமை, அட்டகாசம் அப்புறம் ரொம்ப பிரமாதம் அப்டிலாம் சொல்லலாம்னா எனக்கு இதெல்லாம் என்னன்னெ தெரியல.. மொதல்ல நான் என் அறிவ இந்த ஃபீல்ட்ல வளத்துக்க முயற்சி செய்யறென்,, அதுக்கப்புறம் விளக்க கமெண்ட் போடறேன். இப்போதைக்கு வாழ்த்துக்கள்....

Balakumar Vijayaraman said...

சுவையான, புத்தகத்தை படிக்கத் தூண்டும் அறிமுகம்.

பகிர்வுக்கு நன்றி.

லேகா said...

அண்ணாமலையான்,

வருகைக்கு நன்றி

நல்ல புத்தகங்களை தேடி படிக்க வாழ்த்துக்கள்:-)

லேகா said...

நன்றி பாலகுமார் :-)

G Tamilmani said...

Marivai sonna kathaikal was co-authored by kalaniyuran, not by ku.alagirisami.Your blog helps me in selecting the books to be purchased.Thank you. tamilmani

லேகா said...

Tamilmani,

tnx a ot..i forgot tat it is Kalaniyuraan:-((

கிரகம் said...

நாவல் பற்றிய சுருக்கமான நல்ல பகிர்வு.
நானும் கி.ராவின் “தாத்தா சொன்ன கதை” சிறுகதை தொகுப்பு வாங்கியுள்ளேன்.
- கிரகம்

லேகா said...

நன்றி கிரகம்

Killivalavan said...

அன்னம் பதிப்பகம் முகவரி கிடைக்குமா?

லேகா said...

Killivalavan,

Am not aware of it..will chk outn let u know..their old address was in triplicane..

Mugilan said...

// .விவசாய புரட்சி தீவிரம் அடைந்து எங்கும் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்ட சமயத்தில் இந்திய காவல்துறையால் அடித்து கொல்லபடுகின்றார் அழகிரி என்கின்ற அந்தமான் நாயக்கர்//
லேகா புத்தக மதிப்புரை எழுதும்போது இனி முடிவை தெரிவிக்காதீர்கள்! நாங்களும் அந்த புத்தகத்தைப் படிக்க நேரலாம்!