தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை
நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).
இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com
இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------
அன்புடையீர்,
வணக்கம். தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை (Poetry Workshop) நடத்தவிருக்கிறார்கள். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் அமையும் இந்நிகழ்வைப் பற்றிய அறிவிப்பினை இத்துடன் இணைத்துள்ளோம். உங்களின் வலைப்பக்கத்தில் இதனை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மிக்க நன்றி
தமிழ்ச்சங்கமம் குழுவினர்
Thursday, April 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
கவிஞர்களுக்கு
உபயோகமானத்
தகவலைத்
தந்திருக்கிறீர்கள்.
பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள் லேகா.
அங்காவது தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையாக இருப்பார்களா.
நன்றி லேகா..
சுஜாதா விருது கிடைத்தமைக்கு
வாழ்த்துக்கள் லேகா. குறிப்பாக உங்கள் உங்கள் தந்தைக்கு எனது வாழ்த்துக்கள்
Dear madam,
Congratualations for being selected for the Sujatha memorial award, which you highly deserve.Keep it up and contiue your goodwork.
yours,
G.Tamilmani
பெருமதிப்புக்குரிய சுஜாதா விருதை வென்றமைக்காக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் லேகா.! உங்கள் பணி தொடரட்டும்.
சுஜாதா விருது கிடைத்தமைக்கு
வாழ்த்துக்கள் லேகா.
வாழ்த்துகள் லேகா!
வாழ்த்துகள்!!
வாழ்த்துகள் லேகா, சுஜாதா இணைய விருதுக்கு.. :) யாழிசையின் பயணம் இன்னும் தொலை தூரம் தொடரட்டும்..
Congratulations!!!!! on one of your best moments. Though i miss the function, a standing ovation for you lekha
ஹே எனக்கு லேட்டாதான் தெரிய வந்தது சுஜாதா விருது கிடைத்தது பற்றி லேகா.
மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். சரியான பதிவருக்கு சென்று அடைந்ததால் அந்த விருதுக்கு பெருமை.
I regret that sujatha is not here to share this happines.
வாழ்த்துக்கள் லேகா, சுஜாதா விருதிற்கும், உங்கள் சிறப்பு பங்களிப்பிற்கும்.
Just now I saw this award news. it was judged by our ES raa.
Thanks to es Raa too for giving a fair judgement and justice to the award.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
நிறைவாய் உணர்கின்றேன் :-)
விருதுக்கு வாழ்த்துகள் லேகா, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
மனம் நிறைந்த வாழ்த்துகள் லேகா.
நன்றி யாத்ரா
நன்றி சூர்யா
சுஜாதா விருது கிடைத்தமைக்கு
வாழ்த்துக்கள் லேகா.
எழுத்தாளர் சுஜாதா விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.
வாழ்த்துக்களுக்கு
நன்றி காஞ்சனா
நன்றி நிலா முகிலன்
லேகா,
ஆழ்ந்த வாசிப்பும் அதை அழகாகப் பகிர்ந்துகொள்ளும் திறனும் படைத்த உங்களுக்கு சுஜாதா விருது கிடைத்தது மிகவும் பொருத்தமானது. மனம்கனிந்த வாழ்த்துக்கள் லேகா.
மென்மேலும் உயர வாழ்த்துகள்,
My Wishes for the Sujatha Awards
Congratulations.Keep up the good work.
சுஜாதா நினைவுப்பரிசு வென்றதாக அறிந்தேன். வாழ்த்துக்கள். அது குறித்து எழுதுங்கள்.
மிக்க நன்றி தமிழ்நதி.மகிழ்வாய் உணர்கின்றேன்.
நன்றி பத்மநாபன்
நன்றி தவநெறிச்செல்வன்
நன்றி ஜெகதீஷ் குமார்
சுஜாதா விருது கிடைத்திருப்பதற்குப் பாராட்டுக்கள்.பெங்களூரில் சுஜாதாவுடன் மிக நெருக்கமாகப் பழகியவர்களில் நானும் ஒருவன்.அதனால் அவர் பெயரினாலான விருது கிடைத்த உங்களைப் பாராட்டுவதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கிறது. முடிவுக்குப் பிறகுதான் உங்கள் வலைப்பூவைப் படித்தேன்.வடிவமைப்பும் கட்டுரைகளும் மிக அழகாக உள்ளன. சில கட்டுரைகளைப் படித்ததில் தங்கள் நடையும் அழகாக உள்ளது. தங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்.நானும் வலைப்பூ எழுத ஆரம்பித்திருக்கிறேன்.அதன் விலாசம் இது;http://amudhavan.blogspot.com
வாழ்த்துகள் லேகா!! மகிழ்ச்சியாக இருக்கிறது! :-)
நன்றி அமுதவன்
நன்றி முல்லை :-)
Tamilish.Com wishes you for Sujatha Awards.
Hey Lekha.... happy and good to see u flying up above with beautiful colors!!! Congrats da...
Hey Sonia,
Thansk a lot dear..tnx lol :-)
வாழ்த்துக்கள் லேகா.
இன்னும் நிறைய எழுதுங்க & புத்தகங்களை அறிமுகப்படுத்துங்க... காத்திருக்கிறோம்.
You deserve it.
Post a Comment