Monday, July 14, 2008
புதுமைபித்தனின் ரஷிய மொழிபெயர்ப்பு - பலிபீடம்
புதுமைபித்தனை ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் எனக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன..இம்முறை அவர் மொழிபெயர்த்த பலிபீடம் என்னும் ரஷிய நாவல் அந்த அனுபவத்தை தந்தது..இந்நூலின் நேரடி ஆசிரியர் அலெக்சாண்டர் குப்ரிக்.இங்கு பலிபீடம் என குறிப்பிட படுவது ரஷியாவில் யாமா நகரில் அமைந்த வேசியர் விடுதிகளை.புதுமைபித்தனின் மறைவிற்கு பின்னர் அவரது துணைவியாரிடம் இருந்து இந்த மொழிபெயர்ப்பு நகலை பெற்று வெளிட்டுள்ள பூம்புகார் பதிப்பகத்தாரின் இப்பணி பாராட்டுதலுக்குரியது...
சில தலைப்புகள் என்றும் விவகாரமானவையாகவே கருதபட்டு பெரும்பாலான எழுத்தாளர்களால் தவிர்க்கபட்டு வருபவை..அதில் ஒன்று வியசாரம் (இந்நூலில் புதுமை பித்தன் இப்படியே கூறுகிறார்..அவ்வார்த்தையும் வழக்கொழிந்து விட்டது போல..) சிக்கலான உரைநடை ,அதிக கதை மாந்தர்கள்,விடுபட்ட மொழிபெயர்த்த பகுதிகள் என இந்நாவலில் குறைகள் பல இருப்பினும்..அது சொல்லி இருக்கும் கருத்து நிறைவை தருகின்றது..
நாவலில் பிரதான நாயகன் நாயகி என யாரும் இல்லை....அவ்விடுதியின் பெண்கள் யாவரும் நாயகியர்,அவர்களின் மனம் கவர்ந்தவர்கள் யாவரும் நாயகர்களே..அவ்விடுதியின் காலை பொழுதில் பெண்கள் சிறிது மகிழ்ந்து விளையாடுவதாக தொடங்கும் நாவல்..மெல்ல மெல்ல ஒவ்வொரு பெண்ணையும் அறிமுகம் செய்து அவளின் குணாதிசியங்களை விவரிக்கின்றது...அவ்விடுதியின் காவலன் சிமியோன் நிர்வாகி என யாவரும் அவர் அவர் போக்கில் நல்லவர்களே..யாதொரு பெரும் லட்சியம் கொண்டும் வாழ்வை வெறுத்தும் அப்பெண்கள் இல்லாமல் அந்தந்த பொழுதை கழித்தால் போதும் என்கிற மனநிலையில் உள்ளதற்கு அச்சமூகமே காரணம் என கூறப்பட்டுள்ளது..இந்நாவல் இக்காலகட்டதிற்கும் பொருந்தும்...
நாவலின் இறுதி கட்டம் பெரும் ஆராய்ச்சிக்குரியது ..சட்ட மாணவர்கள் குழு ஒன்று தம் ஆசிரியர்களோடு அவ்விடுதிக்கு வருகின்றது..அவர்கள் பார்வையில் அப்பெண்கள்,அவர்கள் வாழ்க்கை,தொழில் என யாவும் ஆசிரியர் விவாத பாணியில் விவரித்துள்ளது நுட்பமான கருத்துக்களை கொண்டது..இறுதியில் அம்மாணவர்களில் ஒருவன் பெருத்த எதிர்பிற்கிடையில் அங்குள்ள மங்கையை திருமணம் செய்து வாழ அழைத்து செல்வதாய் கதை முடிகிறது....
இந்நாவலை எழுதிய அலெக்சாண்டர் குப்ரிக் பல எதிர்வினைகளை சந்தித்தாய் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது..மேலை நாடுகளிலேயே ஏற்றுக்கொள்ள படாத இவ்வகை நூல்கள் தமிழில் வெளிவர காரணமான புதுமைபித்தன் புரட்சி எழுத்தாளனே..
இந்நூல் வெளிவந்த காலம் இந்திய சுதந்திரம் அடையாததிற்கு முன்பு..அக்காலகட்டத்தில் புதுமைப்பித்தன் வியசாரம் குறித்து முழுக்க முழுக்க ஆராயும் மேலை நாட்டு நூலை மொழி பெயர்த்துள்ளது அவரின் துணிச்சலை மட்டும் அல்லாது சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள உண்மையான அக்கறையை காட்டுகிறது....மொழிபெயர்ப்பில் உள்ள சில தவிர்க்க முடியாத சங்கடங்களை நீக்கி பார்த்தல் இந்நூல் எடுத்துரைக்கும் கருத்துக்கள் ஏராளம்..
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்லதொரு அறிமுகம்..சில சொல்லாடல்களை மீள் ஆளுமை செய்வது சமகால புரிதலுக்கு சரியாய் இருக்கலாம்.உதாரணம் வேசியர்: பாலியல் தொழிலாளர்கள் ...
நேரடித் தமிழில் பாலியல் தொழிலாளர்களை முன்வைத்த பிரதிகள் மிகக் குறைவு அந்த வகையில் ஜி.நாகராஜன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்.அவரின் நாவல் பதிவிக்கும் உலகம் மிக ஆயாசமானது....
புதுமைபித்தனின் சில சிறு கதைகள் மட்டுமே வாசித்துள்ளேன்.உங்களின் இப்பதிவு இந்நாவலை வாசிக்கும் ஆவலை ஏற்ப்படுத்துகிறது.
உங்கள் பதிவுக்கு நன்றி அய்யனார்..
வழக்கில் இருந்து ஒழிந்த சொற்களை கோடிட்டு காட்டவே அவ்வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தினேன்..
கி.ராவின் பிஞ்சுகள் நாவல் குறித்து விரைவில் பதிவு செய்வேன்.அந்நாவல் முழுதும் விவரி வரும் வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தமிழ் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டுபவை..
உங்கள் பதிவிற்கு நன்றி கார்த்திக்..
எனக்கும் இது தான் புதுமைபித்தனின் முதல் நாவல்...மேலை நாட்டு இலக்கியம் மீது அவர் கொண்டிருந்த ஆர்வமும்,தீவிரமும் இந்நூலின் மொழிபெயர்ப்பில் அறியலாம்..
ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் புது புது அனுபவங்களை தரும் புதுமைபித்தன் ஆச்சரிய எழுத்தாளனே..
lekha - thanks for sharing this excellent one.
after reading this i recall Tamil movie called "Appu" (director vasanth moview. that movie is the smae story line but modified based on Tamil version...
Thanks for oyur comments Venky!!!Yeah Vasanth's movie was a different approach among the other commercial cinemas cam etat time ..but tat movie didnt reach the public..people needs to be educated!!
Post a Comment