Tuesday, July 22, 2008

வண்ணநிலவனின் கடல்புரத்தில்



சமீபத்தில் வண்ணநிலவனின் சிறுகதை ஒன்று ஆனந்த் ஆனந்த விகடனில் படித்தேன்..பெரும் அதிர்ச்சி...தாமிரபரணி கதைகள் ,சம்பா நதி,ரெய்நீஸ் ஐயர் தெரு,கடல்புறத்தில் போன்ற அற்புத இலக்கியம் படைத்தவரிடம் இருந்து வந்த இந்த சிறுகதை ஆசிரியர் பெயரை மற்றும் ஒருமுறை சரி பார்க்க செய்தது.
வண்ணநிலவன்,வண்ணதாசன் கதைகள் என்றுமே படிப்பதற்கு ஒரு இனிய அனுபவம்..வாசிப்பாளனை தன்பால் ஈர்க்கும் ஒரு சக்தி அவ்வெழுதுக்களுக்கு
உண்டு. மீண்டும் அவரது நாவல்களை படிக்கும் ஆவல் மேலிட..கடல் புறத்தில் படித்து முடித்து,தற்பொழுது ரெய்நீஸ் ஐயர் தெரு படித்து கொண்டு இருக்கின்றேன்..

கடல்புரத்தில், ஒரு கடலோர மீனவ கிராமத்தின் அன்றாட நிகழ்வுகளின் பதிவு.அம்மக்களின் காதல்,வீரம்,ஏமாற்றம்,ஆசை,பேராசை,வன்மம் என அனைத்து உணர்வுகளையும் அழகாய் கதையின் ஊடே விவரிகின்றார் வண்ணநிலவன்.கதையில் முக்கிய பங்கு வகிப்பது கதை நாயகி பிலோமியின் காதல்...நிறைவேறாத அந்த காதலின் முடிவு பெரும் சோகத்தை தருகின்றது.கிறிஸ்மஸ் காலத்தில் மீனவ மக்களின் கொண்டாட்டங்களை எளிமையாய் கூறிய விதம் அருமை.தூத்துக்குடி பகுதி பேச்சு வழக்கில் கதையை கூறி இருப்பது படிப்பதற்கு இனிமை..மிகச்சிறிய நாவல்,எளிய கதை,ஆர்பாட்டமில்லாத உரைநடை,இயல்பான மக்கள்..என நாவல் நம்மை அந்த கடல்புறதிற்கே கொண்டு செல்கிறது..



கடல்புறத்தில், தகழியின் செம்மீன் நாவலோடு கடலையும் சேர்ந்து பல விதங்களில் ஒன்றுபட்டு உள்ளது.கதை நாயகிபிலோமியின் ஏழ்மையில் தொடங்கி,அவள் தந்தையின் படகு கனவு..அவளது நிறைவேறா காதல்,பிள்ளை பிராயதின்மேல் அவள் கொண்டிருந்த பிரியம்,கடலோடு அம்மக்களின் உறவு என கடலோரத்தில் நாவல் பல இடங்களில் செம்மீனை நியாபகபடுத்துகிறது..பேரமைதியையும்,பெரும் இரைச்சலும் சேர்த்து தன்னுள்ளே கொண்டுள்ள கடல் எப்போதுமே அழகு தான் இந்த இரு நாவல்களைபோல.....

5 comments:

KARTHIK said...

இதுவரை இவரது நாவல் எதுவும் நான் வாசித்ததில்லை.
ஆவியில் வரும் அகம் புறம் தொடரின் மேல் ஈர்பில்லை.
உங்களின் இப்பதிவு அவரை வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது.
பகிர்ந்தமைக்கு நன்றி.

லேகா said...

கார்த்திக் உங்கள் பதிவிற்கு நன்றி.

ஆனந்த விகடனில் "அகமும் புறமும்" எழுவது வண்ணதாசன்.
வண்ணநிலவன் தற்பொழுது எழுதுவதில்லை.ஆயினும் வண்ணநிலவனின்,"கடல் புறத்தில்","ரைநீஸ் ஐயர் தெரு ","தாமிரபரணி கதைகள்" தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட படவேண்டிய பதிப்புகள்.

ரைநீஸ் ஐயர் தெரு குறித்த எனது பதிவு : http://yalisai.blogspot.com/2008/04/blog-post_4923.html

KARTHIK said...

sorry for the mistake

// ரைநீஸ் ஐயர் தெரு //

வரும் 1 தேதி முதல் ஈரோட்டில் புத்தக கண்காட்சி நடைபெறவிருக்கிறது.அதில் வாங்க சில புத்தகங்கள் பட்டியலிட்டுள்ளேன் அதில் இதையும் சேர்த்துள்ளேன்.

லேகா said...

//sorry for the mistake

// ரைநீஸ் ஐயர் தெரு //

வரும் 1 தேதி முதல் ஈரோட்டில் புத்தக கண்காட்சி நடைபெறவிருக்கிறது.அதில் வாங்க சில புத்தகங்கள் பட்டியலிட்டுள்ளேன் அதில் இதையும் சேர்த்துள்ளேன்//

Please dont mention sorry n all.
Definetly you are going to get a wonderful experience wit tat novel..Keep reading!!

முரளிகண்ணன் said...

சுருக்கமாக அழகாக எழுதியுள்ளீர்கள்.