Sunday, January 3, 2010

பாறப்புரத்தின் "அப்பாவின் காதலி"

மலையாள இலக்கிய பரப்பில் குறிப்பிட தகுந்த எழுதாளர்களில் ஒருவர் பாறப்புரத்து.அவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான "அப்பாவின் காதலி" யை தமிழில் மொழி பெயர்த்துள்ள சு.ரா இவ்வாறு முன்னுரையில் குறிப்பிடுகின்றார்,

"மிக சிறந்த புதினத்தை மொழி பெயர்த்திருக்கின்றேன் என்பதற்காக பெருமைபடுகின்றேன்.வருடங்கள் எவ்வளவு கடந்தோடட்டும் - பாறபுரத்தின் இந்த அழியாப் புகழ் பெற்ற புதினம் எப்போதும் தமிழ் மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும்...."


"அப்பாவின் காதலி",தவிர்த்திட தவறிய உறவு ஏற்படுத்தும் சிக்கல்கள் ஒரு அழகிய குடும்பத்தை எவ்வாறு சிதைக்கின்றது என்பதை அலட்டல் ஏதுமின்றி வெகு எளிமையாய் சொல்லும் கதை.வீதியில் சந்திக்கும் தன் அப்பாவின் காதலியை அடையாளம் கண்டுகொள்ளும் நாயகன் பல வருடங்கள் பின்நோக்கி சென்று நடந்தவற்றை எல்லாம் நினைவு கூறுகின்றான்.மணிகுட்டன்,அந்த கிராமத்தின் பெரிய மனிதரான மூத்த தம்பிரானின் மகன்.நண்பர்கள்,பண்ணை கூலிகள்,பால்காரி ஆகியோர் கூறியும் செம்மண்பறம்புல் கவுரியம்மாவோடு தனது தந்தை கொண்டிருக்கும் உறவை ஏற்க இயலாது சிறுவனான மணிகுட்டன் கொள்ளும் மன உளைச்சல் வெகு இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது.கவுரியம்மாவோடு கொண்டிருந்த உறவால் குடும்பத்தில் ஏற்படும் தொடர் சண்டைகள்,தந்தையின் திடீர் உடல்நல குறைவு என கொஞ்சமாய் சிதைய தொடங்கும் குடும்பம் பெரிய தம்புரானின் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாய் ஒடிந்து மணிகுட்டனின் பாரத்தை கூட்டுகின்றது.தன் படிப்பால் குடும்ப நிலையை மீண்டும் முன்னேற்றுகின்றான் மணிகுட்டன்.



இந்நாவலில் சிறு சிறு நிகழ்வுகள் கூட வெகு நேர்த்தியாய் சித்தரிக்கபட்டுள்ளன.யாரென்று தெரியாமல் மணிகுட்டன் முதல் முறையாக கவுரியம்மாளின் வீட்டிற்கு செல்லும் காட்சி,தனது தந்தையும்,கவுரியம்மாவும் தனித்து பேசி கொண்டிருப்பதை மணிகுட்டன் காணும் காட்சியென பல உதாரணங்கள்.மணிகுட்டனின் தாய்,அக்கா என அவனின் குடும்பம் குறித்த விவரிப்புகள் அதிகம் இல்லாவிடினும் கிராமத்து பெரிய குடும்பத்தின் இயல்புகள் மாறாதவையே.பின்னொரு நாளில் தன் தந்தையை ஏமாற்றி சொத்தை பிடிங்கிய கவுரியம்மாளை பார்க்கும் மணிகுட்டன் கோபத்திற்கு மாறாக அவளின் ஏழ்மை கண்டு பணம் கொடுத்துவிட்டு செல்கின்றான்.


வெளியில் தெரியாத இம்மாதிரியான உறவுகள் எப்பொழுதும் பேசுவதிற்கும்,கேட்பதிற்கும் சுவாரஸ்யம் நிறைந்தவை அது நம் குடும்பத்திற்குள் நிகழாதவரை.ஒரு மகனின் பார்வையில் தந்தையின் காதலை சொல்ல முயன்றுள்ளார் பாறபுரத்து.கோபக்கார தந்தை,வாய் பேசா தாய்,அன்பான அக்கா என இக்கதை மனிதர்கள் சில சமயம் எனக்கு யுமா வாசுகியின் "ரத்த உறவு" நாவலை ஞாபகபடுத்தினர்.எனினும் பிழியும் சோகம் ஏதும் இன்றி கள்ள உறவின் பொருட்டு ஒரு குடும்பம் சிதைவதை வெகு எளிமையாய் மண்வாசனை மாறாது கூறும் நாவல் இது.


வெளியீடு - சாரு பிரபா பப்ளிகேசன்ஸ்
தமிழ் மொழி பெயர்ப்பு - சு.ரா

12 comments:

TCTV said...

nice

try to get it

குப்பன்.யாஹூ said...

அருமை லேகா. தலைப்பே சுவாரஸ்யமாக உள்ளது.

ஆனால் குழந்தைகள் தந்தையிடம் சொல்லி கள்ள உறவை துண்டிக்க செய்ய வேண்டும்.

லேகா said...

நன்றி சொர்ணவல்லி..

லேகா said...

ராம்ஜி,

நன்றி.

இதில் மெசேஜ் ஏதும் சொல்லப்படவில்லை.அதற்கான அவசியமும் இல்லை..

ஒரு சிறுவனின் பார்வையில் நிகழும் கதை இது..கசப்பான கடந்தகாலத்தை நினைவு கூறும் ஒரு மகனின் மனநிலையில் இருந்து நோக்கினால் வேறு பல அர்த்தங்கள் புலப்படலாம்.

சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி, புத்தகத் திருவிழாவில் வாங்கிவிடுகிறேன்,


இதைப் படிச்சா நீங்க கண்ணீர் விடுவீங்கன்னு குப்பன் சொன்னாரே, நிஜமா?

லேகா said...

நன்றி சங்கர்.

புத்தக கண்காட்சி குறித்த உங்கள் பதிவு நன்று.:-)

Krishnan said...

புத்தக கண்காட்சி போனீங்களா ?

லேகா said...

கிருஷ்ணன்,

சென்ற சனியன்று புத்தக கண்காட்சிக்கு சென்றேன்.கொஞ்சம் பெரிய பட்டியல்..
தனி பதிவாய் எழுதுகின்றேன்..

Krishnan said...

புத்தக கண்காட்சியை பற்றி உங்கள் பதிவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

குப்பன்.யாஹூ said...

க்ரிஷ்ணனின் கருத்தை வழி மொழிகிறேன்.

நானும் புத்தக கண்காட்சி குறித்த உங்களின் பதிவை (பதிவுகளை) ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

கிருஷ்ணன் - புத்தக கண்காட்சி - ungal அனுபவம் குறித்தும் எழுதுங்கள்

குப்பன்.யாஹூ said...

க்ரிஷ்ணனின் கருத்தை வழி மொழிகிறேன்.

நானும் புத்தக கண்காட்சி குறித்த உங்களின் பதிவை (பதிவுகளை) ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

கிருஷ்ணன் - புத்தக கண்காட்சி - ungal அனுபவம் குறித்தும் எழுதுங்கள்

Joe said...

//
வெளியில் தெரியாத இம்மாதிரியான உறவுகள் எப்பொழுதும் பேசுவதிற்கும்,கேட்பதிற்கும் சுவாரஸ்யம் நிறைந்தவை அது நம் குடும்பத்திற்குள் நிகழாதவரை.
//

நிதர்சனமான வரிகள்.

//
Krishnan said...
புத்தக கண்காட்சியை பற்றி உங்கள் பதிவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
//
புத்தகப் புழுவே வருக, புதிய புத்தகங்களின் அறிமுகம்/விமர்சனங்களைத் தருக!