Thursday, April 17, 2008

Amelie Pouline


Amelie Pouline - ஜீன் என்பவரால் இயக்கப்பட்ட இந்த பிரெஞ்சு மொழி திரைப்படம் பல சர்வதேச விருந்துகளை பெற்றுள்ளது. Amelie என்ற இளம் பெண்ணை சுற்றியே கதை செல்கிறது.தந்தையை விட்டு தனித்து ஒரு நகரில் வாழும் Amelie மதுபான கடை ஒன்றில் பணி பெண்ணாய் இருக்கின்றாள்.தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் ஆசைகளை அவர்கள் அறியாமலே நிறைவேற்றி வைக்கிறாள்.இளவரசி டயானா இறந்த அன்று அவள் அதிர்ச்சியில் கையில் இருந்த பொருளை கீழே விட அதை எடுக்கும் பொழுது ஒரு சிறுவனுக்கு உரிய பெட்டி ஒன்றை பார்க்கிறாள்..அங்கு தொடங்குகிறது அவளது பயணம்.அப்பெட்டியை அச்சிறுவனிடம் கொண்டு குடுப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியே அவளை மேலும் இது போல் செய்ய பணிக்கிறது.அதன் பின் எப்போதும் தன் பணியாளை திட்டி கொண்டிருக்கும் காய்கறி கடைகாரனை அவன் அறியா வண்ணம் சோதனைகுள்ளாகுகிறாள்..அந்த காட்சி அமைப்பு நகைச்சுவை கலந்தது.அவள் இருக்கும் குடியிருப்பில் கணவன் தன்னை விட்டு சென்றதாக கூறி அழுது புலம்பும் பெண்மணியை ஆறுதல் செய்யும் வண்ணம் அவள் கணவன் அனுப்புவது போல் Amelie கடிதம் தயார் செய்து அனுப்புகிறாள்.தெருவில் நடந்து செலும் ஒரு கண்பார்வை அற்ற ஒரு கிழவனை அருகில் உள்ள மெட்ரோ ஸ்டேஷன்கு செல்ல உதவுகிறாள்.அப்பொழுது அதெருவின் அமைப்பை அவருக்கு அவள் விளக்கும் காட்சிகள் அருமை.உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற அவளின் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவருடைய கிறிஸ்மஸ் தாத்தா பொம்மையை தன் விமான ஊழியை தோழி மூலம் உலகின் பல இடங்களுக்கு எடுத்து சென்று புகைப்படம் எடுத்து தன் தந்தையிடம் காட்டுகிறாள்.தன்னுடன் பணிபுரியும் தோழிக்கு கடை வாடிகையாளனுடன் சிநேகம் வர செய்கிறாள்..இதனிடையில் ஒரு இளைஞனின் போட்டோ ஆல்பம் இவள் கையில் கிடைக்க அவனுடன் கண்ணாமூச்சி விளையாட்டு செய்து காதல் கொள்கிறாள்...படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக பட்ட விதம் அருமை.இயக்குனர் காட்சிகளில் சிகப்பு நிறத்தின் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதாய் படம்பிடித்துள்ளார்.
Amelie ஆகா நடித்த நடிகை Audrey Tautou தன் சிரிப்பால் படம் முழுவதும் ஒரு ரகசிய சிநேகிதி போல் அனைவருக்கும் உதவுகிறாள்.இத்திரைப்படம் ஐந்து அகாடமி விருந்துகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படம் குறித்த தகவல்கள் பெற கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்..

http://en.wikipedia.org/wiki/Am%C3%A9lie

2 comments:

KARTHIK said...

நல்ல படங்க நானும் இப்போதாங்க பார்த்தேன் கூகிள் சர்ச்ல படத்த பத்தி தேடும் போது உங்க பதிவை பார்த்தேன்
நல்ல பதிவு.

சி. சரவணகார்த்திகேயன் said...

டியர் லேகா,

என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அகநாழிகை பதிப்பகம் வாயிலாக‌ எனது முதல் கவிதைத்தொகுப்பான 'பரத்தை கூற்று' வெளியாகியிருக்கிறது. நான் தொடர்ந்து வாசிக்கும் சகபதிவர்களுள் ஒருவரான உங்களுக்கு அப்புத்தகத்தின் பிரதியை அனுப்ப விழைகிறேன். முகவரி தரவியலுமா?

உங்கள் மெயில் ஐடி தேடிக் கிடைக்காததால் இவ்வழி வருகிறேன். என்னுடையது c.saravanakarthikeyan@gmail.com


சி.சரவணகார்த்திகேயன்
www.writercsk.com