Wednesday, July 16, 2008

ஜே ஜே சிலகுறிப்புகள் - சுந்தரராமசாமி

சு.ரா வின் ஒரு புளியமரத்தின் கதை ஏற்படுத்திய ஆர்வத்தில்,அவரின் மிகச்சிறந்த படைப்பென அறியப்படும் 'ஜே ஜே சிலகுறிப்புகள்' படித்து முடித்தேன்..ஒரு எழுத்தாளனின் மறைவிற்கு பிறகு அவனை குறித்த நினைவுகளை மற்றொரு எழுத்தாளன் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் இக்கதை இரெண்டு எழுத்தாளர்களின் சிந்தனை,மனவோட்டம்,விருப்பு,வெறுப்பு பிற இலக்கியம் மீதான பார்வை,சம கால எழுத்தாளர்களோடு கொண்ட உறவு என திகட்ட திகட்ட கருத்தாளமிக்க பல குறிப்புகள் கொண்டது.

ஜோசப் ஜேம்ஸ் (ஜே ஜே) என்னும் மலையாள எழுத்தாளனின் மறைவிற்கு பின்னர் அவனை குறித்த நாவல் ஒன்றினை எழுத ஜே ஜே வின் மனைவி, நண்பர்கள்,அவனோடு எதிர்மறை கருத்து கொண்டவர்கள்,அவனது சமகால எழுத்தாளர்கள் என யாவரையும் சந்தித்து ஜே ஜே நினைவுகளை நம்மோடு பகிர்கிறார் எழுத்தாளர் பாலு...இந்நாவல் கதை அல்ல,இறந்த எழுத்தாளனின் நாட்குறிப்புகள்...இவ்வளவு ஆழ்ந்த கருத்துக்களை ஒன்று சேர ஒரே நாவலில் படித்ததில்லை..இந்நாவலில் குறிபிட்டுள்ளது போல புரியாத இலக்கியம் இரெண்டு வகை அசிரத்தை ஏற்படுத்துவது அல்லது ஆர்வத்தை தூண்டுவது.இதில் இந்நாவல் இரெண்டாம் வகை....




ஜே ஜேயை குறித்த ஒரு தெளிவான முடிவிற்கு வாசகனால் வர இயலாதபடி அவரது போக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.ஆயினும் உண்மை எதிர்மறையாக இருப்பினும் அதை அழுத்தமாக சொல்லக்கூடியவன் என்பது பல இடங்களில் வெளிப்படுகின்றது. பாலுவிற்கும் ஜே ஜே விற்கும் மான முதல் சந்திப்பில் ஜே ஜே கேட்பது " உங்கள் சிவகாமியின் சபதம் நிறைவேறிவிட்டதா என்று" - உள்ள அர்த்தம் புரிந்தவர்களுக்கு இந்த பகடி சிரிப்பை வரவழைக்கும்.இந்நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று மிகுந்த ஹாசியம்,பகடி.திருச்சூர் என்னும் சரித்திர நாவலாசிரியரின் ஒரு படைப்பை பற்றி ஜே ஜேயின் விமர்சனம் " இளவரசி உம்மிணிகுட்டியை எதிரிகளிடமும் அவளை காப்பாற்றிய இளவரசனிடமும் இருந்து விடுவித்து திருச்சூருக்கு மனம் முடித்தால் அவருக்கு நாவல் எழுதும் வேலை குறையும்".இதே போல பவானி என்னும் பேச்சாளரை குறித்து ஜே ஜே செய்யும் பகடியும் ரசிப்பிற்குரியதே..ஜே ஜேவின் இரங்கல் கூட்டத்தில் குருவி என்னும் புனைப்பெயரில் எழுதும் பெண் எழுத்தாளர் ஜே ஜே பற்றி ஒன்றும் அறியாது அவரை குறித்து அழுது புலம்பும் காட்சியில் ஜே ஜேயும்,அப்பெண்ணும் சிறு வயதில் பாண்டி விளையாடுவதாய் பாலு கற்பனை செய்து சிரிப்பது நல்ல கற்பனை...

நமக்கான எல்லைகள் சுருக்கப்படும் பொழுது அதில் இருந்து மீள்வதற்கு வழிவகை இல்லாத பொழுது ஏற்பட்டும் வீழ்ச்சி எற்றுகொள்ளகூடியது அல்ல...நமக்கான முடிவுகளை பிறர் தீர்மானிக்கும் பொழுதும் நிகழும் துக்கம்,வெறுமை,அழுகை இவற்றை ஜே ஜே தனது குறிப்புகளில் அழுத்தமாய் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஜே ஜேயை அவனின் நண்பர் ஒருவர் "மேகத்தை கலைப்பவன்" என கூறுகிறார்..இன்னும் எவ்வளவோ விமர்சனங்கள். ஜே ஜேயை அறிந்து கொள்ள அவன் எழுதிய பேசிய பகுதிகளில் இருந்து எனக்கு பிடித்தவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன்..




-- "மரணத்தின் குகைவாயில் மனகண்ணுகு தெரியும் பொழுது எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது"

-- "மன நிம்மதி எப்போதும் மந்தத்தை பார்த்து கண் சிமிட்டுகிறது போலிருக்கிறது"

-- "மனைவிகளின் பெரிய எதிரி கணவனின் இலக்கிய நண்பன்"

-- "எனக்கு புறப்படும் இடம் தெரியும் போகும் இடம் தெரியாது"

--"மழையின் அற்புதத்தை முழுதாக இழந்துவிட்டோம் ,என்னை மறந்து அதை ரசிக்க தெரியவில்லை"

-- "ஒரு புறாவின் வாழ்வு பிறப்பு,உணவு,உறைவிடம்,இனவிருத்தி,மரணம் என முடிகிறது,மனிதனுக்கோ நிருவன்னகள்,லட்சியங்கள்,இலக்கியங்கள்,உறவுகள் என யாவும் சிடுக்குகள்"

-- "நகரத்தின் போலியான நாகரிகம் இயற்கையை அனுசரித்து வாழும் கிராமவாசியை கெடுத்துவிடுகின்றது"

தன்னை குறித்த விமர்சனங்களுக்கு ஜே ஜேயின் பதில் -

"எந்த முத்திரை வேண்டுமானாலும் என் மீது குத்த படட்டும் நம்பிக்கைவாதி,அவநம்பிக்கை வாதி,முற்போக்குவாதி,பிற்போக்குவாதி.......அனைத்தும் ஒன்றாக படும் இடத்திற்கு நான் போய் சேர வேண்டும்"


உறவுகள் குறித்த ஜே ஜேயின் நோக்கு..பொதுவாய் எல்லாருக்கும் இருப்பவையே - we will never want to restrict ourself to a short boundry. சிறந்த ஓவியனை அறியப்படும் ஜே ஜே கால்பந்தாட்டத்தை களமாக கொண்டு வரைந்த ஓவியங்களை சு.ரா விவரிக்கும் விதம் அழகு.தன் நண்பர்களான சம்பத்,மேனன்,முல்லைக்கல் இவர்களோடு ஜே ஜே கொண்டிருந்த பாசாங்கற்ற உறவு,ஆரோக்கியமான விவாதங்கள் யாவும் ஜே சேவை அறிந்து கொள்ள நுட்பமாய் விவரிக்கபட்டவை.

விளங்க முடியாத பல உண்மை எதிர்மறை கருத்துக்கள் கொண்ட எழுத்தாளன்,ஓவியன்,கால்பந்து வீரன் என பல முகம் கொண்டஜே ஜேயின் வாழ்க்கை குறிப்புகள் படித்து எளிதில் மறக்க கூடியதல்ல...ஓவ்வொரு முறை படிக்கும் பொழுதும் புது புது அனுபவம் தரும் ஜே ஜேயின் குறிப்புகள் ஆழ்ந்த அர்த்தம் நிறைந்த நாவல்.

18 comments:

இனியாள் said...

Marupadiyum vaasikkanum nu oru aarvam varuthu lekha. Intha novel padichchu pala nerangal thaniya sirichchu irukken, enga amma vinothama sirippanga.

லேகா said...

Hi Iniyal..

Thanks for your comments da.yeah those who read already should have a feeling to read it again and those who didnt read should get the feeling to read it.tats what my aim of publishing the reviews..We need more n more reading!!!!!!!!!!

KARTHIK said...

நல்ல புத்தம்

கம்யுனிசம் சம்பந்தமான அவரது பார்வை அருமையாக இருக்கும்
கம்யுனிசம் என்ற பெயரில் தொழில் சங்க தலைவர்கள், முதலாளிகளோடு சமரசம் என்ற பெயரில் தன் வயிற்றை மட்டும் நிரப்பிக்கொண்டு தொழில் சங்க தலைவர் என்ற பெயரில் வசதியோடு மாடமாளிகையிலும், மோட்டார் வாகன வசதியோடும் இருப்பவர்கள் ஒரு தொழிலாளி அல்ல, அவன் ஒரு முதல் போடாத முதலாளி
என்கிறார்,

ஜே ஜேவுக்கு ஒமன குட்டி.என்றொரு காதலி இருப்பார் இருவரும் ஏற்காடு செல்லும் போது ஒமனகுட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் நிற்கும் போது கவிதை தொகுப்பை படித்து விட்டு ரயிலின் சன்னல் வழியே வெளியே வீசி எறிவார் அத்தோடு அவரது காதலும் முறிந்து விடும்.

எனது ஊரை பற்றி வருவதால் இப்பகுதியை மிகவும் ரசித்தேன்.
நல்ல விமர்சனம் லேகா

KARTHIK said...

// Iniyal said...
enga amma vinothama sirippanga. //

உங்க வீட்டுல பரகாள்ள என் அக்கா இந்த மாதிரி புத்தமெல்லாம் எப்படிட படிக்குறேன்னு கேட்டுட்டு என்னுடையது மோசமான ரசனைன்னு வேற சொல்லுறாங்க.அதுக்கு உங்க வீடு தேவலை விடுங்க.

லேகா said...

உங்கள் பதிவிற்கு நன்றி கார்த்திக் ,தொடர்ந்து வரும் உங்கள் விமர்சனங்கள் பெரும் ஊக்கமாய் இருக்கின்றது.

லேகா said...

//ஜே ஜேவுக்கு ஒமன குட்டி.என்றொரு காதலி இருப்பார் இருவரும் ஏற்காடு செல்லும் போது ஒமனகுட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் நிற்கும் போது கவிதை தொகுப்பை படித்து விட்டு ரயிலின் சன்னல் வழியே வெளியே வீசி எறிவார் அத்தோடு அவரது காதலும் முறிந்து விடும்.//

ஜே ஜே வின் காதல் வசீகரிக்கவில்லை.அவரோடு ஒத்த மனநிலை கொண்ட பெண்ணாக ஒமனகுட்டி தெரியவில்லை,அபத்த கவிதைகள் எழுதும் சராசரி பெண்ணகாவே தெரிகிறாள்.உங்கள் ஊரே என்பதால் பிடித்திருக்கலாம்..நிச்சயமாய் மதுரையில் நிகழ்ந்து இருந்த என்னையும் வசீகரித்து இருக்குமோ என்னவோ..??!!

லேகா said...

//// Iniyal said...
enga amma vinothama sirippanga. //

உங்க வீட்டுல பரகாள்ள என் அக்கா இந்த மாதிரி புத்தமெல்லாம் எப்படிட படிக்குறேன்னு கேட்டுட்டு என்னுடையது மோசமான ரசனைன்னு வேற சொல்லுறாங்க.அதுக்கு உங்க வீடு தேவலை விடுங்க//

நீங்களாது வீட்ல பேச்சு வாங்குறிங்க,நான் என் அறை தோழிகளிடம் விளக்கம் கூறி ஓயவில்லை..எப்படி பொறுமையா படிக்குறனு /சலிப்பா இல்லையா /ஏன் தமிழ்ன்னு கேட்குறாங்க..ஒரே பதில் "ஆர்வம்" :-)

KARTHIK said...

// ஜே ஜே வின் காதல் வசீகரிக்கவில்லை.அவரோடு ஒத்த மனநிலை கொண்ட பெண்ணாக ஒமனகுட்டி தெரியவில்லை,அபத்த கவிதைகள் எழுதும் சராசரி பெண்ணகாவே தெரிகிறாள்.உங்கள் ஊரே என்பதால் பிடித்திருக்கலாம்..நிச்சயமாய் மதுரையில் நிகழ்ந்து இருந்த என்னையும் வசீகரித்து இருக்குமோ என்னவோ..??!! //

ஒரு மிகப்பெரிய எழுத்தாளனுக்கு கவிதை பிடிக்களிங்கறது எனக்கு ஆச்சர்யமா இருந்தது.
அந்தப்பெண்ணை யாரும் விரும்பவில்லை ஜேஜே ஒருவரே அவளை ரசிப்பார்.அவர் நேசிக்கும் ஒரு பெண்ணுக்கு பிடித்த ஒரு கவிதை.இவருக்கு பிடிக்காது ஜேஜே அந்த கவிதைய பிடிச்ச மாதிரி கூட நடிக்காம தூக்கி எறிஞ்சுட்டு போயிட்டாரு.

// உங்கள் ஊரே என்பதால் பிடித்திருக்கலாம்.//

இதுவும் ஒரு காரணம்.

லேகா said...

//அந்தப்பெண்ணை யாரும் விரும்பவில்லை ஜேஜே ஒருவரே அவளை ரசிப்பார்.அவர் நேசிக்கும் ஒரு பெண்ணுக்கு பிடித்த ஒரு கவிதை.இவருக்கு பிடிக்காது //

You r exactly correct karthick!!!

தியாகு said...

ஜெ ஜெ வை நான் அறியததல் இப்பதிவை படிக்கும்போது பெரியதொரு ஈர்ப்பு இல்லை .எனினும் விமர்சனம் நன்றாக உள்ளது .

தியாகு said...

ஜெ ஜெ வை நான் அறியததல் இப்பதிவை படிக்கும்போது பெரியதொரு ஈர்ப்பு இல்லை .எனினும் விமர்சனம் நன்றாக உள்ளது .

Sridhar V said...

நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிக்கிறீர்கள். வாழ்த்துகள். பதிவுக்கு நன்றி.

கொஞ்சம் தமிழையும் சரி பாருங்களேன். :-((

//இரெண்டு எழுத்தாளர்களின்//
//கருத்தாமிக்க பல குறிப்புகள் கொண்டது.
//
:-((((

லேகா said...

உங்கள் பதிவிற்கு நன்றி ஸ்ரீதர்.
வேகமாக தட்டச்சு செய்யும் பொழுது பிழை வந்து விடுகிறது.சுட்டி காட்டியமைக்கு நன்றி.இனி வரும் பதிவுகளில் நிச்சயமாய் அதை தவிர்கிறேன்.

Raju said...

"ஜெ.ஜெ சில குறிப்புகள்" எனது இலக்கிய ஆவலை விசலப்படுத்தியது. இதன் மூலம் இருபெரும் எழுத்தாளர்களின் சிந்தனைகளை அறிய ஒரு வாய்ப்பு கிடைத்தது.
"மனிதனுக்கும் வழ்வுக்குமுள்ள உறவு, பழக்கத்தின் தடத்தில் சரிந்து விட்டது என்றும், அர்த்தத்தின் தளத்திற்கு அதனை மாற்ற வேண்டுமென்றும் அவன் சொல்கிறான்"
ஜெ.ஜெ வின் இந்த வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தவை. ஏன் பாதித்தவை என்றும் சொல்லலாம். ஜெ.ஜேவின் சிந்தனைகளை நம்மிடம் சு.ரா சொல்லும் விதம் என்னை வியக்க வைக்கிறது. அவரை அன்றி வேறு யாவரும் அவன் சிந்தனைகளை, எழுத்துகளை இவ்வளவு ஆழமாக நேசித்து இருக்க முடியாது. வேட்டை நாயின் பாய்ச்சலுடன் ஜெ.ஜேவின் சிந்தனைகளை ஒப்பிடுவது மிகவும் அழகு. சமகால எழுத்துகள் மீது அவர்கள் இருவருக்கும் இருந்த வெறுப்பு நன்றாகவே தெரிகிறது.

மொத்தத்தில் "ஜெ.ஜெ சில குறிப்புக்கள் " இரண்டு மாபெரும் எழுத்தாளர்களின் ஆளுமையை தாங்கி நிற்கின்றது.

"நமக்குச் சிந்திக்கத் தெரியும் என்றால், சிந்திக்க முடியும் என்றால்" --ஜெ.ஜெ சில குறிப்புகள்.

KARTHIK said...

// Raju said...
ஜெ.ஜேவின் சிந்தனைகளை ஒப்பிடுவது மிகவும் அழகு. சமகால எழுத்துகள் மீது அவர்கள் இருவருக்கும் இருந்த வெறுப்பு நன்றாகவே தெரிகிறது.//

ராஜு ஜேஜேன்னு யாரும் கிடையாதுங்க.
இது அவருடைய(சுரா)புனைவு.
உங்கலப்போலதான் நானும் ஜேஜேன்னு ஒருத்தர் இருந்தார்னு நம்யுனேன்.

ஜேஜே வழ்ந்த ஊரான மாவிலிக்கரையில் இருக்கும் நண்பன்கிட்ட கூட கேட்டுப்பாத்தேன் அப்படி யாரும் வழ்ந்தமாதிரி ஏதும் தெரியலைன்னுதான் சொன்னான்.

அதுக்கப்புரம் இங்க உள்ள சில இலக்கியவியாதிகள்தான் சொன்னாங்க.இது அவருடைய மிகச்சிறந்த புனைவுன்னு :-))

ராஜரத்தினம் said...

அன்பு லேகாவிற்க்கு,

ஜே.ஜே ஒரு குறிப்பு ரீதியில் எழுதப்பட்ட சரிதை அல்ல. அது ஒரு கற்பனை படைப்பு.. அணைத்து சம்பவங்களும் நிஜ சம்பவங்களின் பதிப்பில் எழுதப்பட்டவையே ஒழிய அந்நாவல் அவற்றின் துல்லிய பிரதிபலிப்பு அல்ல.
மலையாள நாடக எழுத்தாளர் சி. ஜே தாமஸ் அவர்களால் கவரப்பட்டு அவரை போல் இருக்கும் கதாப்பாத்திரம் தான் ஜே ஜே.
நாவலின் பின்புலம் பற்றி மேலும் அறிய ஜெயமோகனின் இந்த பக்கத்திற்கு போகவும்.
நன்றி.

ராஜரத்தினம் said...

அன்பு லேகாவிற்க்கு,

ஜே.ஜே ஒரு குறிப்பு ரீதியில் எழுதப்பட்ட சரிதை அல்ல. அது ஒரு கற்பனை படைப்பு.. அணைத்து சம்பவங்களும் நிஜ சம்பவங்களின் பதிப்பில் எழுதப்பட்டவையே ஒழிய அந்நாவல் அவற்றின் துல்லிய பிரதிபலிப்பு அல்ல.
மலையாள நாடக எழுத்தாளர் சி. ஜே தாமஸ் அவர்களால் கவரப்பட்டு அவரை போல் இருக்கும் கதாப்பாத்திரம் தான் ஜே ஜே.
நாவலின் பின்புலம் பற்றி மேலும் அறிய ஜெயமோகனின் இந்த பக்கத்திற்கு போகவும்.
நன்றி.

ராஜரத்தினம் said...

அன்பு லேகாவிற்க்கு,

ஜே.ஜே ஒரு குறிப்பு ரீதியில் எழுதப்பட்ட சரிதை அல்ல. அது ஒரு கற்பனை படைப்பு.. அணைத்து சம்பவங்களும் நிஜ சம்பவங்களின் பதிப்பில் எழுதப்பட்டவையே ஒழிய அந்நாவல் அவற்றின் துல்லிய பிரதிபலிப்பு அல்ல.
மலையாள நாடக எழுத்தாளர் சி. ஜே தாமஸ் அவர்களால் கவரப்பட்டு அவரை போல் இருக்கும் கதாப்பாத்திரம் தான் ஜே ஜே.
நாவலின் பின்புலம் பற்றி மேலும் அறிய ஜெயமோகனின் இந்த பக்கத்திற்கு போகவும்.
http://jeyamohan.in/?p=229
நன்றி.