Saturday, December 12, 2009

Death Of A President

சில திரை முயற்சிகள் மேலை நாடுகளில் மட்டுமே சாத்தியம்.பெருவாரியான வசூல் சாதனை படைத்த படங்களை இரக்கமே இல்லாமல் காட்சிக்கு காட்சி கிண்டல் செய்து உடனே படம் எடுப்பார்கள்.அவை பலி வாங்கும் நோக்கில் அல்ல..பகடி அவ்வளவே!!Scarie Movie Series ,Super Hero Movie என அது போன்ற படங்களின் பட்டியல் ஏராளம்.இதில் குறிப்பிட வேண்டியது என்ன வென்றால் Scarie movie series மாபெரும் வெற்றி பெற்றது.அங்கே அதற்கான ஆரோக்கியமான சூழல் உள்ளது.சக கலைங்கர்களும் ரசிகர்களும் பகடியை பகடியாகவே எடுத்து கொள்ளும் மனப்பான்மை கொண்டுள்ளனர்.இங்க அது போன்ற..வேணாம் புலம்பி பிரயோஜனமில்லை!!Death Of A President,பகடி வகையை சார்த்தது இல்லை.வித்தியாச முயற்சி என சொல்லுவதை காட்டிலும் துணிச்சலான முயற்சி எனலாம்.

சிகாகோ நகரில் 2006 ஆண்டு அக்டோபரில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சுட்டு கொலை செய்யப்படும் பரபரப்பான காட்சியோடு தொடங்குகின்றது இத்திரைப்படம்.ஜனாதிபதியின் மரணத்தை அடுத்த விசாரணைகள்,உள்நாட்டு அரசியல்,இஸ்லாமிய ஒடுக்கு முறை,சிறுபான்மை நாடுகள் மீதான அமெரிக்காவின் பார்வை என காட்சிகள் விரிகின்றன.ஆவண படம் போன்ற காட்சி அமைப்புகள் படத்திற்கு பெரியதோர் பலம்.படம் முழுவதும் மாறி மாறி தொடரும் சம்பந்தப்பட்டவர்களின் நேர்காணல்கள் பூடகமாய் விளக்கும் விஷயங்கள் ஏராளம்.



சிரியா நாட்டு இளைஞர் ஒருவரை குற்றவாளியென கண்டுபிடிக்கும் போலீஸ் அவருக்கும் அல் கொய்தாவிற்குமான தொடர்பை அம்பல படுத்த முயற்சிகள் ஒரு புறம் விளக்க படும் பொழுதே,குற்றவாளியின் மனைவி அதை மறுத்து முன் வைக்கும் காரணங்கள் மறுபுறமும் நேர்காணல் வடிவில் வெகு இயல்பாய் படம் பிடிக்கபட்டுள்ளது.படம் பார்த்து கொண்டிருக்கும் வேளையில் சட்டென தோன்றியது....நடைபெறாத ஒரு கொலையை இவ்வளவு தீவிரமாய் விசாரணைக்கு உட்படுத்தி அலசி,ஆராய்ந்து இருக்கும் இயக்குனரின் முயற்சியை நினைத்து வெகுவாய் வியந்தேன்.பரபரபிற்காக கூட "ஜனாதிபதியின் மரணம்" என்பதை கையாண்டிருக்கலாம்.அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பிய படம் இது,பல நாடுகளில் வெளியிடவும் தடை செய்யபட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் இருந்து இராக் சென்று வந்த கறுப்பின இளைஞன் ஒருவனின் தந்தையின் தற்கொலையும் அதே நாளில் சிகாகோவில் நடப்பதால் அவரையும் சந்தேகிக்கின்றது போலீஸ்,அந்த கறுப்பின குடும்பத்தின் வாயிலாக இராக்கில் அமெரிக்காவின் இரக்கமற்ற தாக்குதல் சொல்லபடுகின்றது.கொலை சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழித்து வெளிவரும் தீர்ப்பு சிரியா இளைஞரை குற்றவாளியென தீர்மானிக்கின்றது.அதை எதிர்த்து அவரின் மனைவி மேல் முறையீடு செய்வதோடு படம் முடிகின்றது.

எங்கோ,எப்பொழுதோ இப்படம் குறித்து வாசித்தது.படம் பார்த்ததும் இணையத்தில் தேடியதில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தது.அக்டோபர் 2006 ஆண்டு கொலை சம்பவம் நடைபெற்றதாக வரும் நாளிலேயே இத்திரைப்படம் பல இடங்களின் முதலில் திரையிடபட்டுள்ளது..காப்ரியல் ரேஞ்இயக்கியுள்ள இத்திரைப்படம் எம்மி,அகாதெமி உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது.பரபரப்பிற்கான முயற்சி,இயக்குனரின் துணிகரம் என்பவை ஒருபுறம் இருப்பினும் இத்திரைப்படம் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.

9 comments:

கே.என்.சிவராமன் said...

அன்பின் லேகா,

படத்தை இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை இந்த இடுகை ஏற்படுத்தியிருக்கிறது.

நீங்கள் பார்த்து வியந்ததை, பகிர்ந்து கொள்ள நினைத்ததை அழுத்தமாகவே செய்திருக்கிறீர்கள்.

அறிமுகத்துக்கு நன்றி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

குப்பன்.யாஹூ said...

nice post Leka, thanks for sharing.

But now I am unable to watch films other than of Kamal, Rajni, balumahendra, barathiraja, shankar.

லேகா said...

நன்றி பைத்தியக்காரன்.

லேகா said...

நன்றி ராம்ஜி.

.//.But now I am unable to watch films other than of Kamal, Rajni, balumahendra, barathiraja, shankar.//

why so?didnt get u!!

பிச்சைப்பாத்திரம் said...

லேகா,

நூல் வெளியீட்டு விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

பிரசன்னா இந்தப் படத்தைப் பற்றி எழுதும் போதே (http://nizhalkal.blogspot.com/2009/10/death-of-president.html) பார்க்கும் ஆவலைத் தூண்டியது பிறகு மறந்து போனேன். உங்களின் இந்த அழகான பதிவு என் தூக்கத்தை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறது. அதற்காக நன்றி. :-)

லேகா said...

நன்றி சுரேஷ்.

உங்களை சந்திததிலும் மகிழ்ச்சி.மழையின் காரணமாய் பேச இயலவில்லை.

சோனி பிக்ஸ் தொலைகாட்சியில் தான் இப்படத்தை பார்க்க நேர்ந்தது சென்ற வாரம்.
சில சமயம் இது போன்ற படங்களும் ஒளிபரப்புகிறார்கள்.:-))

குப்பன்.யாஹூ said...

லேகா என்ன சொல்ல வருகிறேன் என்றால், கிணத்து தவளையாகவே இருக்க விருப்பம் உள்ளது,

பக்கத்தில் இருக்கும் பெரிய குளம், கடல் பார்த்து பயம் வந்து, இருக்கும் கிணறே போதும் என்ற மனோபாவம் கூட இருக்கலாம்.

எனவேதான் உலக சினிமா மீதோ உலக இசை, ulaga ilakkiyam மீதோ ஆர்வம் வருவது இல்லை.

KARTHIK said...

// எங்கோ,எப்பொழுதோ இப்படம் குறித்து வாசித்தது. //

ஞாநியின் ஓ பக்கங்கள்ல வாசிச்ச ஞாபகம் எனக்கு.

Joe said...

அட்டகாசமான படம். அமெரிக்காவின் முன்னாள் எதிர்க்கட்சியினர் கூட உயிரோடு இருப்பவரை இறந்ததாகக் கற்பனை செய்வது அருவருப்பானது என்று பேட்டி கொடுக்க வைத்த படம்.

ஒருவேளை என்னைப் போல பலரும் "இவன் செத்துத் தொலைஞ்சா நல்லாருக்கும்"-னு குரூரமா சிந்திச்சது கூட இந்த படத்தை வெற்றி பெறச் செய்திருக்கலாம். (எப்படியும் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செய்த அநியாயங்களுக்காக, போர் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டாலும் ஜார்ஜ் புஷ் சிறைத் தண்டனை பெறப் போவதில்லை)