Tuesday, July 21, 2009

சுவார‌ஸிய‌ வ‌லைப்ப‌திவு விருது

வலைத்தளம் குறித்து எந்த அறிமுகமும் இன்றி இலக்கியம் பகிரும் ஒரே ஆவலில் எழுத தொடங்கியது....வேலை காரணமாய் சென்னைக்கு வந்த பிறகு ஒரே ஆறுதல் வாசிப்பு.திரும்ப திரும்ப சென்னை நகரம் எனக்கு நினைவூட்டுவது ஒன்று தான் "If u are not sure about your boundaries tats it".அதன் காரணமாய் முகம் தெரியா நட்புகளை தேடிசெல்வதில் ஆர்வம் இருந்ததில்லை.ஆனால் வலைத்தளம் மூலம் பெற்றிற்றுக்கும் முகம் அறியா நண்பர்கள் பல.வெகு ஆரோக்கியமான சூழலில் இலக்கியம் பகிர்ந்து கொள்ளபடுவதில் எண்ணற்ற மகிழ்ச்சி.

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த "மழைக்கு ஒதுங்கியவை" செய்யது அவர்களுக்கு நன்றி.எனக்கு மிக பிடித்த,தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டும் சில வலைப்பதிவுகள்..



தனிமையின் இசை - அய்யனார்

அய்யனார் எனக்கு முதன் முதலில் இட்ட பின்னூட்டம் இவ்வாறு வரும் "சில சொல்லாடல்களை மீள் ஆளுமை செய்வது சமகால புரிதலுக்கு சரியாய் இருக்கலாம்.உதாரணம் வேசியர்: பாலியல் தொழிலாளர்கள் ..."

நான் வெகு கவனமாய் பாலியல் தொழிலாளி என்னும் சொல்லாடலை தவிர்த்திருப்பேன்.பொதுவில் சில வார்த்தைளை உபயோகிக்க கூடாது என்கின்ற கருத்து அப்பொழுது உண்டு.:-))

அய்யனார், வலையுலகில் எனக்கு கிடைத்த முதல் நண்பர்.அப்பாவிற்கு பிறகு அதிகமாய் இலக்கியம் பேசியது அய்யனாரிடம் தான். ஆதவன்,பா.சிங்காரம்,கோபி,ஆதவன் தீட்சண்யா,ஜி.நாகராஜன் என இவர் எனக்கு அறிமுகம் செய்த எழுத்தாளர்கள் அநேகம்.எழுத்தாளர்கள்,புத்தகங்கள்,உலக சினிமா கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் என நிறைந்திருக்கும் இவரின் வலைத்தளத்திற்கு அறிமுகம் எதுவும் தேவை இருக்காது என்றே நினைக்கின்றேன்.

கவிதைகளை ரசிக்க தொடங்கியது "தனிமையின் இசையில்" தொடங்கி அங்கு மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றது ..மிக பிடித்த இவரின் கவிதை ஒன்று இங்கே..

முதல் முத்தம்

ஒரு பின்பனிக்கால விடியலில்
பனியில் குளித்த ரோஜாவினையொத்த
உன் இதழ்களில் முத்தமிட்ட தருணமொன்றில்
சில பறவைகள் விழித்தெழுந்தன

தொலைவில் அபூர்வமாய் மலரும் மலரொன்றின் விதை
தனக்கான வெடிப்புகளின் முடிவில் துளிர்க்கலாம்
தன் முதல் துளிரை
காட்டு மர இடுக்குளில் இடப்பட்ட முட்டைகளிலொன்று
ஓடுடைத்து மெல்ல எட்டிப்பார்க்கலாம்
தனக்கான உலகத்தை
பாதைகளற்று அலைந்து திரிந்த சிற்றாறு
இத்தருணங்களில்
நதியின் விரிந்த கரங்களில் தஞ்சமடையலாம்

இன்னும் பிரபஞ்சத்தின் எத்தனையோ
முதல் நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதற்க்கான
சாத்தியக்கூறுகளுமிருக்கிறது

எப்போதும் அதிகாலையிலேயே
விழித்துவிடுகிறார்கள்
குழந்தைகள்


பிச்சைபாத்திரம் - சுரேஷ் கண்ணன்

எஸ்.ராவின் வலைத்தளத்தில் பிச்சைப்பாத்திரம் குறித்த முதல் அறிமுகம் கிடைத்தது.எனது அபிமான வலைத்தளங்களில் ஒன்று.சுஜாதாவின் "கணையாழியின் கடைசி பக்கங்கள்" குறித்த இவரின் நேர்த்தியான விமர்சனம் மிக பிடித்திருந்தது.எழுத்தாளர்கள் "தோப்பில் முகமது மிரான்" மற்றும் "எக்பர்ட் சச்சிதானந்தம்" குறித்த அறிமுகம் இவரின் பதிவுகளின் மூலமே கிடைத்தது.பகடி யாவருக்கும் எளிதாய் அமைந்து விடாது,சுரேஷின் பதிவுகளில் இருக்கும் ஒரு வித ஹாஸ்யம் ரசிக்க கூடியது.உலக சினிமா,ரசித்த புத்தகங்கள்,அரசியல்,சமூகம் என இவர் முன்வைக்கும் கருத்துக்கள் யாவும் முதிர்ச்சியானவை.

குசும்பன்

எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு என்னை குறித்த சீரியஸ் டைப் என்னும் எண்ணம் வருவது இயல்பு.நிஜத்தில் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டு எப்பொழுதும் ஜோக் அடித்து கொண்டிருக்கும் ரகம் நான்.எனவே குசும்பனின் வலைத்தளம் பிரியமானதாய் இருப்பதில் அதிசயம் கொள்ள வேண்டாம்.கொஞ்சம் அயர்வாய் தோன்றினாலும் முதலில் செல்வது இவ்வலை தளத்திற்கே..பதிவுகள் மட்டும் இன்றி இவரின் பின்னூட்டங்களும் ரசிக்க கூடியவை.

ஸ்மைல் பக்கங்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

வித்யாவின் "நான் வித்யா" நாவல் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.பொதுவாய் திருநங்கைகள் குறித்து இருந்த கருத்துக்களை முற்றிலுமாய் மாற்றி போட்டது.உறவினர்களுக்கும் பரிந்துரைத்தேன்.நாவலில் இவ்வலைத்தளத்தின் இணைப்பு இருந்தது.ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.திரைத்துறையில் துணை இயக்குனராய் இருக்கும் வித்யாவின் பதிவுகள் அநேக திரைப்படங்கள் குறித்து விவாதிப்பவை.மேலும் திருநங்கைகளுக்கு ஆதரவாய் குரல் தரும் ஆதங்கம் மிகுந்த கட்டுரைகளும் அடக்கம்.அனல் தெறிக்கும் அக்கட்டுரைகள் சமூகத்தின் மீதான கோபத்தை அதிகரிக்க செய்பவை.வித்யா,கல்கி என வலைத்தளத்தில் திருநங்கைகளின் வருகை மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.

24 comments:

குப்பன்.யாஹூ said...

nice Leka.

I wish to give the award to you. But I do not want to block your creativity with awards etc.

லேகா said...

நன்றி ராம்ஜி :-)

முபாரக் said...

வாசிப்புப் பிரியர்களுக்கு உங்கள் தளம் நல்லதொரு அனுபவம்

வாழ்த்துகள் லேகா

கிருஷ்ண மூர்த்தி S said...

வாசிக்கும் அனுபவமும், அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் சுகமுமே போதுமே!

'முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு'

அகநாழிகை said...

லேகா,
அய்யனாரின் எழுத்துக்கள் வசீகரிக்காதவர்களே இல்லை எனலாம்.
இயல்பாக விருது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும்
வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

லேகா said...

நன்றி முபாரக்.

நன்றி கிருஷ்ணமூர்த்தி

அ.மு.செய்யது said...

வாழ்த்துகள் அமுதா !!! அசத்தல் தேர்வுகளுக்கு !!!

ஆள் அரவமில்லா நிசப்த இரவில் அய்யனாரின் கவிதைகளை வாசிப்பதும்,
கவலையுறும் போது, அதே அய்யனாரின் கவிதைகளுக்கு எதிர்கவுஜை எழுதும் குசும்பனை வாசித்து
மகிழ்வதும் எனக்கு வாடிக்கை.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் 'நான் வித்யா'வை படித்து முடித்தேன்.

என்ன ஒரு ஒற்றுமை....

Krishnan said...

Good choices Lekha. Me too avidly follow Suresh Kannan's PichaiPaathiram and often visit Ayyanar's blog.

லேகா said...

//அய்யனாரின் எழுத்துக்கள் வசீகரிக்காதவர்களே இல்லை எனலாம்//


"அக நாழிகை" வாசுதேவன்

@மெய்யான வார்த்தைகள்

அ.மு.செய்யது said...

mannikkavum lekha...

i quoted it as amudha...

லேகா said...

@செய்யது

அமுதாவா?? :-))

//ஆள் அரவமில்லா நிசப்த இரவில் அய்யனாரின் கவிதைகளை வாசிப்பதும்,
கவலையுறும் போது, அதே அய்யனாரின் கவிதைகளுக்கு எதிர்கவுஜை எழுதும் குசும்பனை வாசித்து
மகிழ்வதும் எனக்கு வாடிக்கை.//

உண்மை

லேகா said...

நன்றி முபாரக்

நன்றி நர்சிம்

லேகா said...

@Syed

No problem..its ok :-)

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி லேகா, உங்களின் உற்சாகமான பாராட்டிற்கு.

KARTHIK said...

எல்லாருமே தெரிஞ்ச பதிவர்கலாவே இருக்காங்க.வெளிய தெரியாதவங்களா பாத்து சொல்லிருக்கலாம்.

//அய்யனார் எனக்கு முதன் முதலில் இட்ட பின்னூட்டம் இவ்வாறு வரும் "சில சொல்லாடல்களை மீள் ஆளுமை செய்வது சமகால புரிதலுக்கு சரியாய் இருக்கலாம்.உதாரணம் வேசியர்: பாலியல் தொழிலாளர்கள் ...//

புதுமைபித்தனோட ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்துக்கானா விமர்சனத்துக்கு அய்ஸ் அப்படி பின்னூட்டம் போட்டார்னு நெனைக்கிறேன்.சரியா :-))

// எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு என்னை குறித்த சீரியஸ் டைப் என்னும் எண்ணம் வருவது இயல்பு.நிஜத்தில் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டு எப்பொழுதும் ஜோக் அடித்து கொண்டிருக்கும் ரகம் //

நானும் அப்படித்தான் நெனச்சன்போங்க :-))

லேகா said...

சுரேஷ்..வருகைக்கு நன்றி :-))
மகிழ்ச்சியும் கூட..

லேகா said...

கார்த்திக்,

உண்மையில் அதிகமாய் நான் வலைப்பதிவுகள் பதிவுகள் படிப்பதில்லை.நண்பர்கள் அறிமுகம் செய்தால் வாசிப்பேன்.

சரிதான்,புதுமை பித்தனின் "பலிபீடம்" நாவலுக்கு அய்யனார் இட்ட பின்னூட்டம் அது.

//நானும் அப்படித்தான் நெனச்சன்போங்க :-)) //

:-))

Prasanna Rajan said...

வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து எழுதுங்கள். இலக்கியம் மட்டும் அல்லாது ஏன் மற்றவற்றைப் பற்றியும் நீங்கள் எழுதக் கூடாது?

Ayyanar Viswanath said...

அன்பிற்கு நன்றிகள் லேகா :)

லேகா said...

வருகைக்கு நன்றி பிரசன்னா.

நன்றி அய்ஸ்

Unknown said...

லேகா,

என்னுடைய நண்பரின் பரிந்துரையின் பேரில் உங்களை நான் 'சுவாரஸ்யப் பதிவராக' எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். அதைக்காண இங்கு செல்லவும்:

http://thittivaasal.blogspot.com/2009/07/blog-post.html

நன்றிகள் பல...

கிருஷ்ண பிரபு, சென்னை.

குசும்பன் said...

அய்யனார், சுரேஷ்கண்ணன், வித்யா,இவர்கள் வரிசையில் நானுமா?அவ்வ்வ்வ்! நெல்லுக்கு பாய்வது கொஞ்சம் புல்லுக்கும் என்ற தங்கள் பெருதன்மை புரிகிறது:)

நன்றி லேகா!

லேகா said...

வருகைக்கு நன்றி குசும்பன்