Tuesday, January 5, 2010

சென்னை புத்தக கண்காட்சி 2010

மதுரையில் இருந்த காலங்கள், சென்னை புத்தக கண்காட்சி என்னும் பிரமாண்ட திருவிழாவில் கலந்து கொள்ள இயலாத ஏக்கத்தை தொடர்ந்து தந்து கொண்டே இருந்தன.2008 ஆண்டு முதல் முறையாக புத்தக கண்காட்சி சென்றது மறக்க முடியாத நிகழ்வு..எழுத்தாளர்கள் யாரையும் சந்திக்காவிடினும் அத்தனை புத்தகங்களை ஒரு சேர பார்த்த பிரமிப்பில் இருந்து மீள நாட்கள் பிடித்தது.சென்ற ஆண்டு புத்தக சந்தையில் கி.ரா வை பார்த்திட விரும்பி நிறைவேறாது போனது.எஸ்.ராவை பார்த்தும் பேச தயங்கி வந்துவிட்டேன்.புத்தக பெயர்,ஆசிரியர்,வெளியிடும் பதிப்பகம் என சின்ன பட்டியல் தயாரித்து கொண்டு தான் புத்தககண்காட்சிக்கு செல்வேன்.தேவையானவற்றை மட்டும் வாங்கி வந்துவிடலாம்.

இந்தாண்டு புத்தக கண்காட்சி தந்த அனுபவம் அலாதியானது.எழுத்தாளர்கள்,நண்பர்கள் உடன் உரையாடியது நிறைவாய் இருந்தது.பதிவுலக அறிமுகம் இல்லையென்றால் இவை யாவும் சாத்தியம் இல்லை.இந்தாண்டு புத்தக சந்தையில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இதோ..

உயிர்மை

எஸ்.ராவின் சமீபத்திய நூல்கள் - 4
சாருவின் தீராக்காதலி

காலச்சுவடு

பஷீரின் "எங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனை இருந்தது"   
கு.பா.ரா மொத்த தொகுப்பு
கிருத்திகாவின் "வாசவேஸ்வரம்"

தமிழினி

ஏழாம் உலகம்   ஜெமோ
ராஜேந்திர சோழன் கதைகள்

அன்னம்

கி.ரா அந்தமான் நாயக்கர்
கி.ரா சிறுவர் நாடோடி கதைகள்

பிற

எஸ்.ராவின் ஆலீஸின் அற்புத உலகம் - விகடன்
அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் -கவிதா
ரகோத்தமனின் 'ராஜீவ் கொலை வழக்கு'
கன்னட மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்புகள்- நேஷனல் புக் டிரஸ்ட்

இவை தவிர்த்து வம்சி வெளியீடுகளான ஜெயந்தன் சிறுகதைகள் முழு தொகுப்பு, அய்யனாரின் மூன்று நூல்கள்,வேலு சரவணனின் "தங்க ராணி' மற்றும் "ஒற்றை கதவு" மலையாள மொழிபெயர்ப்பு நாவல் ஆகிவை இந்த வார இறுதியில் வாங்க வேண்டியவை.

15 comments:

மாதவராஜ் said...

சந்தோஷமாக இருக்கிறது லேகா! பஷீரின் நாவலும், கு.பா.ராவின் தொகுப்பும் முக்கியமானவை. இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாதவை. வாசகன் அதிலிருந்து மீளவே முடியாது. படித்துவிட்டு அவைகளைப் பற்றி நீங்கள் என்ன எழுதுவீர்கள் என காத்திருக்கிறேன்.

லேகா said...

மாதவராஜ்,

வருகைக்கு நன்றி.

பஷீர் என் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர்.இவரின் "எங்க உப்பப்பாவிற்கு ஒரு யானை இருந்தது" கதை இந்தாண்டில் எனது முதல் வாசிப்பு.வார்த்தைகளால் சொல்ல முடியா அளவிற்கு உவகை தந்த வாசிப்பனுபவம்.

கு.பா.ரா நூல்கள் எதுவும் இதுவரை படித்ததில்லை.படித்ததும் பகிர்ந்து கொள்கின்றேன்.

புத்தக கண்காட்சியில் உங்களை அவசியம் சந்திக்கின்றேன் :-)

சங்கர் said...

வாரகடைசில, போகும் போது போன் பண்ணுங்க, நானும் வரேன்

குப்பன்.யாஹூ said...

வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று புத்தக கண்காட்சி குறித்த பதிவு எழுதியமைக்கு நன்றிகள்.

இன்னும் விரிவாக அடுத்த வாரம் எதிர்பார்க்கிறோம்.

வண்ண நிலவன், வண்ண தாசன் பற்றிய செய்திகள், புத்தக கண்காட்சி குறித்த பதிவர்களின் பதிவுகளில் காணோம்.

லேகா said...

நன்றி சங்கர்

நன்றி தியாவின் பேனா

லேகா said...

நன்றி ராம்ஜி.

விரிவாக அடுத்த வாரமா??!!ம்ம்....:-)௦

வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளும் முழு தொகுப்பாய் வெளிவந்துள்ளது கவிதா பதிப்பகத்தால்.வண்ணநிலவனின் கம்பா நதி,கடல் புறத்தில் ஆகியவற்றை கிழக்கு பதிப்பகத்தில் பார்த்த ஞாபகம்.

வண்ணநிலவனின் எல்லா படைப்புகளும் முழு தொகுப்பாய் வந்திருப்பின் நண்பர்கள் பரிந்துரைக்கவும்.

Anonymous said...

ந‌ல்ல‌ ப‌திவு

Krishnan said...

Great choice Lekha. Eagerly looking forward to your reviews of the books you purchased - particularly Rajendracholan and KuPaRa.

லேகா said...

நன்றி மஹா

கிருஷ்ணன் ,

நன்றி.

கு.பா.ரா மற்றும் ராஜேந்திர சோழன் எழுத்துக்கள் குறித்து கேள்விபட்டதோடு சரி.இனி தான் வாசிக்க போகின்றேன்..நிச்சயமாய் பகிர்ந்து கொள்கின்றேன்.

Anonymous said...

"வண்ணநிலவனின் எல்லா படைப்புகளும் முழு தொகுப்பாய் வந்திருப்பின் நண்பர்கள் பரிந்துரைக்கவும்"

There is a full collection of his stories published till 2005. Don't remember the publishing house where I got it, it could be Manivasagar.

Ajay

லேகா said...

Tnx Ajay..i will ck out in the book fair!!

லேகா said...

Vannadasan's short story collection was releases by "Narmadha publishers"..sorry its nt Kavitha

sujatha sivaram said...

I live outside tamilnadu and I envy you guys in chennai... Lekha tell us more about the book fair and the books you have bought.

லேகா said...

Sujatha,

I felt the same when i was in Madurai...

Book fair is something which i always makes me happy..by the way there is nothing much to write abt my book fair exp this time..i spoke to Charu n S.Ra very formal talk..nothing interesting!!

Reg the books - will share one by one..

Planning to go thos saturday..lets see how it goes :-))

Uma Maheswaran J said...

லேகா, உங்களின் பதிவுகளைக் கடந்த சில மாதங்களாகப் படித்து வருகிறேன். (இதுவரை மறுமொழி அளிக்க இயலவில்லை). புத்தகங்களின் அறிமுகங்கள் அருமையாக உள்ளன. உங்கள் பதிவுகளிலிருந்து பார்த்த ஒரு சில புத்தகங்களின் பெயர்களை, கண்காட்சியில் வாங்குவதற்காக எழுதி வைத்துள்ளேன். மிக்க நன்றி!