Tuesday, July 22, 2008
Alfred Hitchcock's Phsyco (1960)
Pshyco, 1960 ஆம் ஆண்டு Alfred Hitchcock இயக்கத்தில் வெளிவந்தது.த்ரில்லர் படமான இது அக்காலகட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.கதை நாயகன் நகரத்தின் ஒதுக்குபுறத்தில் மொடேல் எனப்படும் வழிபோக்கர்கள் தங்குமிடம் நடத்துகிறவன்.கதை நாயகி தன் அலுவலகத்தில் இருந்து பெரும்பணத்தை திருடி கொண்டு வேறு நகரம் செல்ல திட்டமிட்டு தனது காரில் புறபடுகிறாள்.ஒரு இரவு நேரத்தில் அந்த மொடேலை அடைந்து அங்கு தங்க முடிவு செய்கிறாள். இரவு உணவின் போது நாயகனுடன் பேசுகின்றாள் ,அவன் தானும் தனது தாயரும் மட்டுமே இங்கு உள்ளதாகவும் கூறுகிறான்.பின்பு அவர்கள் பேச்சு விவாதமாக மாறி அவள் கோவம் கொண்டு தன் அறைக்கு செல்கிறாள்.குளியலறையில் நாயகனின் தாயே அவளை பலத்த ஆயுதம் கொண்டு தாக்கி கொலைசெய்கிறாள். நாயகன் வந்து அவள் உடலை காரில் இது அருகில் உள்ள குளத்தில் தள்ளி விடுகிறான். நாட்கள் செல்ல நாயகியின் சகோதரி ஒரு ரகசிய உளவாளி மூலம் தங்கையை தேட முயற்சிக்க..அந்த உளவாளியும் காணாமல் போகிறார். பின் அவளே ஒரு நண்பனின் துணை கொண்டு அந்த மொடேலுக்கு வருகிறாள்.
அங்கு அறை எடுத்து தங்கி அவள் தங்கை தங்கிய அறையை சோதனை செய்து அங்கு அவள் விட்டு சென்ற சில காகித துண்டுகளை கண்டு அதிர்ச்சி கொள்கிறாள்.இதனிடையில் அந்த நகரத்து அதிகாரியிடம் இது குறித்து புகார் செய்ய ,அவரோ நாயகனின் தாயே இறந்து பத்து வருடங்கள் ஆனதாக கூறுகிறார்.பின்பு நாயகனின் வீட்டை சோதனை செய்ய வேண்டி நண்பனை அவனுடன் பெசிகொண்டிருக செய்து இவள் வீட்டை சோதனை இடுகிறாள்..அங்கு அவன் அறையில் குழந்தைகளுக்கான விளையாடு பொருட்கள் மட்டுமே உள்ளது.இனிலையில் நாயகன் அவளை தேடி அங்கு வர கீழ் அறைக்குள் சென்று ஒழிய முயலும் போது நாயகனின் தாயே அமர்த்து இருபது கண்டு அவளை அழைக்க அங்கு இருப்பதோ எலும்புக்கூடு மட்டுமே.இநிலையில் நாயகன் நண்பனால் தாக்கபட்டு போலீசாரால் கைது செய்ய படுகிறான். தாயை கொன்ற குற்ற உணர்ச்சியால் நாயகன் சைக்கோ வாக மாறி அவள் பெயரில் அவள் போலவே உடை மற்றும் தலையில் விக் அணிந்து கொலைகள் செய்தது தெரிய வருகிறது.
இத்திரைப்படத்தில் இரண்டே கொலைகளை நாயகன் செய்கிறான். இருப்பின் ஒவேவொரு காட்சியையும் இயக்குனர் சிறப்பாய் அமைத்துள்ளார். நாயகன் நாயகியை கொள்ளும் காட்சியில் பயன்படுத்திய காமெரா கோணங்கள் அற்புதம் .Pshyco வாக நடித்த நடிகர் Anthony Perkins தனது அபாரமான நடிப்பை வெளிபடிதியுள்ளர் .இத்திரை படம் பல விருதுகளை பெற்றது.1998 ஆண்டு இதை ரீமேக் செய்தனர் அத்திரைபடம் படு தோல்வி அடைந்தது.இன்றும் பல த்ரில்லர் படங்களுக்கு இத்திரைப்படம் முன்னோடியாய் உள்ளது.
இத்திரைப்படம் குறித்து மேலும் அறிய..
http://en.wikipedia.org/wiki/Psycho_(1960_film)
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
இந்த மாதிரிப் படங்களை இந்த ஊருக்குள்ள தேடாத இடமில்ல.சரி இதுதான் போகட்டுமின்னு சத்யஜித்ரேயின் பதர்பாஞ்சலியாவது கொடுன்னு கேட்காத கடையில்ல.எல்லோருமே திரு திரு.
படம்தான் பார்க்க முடியல.கதையாவது சொன்னீங்களே?
//சத்யஜித்ரேயின் பதர்பாஞ்சலியாவது கொடுன்னு கேட்காத கடையில்ல.எல்லோருமே திரு திரு.//
ரொம்ப சரி நடராஜன்..இந்த அனுபவம் எனக்கும் உண்டு.
// ராஜ நடராஜன் said...
இந்த மாதிரிப் படங்களை இந்த ஊருக்குள்ள தேடாத இடமில்ல //
நட்டு சென்னை வடபழனி ராகட்பிளாசால பாருங்க கெடைக்கலாம்.
//நட்டு சென்னை வடபழனி ராகட்பிளாசால பாருங்க கெடைக்கலாம்.//
tnx Karthick :-)
யாழிசையின் சைக்கோ ஆய்வு டைமிங்கான ஒரு விஷயம். அப்படியே நாலு வரி நம்மூர் சைக்கோ கொலைகாரர்களைப் பற்றியும் எழுதி இருக்கலாம்... வடபழனி ராகத் பிளாசாவுக்கு போகிறவர்கள் காலஞ்சென்ற மாலை நாளிதழ்களை படித்துவிட்டுப் போகவும். இல்லையென்றால் ஒரேயடியாக போய்ச்சேர வேண்டியிருக்கும்.
//வடபழனி ராகத் பிளாசாவுக்கு போகிறவர்கள் காலஞ்சென்ற மாலை நாளிதழ்களை படித்துவிட்டுப் போகவும். இல்லையென்றால் ஒரேயடியாக போய்ச்சேர வேண்டியிருக்கும்//
:-)
உங்கள் பதிவிற்கு நன்றி சத்யா.
ரீமேக் படத்தை ரெண்டு மூணு தரம் விஜய் டிவில போட்டாங்க. எங்கப்பா, அம்மா, அப்டியேதான் பழைய படமும் இருக்கும்னு சொன்னதால நான் பழைய படத்த பார்க்கல.
பதேர் பாஞ்சாலி எப்நேக், வெர்ஜின் இப்படி எல்லா எடத்திலயும் கிடைக்குமே.
//ரீமேக் படத்தை ரெண்டு மூணு தரம் விஜய் டிவில போட்டாங்க. எங்கப்பா, அம்மா, அப்டியேதான் பழைய படமும் இருக்கும்னு சொன்னதால நான் பழைய படத்த பார்க்கல//
சைக்கோ(ஹிட்ச் காக்) திரைபடத்தை தழுவி இரண்டு மூன்று படங்கள் வந்து விட்டன.அவை யாவும் விரலுக்கு இரைத்த நீரே!!முதல் படத்தின் தரம் எதிலும் இல்லை.
//பதேர் பாஞ்சாலி எப்நேக், வெர்ஜின் இப்படி எல்லா எடத்திலயும் கிடைக்குமே//
உங்கள் பதிவிற்கும் தகவலுக்கும் நன்றி rapp
ஆல்பிரெட் கிட்ச்காக்கின் திருப்புமுனையாக இப்படம் அவருக்கு அமைந்தது .
இன்று வரை வரும் அத்தனை சைக்கோ படங்களுக்கும் இப்படம் ஒரு டிரெண்ட் செட்டர் .
கதை சொல்லும் பாணியில் தனித்து நிற்கும் இப்படம் ஒவ்வொரு திரைப்பட பிரியர்களும் கட்டாயம் காண வேண்டிய படங்களில் எப்போதும் முதன்மையானது .
இந்த திரைப்படத்தின் DVD சென்னை லேண்ட்மார்க்கில் கிடைக்கிறது , விலைதான் அதிகம் 500 நினைக்கிறேன் . முயன்று பாருங்கள் .
பதிவு அருமை ஆனால் கதையை கூறாமலிருந்துலுக்கலாம் . அப்படத்தினை கதை தெரிந்து பார்க்கையில் அது சாதரணமான படமாக தோன்றக்கூடும்
புதியவர்களுக்கு இப்படம் குறித்த அறிமுகத்திற்கு மிக்க நன்றி
//கதை சொல்லும் பாணியில் தனித்து நிற்கும் இப்படம் ஒவ்வொரு திரைப்பட பிரியர்களும் கட்டாயம் காண வேண்டிய படங்களில் எப்போதும் முதன்மையானது .//
மிகச்சரியாக சொன்னீங்க அதிஷா.
தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அந்த கால கட்டத்திலேயே ஹிட்ச் காக்கின் இம்முயற்சி பெரும் அதிசயம். அவரின் "பேர்ட்ஸ்" திரைப்படமும் இது போலவே..
\\
அவரின் "பேர்ட்ஸ்" திரைப்படமும் இது போலவே..
\\
நிச்சயமாக லேகா.. psychoவை போல அதுவும் ஒரு டிரெண்ட் செட்டர்தான் அபரிமித மிருகங்களின் தாக்குதல் குறித்த படங்களுக்கு
அவரது ரோப் திரைப்படம் கிடைத்தால் பாருங்கள் ,எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காத ஒரு படம்
உங்கள் பதிவு எனக்கும் இது போன்ற படங்கள் குறித்து எழுத உந்துதலாக உள்ளது , இனி வரும் எனது பதிவுகளில் இது போன்ற காலத்தால் அழிக்க இயலாத திரைப்படங்கள் குறித்து எழுதுகிறேன் .
நன்றி
//நிச்சயமாக லேகா.. psychoவை போல அதுவும் ஒரு டிரெண்ட் செட்டர்தான் அபரிமித மிருகங்களின் தாக்குதல் குறித்த படங்களுக்கு//
பேர்ட்ஸ் திரைப்படம் குறித்த எனது பதிவு விரைவில் வெளிவரும்.
//உங்கள் பதிவு எனக்கும் இது போன்ற படங்கள் குறித்து எழுத உந்துதலாக உள்ளது , இனி வரும் எனது பதிவுகளில் இது போன்ற காலத்தால் அழிக்க இயலாத திரைப்படங்கள் குறித்து எழுதுகிறேன் .//
பெரு மகிழ்ச்சி அதிஷா.உங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி.
Intha thiraipadam ulagin thalai sirantha thrillergal varisayil.muthal idaththil ullathu. ungal kathai sollum paangu arumai.
//Intha thiraipadam ulagin thalai sirantha thrillergal varisayil.muthal idaththil ullathu. ungal kathai sollum paangu arumai//
நன்றி நிலாமுகிலன்.
ஹிட்ச்காக்கின் இத்திரைப்படம் பார்த்த பிறகு அவரின் ஒவ்வொரு படத்தையும் ஆழ்ந்து நோக்கும் ஆர்வமும் விருப்பமும் வந்தது.அவரின் "ப்ரேன்சி" என்னும் திரைப்படத்தில் கேமரா ஜாலங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.விரைவில் அது குறித்து பதிவு செய்வேன்.
Post a Comment