சராசரி கதை சொல்லும் பாணியில் இருந்து முற்றிலுமாய் வேறுபட்டு பயணிப்பவை யுவனின் கதைகள்.கவிதை உலகில் எம்.யுவனாகவும் கதையுலகில் யுவன் சந்திரசேகராகவும் அறியப்படும் யுவனின் "குள்ளசித்தன் சரித்திரம்" நாவல் தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இவரின் முதல் சிறுகதை தொகுப்பு இது.இத்தொகுப்பு முழுதும் கதைகள் தொடர் சங்கிலியாய் உள்ளது. கி.ராவின் கதைகளுக்கு பிறகு யுவனின் கதைகள் மிக பிடித்தமானதாய் போனது.தேர்ந்த கதை சொல்லிக்கு தெரியும் கேட்பவனை நேர்கோட்டில் பயணிக்க செய்யும் வித்தை.மிகையான நிகழ்வுகளை கதையின் ஊடே இயல்பாய் புகுத்தி தன் வசப்படுத்தும் ஜாலம் யுவனுக்கு தெரிந்திருக்கின்றது.
"நச்சு பொய்கை" சிறுகதை, கதைக்குள் கதை சொல்லும் கதையாடல்.சமூகத்தால் ஒதுக்கப்படும் திருநங்கை ஒருத்தியின் சோகத்தில் தொடங்கி அவள் சந்திக்கும் சாமியார்,அவர் சொல்லும் தமது பயண அனுபவங்கள்,அந்த அனுபவத்தின் வாயிலாய் கிட்டும் ஆண்,பெண் என இரு நண்பர்கள்,அவர்களின் நட்பு தொடங்கிய அனுபவம் என ஒரு நிகழ்வின் முடிவு மற்றொன்றின் தொடக்கமாய் கதையை வழிநடத்துகின்றது."ஒளி விலகல்" சிறுகதை,மனபிறழ்வு நோயாளியின் விசித்திர கனவுகளும் அதை அவன் மருத்துவரிடம் விவரிக்கும் சமயம் தொடரும் உரையாடலுமே இக்கதை.
சொந்த அனுபவங்களின் வாயிலாய் புனையப்பட்டுள்ள சில கதைகள் சுவாரஸ்யம் சேர்ப்பவை.டெல்லி நகரின் வீதிகளை வர்ணித்தபடி தொடங்கும் "ஊர் சுற்றி கலைஞன்" சிறுகதை அங்கிருந்து காசி பயணிக்கின்றது.தினப்படி சுமைகளை மறந்து செல்லும் நீண்ட தூர பயணங்கள்,சந்திக்கும் மனிதர்கள்,கடந்து செல்லும் கிராமங்கள்,நதிகள்,வயல் வெளிகள் இன்னும் எவ்வளவோ பயணத்திற்கு அர்த்தம் கூட்டுபவை.இந்த சிறுகதையும் அது போலவே நண்பர்களுடன் சென்ற வட இந்திய பயணத்தின் பொழுது சந்தித்த புல்லாங்குழல் கலைஞன் ஒருவனை பற்றியது.இதிலும் கதைக்குள் கதைகள் அவை போடும் புதிர்கள் என சற்று மிகைபடுத்தி ரசிக்கும் படி சொல்லபட்டுள்ளது.
நாம் குழந்தை பருவத்தில் கேட்ட கதைகள் இன்று வெவ்வேறு மாற்றம் கொண்டு புதுவிதமாய்,நவீனமாய் உலவுகின்றன எனினும் பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை."அப்பா சொன்ன கதை" சிறுகதை விக்ரமாதியன்,வேதாளம் புதிர்கதைகள் இருந்து புனைய பட்டது."சாதுவன் கதை ஒரு முன்விவாதம்" ஒரு நண்பரை குறித்த சிறுகதை தோன்றுவதற்கு முன்பான உரையாடல்களை,ஒரு நபர் குறித்த இருவரின் பார்வையை முன்வைத்து வருகின்றது.
இவை தவிர்த்து "1999 இன் மிக சிறந்த கதை","தாயம்மா பாட்டி சொன்ன 23 காதல் கதைகள்","மேஷ புராணம்" ஆகிய சிறுகதைகளும் குறிப்பிடதக்கவை.மாறுபட்ட கதையாடல் மட்டும் இன்றி யுவனின் கதைகளில் நம்மை ஈர்ப்பது கதையோடு இயைந்து வரும் நகைச்சுவை.வாய் விட்டு சிரிக்க செய்யும் பத்திகள் அதிகம்.வித்தியாசமான வாசிப்பனுபவம் வேண்டுபவர்களுக்கு தாராளமாய் இந்நூலை பரிந்துரைக்கலாம்.
நூல் வெளியீடு - காலச்சுவடு (முதல் பதிப்பு)
விலை - 90 ரூபாய்
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை//
மிகச்சரி..
நல்ல தொகுப்பு.
நன்றி நர்சிம் :-)
Nice story collection from Yuvan which gives great textual pleasure when viewed as a stand alone.
My only issue with the collection is that they follow the same pattern as in stories by Borges. An author can surely be inspired by another, but there should be a divergence from the inspiration which does not seem to be present in this collection.
Just my opinion on it, but not trying to demean it or anything since as mentioned earlier, they give good textual pleasure.
BTW there is another collection 'Erkanave' from Uyirmmai. I think, the whole collection of his short stories has come in kizhakku pathipagam.
Nice to see your post after a long time.
பகிர்விற்கு நன்றி லேகா :)
குள்ளச்சித்தன் சரித்திரம், ஒளி விலகல் இரண்டும் வாசித்திருக்கிறேன்,
இவரின் கானல் நீர் என்றொரு நாவலும் படித்தாக நினைவு.
பகடையாட்டம் என்றொரு நாவல், சமீபத்தில் கூட இவரது மணல் கேணி வெளிவந்திருக்கிறது.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
தாங்கள் அனுப்பிய சம்பத் அவர்களின் இடைவெளி கிடைத்தது, மிக்க நன்றி
தேர்ந்த கதை சொல்லிக்கு தெரியும் வாசகரை நேர்கோட்டில் பயணிக்க செய்யும் வித்தை.
அதே போல தேர்ந்த வாசகரான உங்களுக்கு நன்றாக தெரியும், கதை சொல்லி சிறப்பாக சொல்கிறாரா இல்லையா என்பது.
பகிர்தலுக்கு மிக்க நன்றி, வாசிக்க முயலுகிறேன்
மாறுபட்ட எழுத்தாளர்களை புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கு நன்றி.
/--கி.ராவின் கதைகளுக்கு பிறகு யுவனின் கதைகள் மிக பிடித்தமானதாய் போனது.--/
கி. ராவிற்குப் பிறகு என்று சொல்லி ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். கி ராவைப் போல் ஒரு கதை சொல்லியா! அவசியம் படிக்க வேண்டியவர் தான் போல... நல்ல பதிவு லேகா :-)
Tnx a lot for sharing ur views Anony!!
Yeah i too have noticed his short story collection@Land Mark.have to get it.
நன்றி சென்ஷி
மிக்க நன்றி ராம்ஜி :-)
நன்றி எனது பயணம்.
நன்றி யாத்ரா.
கானல் நீர்,பகடையாட்டம் நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
Yuvanin kathaigal ethaiyume ithuvarai padithathu illai, kullachiththan patri niraiya kettirukiren, kandippai padikka vendum endra aavalai thoondukirathu intha pathivu, enakku therinthu ungal pathivugalileye satre neelamana ore puththagathai patriya pathivu ithu thaano, vaazhthukkal.
//கி.ராவின் கதைகளுக்கு பிறகு யுவனின் கதைகள் மிக பிடித்தமானதாய் போனது.தேர்ந்த கதை சொல்லிக்கு தெரியும் கேட்பவனை நேர்கோட்டில் பயணிக்க செய்யும் வித்தை.//
இந்த ஒரு காரணத்துக்காகவே படிக்கோனும்.
என்கிட்டையும் மணற்கேணின்னு இவரோட ஒரு புக் இருக்குங்க இன்னும் தொடவே இல்லங்க.கிரா மாதிரின்னு தெரியாமா போச்சே.
இனி ஆரம்பிச்சிருவோம்.
ஒரு சிறு திருத்தம், கானல் நீர் என குறிப்பிட்டிருந்தேன்,
அது கானல் நதி
இனியாள்
வருகைக்கு நன்றி இனியாள்."குள்ள சித்தன் சரித்திரம்" சிறந்த புனைவு.அவசியம் படித்து பாருங்கள்.
இப்பதிவிற்கு முன் சு.ரா வின் "ஜே ஜே சில குறிப்புக்கள் மற்றும் சுஜாதாவின் "கணையாழியின் கடைசி பக்கங்கள்" குறித்த எனது பதிவுகள் சற்று நீளமானவை என நினைக்கின்றேன்!!
கார்த்திக்,
வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி.
கி.வின் கதைகளுக்கு பிறகு என குறிப்பிட காரணம் யுவனின் எழுத்தில் உள்ள வசீகரம்,வாசிப்பவனை சோர்வடைய செய்யாமல் தொடரசெய்யும் ஆற்றல்.
மற்றபடி இவரின் கதைகளமும்,கதை மாந்தர்களும் சராசரிக்கு முற்றிலும் வேறுபட்டவர்கள்.
Post a Comment