
டாரத்தி, அன்னமேரி, இருதயம், தியோடர், சாம்சன், பிலோமி,ஆசிர்வாதம் பிள்ளை, எபன் என கதை மாந்தர்களின் அன்றாட நிகழ்வுகளும்,அவர்களுக்குள்ளான உறவுகளும் அழகாய் கதை முழுதும் விரவி உள்ளது. மகிழ்ச்சியோ, சோகமோ,காதலோ,குரோதமோ,வன்மமோ எதுவுமே மிகை படுத்த படாமல் அவர் அவர் போக்கில் கதை செல்கிறது..
ரெய்நீஸ் ஐயர் தெருவிற்கும் மழைக்குமான தொடர்பு அற்புதமானது..மழை பெய்து முடித்த ஒரு நாளில் டாரதி தன் வீட்டு வாசலில் அமர்ந்து இருப்பதை தொடங்கும் கதை மழை பெய்து கொண்டு இருக்கும் ஒரு மாலை பொழுதோடு நிறைவுபெறுகிறது.இக்கதையில் கதை மாந்தர்களோடு மழை,பொருட்காட்சி,கால்வாய், வீட்டின் படிக்கல் என யாவும் உயிர் பெற்று உலவுகின்றன.கல்யாணி என ஒரு கதாபாத்திரம்..ரெயநீஸ் ஐயர் தெரு மக்கள் யாவருக்கும் ஒரு உற்ற நண்பன் போல..நிச்சயமாய் சொல்லுவேன் அது வண்ணதாசனை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட பாத்திரம் என்று.அவர்தம் கதைகளை போலவே..அவரது பாத்திர படைப்பும் அருமை...மாலை நேர மழையின் போது பருகும் தேநீர் போல ரசிக்கத்தக்க நாவல் இது..