Thursday, November 13, 2008

நீல.பத்மநாபனின் "பள்ளிகொண்டபுரம்"

மிக சமீபத்தில் வலைப்பதிவு ஒன்றில் கணவனையும்,தம் குழந்தைகளையும் விட்டு வேறொரு ஆணுடன் சென்று விட்ட நண்பனின் மனைவி,இதை எதிர்பார்க்காத நண்பனின் நிலை குறித்த பதிவை படித்த பொழுது மாறிவரும் சமூக சூழலில் பெற்ற பிள்ளைகளை விட்டு வேறு இடம் செல்லும் பெண்களின் மனநிலை குறித்து நினைக்கவே அருவருப்பாய் இருந்தது.குடும்பத்தை விட்டு பிரிய தனிப்பட்ட காரணங்கள் பல இருப்பினும் அதற்கு பலியாகும் ஒன்றும் அறியா குழந்தைகள் பாதிக்கப்படுவது சகித்து கொள்ள முடியாதது.
இது போலவே இந்நாவலும் தன்னையும்,தன் இரு குழந்தைகளையும் விட்டு வேறு ஆணை மணந்த மனைவியின் துரோகத்தை மறக்க முடியாது துன்புறும் அனந்த நாயரின் மனவோட்டத்தை,அவர் பார்வையில் சொல்லுகின்றது.இரண்டே நாட்களில் நடக்கும் சம்பவங்களோடு,அனந்த நாயரின் மறக்க நினைக்கும் துர் நினைவுகளோடும் கதை மிக எளிமையாய்,நேர்த்தியாய் சொல்லபட்டிருக்கின்றது.
தம் மனைவி கார்த்திகாயினியை பெண்பார்க்க சென்ற பொழுதின் நினைவுகள்,திருமணத்திற்கு பிறகு நகரின் விழா கால கொண்டாட்டங்கள்,மனைவியோடு சந்தோஷித்து இருந்த தருணங்கள்,பின் டி.பி நோய் தாக்கி தான் மருத்துவமனையில் கழித்த நாட்கள்,தன் உயர் அதிகாரி சிதம்பரம் தம்பி கார்த்திகாயினி மீது விருப்பம் கொண்டு அவளை மணக்க செய்த மறைமுக காரியங்கள் என ஒவ்வொரு நிகழ்வையும் அந்த பொழுதின் தம் கொண்டிருந்த மனநிலையோடு எண்ணி பார்க்கிறார் அனந்த நாயர்.

ஒரு மனிதனின் துன்பம் நிறைந்த கடந்த கால வாழ்கையை மட்டும் சொல்லும் நாவலாய் இதை எடுத்து கொள்ள முடியாது.காரணம் மிக அழகாய் வர்ணிக்கபட்டுள்ள பத்மநாபபுர நகரம்.நகரங்கள் குறித்த செழுமையான வர்ணனைகள் மிக கொஞ்ச நாவல்களில் மட்டுமே கிட்டும்.இந்நாவல் அவ்வகையில் மிகச்சிறந்த பொக்கிஷம்.இருபது வருடத்திற்கு முன்பும்,தற்பொழுதும் என மாறி மாறி நகரின் தெருக்கள் ,விழா கால கொண்டாட்டங்கள் ,அரண்மனை காரியங்கள் ,பத்மநாப கோவிலின் மெருகேறி வரும் அழகு ,சங்கு கடற்கரை ஆகியவை குறித்த விவரிப்புகள் யாவும் நிஜ காட்சிகளாய் நம் மனகண்ணில் விரிகின்றது.

இந்நாவலின் ஆசிரியர் நீலபத்மநாபன் தமிழிலும்,மலையாளத்திலும் பல நாவல்கள் எழுதியுள்ளார்.சாகித்திய அகாதமி விருது பெற்ற நீலபத்மநாபனின் வலைத்தளம் அவரின் படைப்புகள்,பேட்டி,பெற்ற விருதுகள் குறித்த தகவல்கள் கொண்டுள்ளது.

நூல் வெளியீடு : மாணிக்கவாசகர் பதிப்பகம்

10 comments:

Krishnan said...

Lekha: Great timely review for me, was planning to buy this book and was checking reviews on the net. Thanks a lot again.

லேகா said...

Tnx Krishnan :-)

I am also quiet suprised to see his website which gives few good ideas abt his works.

narsim said...

நல்ல அலசல், வழக்கம் போல்!

நர்சிம்

லேகா said...

Tnx Narsim :-)

குப்பன்.யாஹூ said...

உங்கள் வாசிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, மிக்க மகிழ்ச்சி.

நல்ல பதிவு, நன்றிகள்.

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி குப்பன்_யாஹூ :-)

JAGANNATHAN CS said...

தன் காலை மெல்ல ஊன்றி நடக்கத் தொடங்கிய யுவதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை நியதி.

என்றும் அன்புடன்,
ஜெகன் . சுசி

Thirumal said...

வணக்கம் லேகா..
வேறொரு புத்தகத்திற்காக மாணிக்கவாசகர் பதிப்பகத்தின் முகவரி தேவைப்படுகிறது..

பதிப்பகத்தின் முகவரியும், போன் நம்பரும், இந்தப் புத்தகத்தில் இருப்பின் தெரிவிக்க இயலுமா?

prthirumal@gmail.com

லேகா said...

@Thirumal,

I dont have this book with me now.Its with dad in Madurai.Will check out and let u know the details.thanks.

maithriim said...

படிக்கவேண்டும்... படித்ததில்லை இது வரை.

amas32