Wednesday, April 15, 2009

கி.ரா மற்றும் கழனியூரனின் "மறைவாய் சொன்ன கதைகள்"

இந்த வலைத்தளத்தில் அதிகமாய் உச்சரிக்கப்பட்டிருக்கும் சில பெயர்களில் முக்கியமான பெயர் கி.ராஜநாராயணன்.தவிர்க்க இயலாத பெயரும் கூட.தமிழ் இலக்கியம் என்றவுடன் சட்டென நினைவிற்கு வருவது கி.ராவின் எழுத்து.கை பிடித்தி நடத்தி செல்வது போல கரிசல் பூமியின் மக்களை,பழக்க வழக்கங்களை,தொடர்ந்து வரும் பெருமைகளை நம்பிக்கைகளை தெளிவாய் எடுத்துரைப்பவை கி.ராவின் எழுத்துக்கள். நல்ல கதை,கெட்ட கதை என எந்த பாகுபாடின்றி எல்லா வகை கதைகளும் கூறுபவரே தேர்ந்த கதைசொல்லி கி.ராவை போல.கணையாழியின் கடைசி பக்கங்களில் தமிழில் சிறந்த போர்னோ இலக்கியம் இல்லை என்று சுஜாதா குறிப்பிட்டு இருப்பார். பின் சாருவின் "எஸ்டன்சியலிசமும் பேன்சி பனியனும்" மற்றும் கி.ரா வின் "வயது வந்தோர்க்கு மட்டும்" ஆகிய நூல்களின் அறிமுகம் தமிழில் போர்னோ வகை எழுத்துக்களுக்கு முன்னோடி எனவும் சொல்லி இருந்தது இந்நூல் படிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.கரிசல் எழுத்தாளர் கழனியூரனோடு இணைந்து நாட்டுப்புறங்களில் உலவி வரும் பாலியல் கதைகளை தொகுத்துள்ளார் கி.ரா.அவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் கெட்ட வார்த்தை கதைகள் இவை.

100 பாலியல் கதைகள் கொண்ட தொகுப்பு இது.அனைத்துமே ஒரு பக்க அல்லது இரண்டு பக்க கதைகள்.அய்யோ..சீய்!! என ஒரேடியாய் ஒதுக்கி தள்ளும் படி ஒன்றும் இல்லை.பாலியல் குறித்த ஆரோக்கிய விவாதங்கள்/அறிவுரைகள்/விழிப்புணர்வு அனேக தளங்களில் சிறப்பாய் நடந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்நூல் மிகுந்த தேவையே.கிராமங்களில் உலவும் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது அதிலும் பாலியல் கதைகள் மற்றும் அதை முன்வைத்த கேலியும் கிண்டலும் கரிசல் மண்ணிற்கே உரித்தான ஒன்று.

இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் எடுத்தாள்பவை கணவன் மனைவிக்குள் நிகழும் பாலியல் சிக்கல்கள்,கணவனை விடுத்து வேறு ஆணோடு பழகும் பெண்கள் நடத்தும் நாடகங்கள்,வேசியர் தந்திரங்கள் என நீள்கின்றது.மதுரை வந்திருந்த பொழுதொன்றில் கவிஞர் விக்ரமாதித்யன் தன்னிடம்"அப்பச்சி கெட்ட வார்த்தை கதை ஒன்னு சொல்லுங்க' என கேட்டதை கி.ரா ஓரிடத்தில் நினைவு கூறுகிறார்.கி.ராவிடம் நேரடியாய் கதை கேட்கும் வாய்ப்பு கிடைக்காவிடினும் அவர் நாவல்களில்,கடிதங்களில்,கட்டுரைகளில் கொட்டி கிடக்கும் கதைகளை படித்து பெரும் இன்பம் அலாதியானது.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 230 ரூபாய்

31 comments:

குப்பன்.யாஹூ said...

லேகா பகிர்விற்கு மிக்க நன்றி.

கழனியூரன் கி ரா கதைகள் எப்போதும் படிக்க இனிமையாக இருக்கும் உங்கள் பதிவுகள் போல.

குப்பன்_யாஹூ

யாத்ரா said...

நல்லதொரு அறிமுகத்தைச் செய்திருக்கிறீர்கள்.

அநேகமாய் அவரது எல்லா எழுத்துகளையும் வாசித்திருக்கிறேன், கி ரா முழுசிறுகதைத்தொகுப்பு( கதவு சிறுகதை இன்னும் நினைவிலிருக்கிறது), கரிசல் காட்டு கடுதாசி, பாட்டி தாத்தா கதைகள், நண்பர்களோடு நான்,கோபல்ல கிராமம் நாவல்,,,,,,,

கரிசல் இலக்கியத் தலைமகன் இவர், இடைசெவல் கிராமம், கு அழகிரிசாமி அவர்களும் ஒரே ஊர், நண்பர்கள்.

தங்களின் பகிர்வு மகிழ்ச்சியளிக்கிறது.

லேகா said...

நன்றி ராம்ஜி :-))

லேகா said...

பகிர்விற்கு நன்றி யாத்ரா.

கி.ராவின் எழுத்துக்கள் மீது எப்போதும் ஒரு பைத்தியம் உண்டு.இவரின் கோபல்ல கிராமம்,கோபல்ல கிராமத்து மக்கள்,பிஞ்சுகள்,வெடி (சிறுகதை தொகுப்பு),கரிசல் காட்டு கடுதாசி ஆகியவைஎன் விருப்ப பட்டியலில் உண்டு.

அந்தமான் நாயக்கர் படித்ததில்லை..

Unknown said...

/-- கணையாழியின் கடைசி பக்கங்களில் தமிழில் சிறந்த போர்னோ இலக்கியம் இல்லை என்று சுஜாதா குறிப்பிட்டு இருப்பார்.--/

சுஜாதா சொல்லியது சரிதான். ஆனால் காலச்சுவடில் வெளிவந்தது தொகுக்கப்பட்ட ஒருசில பாலியல் கதைகள் இலக்கியத் தரம் வாய்ந்ததாக இருக்கும்.

ஒருமுறை எங்கோ, எப்போதோ சென்ற நூலகத்தில் அந்தப் புத்தகத்தின் ஒருசில கதைகளைப் படித்த ஞாபகம்.

நல்ல பதிவு தொடருங்கள் லேகா.

கே.என்.சிவராமன் said...

லேகா,

80களில் 'தாய்' வார இதழில் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற தொடரை தனியாக கி.ரா. எழுதினார். பின்பு, அது நூலாகவும் வந்தது. வாய்ப்பு கிடைத்தால் அந்த நூலை வாசியுங்கள்.

தாத்தாவின் கரிசல் காட்டு குசும்பும், எழுத்தும் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்லும். இந்த தொகுப்பு வந்த காலகட்டத்தை நினைவில் வைத்து வாசித்தால் பல வாசல்கள் திறக்கும். பி(றகான)ன் நவீனத்துவம் குறித்த வாசிப்பும் உரையாடலும் தமிழ்ச் சூழலில் தொடங்கிய காலகட்டத்தில் தாத்தா இந்த தொகுப்பை ஆர்ப்பாட்டமின்றி, ஆனால், அழுத்தமாக கொண்டு வந்தார். பிரதிகளின் புனிதங்களை கட்டுடைக்க வேண்டும் என பேச்சு - எதிர்பேச்சு - விவாதம் - உரையாடல் நிகழ்வதற்கு முன்னரே இந்த தொகுப்பு வந்துவிட்டதுதான் முக்கியமான விஷயம்.

தாத்தா தாத்தாதான்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லேகா said...

@ எனது பயணம்

வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.
காலச்சுவடு தேடி வெளியீட்டை படிக்க முயல்கின்றேன்.

Anonymous said...

Ki.Ra is indeed a legend. The fact that some one like me with very little contact with villages can relate very much with his work is a clear indicator of the power of his works.
But I do feel that there is a lot of nostalgia for the good things in villages and not much expose on the flip side of life in villages. For e.g. like what is being written by Imayam. But that's just a opinion which is neither here nor there. I can't force a writer to write what I want.
I always get the same feel with Marquez, Ki.Ra and Saramago, that of sitting before a person and listening to his stories. Ultimately with all the 'isms' going around, what we finally want is a good story.

IMHO J.B. Chanakya is a good writer of erotica, though his short stories are not about erotica only.

Va.Mu Komu also writes about sexuality and human emotions on it very well.

லேகா said...

@பைத்தியக்காரன்

//பிரதிகளின் புனிதங்களை கட்டுடைக்க வேண்டும் என பேச்சு - எதிர்பேச்சு - விவாதம் - உரையாடல் நிகழ்வதற்கு முன்னரே இந்த தொகுப்பு வந்துவிட்டதுதான் முக்கியமான விஷயம்.

தாத்தா தாத்தாதான்.//

//பிரதிகளின் புனிதங்களை கட்டுடைக்க வேண்டும் என பேச்சு - எதிர்பேச்சு - விவாதம் - உரையாடல் நிகழ்வதற்கு முன்னரே இந்த தொகுப்பு வந்துவிட்டதுதான் முக்கியமான விஷயம்.

தாத்தா தாத்தாதான்.//

மிக சரியாக சொன்னீர்கள்.:-)

Anonymous said...

லேகா,

உங்கள் பதிவின் தொடர் வாசகி நான். யாத்ரா குறிப்பிட்ட சிறுகதை தொகுதி படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட 'அந்தமான் நாயக்கர்' மற்றும் 'வெடி' தனியாக வந்த புத்தகங்களா? இது குறித்து விபரம் தர முடியுமா? நன்றி.

மறைவாய் சொன்ன கதைகள் தொகுப்பிலுள்ள ஒரு கதையை,மோகன்தாஸ் பதிவில் படித்து அடக்க மாட்டாமல் சிரித்த நினைவிருக்கிறது.

சித்ரா

லேகா said...

@ Anony,

//I always get the same feel with Marquez, Ki.Ra and Saramago, that of sitting before a person and listening to his stories. Ultimately with all the 'isms' going around, what we finally want is a good story.//

விருப்பதிற்குரியவரிடம் அருகில் அமர்ந்து கதை கேட்பதை போலவே தோன்றும் கி.ராவின் கதைகளை படிக்கும் சமயம்.அதீத சுழற்சியின்றி மிக எளிமையான இவரின் எழுத்துக்கள் வாசகனை தன் பால் ஈர்ப்பவை.

நீங்கள் குறிப்பிட்டதை போல ஜே.பி.சாணக்யாவின் எழுத்துக்கள் மிக விருப்பமானவை.சாணக்யாவின் கையாளும் பாலியல்கதைகள நிதர்சனத்தை அழுத்தமாய் பதிவு செய்வதோடு வெகு அழகாய் அவ்வுலகத்தை விவரிப்பவை.

வா.மு.கோ.மு வின் 'தவளைகள் குதிக்கும் வயிறு" சிறுகதை தொகுப்பு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.ஏனோ ஆபாசமாய் தோன்றியது.

Anonymous said...

'Thavalaigal Guthikkum Vaiyuru' disappointed me too. I think it suffered from the problem of writing getting diluted due to the quantity of work being written by him. After a point in that collection, stories started being similar and his strengths of using words efficiently became tiring due to probably over exposure.

Have you read 'Kalli' his novel and 'Man Bootham' his short story collection. I think those 2 are good. I had them in mind when I made my previous post.

Sorry for posting only in English. Am finding it difficult to use a translator here.

Also wanted to say that I have been following your posts for quite some time. Good introductions are made by you for authors.

Just wanted to request a thing which I had made earlier in one of your posts.

It would be great if you can do some posts on writers outside India also.

லேகா said...

வருகைக்கு நன்றி சித்ரா.

கி.ராவின் 'அந்தமான் நாயக்கர்" நாவல் கம்யூனிச கொள்கைகளை முன்வைத்து எழுதப்பட்டது என கேள்விபட்டுள்ளேன்.சென்ற ஆண்டு புத்தக சந்தையில் பார்த்த நியாபகம்,.வாங்காமல் விட்டுவிட்டேன் :-(

"வெடி" குறித்து நான் அறிந்திருக்க வில்லை.விசாரித்து சொல்கின்றேன்.

கி.ராவின் "பிஞ்சுகள்" மற்றும் "கோபல்ல கிராமம்" படித்திருக்காவிட்டால் அவசியம் படியுங்கள்.

லேகா said...

//Have you read 'Kalli' his novel and 'Man Bootham' his short story collection. I think those 2 are good.//

Yeah..u r correct.i too have heard abt thosetwo works of Va.Mu.Ko.Mu.have to read!!
No issues you can very well comment in english.As long as u read n appreciate tamil..
no issues for me:-))

If u wish,pls reveal ur name..Anony identification is for not for people like you who are
participating in healthy discussions.

KARTHIK said...

மிக நல்ல தொகுப்பு இல்ல
என்கிட்ட இந்த புத்தகம் படிக்க வாங்குன ஒருத்தர் கொஞ்சம் வார்த்தைகள் அதிகமா இருக்குன்னு அவர் மனைவிகிட்ட கூட குடுக்கலை என்னத்த சொல்ல.
இதுலையே கடைசில கழனியூரான் சொல்லிருப்பாரு
அவர் கதை கேக்கபோனப்ப அந்தநபர் அங்க இருக்கமாட்டாரு.இவர் வந்து போன சமாச்சாரம் தெரிஞ்சதையும் கழனியூரான் வீட்டுக்கே வந்து கதை சொல்ல ஆரம்பிச்சிடுவாரு.அது ஒரு மார்க்கமான கதை அதை அவர் தப்பா சொல்லவும் இவர் அம்மா இல்ல அப்படி இல்லைனு சரியா சொல்லுவாங்கலாம்.இத்தனைக்கும் அவரது குடும்பம் ஒரு இஸ்லாமிய குடும்பம்.

கடைசில சில கதைகள் முன்னாடி படிச்சதே திறும்பத்திறும்ப வரும் வேற வேற பேர்ல.அது மட்டும்தான் கொஞ்சம் கடுப்பா இருக்கும்.

மத்தபடி மிக நல்ல புத்தகம்.

// கி.ரா.அவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் கெட்ட வார்த்தை கதைகள் இவை.//

இவர் தன்னோடகதைகலையே அடுத்தவன் சொன்னகதைனு சொல்லிட்டு போயிருவாராம்.

இந்த புத்தகத்த மோகந்தாஸ் பதிவுல வந்த இந்தக் கதைய படிசித்தான் வாங்கினேன்.பாருங்க அப்பையே சைவம் வைனவம் என்ன மாதிரி சண்ட போட்டிருக்காங்கன்னு.

நாம இழந்துகிட்டு இருக்குர பல விசைங்கள்ல இந்தமாதிரி கதைகளும் ஒன்னு.இதையெல்லாம் யாராவது இப்படி சில புண்ணியவான்கள் மெனக்கெட்டு ஒரு தொகுப்பா சேத்துவெச்சாத்தான் உண்டு ((-:
அதக்கூட நம்ம மக்களுக்கு காசு கொடுத்துவாங்கிபடிக்க மொடை.
படிசுப்போட்டு நாமா கத சொன்ன வேணா நல்லா கேப்பானுங்க.

Krishnan said...

கிரா என்றாலே எனக்கு உங்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள்.

Anonymous said...

மறுமொழிக்கு நன்றி லேகா.

//கி.ராவின் 'அந்தமான் நாயக்கர்" நாவல் கம்யூனிச கொள்கைகளை முன்வைத்து எழுதப்பட்டது என கேள்விபட்டுள்ளேன்.சென்ற ஆண்டு புத்தக சந்தையில் பார்த்த நியாபகம்,.வாங்காமல் விட்டுவிட்டேன் :-(
"வெடி" குறித்து நான் அறிந்திருக்க வில்லை.விசாரித்து சொல்கின்றேன்.
கி.ராவின் "பிஞ்சுகள்" மற்றும் "கோபல்ல கிராமம்" படித்திருக்காவிட்டால் அவசியம் படியுங்கள்.//

பிஞ்சுகள் இன்னும் படிக்கவில்லை. முயற்ச்சிக்கிறேன். நானும் சில புத்தகங்களை வாங்காமல் விட்டுவிட்டு பிறகு வருந்துவேன். தற்போது வருந்துவது, பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வந்த பைரப்பாவின் பர்வம் வாங்காமல் விட்டதற்காக. :-(


//பகிர்விற்கு நன்றி யாத்ரா.

கி.ராவின் எழுத்துக்கள் மீது எப்போதும் ஒரு பைத்தியம் உண்டு.இவரின் கோபல்ல கிராமம்,கோபல்ல கிராமத்து மக்கள்,பிஞ்சுகள்,வெடி (சிறுகதை தொகுப்பு),கரிசல் காட்டு கடுதாசி ஆகியவைஎன் விருப்ப பட்டியலில் உண்டு.

அந்தமான் நாயக்கர் படித்ததில்லை..//

நீங்கள் யாத்ராவிற்கு சொன்ன மறுமொழியிலிருந்தே அந்தமான் நாயக்கர் மற்றும் வெடி குறித்து அறிந்தேன். ஒருவேளை வெடி (வேட்டி) தட்டச்சுப் பிழையாக இருக்கலாம்.

சித்ரா

லேகா said...

வருகைக்கு நன்றி கார்த்திக்.

இப்புத்தகம் குறித்து கொஞ்சம் கவலையோடு சோகமும் சேர்ந்து இருக்கு உங்க பின்னூட்டம்.

//கடைசில சில கதைகள் முன்னாடி படிச்சதே திறும்பத்திறும்ப வரும் வேற வேற பேர்ல.அது மட்டும்தான் கொஞ்சம் கடுப்பா இருக்கும்.//

எத்தனையோ கதைகள் பல்வேறு வடிவங்கள் பெற்று சமூகத்திற்கு சமூகம் மாறு பட்டு உலவுகின்றது.அதே போலவே இதிலும் நாட்டுப்புறங்களில் உலவும் ஒரே கருத்தை சொல்லும் சில கதைகள் உள்ளது.எனினும் வாசிப்பவர்க்கு அயர்ச்சியை போக்கும் வண்ணம் இவை நீக்க பட்டிருக்கலாம்.


//அதக்கூட நம்ம மக்களுக்கு காசு கொடுத்துவாங்கிபடிக்க மொடை.
படிசுப்போட்டு நாமா கத சொன்ன வேணா நல்லா கேப்பானுங்க//

இது ரொம்ப சரியான கருத்து!!

லேகா said...

நன்றி சித்ரா.

நிச்சயமாய் அது வேட்டி சிறுகதை தொகுப்பை குறிப்பதாய் தான் இருக்கும்.

லேகா said...

@யாத்ரா

கி.ரா வின் வேட்டி சிறுகதை தொகுப்பு என்னிடம் உள்ளது.பெரும்பாலானவை நகைச்சுவை கதைகள்.இத்தொகுப்பில் நாற்காலி என் விருப்பத்திற்குரிய கதை.

இத்தொக்குப்பு குறித்து விரைவில் பதிவு செய்கின்றேன்.

யாத்ரா said...

நன்றி லேகா, பதிவு செய்யுங்கள், ஆவலோடிருக்கிறேன்.

யாத்ரா said...

நன்றி லேகா, பதிவு செய்யுங்கள், ஆவலோடிருக்கிறேன்.

லேகா said...

யாத்ரா.

கி.ராவின் வேட்டி சிறுகதை தொகுப்பு குறித்து ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.
கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்.

http://yalisai.blogspot.com/2008/11/blog-post_24.html

அ.மு.செய்யது said...

கி.ரா வின் "கதவு" சிறுகதை படித்து அழுதிருக்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத சில படைப்புகள் குறித்த உங்கள் கண்ணோட்டம் ஒரு சேவையை போன்றே நீள்கிறது.

வாழ்க உங்கள் தொண்டு !!!

லேகா said...

மிக்க நன்றி செய்யது:-)

வால்பையன் said...

கெட்டவார்த்தைகள் இதில் பயன்படுத்தியது போல தெரியவில்லை!

கிராமிய செவிவழி கதைகளை தொகுத்திருக்கிறார்!

இன்றைய நகர வாழ்க்கையில் இவைகளை காகிதத்தில் தேட வேண்டியிருக்கிறது!

என் தாத்தா வெற்றிலை போட்டு கொண்டே ஊர் சிறார்களுக்கு இம்மாதிரியான கதைகளை சொல்லுவார்!

என்னிடமும் ஒரு தொகுப்பு உண்டு. எழுதினால் அடிவிழவும் வாய்புண்டு!

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி அருண்.

இனியாள் said...

Ki. Ra eppothume alathiyana kathai solli thaan thozhi, pahirvirku nandri.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அன்பிற்கினிய தோழி,

உங்கள் வலைப்பூவைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் வாய்த்தது. சுஜாதா விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். மறைவாய்ச் சொன்ன கதைகள் ஓர் அற்புதமான நூல். இது போன்ற நாட்டுப்புற இலக்கியங்களை வெளிக்கொண்டுவருவதில் இருக்கும் நடைமுறை மற்றும் பண்பாட்டுச் சிக்கல்கள் பற்றி கழனியூரன் அவர்கள் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது. வாசகர்களின் ஆதரவு கிட்டுகிறபோது எழுத்தாளனின் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்கிறது தானே!

-ப்ரியமுடன்
சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நேரம் அனுமதித்தால் இந்த வலைப்பக்கத்தைப் பாருங்கள்


http://puththakam.blogspot.com/2007/02/16.html

-ப்ரியமுடன்
சேரல்

கழனியூரன் said...

இந்த நூலை வெளியிட்டது காலச்சுவடு அல்ல. உயிர்மை பதிப்பகமாகும்.
-கழனியூரன்